Home வேர்களும் விழுதுகளும் வாழ்க்கைக் குறிப்புக்கள் “அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்

“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்

0
0

இந்தியத் துணை கண்டத்தில், எ“நதவொரு சிந்தனையாளரிடமும் இயக்கத்திடமும் இருந்திராத பெண்ணியச் சிந்தனையும் செயல்பாடும் – பார்ப்பனிய எதிர்ப்பின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக வரலாற்றில், சுயமரியாதை இயக்கத்திடம் மட்டுமே இருந்தது. “இந்த ஆண்களெல்லாம் சோசலிசம், முதலாளித்துவம், பகுத்தறிவு எல்லாம் பேசி யநேரம் போக மீதி நேரங்களில்தான் பெண் விடுதலை பேச முன்வருவார்கள்’ என்று பகடிசெய்யுமளவிற்கு, சுயமரியாதை இயக்க்டீததில் பெண் விடுதலை முன்னோடிகள் ஆளுமை பெற்றிருந்தனர். அக்காலத்தில் சுயமரியாதை இயக்கப் பெண்கள், இயக்கம் எந்தெந்தத் தளங்களில் செயல்பட்டதோ – அத்தனைத் தளங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டு செயலாற்றினார்கள். பெண்கள், அந்த அளவிற்குத் தங்களைத்தாங்களே அறிந்து கொள்வதற்கும், பெண்ணியச் சிந்தனையாளராக மேம்படுத்திக் கொள்வதற்கும், பெண் விடுதலைப் போராளிகளாக நடைபோடுவதற்கும் தலைவர் பெரியாரின் சுமரியாதை இயக்கமே உறுதுணையாக நின்றது.

பொதுவுரிமை இயக்கத்தினர், பொதுவுடமை இயக்கம் புரிந்து கொள்வது போல் சோசலிசத்தைப் புரிந்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், பொதுவுடைமை இயக்கம் பார்க்கத் தவறிய ஆணாதிக்கம், சாதியம், இந்து மதம், பண்பாடு தொடர்பானவற்றில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தினர். இயக்க ரீதியாக தனிப்பெரும் இடத்தைப் பெற்ற சுயமரியாதை இயக்க்தில் தலித் விடுதலை இயக்கப் பின்புலத்தில் வந்த அனைவரும் தன்னிச்சையாகவே, சுயமரியாதை இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

சுயமரியாதை இயக்கத்தில் ஒரு நவீன பரந்துபட்ட உலகப் பார்வை கொண்ட பெண் அறிவாளிகள், பெண் போராளிகள், பெண் தலைவர்கள், இப்படித்தான் சிந்திக்க வேண்டும். இப்படித்தத் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியான பல்÷று விசயங்களை தலைவர் பெரியாரின் துணைவியார் நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள், நெருங்கிய உறவினர் மிராண்டா, நீலாவதி, அன்னபூரணி, குஞ்சிதம், வள்ளியம்மாள், ரங்கநாயகி, சுபவிசாலாட்சி, கிரிஜா தேவி, லட்சுமி போன்றோர் முதல் தலைமுறையினராகச் செய்து காட்டினர். சமூக விடுதலை கொண்ட ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் போராடிய இந்தப் பெண் விடுதலையாளர்களில், சமூகத்தின் புதிய பரிமாணத்திற்குத்தன் வாழ்வை ஒப்படைத்த அன்னை மீனாம்பாள் குறிப்பிடத்தக்க முன்னணித் தலைவர் ஆவார்.

மானுட விடுதலைக்குப் பெண் விடுதலையை – தலித் விடுதலையை முன் நிபந்தனைகளாகக் கொண்ட அன்னை மீனாம்பாள், பெண்களுக்கு மட்டுமல்ல, தலித் மக்களுக்கும் தலைவராக வாய்த்தார். தமிழ் வள்ளலாகவும், “ஆதிதிராவிடர் மகா ஜனசபா’வின் புரவலராகவும் முதன் முதலில் கப்பலோட்டிய தமிழராகவும் புகழ் உச்சியில் இருந்த “கோடீஸ்வரப் பிள்ளை’ என்றழைக்கப்பட்ட மதுரைப் பிள்ளையின் பேத்திதான் அன்னை மீனாம்பாள்.

