ஏறக்குறைய ஐம்பதாண்டு காலம் தலித் மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு போராடிவரும் தலைவர் அ. சக்திதாசன். ‘சக்தியார்’ என அன்போடு அழைக்கப்படும் இவரைச் சந்திக்கச் சென்றபோது, சென்னை, சேத்துப்பட்டில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் தலித் தலைவர்களுக்கே உரித்தான எளிமையோடும் ஏழ்மையோடும் இருப்பதைக் கண்டோம். திராவிட இயக்கத்தில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ‘ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேசன்’, ‘ஷெட்யூல்டு காஸ்ட் லிபரேசன் மூவ்மென்ட்’ ஆகிய இயக்கங்களில் முன்னணித் தலைவராகச் செயலாற்றினார். 1959ல் தந்தை சிவராஜ் அவர்களின் தலைமையின் கீழ் இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்து இன்று வரை பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த தலைவராகிய இவர், முதலில் நேர்காணல் தர தயக்கம் காட்டியது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சமகால தலித் அரசியல் கட்சித் தலைவர்களின் போக்கு குறித்து தான் கூறும் கருத்துகள் முரண்பட்ட சூழலை உருவாக்கக்கூடும் என்றார். ஆயினும் எங்களின் வற்புறுத்தலால் நேர்காணல் தர முன் வந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களை வழி நடத்திய ஒரு முதுபெரும் தலைவரின் உரையாடல் எளிமையாகத் தொடங்கியது. கம்பீரமான குரலில் வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. சாதியத்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு, தனது அரை நூற்றாண்டு கால அனுபவத்தை, நெஞ்சில் தேக்கி வைத்திருக்கும் விடுதலை கருத்தியலை எங்களிடம் பகிர்ந்துகொண்டார், சொல்லின் செல்வர் அய்யா சக்திதாசன் அவர்கள்…….. அதிலிருந்து….

உங்கள் இளமைப் பருவம் பற்றி…

நான் பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். 1930அம் அண்டு சனவரி 6அம் நாள் பிறந்தேன். எனது அப்பா அம்பூரைச் சார்ந்தவர், அம்மா வேலூர். ஊங்க தாத்தா குடுமி வைத்து கோவணம்தான் கட்டியிருந்தார். அப்போது அம்பூர் சர்க்கரை அலையில் வேலை நிறுத்தம் நடந்தது. நீண்ட நாள் நடந்தது. அலையை ஆழுத்து மூடிவிட்டார்கள். வேறு வேலை வேண்டுமே என்று எனது தகப்பனார் ஒட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் பெற்றுக் கொண்டு, வேலை தேடி சென்னைக்கு வந்தார். இங்கே ஒரு வெள்ளைக்கார துரையிடம் வீட்டு வேலைக்கும் ஒட்டுனராகவும் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வீட்டுவேலை செய்துதான் பிழைத்து வந்தார்கள். சாதி இந்துக்களிடம்இல்லை; வெள்ளைக்கார துரைகளிடம் வேலை பார்த்தார்கள். காரணம் இருவரும் மாட்டுக்கறி சாப்பிடுவார் இவரும் மாட்டுக்கறி சாப்பிடுவார். ஒட்டி உறவாடினார்கள். “Yes” No” போன்ற இரண்டு மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தி சமாளித்துக் கொண் டார்கள். அதைத்தான் சாதி இந்துக்களும் பார்ப்பனர் களும் “பட்லர் இங்கிலீஷ்’ என்று கேலி பேசினார்கள். அதையெல்லாம் சிறு வயது முதலே மறுத்துப்பேசி வந்துள்ளேன்.

சமூக அரசியலில் எப்போது ஆர்வமேற்பட்டது?

நான் எனது 15-அம் வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். அப்போது வீட்டு வறுமையின் காரணமாக படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டேன். அப்போது இலவசமாகப் படிக்கும் பள்ளிகள் ஏதுவுமில்லை. பணம் கட்டித்தான் படிக்க வேண்டும். எனவே படிக்க முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் “ஸ்பென்சரில்’ வேலைக்குப் போனேன். மாதம் அறு ரூபாய் சம்பளம். ஃது ஃப்போது பெரிய தொகை. ரூபாய்க்கு அறுபடி ஃரிசி வாங்கலாம். படிப்பில் நிறைய அர்வம் ஆருந்தது. நிறைய நூல்கள் வாசித்திருக்கிறேன்.

