சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா
அம்பேத்கர் சந்தித்த விபரம் கேளுங்கடா….
இந்துத்துவ கொள்கை பிறந்தது நாகபுரி
மதமாற்ற போர் தொடங்கியதும் நாகபுரி
இருண்ட சிறைதானே….. இந்துமதம்
அதில் இருக்கும் காலம் வரை… ஏது சுதந்திரம்
சிறையை தகர்த்தி விட இலக்கை கண்டறிந்தார்
மதமாற்றம் என்ற ஆயுதத்தை எடுத்தார்.
இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகேன்
சபத்த்தை நிறைவேற்ற
சமயங்களை ஆய்ந்தார்
கிருத்துவம் தவறென்றார்
இசுலாம் குறை என்றார்
பவுத்த மார்க்கம் ஒன்றே
விடுதலை தருமென்றார்
அம்பேத்கர் தலைமையிலே ஐந்து லட்சம்பேர்
தீக்சா பூமியிலே தழுவினர் பவுத்த நெறி
அம்பேத்கர் தொடங்கி வைத்த யுத்தம் தொடர்கிறது
மதமாற்றப் போரில் சேரிகள் திரள்கிறது
மதமாறுவதாலே நன்மை ஏதுமுண்டோ
என கேள்விகள் கேட்டவர்களுக்கு
எதிர் கேள்வியை கேட்டார்
இந்திய சுதந்திரத்தால் எமக்கென நன்னை என்றார்
சுயமரியாதை பெற மதமாற்றமே தீர்வு என்றார்
மதமாற்றம் நடந்தால் பெயர்கள் மாறிவிடும்
பெயர்கள் மாறுவதால் உறவுகள் வேறுபடும்
உறவுகள் வலுவடைந்தால் உரிமை போர் தொடங்கும்
யுத்த அமைதிக்கு வழிவகுக்கும்
www.ambedkar.in