அன்னை மீனாம்பாள், 1902இல் பிறந்தார். அன்னை மீனாம்பாளின் தந்தை வாசுதேவப் பிள்ளை, வாசுதேவப் பிள்ளை தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதி. 1918இல் மீனாம்பாள் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் ஏற்பட்டது. தலைவர் சிவராஜ் அவர்கள் துணைவராக வாய்க்கப் பெற்றார். அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு சமூக வட்டங்களில் சுற்றுப் பாதையில் நளினமாக வலம்வர சமூக மதிப்பு, பொருளாதார அந்தஸ்து இருந்தும் அன்றாடத்தில் அதன் சுயநல சுழல் பாதைகø ண்ளமீறி, தன் சுதந்திர வெளியை மக்க்ளுக்கென சிருஷ்டித்துக் கொண்டார்.

ஒருமுறை திருவள்ளூரிலிருந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவர் சிவராஜை சந்திக்க வந்தார். தன்னுடைய நிலத்தை ஆதிக்கச் சாதிக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள்; நிலத்தைத் தர மறுக்கிறார்கள் என்று கண்ணீருடன் முறையிட்டார். இதுபோல் ஆதிக்கச் சாதியினரால் பாதிக்கப்பட்ட பலரும் தலைவர் சிவராஜை சந்தித்து முறையிடுவது வழமையாக இருந்தது.இப்படியான முறையிடுகள் மூலம் தலித் மக்களின் வாழ்வியலைத் தன் இதயத்தினுள் பாய்ச்சிக் கொண்ட அன்னை மீனாம்பாள், தன்னை முட்டி முட்டி அலைபாய்ந்து கொண்டிருந்த மன நெருக்கடிக்கு ஆளானார்.

சாதியச் சமூக மாற்றுக்கான தீவிர சிந்தனைக்கும் செயல்பாட்டுக்குமான மன உறுதியைப் பெற்ற அவர், தலித் மக்கள் அறியாமையில் உழல்பவர்கள்; தாழ்வு மனப்பான்மையில் தவிப்பவர்கள்; அதனால்தான் சமூக ஆதிக்க கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தார். தன் வாழ்க்கையின் உண்மையைத் தேடும் பயிற்சியில் தன் மக்கள் திரளை இலக்காகக் கொண்டார். தலித் மக்களுக்கு கல்வி அறிவை வளர்க்கவும், அவர்களுக்கு விடுதலை உணர்வைத் தூண்டி சாதி இந்துக்களை எதிர்த்துப் போரிடும் துணிச்சலை ஏற்படுத்தவும், சமநீதிக்கான கருத்தியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் அணியமானார்.

அப்பொழுது, ஆங்கிலேயர் அரசு “மாண்டேகு – செம்ஸ்போர்டு’ அரசியல் சிர்த்திருத்தத் திட்டத்தில் கண்டிருந்தபடி, இந்தியாவில் இரட்டையாட்சி முறை செயல்படுவதைப் பரிசீலிக்கவும், புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆலோசனைகளை வகுக்கவும் சர். ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு அனுப்பப்படும் என்ற அறிவிப்பை 18.11.1927 அன்று வெளியிட்டது. “சைமன் கமிஷன்’ தொடர்பான குழுவில் புரட்சியாளர் அம்பேத்கரும், தலைவர் சிவராஜும் உறுப்பினர்களாக உள்ள நாம் ஒத்தக் கருத்துடன் இணைந்து செயல்படுவோம் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இரு வரும் ஒரே கண்ணோட்டத்தில் செயல்படத் தொடங்கினர். இதனால் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் அன்னை மீனாம்பாளுக்கும் – குடும்ப ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புரட்சியாளர் அம்பேத்கரின் விடுதலைப் பயண அழைப்பு – ஒரு புதிய கொள்கையையும புரட்சி மொழியையும் சுமந்து, தன்னை வரவேற்பதாய் உணர்ந்தார் அன்னை மீனாம்பாள்.

தலித் மானுட மனத்தை உயிர்ப்பிக்கக்கூடிய ஆதார மய்யமாகப் புரட்சியாளர் அம்பேத்கரை கொண்ட அன்னை மீனாம்பாள், அம்பேத்கரியத்தோடு தன் துணைவருடன் இøண்ஞ்பபுக் கொக்கிக் ஆக்கிக் கொண்டார். தமிழ்ச் சமூகத்தின் சமத்துவமற்ற நிலைக்கு – இந்து மதமும் அது போற்றும் சாதி அமைப்பும் காரணம் என்று காட்டி, அந்த அடிப்படையை உøடிக்க வேண்டும் என்று போராடிய தலைவர் பெரியாரோடும் இணக்கம் கொண்டார். 1928ஆம் ஆண்டு முதல், சுயமரியாதை இயக்கம், பெண்ணுரிமை குறித்த முறைப்படுத்தப்பட்ட – முழுமையான பார்வையைக் கொண்டிருந்தது. பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும், பேசவும் – எழுதவும் பொது வாழ்வில் தலையிடவும் ஒரு சமூக – பண்பாடபுடுத் தளத்தை உருவாக்கித் தர தொடக்கமாகவும் ஆனது. இப்பின்னணி, அன்னை மீனாம்பாளுக்கு சாதிய ஆணாதிக்கத்தின் ஒவ்வொரு சுவட்டிலும் சவால்விடும் வகையில் குறுக்கிடுவதற்கான தார்மீக வலிமையை அளித்தது.