எனது அப்பா திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்தார். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தேன். எங்களுக்கெல்லாம் “சாமி இல்லாத பிள்ளைகள்’ என்றுதான் பெயர். இப்படித்தான் எங்கள் அரசியல் வாழ்க்கை அரம்பித்தது. நாத்திகர்களாக இருந்தோம். 1949லில் திமுகவின் அதரவாளராக இருந்து பிறகு உறுப்பினராக மாறினோம். திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை தலைமையில் பிரிந்து வந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். “கண்ணீர் துளிகள்’ என்று பெயர் வாங்கிய போதெல்லாம் அந்த கூட்டத்தில் நானும் ஆருந்திருக்கிறேன்.

1949லிருந்து அண்ணாதுரை நியமிக்கிறவர்தான் கட்சி நிர்வாகியாக இருந்தார். முதன்முதலாக 1954லில் தான் தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தல் நடந்தது. மாவட்டச் செயலாளர் தேர்தல் நடந்தது. அப்போது “செட்யூல்டு கேஸ்ட் பெடரேசன்’ தொடர்பு இருந்ததினால், சென்னை மாவட்டச் செயலாளராக ஏன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வரக்கூடாது என்ற கருத்து எனக்கும் எனது நண்பர்களுக்கும் உருவானது. காரணம், அப்போது சென்னை மாநகராட்சி அறுபது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறுபது பகுதிகளில், 40 பகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் தி.மு.க.வின் உறுப்பினர்களாக இருந்தார்கள். அப்போது இளம்பரிதிதான் எங்களுக்குத் தலைவர். இப்போது அமைச்சராக இருக்கிறாரே பரிதி இளம்வழுதி அவருடைய அப்பா அவர்.

அப்போது, கட்சியில் பெரிய தலைவராக இருந்தார் சத்தியவாணிமுத்து. எங்கள் கருத்தை அவரிடம் கூறினோம். இளம்பரிதியை சென்னை மாவட்டச் செயலாளராகப் போட்டியிடச் செய்யப் போகிறோம் என்றோம். அதற்கு சத்தியவாணிமுத்து, மறுப்புத் தெரிவித்தார். இது சாதி மத பேதம் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கப் பாடுபடுகின்ற இயக்கம். இதில் சாதி அடிப்படையில் பேசக்கூடாது என்றார். இன்று அந்த‚ கட்சியைப் பற்றி யாராவது இப்படிப் பேசினால் ஏற்றுக் கொள்வார்களா? அனால் சத்தியவாணிமுத்து அன்று அப்படிப் பேசினார். நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் சாதி பாராட்டவில்லை. சென்னை யிலிருக்கும் நாற்பது பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். நிர்வாகிகளின் வாக்கு எங்களுக்கும் கிடைக்கும் என்கிற சூழ்நிலையில், நாங்கள் என் போட்டி போடக்கூடாது என்று பேசினோம். இது ஜனநாயக முறைதானே! அனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நீங்கள் இளம்பரிதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சத்தியவாணிமுத்து அக்காவிடம் கூறிவிட்டு வந்துவிட்டோம்.

மாவட்டச் செயலாளர் தேர்தலில், பரிதியை நிறுத்தினோம். அப்போது சென்னையில் 75 ஒட்டு இருந்தது. மாநில நிர்வாகிகள் எல்லோரும் சென்னையில் இருந்ததால், அவர்களின் ஒட்டுக்களும் எங்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், தலைவர்களிடமும் நாங்கள் ஒட்டக் கேட்டுப் போனோம். கலைஞர் மட்டும்தான், அபோது அவருக்கு மு.க. என்று பெயர், மு.க.தான், நீங்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. எனது ஓட்டு உங்களுக்குத்தான், அனால் வெளியே சொல்லிவிடாதீர்கள் என்று கூறினார். அப்போது அவர் சிறிய தலைவர்தான். வெளிப்படையாகப் பேச முடியாது. இன்னும் இரண்டு மூன்று ஒட்டு வாங்கிக் கொடுங்கள் எனக் கேட்டோம். அவர் மறுத்துவிட்டார். எப்படியோ கடினப்பட்டு இளம்பரிதியை வெற்றியடையச் செய்து விட்டோம்.

இளம்பரிதியைத்தான் கட்சியிலிருந்து நீக்கினார்களே!

தி.மு.க.வின் வரலாற்றில், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து மாவட்டச் செயலாளரானவர் அவர் ஒருவர்தான். அதுவும் கூட 1954ல். ஆன்று வரையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் எவரும் அந்தக் கட்சியில் மாவட்டச் செயலாளராக வரமுடியவில்லை. இடையில் தஞ்சாவூரில் தாழைக் கருணாநிதிக்குக் கொடுத்தார்கள். கொஞ்நாளில் அவரிடமிருந்து பதவியைப் பறித்துக் கொண்டார்கள்.

