3.14 உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி

மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993. விதிகள். 1997.

 

3.14.1. உலர கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993.

 

46வது சட்டம் 1993

ஜுன் 5 1993

 

இச்சட்டம் உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளுவதையும் மற்றும் உலர் கழிப்பக கட்டு மானத்தையும் அல்லது இவற்றை தொடர்வதையும் தடை செய்கிறது. மேலும் உலர் கழிப்பக கட்டுமானம் மற்றும் நீருள்ள கழிப்பக பராமரிப்பு மற்றும் இத்துடன் தொடர்புடைய செயல் பாடுகள் அல்லது நிகழ்வுகளை கீழ்கண்டவாறு ஒழுங்கு படுத்துகிறது.

 

முகப்புரை

 

அரசியல் சட்டத்தின் முகப்புரை உத்திரவாதம் அளிக்கப் பட்டுள்ள தனிமனித மாண்பையும் சகாதரத்துவத்தையும், புனிதத்தையும் தருகிறது.

 

அரசியலமைப்பு சட்டம் விதி. 47ன்படி பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதையும் தன் முதன்மையான கடமையாகக் கொள்கிறது.

 

ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் மனித தன்மையற்ற செயல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

எனவே நகராட்சிகளில் இருக்கும் உலர் கழிப்பகங்களை கணக்கிட்டு அவற்றை நீர் வசதிகளோடு கூடிய கழிப்பகங்களாக மாற்றுதுடன் உலர் கழிப்பகங்கள் கட்டவதை தடை செய்தல் வேண்டும். மேலும் இச்செயல்பாடுகளை மேற்கொள்வதற்குரிய சட்டங்களை உருவாக்க வேண்டும்.

 

எனவே, மனிதக் கழிவுகள் அகற்றுவதை குற்றம் எனக் கூறி இச்செயல்பாட்டை ஒழிப்பதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

எனவே, மனித தன்மையற்ற மனித கழிவை மனிதனே அள்ளுவதை முற்றிலுமாக நீக்க, தீர்மானிப்பதுடன் மனிதனை சூழல் கேட்டிலிருந்து பாதுகாக்கவும், சுகாதாரத்தை பேணவும், உலர் கழிப்பகங்களை நீருள்ள கழிப்பகங்களாக மாற்றவும் அல்லது நீருள்ள கழிப்பகங்களை நிறுவுதல் வேண்டும்.

 

மற்றும், மேற்கூறப்பட்டவை தொடர்பாக அரசாங் கத்திற்காக பாராளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் அரசியலமைப்புச் சட்டம் விதி 2349, மற்றும் 250 இவைகளை மட்டும் மாநில அரசுக்காக பாராளுமன்றம் சட்டம் இயற்றும்.

 

ஆகையால், அரசியல் சட்டம் விதி 252 உட்பரிவு 1ன் படி ஆந்திரா, கோவா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, திரிபுரா மற்றும் மேற்கு வங்களாம் ஆகிய மாநில அரசுகள் சட்ட பேரவை தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இது தொடர்பாக, பாராளுமன்றம் சட்டமியற்றுவதன் மூலம் மாநில அரசுகளை ஒழுங்குபடுத்துகிறது.

 

இந்திய குடியரசின் 44வது ஆண்டில் பாராளுமன்றத் தில் இயற்றப்பட்ட சட்டம் பின்வருமாறு:

 

இயல் 1. அறிமுகம்

 

 1. குறுந்தலைப்பு, செயல்பாடு, தொடக்கம்

 

 1. இச்சட்டம் மனிதக்கழிவுகளை கையால் அள்ளுதல் மற்றும் உலர் கழிப்பகங்கள் கட்டுதல் (தடை) சட்டம் 1993. எனப்படும்.

 

 1. இச்சட்டம் முதல் கட்டமாக ஆந்திரா, கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் அனைத்து ஒன்றியப் பகுதிகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் அரசியல் சட்டம் விதி 252 உட்பிரிவு(1)ன் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏற்று கொள்ளப்பட்டது.

 

 1. இச்சட்டம் ஆந்திரபிரதேசம், கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், திரிபுரா, மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற மாநிலங்களில் அரசமைப்பு சட்டம் 252, உட்பிரிவு (1)ன் படி மைய அரசின் அரசிதழில் குறிப்பிட்டு வெளியிடும் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

 

 1. விளக்கங்கள்

 

இச்சட்டத்தில் வேறு வகையில் குறிப்பிட்டாலன்றி,

 

அ.”பகுதி” என்பது மாநில அரசால் குறிப்பிட்டு வெளியிடப்படுகின்ற பகுதியாகும்.

 

ஆ. “கட்டிடம்’ என்பது ஒரு வீடு, வெளிவீடு, கழிப்பகம், சிறுநீர் கழிப்பகம், குடிசை, சுவர் (சுற்றுச்சுவர் இல்லாத) ஆஸ்பெஸ்டாஸ் வீடு மற்றும் செங்கல், மணல், மரம், இரும்பு அல்லது பிற பொருட்கள் கொண்டு கட்டப்பட்டவைகளைக் குறிக்கும்.

 

இ. “உலர் கழிப்பகங்கள்’ என்பவை நீர் வசதியில்லாத மற்ற எல்லா கழிப்பகங்களையும் குறிக்கும்.

 

ஈ. “சுற்றுச்சூழல்’ என்பது நீர், காற்று, நிலம் இவைகளை உள்ளிட்டதும், நீருடன் தொடர்பு கொண்டிருப்பதும், காற்று, நீர், நிலம், மனிதர்கள், பிற உயிரினங்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை குறிக்கும்.

 

உ. “சுற்றுச் சூழலை சீர் கெடச் செய்பவை’ என்பது திட, திரவ அல்லது வாயு மாசுக்கலவை கொண்டவற்றையும் அல்லது சுற்றுச் சூழலை சீர்கெடச் செய்பவற்றையும் குறிக்கும்.

 

ஊ. “சுற்றுச்சூழல் மாசு’ என்பது தற்போதுள்ள நிலையிலிருந்து சுற்றுச்சூழலை எந்த வகையிலாவது மாசுப்படச் செய்யும் காரணியை குறிக்கும்.

 

எ. “நிர்வாக அதிகாரி’ என்பவர் இச்சட்டத்தின் பிரிவு 5 உட்பிரிவு 1ன் படி பணி நியமனம் செய்யப்பட்டவரை குறிக்கும்.

 

ஏ. “ஹட்கோ’ என்பது நகர்புற வீட்டு வசதி குழுமம் ஆகும். இது நிறுவனச் சட்டம் 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பொது நிறுவனமாகும்.

 

ஐ. “கழிப்பகம்’ என்பது மனித கழிவை சேகரித்து வைக்கப் பயன்படும் ஒரு பகுதி, கட்டிடம், இணைப்புக் குழாய், துணைக் கருவிகள் மற்றும் உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி, கட்டுமானத் (தடை)துடன் தொடர்புடையகைள்.

 

ஓ. “மனித கழிவை கையால் அள்ளுவோர்” என்போர் ஒருவர் தானாகவோ அல்லது வேலைக்கு அமர்த்தப்பட் டடோ மனிதக் கழிவுகளை துப்புரவு செய்தல் அல்லது வேறு வகையில் மனிதக் கழிவை அள்ளுவோர் என அழைக்கப் படுவோர்.

 

ஓ. “அறிவித்தல்” என்பது அரசிதழில் வெளியிடப்படுகின்ற குறிப்பாணையைக் குறிக்கும்.

 

 1. “வரையறுத்தல்’ என்பது இச்சட்டத்தின்படி வரையறுக்கப்படும் விதிகளை குறிக்கும்.