அன்னை மீனாம்பாள், 1931இல் தனது 29ஆவது வயதில் சென்னை பாரிஸ் கார்னரில் ஒய்.எம்.சி.ஏ. கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் உரை வீச்சு நிகழ்ததினார். வந்தவிதமான ÷டைக் கூச்சமோ, தயக்கமோ, தடையோ இல்லாமல் – சாதியச் சமூக அமைப்பை எதிர்த்து கோபமாகவும், துணிவாகவும், தர்க்கமாகவும், விளக்கமாகவும் அன்னையார் உரை அமையப் பெற்றது. இதுவே அவரின் சமூகப் பிரவேசத்தின் முதல் நிகழ்வும் ஆனது.

அன்னை மீனாம்பாள், இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகள் காலம் கவுரவ நீதிபதியாக இருந்தவர். கவுரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில், “உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால், அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்புச் செச்தூலல மாட்டீர்களா? என்று கேட்டார்ள். அதற்கு அன்னை மீனாம்பாள், கணவர் என்பது வீட்டோடுதான். நீதிமன்றத்தில்அவர் வழக்குரைஞர்; நான் நீதிபதி. கணவன் – மனைவி உறவு அங்கே கிடையாது” என்று ஆளுமைய>டன் பதிலளித்தார். நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும், வாழ்க்கையையும், மக்களின் பல்வேறு பிரச்சனைகளையும் பெருமளவு புரிந்துக் கொண்டார்.

அன்னை மினாம்பாள், சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்புக் குழுத் தலைவராக, திறப்பாளராக, தலைவராக, சிறப்புரையாளராக முக்கியத்துவம் பெற்றிருந்தார். குடும்ப எல்லைகளைக் கடந்தும், சமுதாயம் பெண்களுக்கென்றே விதித்துள்ள அடிமைப் பாத்திரங்களை மறுத்தும் – சுயமரியாதையுடனும் சுதந்திரத்தடுனும் சமத்துவத்துடனும் பெண்ள் வாழ விரும்ப அறைகூவல் விடுத்தார்.

புரட்சியாளர் அம்பேத்கர், தான் இந்து மதத்திலிருந்து வெளியேறப்போவதாகக் கூறி வெளியிட்ட அறிக்கையை “குடி அரசு’ வரவேற்றது. அம்முடிவை ஆதரித்து 30.11.35இல் எழும்பூர் ஏரியில் “ஸ்பர்டாங் ஆதிதிராவிட சங்கத்தின்’ மாபெரும் பொதுக் கூட்டம், சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவுடன் நடந்தது. இதில் அன்னை மீனாம்பாள், புரட்சி யாளர் அம்பேத்கரின் மதமாற்ற முடிவை வழிமொமிந்து சுய மரியாதை இயக்கச் சார்பில் சிறப்புரையாற்றினார். “தலி மக்கள் இந்துக்கள் அல்லர்; மதமாற்றமே அவர்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்கும்’ என்று பிரகடனம் செய்தார்.