இளம்பரிதியின் மீது அண்ணாதுரைக்குக் கோபம் இருந்தது. ஏனெனில், மாவட்டச் செயலாளர் தேர்தலில், அவர் நிறுத்திய கண்ணபிரானை எதிர்த்துதான் இளம்பரிதியை நாங்கள் நிறுத்தினோம். அவர் எற்கனவே சென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர். முதலியார் சாதியைச் சேர்ந்தவர். தனது சாதிக்காரரைத் தோற்கடித்தவன் என்ற கோபம் அண்ணாதுரைக்கு இருந்தது. அண்ணாதுரைக்கு மட்டுமல்ல, சென்னையிலிருந்த முக்கியமான தலைவர்களுக்கெல்லாம் கோபம். “அண்ணாத்துரை வேட்பாளரையே எதிர்த்து போட்டியிட்ட பசங்க’ என்று ஊங்களைப் பேசினார்கள். ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல்தானே, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமே என்ற எண்ணத்தில்தான் நாங்கள் வேட்பாளராக இளம்பரிதியை நிறுத்தினோம். அப்போது அப்துல்காதர், புதுப்பேட்டையில் இருந்தார், அவர்தான் ஒரு பழசான “கார்’ ஒன்றைக் கொடுத்தார்.

இடையிலேயே அது நின்று, நின்று போகும். அதையும் தள்ளிக் கொண்டே பிரச்சாரத்திற்குப் போனோம். 4 ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பரிது. அந்த கோபம் அண்ணாதுரைக்கு ஆருந்தது. எனவே அவர் எங்களைப் புறக்கணித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று மாவட்டச் செயலாளரானாலும் கூட, மாவட்ட அலுவலகச் சாவியை அண்ணாதுரையின் அள், இளம்பரிதியிடம் கொடுக்கவில்லை. பொதுக் கூட்டம், பிரச்சாரம் நடத்துவதற்குத் தேவையான ஸ்பீக்கர் குழாயைக் கூட கொடுக்க வில்லை. அண்ணாதுரையிடம் புகார் செய்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. அவர் கடும் கோபமாக இருப்பது எங்களுக்குப் புரிந்தது.

பரிதியை கட்சியைவிட்டு நீக்க அண்ணாதுரை காரணம் தேடிக் கொண்டிருந்திருப்பாரே!

1956அம் அண்டு திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை ஊடுத்தார்கள். அந்த மாநாட்டில் தேர்தலில் போட்டியிட தொண்டர்களின் கருத்தை அறிய வெள்ளைப் பெட்டி சிவப்புப் பெட்டி என்று இரு பெட்டிகள் வைத்திருந்தார்கள். தேர்தலில் போட்டியிட வேண்டும் எனச் சொல்வோர் வெள்ளைப் பெட்டியி லும், வேண்டாம் என்போர் சிவப்புப் பெட்டியிலும் வாக்களிக்க வேண்டும்.

இறுதியில், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த பொதுக்குழுவில் அர்.டி.அரசு என்பவர் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அண்ணாவும் கருணாநிதியும் மார்டன் தியேட்டர்ஸ் சினிமா கம்பெனி கதைக்குழுவில் சேர்ந்திருந்தனர். அண்ணா ஒரு படத்திலும், கருணாநிதி இரண்டு மூன்று படங்களிலும் கதை வசனம் எழுதியிருந்தார்கள். புராணப் படங்களுக்கும் கதை வசனம் எழுத அரம்பித்தார்கள். அதை எதிர்த்துத்தான் அர்.டி. அரசு தீர்மானம் கொண்டு வந்தார். “”கட்சிக் கொள்கைகளுக்கு விரோதமாக கட்சியைச் சேர்ந்தவர் எவரும் திரைப்படங்களிலோ, நாடகங்களிலோ கதை வசனம் எழுதக்கூடாது” என்பதுதான் அந்தத் தீர்மானம்.

அப்போது அண்ணா அவரைப்பார்த்து “”டே… உட்காருடா.. இதெல்லாம் ஐரு தீர்மானமாடா.. உட்காருடா அரசு” என்றார். அனாலும் அரசு விடாமல், “”இல்ல அண்ணா.. நாங்க கிராமத்திற்கு பிரச்சாரத்திற்குப் போகும்போது ஜனங்கள் அசிங்கமா பேசுறாங்க. உங்க கட்சி கொள்கை ஒன்னு, நீங்க செய்யிறது ஒன்னான்னு கேள்வி கேட்குறாங்க. நாங்க தான் மழுப்பி பதில் சொல்ல வேண்டியிருக்கு. அதனால இந்தத் தீர்மானத்தை அண்ணா பரிசீலிக்கனுமுனு கேட்டுக்கிறேன்” என்றார் அரசு.

