ஒரு குறிப்பு :

நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரம் அழிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2001ல், பழங்கால கலைச் செல்வம் எனஅழைக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலை, அழிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இசுலாமிய மதக்கொள்கைக்கு எதிரான இந்து மதக்கொள்கை என்பதால் புத்தர் சிலை அழிக்கப்பட்டதென ஆப்கனின் தாலிபான்களால் விளக்கம் சொல்லப்பட்டது.

ஒரு பழங்கதை :

உண்மையில் இதுவொரு பழங்கதை தான் என்பதில் ஐயம் இல்லை. ஆப்கானிஸ்தானின் புதிய நில உரிமையாளர்களான தாலிபான்கள் கலாச்சார நினைவுச் சின்னங்களை, குறிப்பாக மத சம்பந்தப்பட்ட அனைத்துச் சின்னங்களையும் அழித் தொழிப்பதில் தீவிர ஈடுபாடு காட்டி வரு கின்றனர். அது மட்டுமின்றி, பழைய கலாச்சாரச் சின்னங்களை அழித்துவிட்டு, அதன் சுவடே தெரியாமல், அதன் மீது புதியவைகளை கட்டமைக்க முனைந்துள்ளனர். பழைய செயல்பாடுகள் குறைந்து வருகின்றன அல்லது தீண்டத்தகாத செயல்பாடுகள் எனக் கூறிவருகின்றனர். குறிப்பாக விவாக சடங்குகள், உணவுப் பழக்கங்கள் முதலிய செயல்பாடுகளில் தாலிபான்களின் கவனம் அதிகரித்து வந்துள்ளது.

நவீனமயமாக்கல் என்ற பெயரில் பழைய செயல்பாடுகளையும், பழங்கால அமைப்புகளையும் அழித்தொழித்தால் மட் டுமே நவீனத்தின் ஆன்மாக்கள் பாதுகாக்கப்படும் என நம்புகின்றனர். அதே நேரத்தில், நவீன ஆதிக்கத்தின் அச்சுறுத்தலாக பழங்கால சின்னங்கள் இருப்பதாக தாலிபான்கள் கருதுகின்றனர். இத்தகை உணர்வு 16ம் நூற்றாண்டில் ரோம் நகரை ஆட்சி செய்த சீசர் காலத்திலும், எகிப்திலும், சீனா விலும் இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. எவையெல்லாம் அச்சுறுத்தலாக இருக் கின்றனவோ, அவற்றை அழிப்பதே மனித இயல்பாக இருக்கிறது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

சில வாக்குமூலங்கள்

‘‘சிலைகளை அழித்ததில், இசுலாமியர்கள் மிகவும் பெருமையடைகின்றனர். நாங்கள் இந்த சிலைகளை உடைத்ததின் மூலமாக கடவுளை பெருமைப்படுத்தியுள்ளோம்.’’

-தி டைம்ஸ் 6.3.2001 இல் முல்லா முக மது ஓமர்.

‘‘சிலை அழித்தொழித்தலுக்கான கார ணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வு. எங்கள் மீது, பன்னாட்டு சமூகம் விதித்திருந்த பொருளாதார தடை களுக்கு எதிராக நடத்தப்பட்டது எனக் கூறலாம். நாங்கள¢ இசுலாமிய சட்டப்படி, அந்த சிலைகளை உடைத் தோம். இது முழுக்க முழுக்க சம்பந் தப்பட்ட மத பிரச்சினையே.

– 13.3.2001 அன்று. ஜப்பான் நாட்டின் மெய்ன்ஷி ஷிம்பன் நேர்முக உரையா டலில், ஆப்கனின் அயல் துறை மந்திரி வகில் அகமது முடாவகில்.

‘‘ஆப்கனில் உள்ள பழங்கால சின்னங்களை பாதுகாப்பதற்காக நிதி உதவி தருவதாக ஒப்புக்கொண்டனர். இச் சூழலில் ஆப்கனின் இசுலாமிய அரசானது பழங்கால சின்னங்களை அப்புறப் படுத்துவதென தீர்மானித்து இருந்த னர். எது எப்படி இருந்தாலும், எங்களு டைய மதத்தலைவர்கள் கடந்த பல மாதங்களாக விவாதித்து, உருவ வழி பாட்டை முன்னிறுத்தும் சிலைகளை அழித்துவிட வேண்டுமென தீர்மா னித்திருந்தனர்.

