Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
அவர் பேசிய கருத்து என்னவென்றால் “விடுதலப்ப்புலிகள் ஈழத்தமிழருக்காகப் போராட்டம் நடத்தும்போது ஈழப்புலிகள் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது என்ன பதில் சொன்னார்கள் என்றால், உயிரையே பணயம் வச்சி ஒருத்தன் நாட்டுக்காக உழைக்கும்போது இது அதோட ஒப்பிடுகையில் ஒரு சாதாரண விஷயந்தான் என்பதை செய்திகளில் நான் படிச்சேன்” என்று கருத்து தெரிவித்தார். அவரின் கருத்தை இடை மறித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரனும், வழக்கறிஞர் அருள்மொழியும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஆதாரமற்ற செய்திகளை அவதூறாக புலிகள் மீது சொல்லுகிறீர்கள் என்று பேசினார்கள். இதனையடுத்த தொடர் விவாதங்களில் “பாரீசில் வாழும் தமிழர் ஒருவர் என்னிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன” என சிவகாமி விளக்கமளித்தார். இறுதியில் வழக்கறிஞர் அருள்மொழியும், திலகவதியும் இதனை மீண்டும் மறுத்தார்கள் (பார்க்க இணைப்பு – http://www.dailymotion.com/video/x14o4u3_nerpada-new_lifestyle).
மிகவும் பெரிதுபடுத்தப்படாத, பெரிதுபடுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் அற்ற விவாதம் இல்லை என இதனைப் புறக்கணிக்க முடியாது. காரணம், சமீப காலங்களில் தமிழ் அடையாள அரசியலில், விடுதலைப்புலிகள் ஆதரவு, தமிழீழ விடுதலை என்பதன் மீது தலித்துகளின் கண்ணோட்டம் சற்று மாறியிருக்கின்றது. இதன் விளைவாக இன்றைய தலித்துகளின் முழுநேர உழைப்பையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் தலித் விடுதலைக்கு செலவிட முடியாமல் மடைமாற்றி தமிழ்த்தேசிய அரசியலுக்கான தார்மீக ஆதரவின் அடிப்படையில் சமகால தலித் எழுச்சி பாழடிக்கப்பட்டு, குத்தகை விடப்பட்டது என்கிற விமர்சனம் தலித் அமைப்புகள் மீதே தலித்துகளால் முன் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய விடுதலைப்புலிகள் விவகாரங்களில் சமகால தலித்துகளின் அடையாள அரசியல் நிலைப்பாடும், கோட்பாடும் மாறி வரும் சூழலில் சிவகாமி வெளிப்படுத்திய கருத்து ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது.
சிவகாமி தெரிவித்திருந்த வருத்தத்தை ஆமோதிக்கிறவர்களில் ஒருவனாக நான் இருந்தாலும் கூட, புலிகள் குறித்த சிவகாமியின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு சிறு முரண்பாடு உண்டு. அதே சமயம் பெண்கள் பார்வையில் விடுதலைப் புலிகள் குறித்து அவர் கூறிய கருத்தில் உண்மை இல்லை என்றும் என்னால் மறுக்க முடியாது.
அந்த வகையில் சிவகாமி புலிகளின் பெண் நன்னடத்தையை (மட்டுமே) கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருப்பதாக தமிழ்ச் சமுகம் உணரும் என்றால் நிச்சயம் அது திறந்த மனதுடன் விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.
– சிங்களவர்களே சொல்லாத ஒன்றை சிவகாமி சொல்வதாகவும்
1989 செப்டம்பர் 21 – ல் கண்மூடித்தனமாக கொல்லப்பட்ட டாக்டர். ரஜினி ராஜசிங்கம் திரக்மாவின் மரணம், அவரின் நெருங்கிய தோழி சாந்தியின் வாக்கு மூலம், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற பாரதியின் மரணம், செல்வியின் வெளியேற்றம், மரியாதைக்குரிய தோழர் மதிவதினியின் திருமணம் ஆகியவற்றுக்குப் பின்னால் இருண்டு கிடக்கும் உண்மைகள் விரிவாகத் தோண்டி விசாரணை செய்து பார்த்தால் புலிகளின் இனக்குழு இராணுவ மரபின் போர்ப்புனிதம் எதுவரையிலானது என்பது இன்னும் கூடுதலாக புலப்படும்.
எங்கெல்லாம் வெகு பெண்கள் திரள் கொண்ட, அவர்களின் வழிகாட்டுதலைக் கொண்ட, தலைமையை ஏற்ற இயக்கங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றதோ அங்கு எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும் மேற்கண்ட விமர்சனங்கள் அரிதிலும் அரிது. சமகாலத்தில் தெற்காசிய நாடுகளில் எழுச்சியடைந்துள்ள இனக்குழு பாதுகாப்பு இயக்கங்கள், பாரம்பரிய நாடோடி அமைப்புகள், நர்மதா பாதுகாப்பு இயக்கம் போன்ற சுற்றுச் சூழல் இயக்கங்கள், ஆதிவாசி மக்கள் இயக்கம், இயற்கைவளப் பாதுகாப்பு இயக்கம், தற்போதைய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட இயக்கம் போன்ற இயக்கங்களின் குறைந்த பட்ச ஜனநாயக இருப்பு நிலையை தக்க வைக்க முடிந்த இடம் தான் நமக்கு தொடர்ந்து போராட நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.
– இந்திய ஆட்சிப்பணியில் இருந்துகொண்டே ஒடுக்கப்பட்ட தலித் விடுதலைக்காக தனது அலுவலகத்தை திறம்பட நடத்தி களமாடியவர் சிவகாமி அய்.ஏ.எஸ்.
Previous Articleதி.பெ.கமலநாதன்
Next Article அசோகர் விஜயதசமி

Sridhar Kannan
அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.