மீண்டும் அண்ணாதுரை, “”அதெல்லாம் சரிடா… இதையெல்லாம் தீர்மானமா போட முடியாதுடா.. உட்காருடா…” என்று சொன்னார். அப்போது இளம்பரிதி, சென்னை மாவட்டச் செயலாளர் என்ற முறையில், “”நான் கேட்டுக்கறேன், அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம், தலைநகரத்தினுடைய தீர்மானம். அதற்கு மதிப்புக் கொடுத்து, அந்த தீர்மானத்தை ஏத்துக்கங்க” என்றார்.

உடனே அண்ணாதுரை “”சென்னை உன் மிராசாடா” என்று இளம்பரிதியைப் பார்த்துக் கேட்டார். “இல்ல அண்ணா.. இது தலை நகரத்திலிருந்து வந்திருக்கும் தீர்மானம். கொஞ்சம் யோசித்துப் பாருங்க” என்றார். அதற்கு அண்ணாதுரை, “”சரிடா உட்காருடா.. நீவேற.. சும்மா பேசிட்டிருக்கிற” என்றார் எரிச்சலாக. உடனே பரிதிக்கு கோபம் வந்து விட்டது. “”நான் தோழர் அண்ணாதுரையைக் கேட்கவில்லை, பொதுச்செயலாளர் பதில் சொல்லட்டும்” என்றார்.

இதைச் சொன்ன உடனேயே உட்கட்சி தேர்தலில் அண்ணாதுரையால் நிறுத்தப்பட்டு, இளம்பரிதியாயால் தோற்கடிக்கப்பட்ட கண்ணபிரான் எழுந்து, “”நாங்கள் இதயத்தில் தெய்வமாக வணங்குகின்ற அறிஞர் அண்ணாவை தோழர் என்று சொல்வதைக் கேட்க அந்தக் காதுகள் என்ன பாவம் செய்தனவோ” என்றார். அதோடு நிறுத்தவில்லை. எதை எங்கே வைக்கனுமோ அங்கேதான் வைக்கனும். நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால், அது வாலை அட்டிக் கொண்டு மலம் தின்னத்தான் போகும்” என்றார் கண்ணபிரான். பரிதிக்கு கோபம் அதிகரித்துவிட்டது. “”என்னையாடா நாய் என்று சொல்லுகிறாய் நாயே” என் சாதிக்கு வரலாறு உண்டு; நாயே உன் சாதிக்கு வரலாறு உண்டா” என்றார். கண்ணபிரான் முதலியார், அண்ணாதுரை முதலியார், நெடுஞ்செழியன் முதலியார், என்.வி. நடராசன் முதலியார் எல்லாம் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள் மேலாதிக்கம் அப்போது இருந்தது. நான்கைந்து முறை நாயே நாயே என்று பரிதி பேசியதால், கூட்டத்தில் பரபரப்பு எற்பட்டது.

அந்த நேரத்தில் மதுரை முத்துதான் சண்டியர். கட்சிக்கு அடியாளாக இருந்தவர். அவர் கையாள் களெல்லாம் திரண்டு, எங்களைத் தாக்க திட்டமிட்டார்கள். அனாலும் கலவரம் நடந்துவிடக்கூடாது என்று எண்ணி நாங்கள் ஒவ்வொருவராக பொதுக் குழுவிலிருந்து வெளியேறினோம். பரிதி கூட்டத்திலிருந்து வெளிவரும்போது, சிற்றரசு அவரது கையை குலுக்கி, “”சீமான் மாதிரி கேட்டிருக்கிறாய்” என்று சொல்லி சிரித்திருக்கிறார். இந்த செய்தி அண்ணா துரைக்குப் போய்விட்டது.

வழக்கமாக பொதுக்குழுவில் சிற்றரசும், கே.வி.கே. சாமியும்தான் கேள்வி கேட்பார்கள். சிற்றரசு அண்ணாவைப் பார்த்து “”என் வயசுக்கு உன்னை அண்ணான்னு சொல்லனுமா” என்று விளையாட்டாகப் பேசுவார். அன்றைக்கு பரிதி பொதுக்குழுவில் கேள்வி கேட்ட போது, சிற்றரசும், கே.வி.கே. சாமியும் வெளியேபோய்விட்டார்கள். இது தற்செயலாக நடந்தது. அனால் அண்ணாதுரை, இவர்கள்திட்டமிட்டு தான் பொதுக்குழுவிற்கு வந்திருக்கிறார்கள் என்று எண்ணினார். வழக்கமாக கேள்வி கேட்பவர்கள் வெளியே போய்விட்டு புதிதாக அட்களைத் தயார் செய்து, கேள்விகேட்கச் செய்து கலாட்டா செய்யும் நோக்கத்தோடு வந்திருக்கிறார்கள் என்பது அண்ணாதுரையின் முடிவு.

இளம்பரிதி கேள்வி கேட்டவுடன் பொதுக் குழுவில் எற்பட்ட சலசலப்பினால், அதோடு பொதுக்குழுவை முடித்து விட்டார்கள். பி.டி. அரசு முன்மொழிந்த தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வில்லை. எற்கனவே எழுதி வைத்திருந்த மற்ற தீர்மானங்களை வாசித்து பொதுக்குழுவை முடித்து விட்டார்கள். பொதுக்குழு முடிந்ததும் பொதுக் கூட்டம். நாங்கள் யாரும் மேடையில் அமரவில்லை. தொண்டர்களோடு தொண்டர்களாக கூட்டத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது கிள்ளிவளவன் ஒரு துண்டுச் சீட்டை கொண்டு வந்து பரிதியிடம் கொடுத்தார். அதில், நீங்கள் சொன்ன தீர்மானத்தை மேடையில் சொல்லவும்’ என்று எழுதி அண்ணாதுரை கையெழுத்துப் போட்டிருந்தார்.

நான்தான் “அதெல்லாம் ஒண்னும் வேணாம், இவர்போய் மேடையில வேறு எதையாவது பேசிட்டாருன்னா இன்னும் சிக்கலாயிரும், அப்புறமா பாத்துக்கலாம்’ என்று எங்க செட் அட்களிடம் சொல்லி பரிதியை மேடைக்கு„ செல்லாமல் நிறுத்தி விட்டோம். பொதுக் கூட்டம் முடிந்துவிட்டது. இரவு ரயிலைப் பிடித்து காலையில் சென்னைக்கு வந்தோம்.

அடுத்த நாளே, இளம்பரிதிக்கு ஒரு “ஷோ காஸ் நோட்டீஸ்’ வந்தது. அதில் கட்சிக்கு விரோதமாக நீங்கள் நடந்து கொண்டதால், ஏன் உங்களைக் கட்சியிலிருந்து நீக்கக்கூடாது என்று நோட்டீஸ் வந்தது. நாங்களும் ஒரு வழக்கறிஞரைப் பார்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். வழக்கு ஒன்றரை வருடம் நடந்தது. இறுதியில் நீதிமன்றம் வழவழா தீர்ப்பை அளித்தது. இருவர் பேசியதும் தவறு என்றது.

எனவே நாங்கள், இனிமேல் கட்சிக்குள் போகக்கூடாது என்று தனியாக ஒரு கட்சி தொடங்கினோம். அதற்கு ஆதி திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர். அண்ணாதுரையை எதிர்த்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தோம். எங்களுக்கு திராவிடர் கழகம் கொஞ்சம் அதரவளித்தார்கள். அண்ணாதுரை வீட்டின் முன்பே மாநாடு போட்டோம். ஒருநாள் முழுக்க அண்ணாதுரையை பற்றி விமர்சனம் செய்தோம்.

பரிதிக்கு கட்சியில் சேரும்படி அண்ணாதுரை தூது அனுப்பிக்கொண்டே இருந்தார். அதனால் பரிதி மனம் தளர்ந்து ஒருநாள் எங்களிடம் வந்து “வாருங்கள் எல்லோரும் கட்சியில் சேர்ந்துவிடலாம். அண்ணாதுரை அழைத்துக் கொண்டே இருக்கிறார்’ என்றார். அதற்கு நான் அவர்கள் கூப்பிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக நாம் போய்விட வேண்டுமா? நாங்கள் உங்கள் தலைமையிலே வெளியே வந்தோம். இனிமேல் உள்ளே வரமாட்டோம். நீங்களும் போகக்கூடாது’ என்றேன். அனால் அவர் கேட்க வில்லை. அவர் மட்டும் கட்சிக்குத் திரும்பப் போனார், எம்.எல்.சி பதவி கொடுத்தார்கள். கடைசிவரை கட்சி பதவி கொடுக்கவே இல்லை.

ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ன ஆயிற்று

அதை நடத்தமுடியல. அது தொடர்பாக எராளமான அவணங்கள் என் வீட்டிலேயே கிடந்தன. அனால் நான் வசித்தது குடிசை வீட்டில் எவ்வளவு நாள் பாதுகாக்க முடியும். எல்லாம் போய்விட்டது. உங்களிடம் கொடுக்க என்னிடம் அது தொடர்பான அவணங்கள் எதுவுமில்லை. நிறைய கஷ்டப்பட்டோம்.