– 18.3.2001, தி நியூ யார்க் டைம்ஸ் இதழில் ஆப்கனுக்கான அயல்நாட்டு தூதுவர்.

அரசியலின் அரசியல்

ஆரம்பத்தில், ஆப்கனின் தாலிபான் பயங்கரவாதிகள் பாமியன் புத்தர் சிலைகளை முழுமையாக அழிக்கவில்லை. அவர் களிடம் இருந்த ஆயுதங்களைக் கொண்டு பாமியன் புத்தர் சிலையை முழுமையாக அவர்களால் உடைக்க முடியவில்லை. எனவே, பாமியன் புத்தரின் முகத்தை மட்டுமே சிதைத்துவிட்டு சென்றனர். இதனை அறிந்த ஸ்வீடன் அரசாங்கம், புத்தர் சிலையின் முகங்களை மீண்டும் புதியதாக அமைப் பதற்கான செலவினை, முழுமையாக ஏற்றுக் கொண்டு நிதி உதவி அளிக்க முன்வந்தனர். ஆனால், அன்றைய ஆப்கனின் தலைமைக் குழுவோ, புத்தர் சிலையின் முகத்தை மறு சீரமைப்பதற்கு மாறாக, தமது நாட்டு குழந் தைகளின் உணவுச் செலவினை ஏற்கும்படி கோரியதாகவும், அதற்கு ஸ்வீடன் அரசோ நிதி உதவி குழந்தைகளின் உணவு செலவுக்கு இல்லை; புத்தரின் சிலைக்கு மட்டுமே எனக் கூறியதால்தான் பாமியன் புத்தர் சிலைகளை முழுமையாக அழித்தொழித்தோம் என்று தாலிபான் அமைப்பின் தூதுவரான சையது அஹமதுல்லா ஹாஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதே பேட்டியின் பொழுது, ஒரு வெளிநாட்டு அருங்காட்சியகம், பாமியன் புத்தர் சிலைகளை அழிக்க வேண்டாம். அந்த சிலைகளை தமது அருங் காட்சியகத்துக்கு விற்றுவிடும்படியும், அதற்கு கிடைக்கின்ற நிதியின் மூலம், ஆப்கன் நாட்டு குழந்தைகளின் உணவுத் தேவை யை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு ‘கருத்து சொல்ல முடியாது’ என தாலி பான் அமைப்பின் தூதுவர் கூறினார். இந்த செய்தியில் இருந்தே தாலிபான்களின் அரசியலையும், அரசியலின் சூழ்ச்சி யையும் பண் பாட்டு தளத்தில் செயல்படுகின்ற அனை வராலும் புரிந்துகொள்ள மு யும்.

கெடுதலுக்கான எச்சரிக்கை

எனவே, ஆப்கானிஸ்தானின் தாலி பான்கள் 3ம் மற்றும் 5ம் நூற்றாண்டை சேர்ந்த பாமியன் புத்தர் சிலைகளை மண் ணோடு மண்ணாகச் சிதைத்ததில் அதிர்ச் சியோ, ஆச்சரியமோபடத் தேவையில்லை.

‘‘நாங்கள் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் இத்தகைய சிலை களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; மட்டுமின்றி இவை இசுலாத்திற்கு எதிரானவைகள்.’’ என தாலிபான்களின் அயல்துறை அமைச்சர் வகில் அஹமது முட்டாவரில் கூறியவற்றை நினைவுறுத்தி பாமியன் புத்தர் சிலை அழித்தொழிப்பின் அரசியலை, கவனப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது.