 

 1. “மாநில அரசாங்கம்’ இதனோடு தொடர்புயைட யூனியன் பிரதேசம் என்பது அரசியல் சட்டம் விதி 239ன் படி நியமிக்கப்பட்ட நிர்வாகியை குறிக்கும்.

 

 1. “நீர் தடுப்பு உள்ள கழிப்பகம்’ என்பது நிரினால் துப்புரவு செய்யதக்கது அல்லது நீர்

ஊற்றக்கூடிய கழிப்பிடம் அல்லது குறைந்தபட்சம் 20 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட நீர்தடுப்பின் வாயாக மனித கழிவுகளை நீர்கொண்டு தூய்மைபடுத்தும் இடத்தைக் குறிக்கும்.

 

 

இயல். 2.

 

மனித கழிவுகளை கைகளால் துப்புரவு செய்யும்

தொழில் போன்றவைகளை தடை செய்தல்

 

 1. மனித கழிவுகளை கைகளால் துப்புரவு செய்வதற்க தடை மற்றும் பிற.

 

(1) இப்பிரிவின் உட்பிரிவு (2) மற்றும் பிற விதிமுறைகளின் படி மாநில அரசு, அறிவித்தல் மூலம் குறிப்பிடும் தேதி மற்றும் இடங்களில் கையால் மலம் அள்ளுவது தடை செய்யப்படுகிறது. மற்றும் பறி.

 

(அ) தானாகவோ பிறர் மூலம் பணிக்கு அமர்த்தப் பட்டோ, மனிதக் கழிவுகளை கைகளால் அள்ளும் பணியை செய்வதற்கு யாரையும் ஈடுபடுத்தக் கூடாது அல்லது

 

(ஆ) உலர் கழிப்பகங்களை கட்டவோ அல்லது பராமரிக்கவோ கூடாது

 

 1. மாநில அரசு இப்பிரிவின் உட்பிரிவு 1ன்படி அறிவித்தல் செய்ய தேவையில்லை. இல்லாவிடில்.

 

அ. இது குறித்த தகவலை இவ்வாறு செய்ய இருக்கும் விருப்பத்தை 90 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்.

 

 1. நீருள்ள கழிப்பகங்களை பயன்படுத்தும் போதுமான வாய்ப்பை அப்பகுதகளில் ஏற்படுத்தல்.

 

 1. அந்தந்தப் பகுதிகளில் தேவையான சுற்றுசூழல் பாதுகாப்புக்கும், மேம்பாட்டிற்கும், பொதுநலத்திற்கும் தேவையானவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

 

 1. அதிகார விதிவிலக்கு

 

மாநில அரசு, பொதுவான அல்லது சிறப்பான ஆணையை அரசிதழில் வெளியிடுவதன் மூலம் முன்பு கூறிய நிபந்தனையின் அடிப்படையில் எந்தப் பகுயல் பொருத்தமானது எனக் கருதும் விதியை விதிக்கவோ, விதிவிலக் குளிக்கவோ, கட்டிடத்தையோ, வகுப்பையோ, இச்சட்ட விதிமுறைகளின்படி நீக்கவும், பொருந்துமாறு செய்யவும் அல்லது குறிப்பிட்ட தேவைகளையும் இச்சட்டத்தின் படி அணுகவும் அல்லது எந்தவொரு விதியோ, ஆணையோ அறி விக்கவோ அல்லது திட்டம் ஒன்றை இச்சட்டத்தன் கீழ் வடிவமைக்கவோ அல்லது ஒரு பிரிவினரை இப்பணியில் மரியாதை குறைவாக நடத்துவதை தடுக்கவோ அல்லது வேறுபாடு காட்டாமைக்கான முன்னேற்பாடுகளை செய்யவோ புகார்களை கவனிக்கவோ அல்லது விதிவிலக்கு அளிக்கவோ சூழ்நிலையின் தேவைக்கேற்ப மேற்கொள்ளலாம்.

 

இயல். 3. திட்டங்களும் அமலாக்க அதிகாரிகளும்

 

 1. நிர்வாக அதிகாரிகள் நியமனமும் அவர்களது அதிகாரம் மற்றும் செயல்பாடுகளும் மாநில அரசு அதிகாரபுர்வ அரசிதழில்ஆணையை வெளியிடுவதன் மூலம் மாவட்ட நடுவர் அல்லது துணைக் கோட்ட நடுவர் ஒருவரை நிர்வாக அதிகாரியாக குறிப்பிட்ட எல்லை பகுதிக்குள் நியமிக்கலாம். மற்றும் அவருக்குள்ள அதிகாரம், செயல்படுத்தும் கடமைகள் ஆகியவற்றை ஆணையில் குறிப்பிடலாம, தேவையான கடமைகளை நிறைவேற்ற அலுவலகங்கள், சிறப்பு அலுவலர்கள் உதவியாளர்களை நியமிக்கலாம். அவர் தமது அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அவரது உள்பகுதி எல்லைக்குள் தேவையான அலுவலர்களை அல்லது சிறப்பு அலுவலர்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

 

 1. உட்பிரிவு (1)ன்படி நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரி மற்றும் அலுவலர் அல்லது தனி அலுவலர், மனிதக் கழிவு கûடிள கையால் அள்ளும் பணியை செய்யும் அல்லது செய்ய நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், உடல்நலத்தை மேம்படுத்தவும்ட பிரிவு (3) உட்பிரிவு(1)ன் படி அறிவிப்பு செய்வதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிக்கும் ஏற்பாடுகளை செய்தல் வேண்டும்.

 

 1. திட்டங்களை உரவாக்குவதற்கான மாநில அரசின் அதிகாரம்

 

 1. மாநில அரசு, அறிவின்பின் மூலம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை உடல் கழிப்பகங்களை ஒழுங்குபடுத்தி மாற்றியமைக்க அல்லது நீருள்ள கழிப்பகங்களை அமைக்க அல்லது பராமரிக்க “பிரிவு-3′ உட்பிரிவு (1)ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அல்லது பிற பயனுள்ள வேலை வாய்ப்பு அளிக்கவும் இதுதொடர்பான வெவ்வேறு பகுதிகளில் தட்டங்களை இச்சட்டத்தின் கீழ் உருவாக்கலாம். “ஹட்கோ’ நிறுவனத்துடன் கலந்தாலோசிக்காமல் அந்நிறுவனத்திடம் நிதியுதவி பெறும் திட்டங்களை உருவாக்க கூடாது.

 

 1. கீழே குறுப்பிடப்பட்டுள்ள திட்டங்களை குறிப்பாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உருவாக்கலாம்.

 

அ. குறிப்பிட்ட காலத்திற்குள் உலர் கழிப்பகங்களை நீர்வசதியுள்ள கழிப்பகங்களாக மாற்றுதல்.

 

ஆ. உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பிற முகவர் களுக்கும் புதிய கழிப்பிடங்களுக்கு அல்லது கழிப்பிடங் களைபுதுப்பிப்பதற்கு அல்லது குறைந்த செலவு கழிப்பிடங் களை அமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப அல்லது நிதியுதவிகளை அளித்தல்.

 

இ. பொதுக் கட்டண கழிப்பிடங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்.

 

ஈ. பொருளாதாரரீதியாக பின்தங்கிய மக்கள் அல்லது குடிசைப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் பங்களிப்புடன் காப்பகங்களை அமைத்தல் மற்றும் பராமரித்தல்.

உ. மனிதக் கழிவுகளை கையால் அள்ளுவோர்க்கு மறு வாழ்வு அளிக்கும் நோக்கில் அவர்களை பதிவு செய்தல்.

 

ஊ. நீர்வசதியுள்ள கழிப்பகங்களை தரமான மற்றும் சிறப்பான முறையில் பேணுதல்.

 

எ. உலர் கழிப்பகங்களை நீருள்ள கழிப்பகங்களாக மாற்றுகின்ற திட்டங்களை உருவாக்குதல்.