31.1.1937 அன்று, திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மாநாட்டிற்கு அன்னை மீனாம்பாள் தலைமை ஏற்றார். தனது தலைமையுரையில், “”பூனா ஒப்பந்தம் இல்லாதிருந்திருக்குமானால், இன்று நடைபெறும் தேர்தல்களில் தகுதியுள்ளவர்களும், சமூக முன்னேற்றத்தை முக்கியமாகக் கருதக் கூடியவர்களும் தலித் மக்களுடைய பிரதிநிதிகளாக தாராளமாக வந்திருப்பார்கள். ஆனால், பூனா ஒப்பந்தம் மூலம் இன்று அரசியலே இன்னதென்று தெரியாதவர்களும், சமூகத்திற்கு என்ன செய்யவேண்டுமென்பதை அறியாதவர்களும் – ஆதிக்கச் சாதிக்காரர்களுக்கு அடிமையாக இருக்கக்கூடியவர்களுமே வரமுடியும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டார்.
அன்னை மீனாம்பாள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மைப் பங்காற்றியவர்களில் ஒருவர். 1937 சூலை 27இல் சென்னை லயோலா கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பேசிய முதலமைச்சர் ராஜாஜி, “”இந்தியாவில் பேச எழுதத் கற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றுவிட முடியும். இந்தி, தன் இயல்பிலேயே இந்தியாவின் பொது மொழியாகத் தகுதி பெற்றுள்ளது” என்று பேசி, “கட்டாய இந்தி திணிப்பை மேற்கொண்டார். தலைவர் பெரியார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினைத் தொடங்கினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு – ஜின்னா, ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என். சிவராஜ், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். திருச்சியிலிருந்து நடைபயணமாக வந்த 100 பேர் கொண்ட தொண்டை படை சென்னை கடற்கரையை அடைந்து 11.9.1938 அன்று மாலை நடைபெற்ற மாபெரும் பொதக்கூட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய கட்டமாக அமைந்தது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அன்னை மீனாம்பாள் சிறப்புரையாற்றினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடநடந்து கொண்டிருக்கையில், 1938 நவம்பவர் 12, 13 ஆகிய நாட்களில் சென்னையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடந்த அம்மாநாட்டில் அன்னை மீனாம்பாள் தமிழ்க் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார். இந்தி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இம்மாநாட்டில், தலைவர் ஈ.வே.ரா. அவர்களை சொல்லிலும் எபத்திலும் வழங்கும் போதெல்லாம், “பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென எல்லோரையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

1938 டிசம்பர் இறுதியில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 14ஆவது மாநாட்டை யொடடி அதே மாநாட்டுப் பந்தலில், “தென்னிந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாடு’ம் நடந்தது. இம்மாநாட்டிற்குத் தலைமை வகித்த அன்னை மீனாம்பாள், “”தமிழ் மொழியல் தலைசிறந்த புலமை வாய்ந்து விளங்கிய பெரும் புலவர்களும் கவிகளும் அநேகர் நம் மரபைச் சார்ந்தவர்கள், தாய் மொழியாகிய தமிழ் மொழியிலேயே நம்மில் பெரும்பாலோர் பயிற்சியற்றிருக்கும் இந்நாளில் இந்தியைத் திணிப்பது தகாத செயலாகும்” என்று பேசினார்.

1940களின் தொடக்கத்தில் புரட்சியாளர் அ“மபேத்கரின் “தாழ்த்தப்பட்டோர் பேரவை’யில் தம் துணைவரோடு இணைந்துதமிழக – இந்திய அளவில் செயல்பாட்டை மேற்கொண்டார். சென்னையில் நடந்த “அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் பேரவை’யின மாநாட்டிலும் அதே போல் பம்பாயில் மாநாடு நடந்தபோது அதன் பெண்கள் மாநாட்டிற்கும் தலைமையேற்று, சமூக விடுதலையின் ஆவணமாகத் தன் உரையை நிகழ்த்தினார்.

ஆங்கிலத்தில் புலமைப்பெற்ற தலைவர் சிவராஜ் அவர்களுக்கு, அன்னை மீனாம்பாள் தமிழிலிருந்து மேற்கோள்கள், குறிப்புகள் எடுதபுதுக் கொடத்து உதவி வந்தார். தமிழில் கட்டுரைகள் தயாரிக்க, தலைவர் சிவராஜ் அன்னை மீனாம்பாளைத் நாட வேண்டியிருந்தது. தமிழில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், தம் துணையாரிடம்தான் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முடிந்தது. தலைவர் சிவராஜ் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் சார்பாக, லண்டனில் நடந்த “காமென் வெல்த் மாநாடு’, அமெரிக்காவில் நடந்த “பசிபிக் ரிலேஷன் மாநாடு’ போன்றவைகளுக்குச் சென்றபோது, அவரது அறிக்கைகள் தயாரிப்பிற்குப் பெரிதும் உதவியவர் அன்னை மீனாம்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்திய அரசியல் சட்ட வரைவுக்கு குழு’விற்கு டாக்டர் அம்பேத்கரை தலைமையேற்க கேட்டுக் கொள்ள நேருவும், ராஜாஜியும் தயங்கி, தங்களின் தூதுவராக வல்லபாய் பட்டேலை அம்பேத்கரிடம் அனுப்பி வைத்தனர். வல்லபாய் பட்டேல் இருமுறை அணுகிக் கேட்டும், “காங்கிரஸ்காரர்களை நம்பி என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறி அம்பேத்கர் ஒப்புதல் தரவில்லை.