‘கலாச்சார வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்தியலை நாம் தாலிபான்களுடன் ஊசி முனையளவும் காணமுடியாது. நிகழ் கால செயல்பாடுகளை நியாயப்படுத்த அல்லது செயல்படுத்த வேண்டுமெனில் கடந்த கால ஞாபகச் சின்னங்களை அழித்தலே வரலாறாக இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் பாமியன் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்ட பிறகும், அந்த அழிக்கப்பட்ட இடங்களை பார்க்கும் பொழுது மட்டுமின்றி, அதனை நினைக்கும் தருணங்கள் முழுமையாகவே வலிமிக்கதாகவே உள்ளது. இன்று பாமியன் புத்தர் அழித் தொழிப்பு என்பது ஒரு கெடுதலுக்கான எச் சரிக்கையாக, இசுலாமிய பழமைவாத கொள்கையின் மத ஆதிக்கமாகவே, இன் றைய பன்னாட்டு சமூகம் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

தாலிபன் என்ற வார்த்தை அரபு மொழியில் மாணவர்களை குறிக்கும் வார்த்தை. தாலேப் ((Taleb) என்ற வார்த்தை சுன்னி முஸ்லீம்களையும், ஆப்கானிஸ்தானில் உள்ள பஷ§டுன் பழங்குடி மக்களையும் குறிக்கின்ற சொல்லாக கருதப்படுகிறது.தாலி பான்களை பொறுத்தமட்டில் இசுலாமிய மதத்தலைவர்களின் கட்டளையும், இசுலா மிய சட்டமுமே முக்கியமானவைகள். இசு லாத்தில் வேறு எத்தகைய வேறுமையில் ஒற்றுமையையும் ஏற்காதவர்கள். தாலி பான்களை பொறுத்த மட்டில் ஜனநாயகத் தின் மீது மிகுந்த வெறுப்பு உள்ளவர்கள். மதச்சார்பின்மை, அரசியல் பன்முகத் தன்மை ஆகியவை இசுலாத்திற்கு எதிரான வைகள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள். தாலி பான்களின் இசுலாம் என்பதும் அரேபியர் கள் வஹேபிசமும் இரட்டைச் சகோதரர் கள் என்று கூறலாம். ஹீரியா எனப்படும் தாலிபான்களின் இசுலாமியம் வரலாற்று ரீதி யாகத் தவறானவை. சுய சேவையை மட் டுமே முன்னிறுத்துபவை மட்டுமின்றி பழமைவாதத்தை அடிப்படையாக கொண் டவை. குறிப்பாக உண்மையான இசுலாத் திற்கு எதிரானவை என்பதை அறுதியிட்டு கூறலாம்.

பாமியன் புத்தர்

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபு லுக்கு 230 கி.மி. வெளியே ஹஷரஜட் பகுதி யில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில் உள்ள பாறைகளின் உச்சியில் நிற்கும் புத்தர் என்ற கலைச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இது 12 நூற்றாணடுகளுக்கு முந்தியே உருவாக் கப்பட்டுள்ளது. காந்தாராசி சிற்பத்தின் வடி வில் பாமியன் புத்தர்சிலை வடிவமைக்கப் பட்டது. புத்தர் சிலையின் முக்கிய அமைப் புகள் பாறையின் விளிம்பில் அமைக்கப்பட்டன. பெரும்பான்மையான புத்தர் சிலை நெல்,கோதுமை, வைக்கோல், மண் சேறு கலந்த கலவையினால் இச்சிலை உருவாக்கப் பட்டு, மேற்பகுதி முழுமையும் சுவர் பூச்சுக் கான சாந்து வர்ணத்தால் வண்ணமிடப்பட் டுள்ளது. காலப்போக்கில் சிலையின் பெரும் பான்மையான இடங்களில் இந்த சாந்து வண்ணம் மறைந்துவிட்டாலும், உடலின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உடை களின் மடிப்புகள், காதுகள் போன்றவை கருஞ்சிவப்பு வண்ணத்தால் வண்ணமிடப் பட்டவை சிதையாமல் இருந்திருக்கிறது. உடலில் காணப்படும் சிறு சிறு மடிப்புகள் பல்வேறு வர்ணத்தால் வண்ண மிடப்பட் டுள்ளது. புத்தர் சிலையின் நடுத்தர பாகத் தில் உள்ள கைகள், போன்றவை வைக்கோல் மற்றும் மண் கலவை ஆகியவற்றால் மிக உறுதியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. சாதாரண துப்பாக்கிகளால் சுடப்பட்டும் சேதம் அடையாததால் பீரங்கிகளை கொண்டு, ஒட்டுமொத்த பௌத்த சிலையை யும் தாலிபான்கள் கடந்த மார்ச் 2001ல் நிர் மூலமாக்கினர்.