 

ஏ. பொதுக் கழிப்பிடங்கள் அல்லது பங்களிப்பு கழிப்பிடங்களை அமைக்க பணம் வசூலிக்க அனுமதியளித்தல்.

 

 1. மாநில அரசுக்குள்ள அதிகாரமளிக்கும் நெறிமுறைகள்

 

இது தொடர்பாக வேறு சட்டங்களில் வேறு வகைகளில் குறிப்பிட்டாலன்றி, இச்சட்டத்தின்படி மாநில அரசாங்கம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை செயல்படுத்தும் முறையிலும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தும் முறையிலும் எழுத்து மூலமான நெறிமுறைகளை எந்த ஒருவருக்குமோ அதிகா ரிக்குமோ அல்லது உள்ளூர் அலுவலருக்குமோ அல்லது பிற அதிகாரிக்குமோ வழங்கலாம். சம்பந்தப்பட்ட பிற நபர் அல்லது அலுவலர் அல்லது உள்ளூர் அல்லது மற்ற அதிகாரி அவ்வாறான நெறிமுறைகளது ஆணைப்படி நடக்க வேண்டும்.

 

 1. நிர்வாக அதிகாரிகள், ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள், போன்றோர்களை பொது ஊழியர்களாக கருதுதல்.

 

அனைத்து நிர்வாக அதிகாரிகள், அனைத்து அலுவலர்கள் மற்றும் பிற பயிôளர்கள், மற்றும் அதிகாரபூர்வ அலுவலர்கள் உள்ளிட்டோரை 5வது பிரிவு உட்பிரிவு – 1ன் படி அனைத்து ஆய்வாளர்களையும் பிரிவு – 9 உட்பிரிவு-1ன் படி நியமனம் செய்யலாம். மற்றும் அனைத்து அலுவலர்களும், பிற பணியாளர்களும் அதிகாரபூர்வமாக திட்டங்களை செயல்படுத்து வோர்களும் இச்சட்டத்தின் கீழ் ஆணைகளை பிறப்பிப்பவர்களும், இவ்வாறு செயல் படவோஅல்லது திட்டங்களையும் அல்லது விதிகளை உருவாக்குவோர்களும் அல்லது ஆணைகளை பிறப்பிப்பவர் களும் இவ்வாறு செயல்படவோ அல்லது திட்டங்களையும் அல்லது விதிகளை உருவாக்குவோர்களும் அல்லது ஆணை களை பிறப்பிப்பவர்களும் இந்திய தண்டனைச் சட்டம் (1860ம் ஆண்டின் 45வது சட்டம்) பிரிவின்படி அரசாங்க பொது அலுவலர்களாகவே கருதப்படுவார்கள்.

 

 1. ஆய்வாளர்களை நியமித்தலும் அவர்களது பணி அதிகாரங்களும் ஆய்வு முறைகளும்

 

 1. மடாநில அரசு அறிக்கையின் மூலம், இச்சட்டப்படி பொருத்தமான தகுதியுடைய நபரை ஆய்வாளராக நியமித்து, இச்சட்டத்தின்படி அவர்கள் தங்களது அதிகாரத்தை உள்ளூர் அளவில் பயன்படுத்தலாம்.

 

 1. ஒவ்வொரு ஆய்வாளரும் உள்ளூர் எல்லைக் குட்பட்டநிர்வாக அதிகாரியின் கீழ்சார்நிலை அலுவலராக செயல்படுவார்.

 

 1. இதன் சார்பாக மாநில அரசு உருவாக்கும் எந்த வித விதிகளுக்கும் உட்பட்டு ஓர் ஆய்வாளர் தமது எல்லைக்குள் குந்த நேரங்களில் கடடாயமான தேவையென கருதும்போது எந்தவொரு இடததிலும் பின்வரும் காரணங்களுக்காக தலையிடலாம்.

 

அ. ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல்

 

ஆ. இச்சட்டத்தின் செயல்முறைகளை எம் முறைகளில் செய்யலாம் என தீர்மானித்தல், எழுத்து மூலம் நெறிமுறைகளை அறிறுத்தல், அவை தொடர்பான அறிவிப்புகள், நெறி முறைகள் இசைவு ஆணைகள் இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி கடைப்பிடிக்கப்படுகிறதோ என்று கவனித்தல்.

 

இ. ஏதேனும் ஒரு கழிப்பகத்தை அல்லது ஒரு கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக தெரிந்தால், இச்சட்டப்படி குற்றம் நடைபெறும் என அறிந்தால் சூழல மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

 

 1. சுற்றுசூழல் மாசுபாடுகளை தடுப்பதற்கான நிர்வாக அதிகாரியின் அதிகாரம்

 

 1. பிரிவு -3ன் படி வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளை மீறியது தொடர்பான தகவலை யாரேனும் ஒருவர் தெரிவித்தால், அல்லது யாரேனும் தெரிவித்தால் அல்லது ஆய்வாளர் அறிக்கை அளித்தால் நிர்வாக அதிகாரி அது குறித்து நடைமுறை ரீதியாக இச்சட்டத்தின்படி எந்தவொரு நடவடிக்கையையும் தேவைக்கு ஏற்ப உரிமையாளர் அல்லது பயனாளி மீது எடுக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் சீரமைப்பு பணிகளை நிறைவேற்றுமாறு உரிமையாளர் அல்லது யனாளியை வற்புறுத்தி நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும். அல்லது சுற்றுசூழல் மாசுபாட்டை சரிசெய்வதற்கான செலவுத் தொகையை உரிமையாளர் அல்லது பயனாளியிடமிருந்து வசூல் செய்துகொள்ளலாம்.

 

 1. உட்பிரிவு – 1ன் படி சீரமைப்பு செயல்பாட்டிற்காக செலவிட்டவற்றுள் நிர்வாக அதிகாரியால் பரிந்துரைக்கப் பட்ட சரி செய்வதற்காக வட்டியுடன் செலுத்த வேண்டிய செலவுத் தொகைகள் எவையேனும் குறிப்பிட்ட தொகைகளை செலுத்தா விட்டால்மாநில அரசுக்காக நிலவரி மூலமாகவோ, அல்லது பொதுக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது முகவர் மூலம் வசூல் செய்யலாம்.

 

 

 1. குறிப்பிட்ட பிரிவினருக்கு நிதிஉதவி வழங்குவதை விரிவுபடுத்துவது குறித்த “ஹட்கோ’ வின் கடமைகள்

 

1.நிறுகூன ஒப்பந்தத்தில் எவை குறிப்பிடபட்டிருந்தாலும், அல்லது அமைப்பின் பிரிவுகளில் அல்லது வீடு மற்றும் நகர்புற வளர்ச்சி கடன் வழங்கும் திட்டங்களில் எவை குறிப்பிடப் பட்டி ருந்தாலும், அல்லது பொருத்தமான இனங்களுக்கான நீர் வசதியுள்ள காப்பகங்களை அமைப்பதற்கான நிதியுதவி களை விரிவுபடுத்தி வழங்குவது உட்பிரிவு (6)ன்படி “ஹட்கோ’வின் கடமையாகும்.

 

 1. உட்பிரிவு – 1ல் குறிப்பிட்டுள்ளபடி இந்த நிதியுதவியை விரிவுபடுத்தி ஹட்கோவின் விதிமுறைக்குட்பட்டு (சுலப மற்றும் சலுகை முறைத் தவணை மற்றும் குறைந்த வட்டியில்) இது போன்ற பொருத்தமான காரணங்களுக்காக அல்லது பிரிவனிருக்காக வழங்கலாம்.

 

 1. கட்டணம் வசூலிக்கும் அதிகாரம்

 

மாநில அரசு, ஏதேனும் ஆணை அல்லது திட்டங் களுக்காக இச்சட்டத்தின் ஆளுகைக்குட்பட்டு வெளிப்படுத் தும் வகைமுறை களுக்கேற்ப கீழ்கண்டவாறு கட்டணங்களை வசூலிக்கலாம்.