இந்நிலையில், அம்பேத்கரின் ஒப்புதலைப் பெற “தாழ்த்தப்பட்டோர் பேரவை’யின் பொதுச் செயலாளர் ராஜ்போஜ் அவர்களின் மூலம், தலைவர் சிவராஜ் அவர்களைப் பிடித்து அவர் மூலம் அம்பேத்கரின் ஒப்புதலைப்பெறலாம் என்று ராஜாஜி யோசனை கூறவே, அதுபோலவே ராஜ்போஜை பட்டேல் தனது வீட்டுக்கு ழைத்து வந்து, எட்டு நாட்கள் தன் வீட்டிலேயே தங்கவைத்துக் கொண்டு இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தலைவர் சிவராஜ் அவர்களுக்கு ராஜ்போஜ் இரண்டு முறை “ட்ரங் டெலிபோனில்’ பேசினார். தலைவர் சிவராஜ், இந்தச் சமயத்தைக் கைவிட கூடாது என்று அன்னை மீனாம்பாளிடம் ஆலோசø ஞீனகேட்டார். அன்னை ’னாம்பாளும் இந்த சந்தர்ப்பத்தை விட்டால், நம் மக்கள் சார்பில் வேறெந்த சந்தர்ப்பமும் கிடைக்காது என்றார்.

தலைவர் சிவராஜ், புரட்சியாளர் அம்பேத்கர் “இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழு’த் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டி “அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் பேரவை’யின் மத்திய நிர்வாகக் குபவின் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு பம்பாய்க்குச் சென்றார். அம்பேத்கர் வீட்டிலேயே கூட்டம்.”ட்ரங் டெலிபோன்’ மூலமாகவும். “தந்தி’ மூலமாகவும் உறுப்பினர்களுக்குத் தெரிவித்து நான்கே நாட்களில் இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.

ரயில் மூலமாகவும் ஆகாய விமானம் மூலமாகவும் வரவேண்டியவர்களெல்லாம் வந்து விட்டார்கள். பிறகு தான் புரட்சியாளர் அம்பேத்கருக்கே அவசரக் கமிட்டிக் கூட்டத்திற்கான காரணம் தெரியவந்தது. “”காங்கிரஸ் அரசாங்க கோரிக்கையை டாக்டர் அம்பேத்கர் தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று “பெடரேஷன்’ கேட்டுக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றி வற்புறுத்தவே புரட்சியாளர் அம்பேத்கர், “அரசியல் சட்ட வரைவுக் குழு’விற்குத் தலைவராகப் பொறுப்பேற்க இசைந்தார்.

அம்பேத்கர், அன்னை மீனாம்பாள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையா (செட்டியாருடன்) அம்பேத்கர் பம்பாயில் பேசிக் கெக்டிருந்தபோது, சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார் என்றார். அதற்கு முத்தையா (செட்டியார்), சென்னையிலா? அதுவும் உங்களுக்கா? என்று ஆச்சரியப்பட, ஆமாம், அவர் பெயர் மீனாம்பாள்; தலைவர் சிவராஜின் துணைவி என்று விளக்கமாகச் சொன்னார், அம்பேத்கர். 1942இல் அன்னை மீனாம்பாள், தலைவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் அம்பேத்கர் வீட்டிற்குச் சென்ற போது, அம்பேத்கர் தன் கைவண்ணத்தால் அற்புதமாகச் சமைத்து அவரே அன்போடு பறிமாறினார். அம்பேத்கர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வைத்தவர் அன்னை மீனாம்பாள்.

புரட்சியாளர் அம்பேத்கரால் பெண்ணுரிமைப் போராளி என்றும், தன் அன்பிற்குரிய தங்கை என்றும் அழைக்கப்பட்ட அன்னை மீனாம்பாள், தமிழக – இந்தியஅளவில் பெண்ணுரிமை, தலித் உரிமை இயக்கங்களுக்கு பெரும் பங்காற்றியவர், தன்னுடைய 86ஆவது வயதில் மறைந்தஅன்னை மீனாம்பாள், பழைய தலைமுறையைச் சார்ந்த – புதுமையான சிந்தனைகளைக் கொண்ட போராளி, பெண் விடுதலை, தலித் விடுதலை என்பதே இவரது லட்சியம்.

“தலித் முரசு’ – அக்டோபர் 2003

Load More Related Articles
Load More By sridhar
Load More In வாழ்க்கைக் குறிப்புக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

பேராசிரியர் லக்ஷ்மிநரசு

உலக கவி ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானிகள் சர் ஜே. சி. போஸ், பி சி ரே போன்ற புகழ்பெற்ற மேதைக…