பாமியன் புத்தர் மீது தாக்குதல் – ஓர் அலசல்

ஆப்கானிஸ்தானின் இதயப் பகுதியில் அமைந்திருந்த பாறை மணலால் அமைக் கப்பட்டிருந்த பாமியன் புத்தர் சிலைகளை அழித்தொழித்த நிகழ்வு பெரும்பான்மை யான பன்னாட்டு சுற்றுலா பயணிகள், அறிவுஜீவிகள், கலாச்சார சின்னங்களை பேணிப்பாதுகாப்பவர்கள், பவுத்தர்கள், என அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. குறிப்பாக, பன்னாட்டு சமூகத்தினரின் அறைகூவலையும் புறக்கணித்துவிட்டு, ஆப் கனின் பழமைவாதிகள் இத்தகைய அழித் தொழிப்பில் ஈடுபட்டதோடு,’கலாச்சார போலிசுகள்’ என உலகிற்கு தங்களை அடை யாளம் காட்டினர்.

கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு, 3ம் நூற் றாண்டு காலத்தில், இந்தியாவில் அசோகப் பேரரசு விரிந்திருந்த சமயத்தில், இந்தியா விலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு பவுத்தம் பரவியது. அன்றைய ஆப்கனில் கிரேக்க கலாச்சாரம் பரவிவந்த வேளையில், பவுத்தம் தனது வேர்களை ஆப்கனில் பரப்பியதோடு, புதிய கலைக்கூடமான காந்தாரக்கலை ஆப்கனில் உருவானது. குறிப்பாக கனிஷ்கர் அரியணையில் வீற்றிருந்த சமயம் ஆப்கா னிஸ்தானில் பவுத்தம் மிகப்பெருத்த வளர்ச் சியை எட்டியது. எனவே, ஆசியாவில், ஆப் கன் பவுத்தத்தின் மிக முக்கியமான மய்ய மாக திகழ்ந்தது. எனவேதான், இந்தியாவிலி ருந்து ஆப்கானிஸ்தானுக்கு பரவிய பவுத்தம், அங்கிருந்து சிங்காங், சீனா, மங்கோலியா போன்ற இடங்களுக்கும் பரவியது.

கனிஷ்கரின் காலத்திலேதான் பவுத்த மும், பவுத்த கலையும் இரத்தமும் சதையு மாக ஆப்கனில் இருந்தது. பவுத்தத்தின் நிறு வனராக புத்தருக்கு சிலையும், சிலை வழி பாடும் கனிஷ்கர் காலத்தில்தான் உருவா யின. ஆப்கானிஸ்தானை பொறுத்த மட்டில் பெரும்பான்மையான அயல்நாட்டு கலை களுக்கு வழி அமைத்து வளர்ந்தாலும், அவை பவுத்த சாயலோடு அமைந்திருப்பதே ஆப்கன் பவுத்தத்தின் தனிச்சிறப்பு.

ஆரம்ப காலங்களில் புத்தரின் சிலை கள் உருவாக்கப்படவில்லை. காலியான நாற் காலி, காலடித் தடம், குடை, ஆள் ஏறாத குதிரை, அரசன் இல்லாத சிம்மாசனம் போன்றவையே பவுத்தத்தை விளக்கும் கலைச் சின்னங்களாகக் காணப்பட்டன. அதன்பிறகு ஏற்பட்ட அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மனித உரு விலான புத்தர், கருணை வடிவிலான புத்தர், மகிழ்ச்சியான புத்தர், புன்னகையுடன் தியா னத்தில் உள்ள புத்தர் என சிலைகள் உருவாக் கப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே பெஷாவரில் 150 அடி உயரம் கொண்ட பௌத்த ஸ்தூபம் கட்டப்பட்டது.அக்காலத்தில் இந்த ஸ்தூபம் காண்போரை மூச்சடைக்க வைத்தது. இத னைத் தொடர்ந்தே பல பவுத்த மடாலயங் களும், அனேக புத்தர் சிலைகளும், அஜந்தா, எல்லோரா, ஓடன்புரா போன்ற கலைவடி வங்களுக்கும் சவால்விடும் வகையில் பாமி யன் பள்ளத்தாக்கில் புத்தர் கலைச் சின்னம் அமைக்கப்பட்டது. செங்கிஸ்கான் இந்தியா வின் மீது படையெடுக்க, பாமியன் பள்ளத் தாக்கின் வழியாக இந்தியா வந்த பொழுது, பாமியன் பள்ளத்தாக்கிலிருந்த பெரும்பான் மையான பவுத்த சின்னங்கள் சிதைக்கப் பட்டன. அல்லது சிதைந்து போயின.