1956ல் தீவிரமான அரசியலுக்கு வந்துவிட்ட நீங்கள், தென்மாவட்டத்தில் 1957ல் நடந்த முதுகுளத்தூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டங் களை முன்னெடுத்தீர்களா? 

பெரிதாக போராட்டங்கள் எதையும் நடத்த வில்லை. அண்ணாதுரையை விமர்சித்து நடத்தியப் பொதுக்கூட்டங்களில் முதுகுளத்தூர் பிரச்சனைகள் குறித்தெல்லாம் மேடைகளில் பேசியதுதான். கட்சியை தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லும் எண்ணமும் எங்களுக்கு இல்லாமலிருந்தது.
ஆதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவ ராக இருந்த பரிதி மீண்டும் திமுக.விற்கு போய் விட்டதால் எங்களால் கட்சி நடத்த முடியவில்லை. 1959-ல் இந்திய குடியரசுக் கட்சிக்கே போய் விட்டோம்.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக பெடரேசனோ, இந்திய குடியரசுக் கட்சியோ போராட்டம் எதையும் நடத்தியதாக உங்களுக்கு நினைவிருக்கிறதா?

ஏன் நடத்தவில்லை. எனக்கு எந்த ஆண்டு என்பது சரியாக நினைவில் இல்லை. பெடரேசன் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி அண்ணன் தலைமையில் கையால் மலம் அள்ளும் கொடுமையை நீக்க வலியுறுத்தி சட்டசபை முன்னால் மலம் கொட்டும் போராட்டத்தை நடத்தினோம். வாளிகளில் அள்ளிக் கொண்டு போய் கோட்டைக்கு முன் விசிறியடித்தோம். காவல் துறை கைது செய்து சிறையிலடைத்தது.

இரட்டை டம்ளர் முறையை எதிர்த்துக்கூட போராட்டம் நடத்தியிருக்கிறோம். 44 எம்.எல்.ஏ.க் களுக்கும் தகர குவளை தரும் போராட்டத்தை நடத்தி னோம். கட்சியிலிருந்த லட்சுமி என்ற பெண்ணின் தலைமையில் 44 எம்.எல்.ஏ.க்களுக்கும் வளையல் அனுப்பி போரட்டம் நடத்தினோம். ஆயிரம் பேருக்குமேல் திறண்டு நேப்பியர் பூங்காவிற்குப் போய் வளையல் போடும் போராட்டம். ஆனால் போராட்டத்தை நடத்த விடாமல் பாதி வழியிலேயே கைது செய்தது. பத்திரிகைகளில்கூட செய்திகள் வந்தன.

பட்டியலின மக்கள் விடுதலை இயக்கம் (SCALM) தொடங்கிய பிறகு, வட மாவட்டங்களில் நிலைமை எப்போதும் பதற்றமாகவே இருந்தது. அதற்கு என்ன காரணம்.?

SCALM தலைவராக இளையபெருமாளும், பொதுச் செயலாளராக நானும் இருந்து செயல் பட்டோம். அப்போது வன்னியர் சங்கத்தினர் மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி கடலூர் மாவட்டப் பகுதிகளில் பதற்றத்தைத் தவிர்த்தோம். அப்போது ராமதாஸ் கரடுமுரடாக இருந்தார். நான்தான் பேசிப்பேசி அவரைப் பக்குவப் படுத்தினேன். அவர்கள் நடத்திய மாநாடுகளில் நாங்களும் நாங்கள் நடத்திய மாநாடுகளில் அவர் களும் கலந்து கொண்டு சமூக ஒற்றமைக்கு வித்திட் டோம்.

சமகால அரசியலை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறீர்கள்? தலித் அரசியலில் திருமாவளவன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

திருமாவளவனின் அரசியல் மாறுபட்டது. சமூதாயத்திற்கு இன்று மிகவும் தேவையானது என்று அவரிடமே எழுதிக்கொடுத்துள்ளேன். தலித் அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அரசியலை இன்னும் சரியாக ஆராய்ந்து பார்த்து நடத்துவாரேயானால் அவர்தான் பெரிய தலைவராக இருப்பார்.

எந்த மாதிரியான அரசியல் வழிமுறை அவருக்கு இந்த வெற்றியைத் தந்தது?

அரசியல் நடத்துவது எப்படி என்பதை அவர் மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளார். ஒரு காலத்தில் மற்ற கட்சியினர்தான் பெரிய பெரிய அளவில் விளம்பரம் செய்யமுடியும் என்ற நிலையை மாற்றி தன்னாலும் அதைப்போன்று செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அதற்கு என்ன தேவையோ அதை அவரால் உருவாக்க முடிகிறது. ஆனால், தலித் அரசியலிலிருந்து அவரை திசைதிருப்பி, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளுக்கு தலைமை தாங்கச் செய்து அவரது கவனத்தை மாற்ற முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்தேச அரசியலை அவர் தொடர்ந்து பேச முடியாது. தமிழ் தேசிய அரசியல்வாதிகள் அவரைப் பயன் படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கு துணை போனால், தலித் அரசியல் பாதையிலிருந்து அவர் விலகி விடுவார்.

பிற கட்சியிலிருக்கும் சாதி இந்துக்கள் பெரும் பணக்காரர்களாக இருக்கும்போது நீங்கள் உட்பட அனைத்துத் தலித் தலைவர்களும் வறுமைச் சூழலில் இருப்பது ஏன்?

வேறு வழியில்லை. நாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் அரசியல் செய்கிறோம். 1954ல் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் தளபதி கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் காமராஜர் போட்டியிட்டார். தேர்தலில் போட்டி யிடாமல் விலகிக்கொள்ளும்படி கேட்டு, காமராஜர் கிருஷ்ணசாமியின் வீட்டுக்கே வந்து விட்டார். போட்டியிலிருந்து விலகிவிட்டால் மூன்று லட்ச ரூபாய் பணமும், எம்.எல்.சி. பதவியும் தருவதாகக் கூறினார். அந்தக் ககாலத்தில் அது எவ்வளவு பெரிய தொகை பாருங்கள். ஆனால், அண்ணன் கிருஷ்ண சாமி மறுத்துவிட்டார். போட்டியிலிருந்து பின்வாங்க முடியாது என்று கூறினார். தேர்தலில் தோற்றுப் போனார். இதுபோன்று நாங்கள் அரசியல் செய்ததால்தான் ஏழ்மை நிலையில் இருக்கிறோம்.

அருந்ததியர் மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு கேட்டு போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்விஷயத்தில் தங்களின் கருத்து.

உள் ஒதுக்கீட்டு முறையை ஆந்திரப் பிரதேசத் தில் நடைமுறைப்படுத்தினார்கள். சந்திரபாபு நாயுடு அதை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். பின் உச்சநீதிமன்றம் வரை போய், உச்ச நீதிமன்றமும் அதற் குத் தடை விதித்துவிட்டது. தமிழ்நாட்டில் அதை இப்போது பேசிவருகிறார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பை கருணாநிதி மீறமுடியுமா? மீறி கவர்னர் உரையில் அறிவித்தற்காக நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக கருணாநிதியைக் கைது செய்திருக்க வேண்டாமா? கவர்னர் தான் அறிவித்தார். அவரைக் கைது செய்திருக்க வேண்டாமா? இருக்கிற பதி னெட்டு சதவிகிதத்தை எத்தனை கூறுகளாகப் பிரிப்பது. அப்படிப் பிரித்தால் யாருக்கு எவ்வளவு மிஞ்சும். இருக்கிற பதினெட்டு சதவிகிதத்தில் போட்டிபோட்டு முன்னேறுவது அருந்ததியர்களுக்கு நல்லதா? பிரித்த பின்பு கிடைக்கப்போகும் இரண்டு அல்லது மூன்று சதவிகிதத்தில் போட்டிபோடுவது நல்லதா? அவர்கள் கேட்கிறபடி ஆறு சதவிகிதமே கொடுத்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். மீதமுள்ள சாதிகள் எங்கே போவார்கள்? தனி இடஒதுக்கீடு வந்தால் அருந்ததியர்கள் குறுகிவிடு வார்கள். புத்திர பேதத்தை உருவாக்குகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இதில் தலையிட அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை காலம் என்ன பாடுபட்டிருப்போம். எத்தனை பேர் செத்திருப்போம் அப்போதெல்லாம் வாய்முடிக்கொண்டு கிடந்த கம்யூனிஸ்ட்டுகள் இப்போது சகோதரர் களுக்குள் சண்டை மூட்டிவிடுகிறார்கள்.
இத்தனை காலம் கட்சி நடத்துகிறார்கள். ஒரு முறையாவது கட்சித்தலைமைப் பதவியை ஒரு தலித்துக்கு விட்டுக்கொடுத்துள்ளார்களா? ஐம்பது ஆண்டுகளாக தகுதியுள்ள ஒரு தலித் தலைவர் பதவிக்கு கிடைக்கவில்லையா? முதலில் அவர்கள் அதைச் செய்யட்டும். பிறகு உள் இடஒதுக்கீடு பற்றி பேசட்டும்.

அருந்ததியர் மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஒப்பீட்டளவில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்களே! அவர்கள் மேம்பாடடைய என்னதான் வழி இருக்கிறது.

உள் இடஒதுக்கீடு கேட்பது சாத்தியமற்ற ஒன்று. சாத்தியமாகிற வழிகளைப்பற்றி நாம் ஆராய வேண்டும். அருந்ததியர் மக்களின் மேம்பாட்டிற் கென எத்தனை பெரிய நலத் திட்டங்களையும் அரசு செய்ய முன் வந்தாலும், மற்றுமுள்ள மக்கள் எதிர்ப்பு காட்டுவார்களா என்ன? அதைவிட்டுவிட்டு உள் இட ஒதுக்கீட்டைப்பற்றி பேசி மக்களைத் திசை திருப்பும் வேலையில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளர் சமூக மக்கள் எழுப்பி வருகிறார்களே!.

ஆதிதிராவிடர் என்றால் அது சாதிப் பெயரல்ல. அது இனத்தைக்குறிக்கும் பெயர். 1922ல் பெருந் தலைவர் எம்.சி ராஜா தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி திராவிடர்கள் என்று அழைக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். வரலாறை அறிந்தவர்கள் படித்தவர்கள் இந்தப் பெயரைச் சூட்டினார்கள். அரிசனன் என்ற பெயரை எத்தனை காலம் பயன் படுத்தினார்கள். அரிசனன் என்ற பெயரில் உள்ள பொருள் என்ன என்பதை எல்லோரும் அறிவர். அதற்கு எதிராக யார் போராடியது. இப்போது ஆதிதிராவிடர் என்று அழைத்தால் யாருக்கு என்ன நட்டம். எங்கள் சாதிப்பெயர் வெளியில் தெரிய வில்லை. சாதி அடையாளங்கள் அழிகின்றன என்கி றார்கள். அது அழியவேண்டும்தானே. ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றிவிடத் துடிப்பவர்கள் வரலாறு தெரியாதவர்கள்.

எதிர்காலச் சந்ததியினர் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? வளரும் தலைமுறைக்கு நீங்கள் அளிக்க விரும்பும் செய்தி என்ன?

நிச்சயமாக நம்புகிறேன். முன்புபோல் இல்லா மல் இப்போது எல்லோருக்கும் விஷயம் தெரிகிறது. அரசியல் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் சில வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதை வைத்துக் கொண்டு முன்னேற வேண்டும். அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் தனி வாக்காளர் தொகுதி கேட்டுப் போராட வேண்டும். 44 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் என்ன பயன். பி.எச். பாண்டியன் சபாநாயகராக இருந்த போது ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடக்க வேண்டிய நாளில், 25 உறுப்பினர்களுக்கும் குறைவாக வந்திருந்ததால், சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார். ஆதிதிராவிட மானியக் கோரிக்கை யின் போதுகூட தலித் எம்.எல்.ஏக்கள் அவைக்குச் செல்வதில்லை. தங்கள் கட்சித்தலைவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற சென்றுவிடுகிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும். உண்மையிலேயே மக்களுக்காகப் பணிபுரியும் பிரதிநிதிகளைக் கண்டறிய தனிவாக்காளர் முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

பரபரப்பான அரசியலில் ஈடுபட்டுள்ள தலித் அமைப்புகள் அம்பேத்கர் காட்டிய இறுதி வழியான பௌத்தத்தை கைவிட்டு விட்டார்கள் போலிருக்கிறதே!

நான் 1981ல் பௌத்தத்திற்கு மாறினேன். இன்று வரையிலும் பௌத்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். கடந்த ஆண்டு கூட 10000பேரை பௌத்தத்தில் இணைக்க முயற்சி எடுத்தேன். அதுபோல் அனை வரும் முயற்சி எடுக்க வேண்டும். முதலில் இந்த இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும். அப்போதுதான் எல்லோரும் பௌத்தத்திற்கு வருவார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இட ஒதுக்கீடு வேண்டும்? 1957ல் மதுராந்தகம் தனித்தொகுதியில் போட்டியிட்டு மரகதம் சந்திர சேகரை தோற்கடித்தார் சிவராஜ். 1959ல் மீண்டும் இடஒதுக்கீட்டை நீடிப்புச்செய்ய விவாதம் நடந்த போது இடஒதுக்கீடு கூடாது என்றார் சிவராஜ். அதே கருத்தைத்தான் நானும் சொல்கிறேன். இடஒதுக்கீடு இல்லாது போகுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் பௌத்தத்திற்கு வந்திருப்பார்கள். ஆனாலும் போகிற எல்லா கூட்டங்களிலும் பௌத்தத்தைப் பற்றி பேசி வருகிறேன்.

 

நன்றி : முற்றுகை, ஜூலை 2008

Load More Related Articles
Load More By யாக்கன்
Load More In சிறப்புப் பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!

கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…