 

அ. கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் சமுதாய கழிப்பிடங்கள்.

 

ஆ. குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கட்டப்படுகிற பொதுவாக பகிர்ந்து கொண்டு பயன்படுத்தும் கழிப்பிடங்கள். அல்லது

 

இ. ஆணைபிறப்பிக்கப்பட்டிருத்தல் அல்லது ஆணை விடுவிக்கப்பட்ட ஆவணத்தின நகல் தொடர்புடையவை. அல்லது

 

ஈ. உரிமம் வழங்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களால் வடிகால் நீர்வசதி உள்ளதாக கட்டப்படும் கழிப்பகங்கள் அல்லது

 

உ. வேறு பொருத்தமான நோக்கங்களுக்காகவோ அல்லது சேவை நோக்குடன் உரிய அதிகாரியாலோ, குழுவாலோ அல்லது இச்சட்டத்தின் கீழ் செயல்படுகிற அதிகார அமைப்பினாலோ அல்லது மற்ற விதிமுறையின் படியோ நெறிமுறைப்படியோ, ஆணைப்படியோ அல்லது திட்டத்தின்படியோ தீர்மானிக்கப் பட்டிருந்தால்.

 

பொது நலனை முன்னிட்டு அரசு கட்டாய தேவை எனக் கருதினால் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிட்டு, அவ்வாறான கட்டணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ செலுத்துவதி லிருந்து விதிவிலக்கு ஆணை விடுக்கலாம்.

 

 1. குழுக்களின் அமைப்பு சட்ட விதிகள்

 

 1. மைய அரசின் அறிவிப்பின் மூலம் பின்வரும் குழுக்களை அமைக்கலாம்.

 

அ. ஒன்று அல்லது பல திட்டக் குழுக்களை நாட்டில் உள்ள நீர்வசதியுள்ள, கழிப்பகம் காட்டுவதற்காக அமைக்கலாம்.

 

ஆ. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கண் காணிப்புக் குழுக்கள் மூலமாக அவ்வாறானத் திட்டங்கள், செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து கண்காணித்தல்.

 

இ. மத்திய அரசு இச்சட்டத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அத்தகைய பெயர்களுடன் அமைக்கும் மற்ற குழுக்கள்.

 

 1. மத்திய அரசு இதற்காக அமைக்கின்ற குழுக்களின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடகள் மற்றும் விதிமுறைகள், நிபந்தனைகள் அடிப்பûடிடயிலான உறுப்பினர்கள் நியமனம் மற்றும் அவை தொடர்புடைய மற்ற உறுப்பினர்கள், செயல் பாடுகள் குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வரை யறுக்கலாம்.

 

 1. இக்குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அவர்களுக்கு சட்ட உட்பிரிவு – 1ன் படி கட்ட ணமும் இதரபடிவுகளும் வரையறுக்கப்படலாம்.

 

அ. பிரிவு.3. உட்பிரிவு – 1ன் படி நீர்தடுப்பு உள்ள கழிப் பகங்களை கட்டுமானம் செய்யும் திட்டத்தை ஒருங்கிணைக் கவும், கண்காணிக்கவும், கையால் மனிதக்கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டள்ள துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தவும் தக்க அறிக்கையை வெளியிடுதல்.

 

ஆ. இச்சட்டவிதிகளின் நோக்கங்களுக்காக, இவை போன்ற பிற குழுக்களை பொருத்தமான பெயர்களுடன் மாநில அரசு அமைத்தல்.

 

 1. மாநில அரசு குழுக்களை அமைத்து உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்றவற்றையும், அவற்றுடன் தொடர் புடைய பிற செயல்பாடுகளையும் மாநில அரசு வரையறை செய்தல்

 

 1. உட்பிரிவு 4ன்படி இக்குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான கட்டணங்கள் மற்றும் படிகளை வழங்குவதற்கான வரையறைகளை செய்தல்.

 

இயல்.4. தண்டனைகளும், விதிமுறைகளும்

 

 1. சட்ட விதிமுறைகளின் மீறல்களுக்கான தண்டனை மற்றும் விதிகள், ஆணைகள், வழிகாட்டும் நெறிகள் மற்றும் திட்டங்கள் :

 

இச்சட்டத்தன அல்லது விதிகளின் அல்லத உருவாக்கப் பட்ட திட்டங்களின் அல்லது வழிகாட்டும் நெறிமறைகளின் விதிமுறைகள் முதலியவற்றை மீறுகின்ற நபருக்கு அல்லது திட்டங்களை செயல்படுத்த தவறும் நபருக்கு அதிகபட்சமாக ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சம் ரூபாய் 2000/-த்திற்கு மேற்படாத அபராதம் அல்லது இவை இரண்டும் விதிப்பதுடன், சட்டமீறல்கள் அல்லது செயலாக்க தவறுகள் தொடர்ந்தால், மேற்குறிப்பிட்ட தண்டனையுடன் நாளொன்றுக்கு ரூபாய் 100/- வீதம், திட்ட செயலாக்க தவறு அல்லது சட்டமீறல் தொடரும் காலம் வரை, திட்டச் செயலாக்க தவறு அல்லது ட்டமீறல் தொடங்கிய நாள் முதல் அபராதமாக விதிக்கலாம்.

 

 1. நிறுவனங்களின் குற்றங்கள்

 

 1. இச்சட்டத்தின்படி நிறுவனங்களில் உள்ள ஒரு நபர் குற்றம் இழைக்கும்போது, அந்நிறுவனத்தின் அனைத்து நபர்களும் பொறுப்பாவார்கள். அந்நிறுவனம் தனது தொழிலில் ஈடுபடும்போது குற்றம் இழைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்திற்கு எதிராக தண்டனை அளிக்கப்படும்.

 

நிறுவனங்களுக்கென்று உட்பிரிவு எதுவும் தனியாக இல்லை. வாடகைதரர் அல்லது தொடர்புடையவர் எவரா யினும் எவ்வித தண்டனையும் வழங்க வகை செய்கிறது .இவ்வாறு குற்றமென நிரூபிக்கப்படும்போது குற்றம் இழைக்கப்பட்டதை அறியாவிடினும் இக்குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படும்.

 

 1. இச்சட்டத்தின உட்பிரிவு – 1ன் படி ஒரு நிறுவன்ததால் குற்றம் இழைக்கப்பட்டது நிரூபணம் செய்யப்படும்போது கவனமின்மையால் குற்றமிழைத்த பகுதிகளில் உள்ள இயக்குனர், மேலாளர், மேலாண்மை முகவர் தொடர்புடைய அலுவலர் ஆகியோர் குற்றம் இழைத்ததாக கருதி தண்டனைக்குள் ளாகக்ப்படுவர்.

 

விளக்கம் – இப்பிரிவின் நோக்கங்களுக்காக,

 

அ. நிறுவனம் என்பது ஏதேனும் கூட்டமைப்பு மற்றும் குழுமம் அல்லது தனி நபர்களின் சங்கம் மற்றும்

 

ஆ. இயக்குனர் என்பது நிறுவனத்துடன் தொடர்புடையவர், மற்றும் நிறுவனத்தின் பங்குதாரர்.

 

 

 1. பிடியானை வேண்டாத குற்றங்கள்

 

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் (1973) (2/1994) எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், இச்சட்டத்தின் கீழான குற்றங்கள் பிடியானை வேண்டாக் குற்றங்களாகும்.

 

 1. நீதிமன்ற எல்லை தொடர்புடைய விதிமுறைகள்

 

 1. மாநகர குற்றவியல் நடுவர் அல்லது முதல் வகுப்பு நீதித்துறை குற்றவியல் நடுவர் தகுதிக்கு குறையாத நீதிமன்றங்க ளின் கீழ் இக் குற்ற்ஙகள் விசாரிக்கப்படும்.

 

 1. மேல் நிர்வாக அதிகாரியின் முன் அனுமதியின்றி அல்லது நிறுவனத்தின்முன் அனுமதியின்றி இச்சட்டத்தின் கீழான குற்றங் கள் விசாரணைக்கு எடுக்கப்படலாகாது.

 

 1. நிர்வாக அதிகாரியின் ஒப்புதலின்றி சிறப்பான அல்லது பொதுவான எந்த ஒரு நபரின் புகாரும் பிடியானை வேண்டாக் குற்றமாக நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

 

 1. விசாரணை வரையறைகள்

புகார் கொடுத்தவருக்கு தெரிந்து மூன்று மாதங்களுக்குள் புகார் செய்யப்பட்டிருந்தால் ஒழிய பிடியானை வேண்டாக் குற்றங்களை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காது / விசார ணையில் ஈடுபடாது.

 

இயல். 5. பல வகையானவை

 

 1. தகவல், அறிக்கை அல்லது மறுமொழிகள்

 

இச்சட்டத்தின் கீழான மத்திய அரசின் செயல்பாடுகள், அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் முதலியவற்றை காலத்திற்கு காலம், தேவைப்படுகின்ற எந்த ஒரு நபர், அலுவலர், மாநில அரசு அல்லது அதற்குரிய அதிகாரிகள், குறிப்பிட்ட அதிகாரம் உடையோர்களின் அறிக்கைகள், மறுமொழிகள், புள்ளி விபரங்களையோ, கணக்குகளையோ, பிற தகவல்களையோ, தாக்கல் செய்ய வேண்டியிருந்தால் அவ்வாறான நபரோ, அலுவலரோ, மாநில அரசோ அல்லதுபிற அதிகாரிகளோ விபரங்களை தாக்கல் செய்யவேண்டும்.

 

 1. நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு பாதுகாப்பு

 

அரசாங்கத்திற்கோ அல்லது வேறு அலுவலருக்கோ அல்லது பிற அரசு பணியாளருக்கோ அல்லது இச்சட்டத் தினால் உருவாக்கப்பட்டத் திட்டத்தின் அலுவலருக்கோ அல்லது உறுப்பினருக்கோ அல்லது அலுவலருக்கோ அல்லது மேற்கண்ட அமைப்பின் பிற பணியாளருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எதிராக அவர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இச்சட்ட ரீதியாலோ அல்லது விதிகளின் அடிப்படையிலோ, குறிப்பிட்ட ஆணையின் அடிப்படையிலோ, வழிகாட்டு நெறிமுறை அடிப்படையிலோநடவடிக்கை எடுத்திருந்தால், அது குறித்து அவர்கள் மீது எவ்வித உரிமையியல் வழக்குகளையும் தொடர முடியாது.

 

 1. பிற சட்டங்கள் மற்றும ஒப்பந்தங்கள் இந்தசட்டத்துடன் முரண்படுதல்

 

 1. இச் சட்டத்தின் உட்பிரிவு – 2ன் கீழ் குறிப்பிடப் பட்டுள்ள விதிகள் திட்டங்கள் அல்லது ஆணைகள் இச்சட்டத்திற்கு மாறுபட்டு இயற்றப்பட்டுள்ள பிறவகை சட்டங்களிலிருந்து அவற்றின் மரபுகள், சடங்குகள், உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் பிற கருவிகள் ஆகியவற்றிற்கு முரணாக அமையக் கூடும்.

 

 1. ஏதேனும் ஒரு சட்டத்தின்படி ஒருவர் செய்த அல்லது செய்யாமல் விட்ட ஒரு குற்றம், இச்சட்டத்தின்படியோ அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் படியோ செய்யப்பட் டால் அதற்கான தண்டனை இச்சட்டத்தின்படி அல்லாமல் வேறு சட்டத்தின் படியே வழங்க வேண்டும்.

 

 1. மத்திய அரசின் விதிகளை உருவாக்கும் அதிகாரம்

 

 1. மத்திய அரசு ஓர் அறிவிப்பின் மூலமாக இச்சட்டத்தின் வரைமுறைகளை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யலாம்.

 

 1. எவ்வித முன்தீர்மானத்திற்கும் இடமின்றி, முன்கண்ட அதிகாரம் எல்லோருக்கும் பொதுவாக அமையும். அவ்வாறான விதிகள் எல்லோருக்கும் அல்லது பின்வரும் காரணங்களிலோ பொருந்தும் அவை பின்வருமாறு.

 

(அ) பிரிவு 13 உட்பிரிவு – 1ன் படி மத்திய அரசு திட்டக்குழுவையும், கண்காணிப்புக் குழுவையும் மற்றும் பிற குழுக்களையும் அமைக்கும். இக்குழுக்களின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களை நியமனம் செய்வதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

 

(ஆ) பிரிவு – 13 உட்பிரிவு – 1ன் படி இக்குழுவின் உறுப்பினர்களுக்கு கட்டணத் தொகையும், அவை தொடர்பான மற்ற சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும்.

 

 1. இச்சட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விதிகளையும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தமாக முப்பத நாள் கூட்டத்தொடரின் போது, ஒரு தொடரின் போது அல்லது இரு தொடரின் போது அல்லது அதற்கு மேற்பட்ட தொடரின் போது முன்வைக்க வேண்டும். இத் தொடர்களின் போது இரு அவைகளும் விதிகளில் கெண்டு வரும் திருத்தங்கள் அல்லது இரு அவைகளின் ஏற்புடன் அமலுக்கு வரும். எனவே அவ்வாறான திருத்தம், எவ்வித முன் தீர்மானமும் இல்லாமல் அதன் நம்பகத் தன்மைக் குரிய முந்தைய விதியின்படி செய்யப்படும்.

 

 1. மாநில அரசின் விதிகளை உருவாக்கும் அதிகாரம்

 

 1. இச்சட்டத்தின்படி மத்திய அரசினால் உருவாக்கப் பட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒரு அறிவித்தல் மூலம் மாநில அரசு விதிகளை உருவாக்கி கொள்ளலாம்.

 

 1. எவ்வித முன் தீர்மானத்திற்கும் இடமில்லாத எல்லோருக்கும் முன் செல்லும் அதிகாரத்தின்படி பின்வரும் விதிகளுக்கு பொறுத்தமாக அமையும்.

 

அ. மாநில ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிற குழுக்கள் பிரிவு 13 உட்பிரிவு – 4 ன்படி மாநில அரசால் உருவாக்கப்படலாம். இக்குழுக்களின் அதிகாரங்கள், செயல்பாடுகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை, உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய பிறவற்றை உருவாக்கலாம்.

 

ஆ. பிரிவு – 13.  உட்பிரிவு – 4ன் படி குழுக்களின் உறுப்பினர்களுக்கு கட்டணங்கள் மற்றும் பழங்களை வழஙகலாம்.

 

இ. வேறு ஏதேனும் விவகாரங்கள் குறித்து அல்லது தேவைப்படும் ஏற்பாடுகள் குறித்து விதிகளை உருவாக்கலாம்.

 

 1. இச்சட்டத்தின் கீழ் மாநில அரசால் உருவாக்கப்படுகின்ற விதிகள் மற்றும் திட்டங்களை கூடிய விரைவில் மாநில சட்டமன்றத்தின் முன் வைக்க வேண்டும்.

 

 1. சிக்கல்களை நீக்குவதற்கான அதிகாரங்கள்

 

 1. இச்சட்டத்தின ஏற்பாடுகளால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மத்திய அரசு அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடு வதன் மூலம், இச்சட்டத்தின் ஏற்பாடுகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பின் தேவையான ஏற்பாடுகளை செய்து இத்தகைய சிக்கல்களை நீக்கி கொள்ளலாம்.

இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் முடிவுறு வதற்கு முன் மாநில அரசுடன் தொடர்புடைய அரசு ஆணை எதனையும் கொடுவரக்கூடாது.

 

 1. எல்லாவித அரசு ஆணைகளும் கூடிய விரைவில் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டு, அதன் அனுமதியை பெற வேண்டியதாகும்.

 

14.2. உலர்கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் கட்டுமானத் தடை விதிகள் 1977

 

பிரிவு – 22ன் உட்பிரிவு – 1,2 உலர்கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றம் கட்டுமானத்(தடை) சட்டம் 1993, (46/1993) இவற்றை செயல்படுத்துவதற்குரிய அதிகாரங்களை வழங்குகிறது. மைய அரசு கீழ்கண்ட விதிமுறைகளை வழங்குகிறது.

 

 1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்

 

 1. இவ்விதிகள் “உலர்கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் கட்டுமானத் (தடை) (மைய) விதிகள் 1977, என்று அழைக்கப்படும்.

 

 1. இவ்விதிகள் அதிகாரபூர்வ அதிகார இதழில் வெளியிடப்பட்ட நாளிலிலிருந்து நடைமுறைக்கு வரும்.

 

 1. விளக்கங்கள்

 

இவ்விதிகள் வேறுவகையில் குறிப்பிட்டாலன்றி,

 

அ. “சட்டம்’ என்பது உலர்கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் கட்டுமானத் (தடை) சட்டம் 1993, (46/1993)

 

ஆ. “குழு’ என்பது பிரிவு – 13, உட்பிரிவு – 1ன்படி அமைக்கப்பட்டுள்ள குழுவைக் குறிக்கும்.

 

இ. “உறுப்பினர்’ என்பது, உறுப்பினர் செயலர் மற்றும் தலைவரை உள்ளடக்கிய குழுவின் உறுப்பினர்களாவார்.

 

ஈ. “பிரிவு’ என்பது சட்டங்களின் பிரிவைக் குறிக்கும்.

 

 1. திட்டக்குழுவின் அமைப்பு

திட்டக்குழு மைய அரசால் தொடங்கப்படலாம், பிரிவு-13, உட்பிரிவு 1ன் விதி (அ) கீழ்காண்பவைகளை கொண்டிருக்கும்.

 

அ. மைய பொது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர், நகர வளர்ச்சி துறையின் தலைவர்.

 

ஆ. இந்திய அரசின் துணைச் செயலர் பதவிக்கு குறையாத ஒரு உறுப்பினர்மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் நகர செயல்பாடுகள் அமைச்சகத்தில் ஒரு பிரதிநிதி.

 

இ. இந்திய அரசின் துணைச் செயலர் பதவிக்கு குறையாத நலத்துறை அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் இந்த அமைச்சகத்தில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்.

 

ஈ. துணை இயக்குனர் பதவிக்கு குறையாத நாக்பூரிலுள்ள தேசிய சுற்றுசூழல் ஆய்வு நிறுவனத்தின் அலுவலர் அந்நிறுவன இயக்குனரால் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார்.

 

உ. நிர்வாக இயக்குனர் பதவிக்கு குறையாத (திட்ட தலைமை) அலுவலர் ஒருவர் “ஹட்கோ’ வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரால் நியமனம் செய்யப்படுவார். உறுப்பினர்.

 

ஊ. மைய பொது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குறைந்தபட்ச தொகையில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் பொறுப்பில் உள்ள துணை ஆலோசகர் நகர வளர்ச்சி துறை உறுப்பினர் செயலர்.

 

 1. கண்காணிப்பு குழுவின் அமைப்பு

பிரிவு. 13. உட்பிரிவு (1) கூறு. (ஆ) ன் அடிப்படையில் மைய அரசால் கண்காணிப்புக் குழு உருவாக்கப்படலாம். இக்குழுவில் கீழ்கண்ட நபர்கள் உறுப்பினர்களாக இருப்பர்கள்.

 

அ. மைய பொது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர், நகர வளர்ச்சிதுறையின் தலைவர்.

 

ஆ. இந்திய அரசின் துணை செயலரின் பதவிக்கு குறையாத நகர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி மற்றும் உறுப்பினர்.

 

இ. இந்திய அரசின் துணை செயலர் பதவிக்கு குறையாத, நலத்துறை அமைச்சகத்தின் ஒரு அலுவலர் செயலரால் இந்த அமைச்சகத்தில் உறுப்பினராய் நியமனம் செய்யப்படுவார்.

 

ஈ. துணை இயக்குனர் பதவிக்கு குறையாத நாக்பூர், தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு நிறுவனத்தின் அலுவலர் ஒருவர், அந்நிறுவன இயக்குனரால் உறுப்பினராக நியமிக்கப்படுவார்.

 

உ. நிர்வாக இயக்குனர்/திட்ட தலைமை பதவிக்கு குறையாத ஒரு அலுவலர் “ஹட்கோ’வின் தலைமை மற்றும் நிர்வாக இயக்குனரால் உறுப்பினராக நியமிக்கப்படவார்.

 

ஊ. மைய பொது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குறைந்தபட்ச தொகையில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் பொறுப்பில் உள்ள துணை ஆலோசகர், நகர வளர்ச்சி துறை உறுப்பினர் மற்றும் செயலர்.

 

 1. திட்டக்குழுவின் செயல்பாடுகளும், அதிகாரங்களும்

 

இத்திட்டக் குழு…

 

 1. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட திட்டங்களை நடைமுறையிலுள்ள பொருளா தாரத்துடன் மதிப்பீடு செய்யும். திட்டத்தின் தொகையை குறைப்பதிலும், பெரிய அளவிலான செயல்பாடு, வரைபட விளக்கம், வசிப்பவர்களின் சடங்குகள், பொருட்களின கிடைக்கும் தன்மை, மற்றும் இவை தொடர்பான பிற நோக்கிலிருந்து சில பரிந்துரைகளை மேற்கொள்ளும்.

 

 1. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மைய அரசின் யூனியன் வளர்ச்சித் துறைக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். முதல் அறிக்கை 1997ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.

 

 1. கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகளும், அதிகாரங்களும்

 

 1. உலர் கழிப்பகங்களிலிருந்து, நீர் வசதியுள்ள கழிப்பகங்களாக மாற்றும் திட்டம் பற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் மதிப்பீடு செய்தல், மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் இச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு வேண்டிய நிலை அறிக்கையையும் தயாரிக்க வேண்டும்.

 

 1. ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 30 மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மைய அரசின் யூனியன் வளர்ச்சித்துறைக்கு அறிக் கையை சமர்பிக்க வேண்டும். முதல் அறிக்கை 1997ம் ஆண்டி லிருந்து தொடங்குகிறது.

 

 1. உறுப்பினர்களை நியமனம் செய்வதற்குரிய வரையறைகள்

 

 1. தலைவர் மற்றும் உறுப்பினர் செயலரை தவிர மற்ற உறுப்பினர்கள் 3 ஆண்டுகாலம் பதவியில் இருப்பர்.

 

 1. தலைவர் மற்றும் உறுப்பினர் செயலரை தவிர ஒரு உறுப்பினர், குழுவின் எல்லா நிபந்தனைக்கும் உட்பட்டு மறு நியமனம் செய்யப்படும்போது அவருடைய பதவிக்காலம் 6 ஆண்டு காலத்திற்குள் இருக்கும்.

 

 1. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான உறுப்பினர் களின் பயணப்படி மற்றும் தினசரிபடி மற்றும் குழுவின் செயல்பாட்டுடன் தொடர்புடைய பயணங்களுக்கான விதிமுறைகள் தலைமை அலுவலகத்திலுள்ள விதிமுறை களின்படி கடைபிடிக்கப்படும்.

 

 1. குழு கூட்டங்கள்

 

 1. தேவையின் அடிப்படையில் குழு கூட்டங்கள் அடிக்கடி நிகழும். இரண்டு கூட்டங்களுக்கான இடைவெளி 3 மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது.

 

 1. குழுவின் கூடுகைகள் எப்போதும் டெல்லியில் நடைபெறும்.

 

 1. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுடைய திட்டங்கள் குழுவால் மதிப்பீடு செய்யப்படும். மேலும் அவர்கள் கூட்டத்தில் பங்கு பெறவும் அழைக்கப் படுவார்கள்.

 

 1. குழுவின் தலைவர் எல்லா கூட்டங்களையும் வழிநடத்தவார், அவர் வர இயலாதபோது உறுப்பினர்களில் ஒரு வர் கூட்டத்தை வழிநடத்துவார்.

 

 1. அறிவிப்பு, கூட்டங்கள், செயல்பாடுகளின் பட்டியல்

 

 1. குழுவின் உறுப்பினர், உறுப்பினர் செயலர், கூடுகையில் பேச இருக்கின்ற கூட்டக் குறிப்புகளை எழுதி, கூட்டம் நடப்பதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டும்.

 

 1. இந்த அறிவிப்பில் கூட்டம் நிகழும் இடம், தேதி, நேரம் மற்றும் கூட்டததில் பேச இருக்கும் முக்கிய குறிப்பு களையும் குறிப்பிட வேண்டும்.

 

 1. கூட்டக் குறிப்புகளில் இல்லாதவற்றை தலைவர் அல்லது அவர் இல்லாத போது தலைமை பொறுப்பில் இருப்பவர் ஒப்புதல் இல்லாமல் பேசக்கூடாது.

 

 1. வாக்கெடுப்பு / உறுப்பினர் எண்ணிக்கை

 

 1. குறைந்தபட்சம் 1/3 பகுதி உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்துகொள்ள வேண்டும்.

 

 1. ஏதேனும் ஒரு கூட்டத்தில் குறைந்தபட்ச நபர்கள் வரவில்லை எனில் தலைவர் அல்லது வழிநடத்துபவர் 30 நிமிடங்கள் காத்திருக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நாளில் அல்லது அடுத்த நாளுக்கு, அல்லத பொருத்தமான நாள் என்று தலைவர் கருதகின்ற நாளில் கூட்டத்தை ஒத்தி வைக்கலாம். இதுபற்றிய தகவலை உறுப்பினர்களுக்கும், தகவல் பலகையிலும் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன் உறுப்பினர் எண்ணிக்கை அளவு சரியாகயிருந்தால் கூட்டத்தை நடத்தலாம்.

 

 1. கூட்டக் குறிப்புகள்

 

 1. ஒவ்வொரு கூட்டமும் முடிந்த உடன் உறுப்பினர் செயலர் கூட்டக் குறிப்புகளை எழுதி தலைவர் அல்லது வழிநடத்து பவருக்கு தொடர் நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு அளிக்க வேண்டும். ஒப்புதல் பெற்ற பிறகு குழு உறுப்பினர்களின் கருத்துக்களுக்காக குறிப்புகளை அனுப்ப வேண்டும்.

 

 1. கூட்டக் குறிப்புகள். துணை விதி -1ன் படி இது போன்ற மாற்றம் செய்வதற்காக வழங்க வேண்டும். இவற்றை குழு ஒப்புதல் அளித்தால் தலைவர் அல்லது வழிநடத்துனரின் கையெழுத்தை பெற்று கூட்ட குறிப்பேட்டில் பதிவ செய்து வைக்க வேண்டும்.

 

 

 

3.15. பஞ்சாயத்து சட்டத்தின் விதிமுறைகள் (தாழ்த்தப் பட்டோர் வாழும் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது) 1996.

 

சட்ட எண். 40/1996

 1. டிசம்பர் 1996

 

தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்கு பஞ்சாயத்து டன் தொடர்புடைய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 9ன் விதிமுறைகளை இச்சட்டம் வழங்குகிறது.

 

இந்தியக் குடியரசின் 47வது ஆண்டில் பாராளுமன்றத்தால் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

 1. குறுந்தலைப்பு :

 

இச்சட்டம், பஞ்சாயத்து சட்டத்தின் விதிமுறைகள் (தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப் பட்டது). 1996. என்று அழைக்கப்படும்.

 

 1. விளக்கம்

 

இச்சட்டத்தில் வேறு வகையில் குறிப்பிட்டாலன்றி “தாழ்த்தப்பட்டோர் பகுதிகள்” என்பது இந்திய அரசயில் அமைப்பு சட்டம் பிரிவு 244 கூறு – 1ல் குறிப்பிடப்பட்டுள்ள தாழ்த்தப் பட்டோர் வாழும் பகுதிகளைக் குறிக்கும்.

 

 1. அரசியல் அமைப்பு ட்டத்தின் பிரிவு 9ன் விரிவாக்கம்.

 

அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 9ன் பஞ்சாயத்துடன் தொடர்புடைய விதிமுறைகள் இங்கு தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூறு 4ல் சொல்லப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் திருத்தங்களையும் உள்ளடக்கியது.

 

 1. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 9ல் கூறப்பட்டுள்ள திருத்தங்களும், விதிவிலக்குகளும் :

 

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 9ல் எவை சொல்லப் பட்டிருந்த போதும் மாநில சட்டமன்றம் எச்சட்டத் தையும் இப்பிரிவின் கீழ் இயற்ற முடியாது. கீழ்காண்பவை எவற்றிலும் மாற்றம் கொண்டு வர இயலாது.

 

அ. சமூக, சமய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு ரீதியான நிர்வாக முறைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே மாநில சட்டமன்றம் பஞ்சாயத்தை உருவாக்க வேண்டும்.

 

ஆ. ஒர கிராமம் என்பது பல்வேறு குடும்பங்கள் அல்லது பல்வேறு குழுக்களை கொண்ட குடும்பங்கள் அல்லது சிறுகிராமம் அல்லது பல்வேறு சிறு கிராமங்களை கொண் டிருக்கும் அல்லது சமூகங்கள் மற்றும் மரபு / சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக அமைப்பை கொண் டிருக்கும்.

 

இ. கிராம அளவிலான பஞ்சாயத்திற்கான வாக்காளர் பட்டியலில் பெயருள்ள உறுப்பினர்களை கொண்டிருக்கும் கிராம சபையை ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்கும்.

 

ஈ. ஒவ்வொரு கிராம சபையும் மகக்ளின் சடங்கு மற்றும் மரபகுள், அவர்களுடைய கலாச்சார அடையாளம், மக்கள் வள ஆதாரங்கள மற்றும் சச்சரவுகளை தீர்த்து வைப்பதற்கான பாரம்பரிய முறைமைகள் இவற்றை பாதுகாக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்க வேண்டும்.

 

உ. கிராமசபை என்பது

 

அ. சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை கிராம அளவில் பஞ்சாயத்தின் மூலம் நடைமுறைப்படுத்து வதற்கு முன் திட்டங்களுக்கான ஒப்புதலை அளித்தல்.

ஆ. வறுமையை குறைப்பது மற்றும் பிற திட்டங்களில் பயனாளிகளாக இருக்க வேண்டியவர்களை அடையாளம் காண்பதிலும் அல்லது தெரிவு செய்வதிலும் மற்ற நிகழ்வு களிலும் பொறுப்புள்ளதாக இருத்தல்.