13ம் நூற்றாண்டின்போது, பாமியன் நகரில் வசித்த அனைத்து மக்களையும் வெளி யேற்றிவிட்டு செங்கிஸ்கான் நகரை ஆக்கி ரமித்தான். இந்த ஆக்கிரமிப்பின்போது செங்கிஸ்கானின் பேரன் முட்டுஜென் இறந்ததால், பாமியன் நகரில் வாழ்ந்த அனைத்து மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும்கூட இருக்கக் கூடாது, அவை களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்படி படி செங்கிஸ்கான் ஆணையிட்டான். எனவே, இந்த பாமியன் நகருக்கு மாவோ – பாலிக் (கெட்ட நகரம்) எனப் பெயர் வழங்க லாயிற்று. அன்று நடந்த அதே நிகழ்வு இன் றும் நடந்துள்ளது. துப்பாக்கிகள், பீரங்கிகள் கொண்டு புத்தர் சிலை அழித்தொழிக்கப் பட்டுள்ளது.

ஆம்…. இது எவ்வளவு பெரிய அபத்தம்… ஆப்கனில் கலாச்சார சுத்திகரிப்பு என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய அக்கிர மம், கொசாவோவில் ‘‘செர்பிய இன அழித் தொழிப்பு’’ என்ற ஆணவச் செயல்பாடு, இலங்கையில் ‘‘தமிழ் இனச் அழித் தொழிப்பு’’ போன்றவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டியது, பன்னாட்டு சமூகக் குடிமக்களின் கடமையாகும்.

நிறைவாக

பொது வரலாற்று உண்மைகளையும், சரித்திரத்தின் கால ஏடுகளையும் பார்த்தோ மேயானால், எந்த ஒரு முஸ்லீம் நாட்டிலும் ஜனநாயகச் செயல்பாடு ஏற்றுக் கொள்ளப் படாததாகவும், அத்தகைய நாடுகளில், மதத் தலைவர்கள் அல்லது இராணுவத்தினர் ஆட்சி நடைபெறுவதாகவுமே உள்ளது. இதில் இந்தோனேஷியா மட்டும் விதி விலக்கு. அது போல, இந்து என்ற ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி ‘பெரும் பான்மை’ எனும் பெயரில் நடைபெறும் செயல்பாடும், அந்த நாட்டின் விளிம்பு நிலைமக்களை, சொந்த நாட்டிலேயே அகதி களாக வைக்கும் அவலத்தை உருவாக்கும். இச்சூழலில், ஒற்றைக்கலாச்சாரத்தை முன்னிறுத்தும் கலாச்சார தேசியத்தையும், கலாச்சார சுத்திகரிப்பையும் உலக அளவில் அனைத்துத் தளங்களிலும் கண்டனம் தெரிவிக்காவிடில், அடுத்தத் தலைமுறையில் மனிதர்களே இருக்கமாட்டார்கள் மாறாக. மனித மாமிசம் உண்ணும் நரக் கூட்டமாக இருப்பார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை…. உங்களுக்கு?

  • ஐ.ஜா.ம.இன்பகுமார்

         கொற்றவை, அக்டோபர் 2010-ல் வெளியான கட்டுரை

Load More Related Articles
Load More By sridhar
Load More In கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

எல்லோரும் சமமென்கிறாய்

‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉ…