வள்ளுவன் புரண்ட
வயிற்று மேடு

அவதானிகளின்
ஆட்சி பீடம்

ஆறறிவுகளின்
அரியாசனம்

அடடே… அதிசய
போதிவனம்

தமிழைத் தரித்த
தொப்பூழ்க்கொடி

முதலாம் இரண்டாம்
மூன்றாம் சங்கம்

உலகை சோடித்த
ஒற்றை விளக்கு

ஒளிரும் சிந்தனை
தாங்கிய மாடம்

மமதை இல்லா
மாளிகை புரம்

மனித உரிமைக்
காவல் நிலையம்

சத்திய தர்மப்
பாடசாலை

மானுடநேய
சிகிச்சைப் பிரிவு

விசுவாசங்களின்
சுவாச மண்டலம்

பிரளய உடலின்
மூளைப்பகுதி

ஐந்திணைக் கைகளின்
ஆயுள் ரேகை

ஆதிக்கம் அடித்து
தூற்றும் களம்

அழுக்கு மூட்டைகள்
வெளுக்கும் படித்துறை

ஆதித் தமிழ்நில
அறிவியல் வகுப்பறை

  • வெண்ணிலவன்

 

Load More Related Articles
Load More By sridhar
Load More In கலை இலக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பைய…