 

ஊ. கூறு (2)ல் சொல்லப்பட்டுள்ள திட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் செயல்திட்டங்களை செயல்படுத்துவதற்கு உரிய நிதியை பெறுவதற்க கிராம அளவில், ஒவ்வொரு பஞ்சாயத்தும் கிராம சபையிடமிருந்து ஒரு சான்றிதழைப் பெறவேண்டும்.

 

எ. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தாழ்த்தப்பட்டோர் பகுதிகளுக்கு இடஒதுக்கீடு செய்யும்போது அப்பஞ்சாயத்தின் மொத்த மக்கள் தொகையின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும் அவை அரசியல் அமைப்பு பிரிவு. 9ன் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும்.

 

ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கையில் சரி பாதியினருக்கும் குறையாமல் பழங்குடியினர் இருக்க வேண்டும்.

 

பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிகள் எல்லா நிலைகளிலும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

ஏ. பழங்குடியினர், இடைநிலை பஞ்சாயத்து அல்லது மாவட்ட அளவிலான பஞ்சாயத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தால் மாநில அரசே பழங்குடியினரை நியமனம் செய்யலாம்.

 

பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மொத்த உறுப்பினர்களில் 1/10 பகுதியினருக்கு மிகாமல் அந்நியமனம் இருக்கவேண்டும்.

 

ஐ. வளர்ச்சி திட்டங்களுக்காக தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளிலிருந்து நிலத்தை கையகப்படுத்தும் போது அதற்கு ஏற்ற கிராமசபை அல்லது பஞ்சாயத்துக்களிடம் ஆலோசனையை பெற்றிருக்க வேண்டும். மற்றும் இத்திட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுநிலையமர்த்தும் பணியை செய்யும் போதும் கிராமசபையின் ஆலோசனையைப் பெறவேண்டும். மேலும் தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் இவை போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், திட்டமிடல்களை மாநில அளவில் கிராமசபை அல்லது பஞ்சாயத்துக்கள் ஒருங்கிணைப்பு பணியிலும் ஈடுபட வேண்டும்.

 

ஒ. தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள சிறிய நீர்தேக்க தொட்டிகளை கட்ட திட்டமிடலும், நிர்வகிக்கும் பொறுப்பும் பஞ்சாயத்திற்கு அளிக்கப்படும்.

 

ஓ. கனிமவள ஆய்வில் ஈடுபடுதல், தாழ்த்தப்பட்டோர் பகுதிகளில் உள்ள சிறிய கனிமவள சுரங்க குத்தகை போன்ற வற்றிற்கு முன்புள்ள தொகையின் அடிப்படையில் செயல்படு வதற்கு கிராமசபை அல்லது பஞ்சாயத்தின் பரிந்துரைகளை பொருத்தமான நிலையில் ஆணையாக அளிக்க வேண்டும்.

 

ஔ. சிறிய கனிம சுரங்கங்களை ஏலத்தின் மூலம் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்வதற்கான ஆணையை கிராமசபை மற்றும் பஞ்சாயத்தின் முன்புள்ள பரிந்துரையின் அடிப்படையில் ஏற்ற நிலையில் செய்வதற்கு உரிமையை வழங்க வேண்டும்.

 

(ஃ) இவை போன்ற ஆற்றல்களையும் அதிகாரங் களையும் தாழ்த்தப்பட்டோர் பகுதிகளில் உள்ள பஞ்சாயத்துக்களக்கு அளிக்கும் போது சுய அரசாங்க அமைப்பின்ட ஒரு நிறுவனமாக செயல்படுத்தவதற்குரிய அதிகாரத்தை வழங்குவது அவசியமா கிறது. எனவே மாநில சட்டமன்றம், கிராமசபை மற்றும் பஞ்சாயத்துக்கள் குறிப்பிட்ட பணிகளை செய்வதற்குரிய உரிமையை அளிக்க உறுதி ஏற்கவேண்டும். அவையானவை :

 

 1. போதைப் பொருட்களை கட்டாயத் தடை செய்வது அல்லது ஒழுங்குபடுத்தவது அல்லது விற்பனை மற்றும் உட்கொள்வதில் சில வரையறைகளை கொண்டுவருதல் இவைகளுக்கான அதிகாரங்கள்.

 

 1. சிறு வன உற்பத்திகளுக்கான வரிமம்.

 

 1. தாழ்த்தப்பட்டோர் பகுதிகளில் நில அபகரிப்பை தடுப்பது மற்றும் பழங்குடியினரின் நிலத்தை சட்டத்ற்கு புறம்பாக அபகரிக்கும் போது தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அதிகாரங்கள்.

 

 1. கிராம சந்தைகளை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள்.

 

 1. பழங்குடியினருக்கு வட்டிக்கு பணம் தருவதை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள்.

 

 1. சமூக அமைப்புகளில் உள்ள நிறுகூனங்கள் மற்றும் அதன் செயல்தளங்களை கட்டப்படுத்தும் அதிகாரம்.

 

 1. உள்ளூர் அளவிலான திட்டங்கள், மற்றும் வள ஆதாரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள், இத்திட்டங் கள் பழங்குடியினரின் துணை செயல் திட்டங்களையும் கொண்டிருக்கும்.

 

(N) மாநில சட்டமன்றம், பஞ்சாயத்திற்கு சுய அரசாங்கத்தின் ஒரு நிறுவனமாக செயல்படுவதற்குரிய அதிகாரங்களை அளிப்பதற்கு காரணமாக இரந்தபோதும் உரிமையளவில் பாதுகாப்பளிப்பதை உறுதி செய்யவேண்டும். மேல்நிலையில் உள்ள பஞ்சாயத்துக்கள் மற்ற பங்சாயத்துக்களை அல்லது கிராம சபையின் ஆற்றல் மற்றும் அதிகாரங்களை கீழ்நிலையில் எண்ணக் கூடாது.

 

(O) மாவட்ட அளவிலான தாழ்த்தப்பட்டோர் வாழும் பஞ்சாயத்துக்களில் நிர்வாக செயல்முறைகளை வரையறுக்கும் போது மாநில சட்டமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின் 6வது பிரிவை பின்பற்றுவதற்கு பெருமுயற்சிகளை எடுக்க வேண்டும்.

 

 1. நடைமுறையில் உள்ள சட்டங்களை தாழ்த்தப்பட்டோர் அல்லாத பஞ்சாயத்துக்களில் தொடருதல் :

 

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 9ல் திருத்தங்கள் மற்றும் விதிவிலக்குகளுடன் எவை சொல்லப்பட்டிருப்பினும், பஞ்சாயத்துடன் தொடர்புடைய எந்த சட்டமோ அல்லது எந்த விதிமுறைகளோ தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் நடைமுறையில் இருந்தால் உடனடியாக இச்சட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் நாளுக்கு முன்பாக பிரிவு – 9ன் திருத்தங்கள் மற்றும் விதி விலக்குகளுக்கு முரண்பாடானதாக இருந்தால் சட்டமன்றத்தால் அல்லது மற்ற தகுந்த அதிகாரத்தால் திருத்தம் அல்லது தள்ளுபடி அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற ஓராண்டு காலத்திற்கு பின் காலாவதி ஆகும் நாள் வரை நடைமுறையில் இருக்கலாம்.

 

நடைமுறையில் இருக்கும் எல்லா பஞ்சாயத்துக்களம் மாநில சட்ட சபையின் தீர்மானத்தின் மூலம் முடிவுறச் செய்தாலன்றி அல்லது மாநில சட்டமன்றத்தின் ஒவ்வொரு சபையின் மூலம் அல்லது சட்டமன்றத்தை அரசு நடத்திலான்றி காலாவதி ஆகும் நாள் வரை தொடரலாம்.

 

*****

Load More Related Articles
Load More By sridhar
 • மேலவளவு – கொடூர சாதி வெறி

  வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவள…
Load More In சட்டப் பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

மேலவளவு – கொடூர சாதி வெறி

வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவள…