பெருமக்களே,

 சத்தியாக்கிரகக் குழுவின் அழைப்புக்கிணங்க வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் குழுவின் தலைவன் என்ற முறையில் நான் அன்புடன் வரவேற்கிறேன். மார்ச் 19ம் நாள் நாம் அனைவரும் இங்கு சவுதார் குளத்திற்கு வந்திருந்ததை உங்களில் பலர் நினைவில் வைத்திருப்பீர்கள். மஹதைச் சேர்ந்த சாதி இந்துக்கள்.  நம்மீது எந்தத் தடையும் விதிக்கவில்லை . ஆனால் நாம் இங்கு வந்ததற்கான எதிர்ப்பை அவர்கள் நம்மைத் தாக்கியதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். அந்தச் சண்டை ஒருவர் எதிர்பார்க்கத்தக்க விளைவுகளையே ஏற்படுத்தியது ஆவேசம் கொண்ட சாதி இந்துக்கள் நான்கு மாதக் கடுங்காவலுக்குட்பட்டு இப்போது  சிறையில் உள்ளார்கள். அந்த மார்ச் 19ம் நாள் நாம் தடுக்கப் படாமல் இருந்திருந்தால், நாம் அந்தக் குளத்தில் நீரெடுக்கும் உரிமையை சாதி இந்துக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பது நிரூபணமாகி இருக்கும். நாமும் இப்போதைய இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கும் கெடு வாய்ப்பாக நாம் அவ்வாறு தடுக்கப்பட்டதால் இன்று இந்த மாநாட்டை நாம் கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இங்கு மஹதில் உள்ள இந்தக் குளம் பொதுச் சொத்தாகும். மஹதில் உள்ள சாதி இந்துக்கள் தமக்காக இக்குளத்தில் நீரெடுத்துக் கொள்வதோடு வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் சுதந்திரமான சிந்தனை உடையவர்களாக இருக்கிறார்கள் இதன்படி இஸ்லாமியர்கள் போன்ற இதர மதத்தவர்கள் இந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். மனிதனை விடக் கீழானவைகளாகக் கருதப்படும் விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்கள்கூட இந்த குளத்தில் நீர் அருந்துவதைச் சாதி இந்துக்கள் தடுப்பதில்லை. மேலும் தீண்டப்படாதவர்கள் வைத்திருக்கும் மிருகங்களைக்கூட இக்குளத்தில் நீரருந்த அவர்கள் சுதந்திரமாக அனுமதிக்கிறார்கள்.

சாதி இந்துக்கள் கருணையின் ஊற்றுக் கண்களாகவே திகழ்கின்றார்கள். அவர்கள் இம்சையைக் கையாண்டு எவரையும் துன்புறுத்துவதேயில்லை. அவர்கள் உண்கிற உணவுத் தானியங்களைக் கொத்திக் கொண்டு போகும் காக்கைகளைக்கூட விரட்டாத அளவிற்கு அவர்கள்  தன்னலமோ,  கருமித்தனமோ இல்லாத மாமனிதர்களாக விளங்குகின்றார்கள். சந்நியாசிகளையும் பரதேசிகளையும் பாதுகாக்கிறார்கள். என்பதே சாதி இந்துக்களின் தரும் சிந்தனைக்கு உயிர்ப்புள் சான்றாக விளங்குகிறது. பிறர் நலம் காப்பதை மதக் கடமையாகவும், பிறருக்குத் துன்பமிழைப்பதைப் பெரும் பாவமாகவும் அவர்கள் கருதுகின்றார்கள்.

மேலும் அவர்கள் தமக்குப் பிறர் இழைக்கும் துன்பத்தை அவர்களுக்குச் செய்யாமல் அதனைப் பொறுத்துக் கொள்வதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்கள். எனவேதான் அவர்கள் தீமையற்ற பசுக்களிடம் கருணை காட்டுவதோடு பாம்புகள் போன்ற ஆபத்து மிக்க பிலங்குகளையும் கொல்லாமல் விடுகிறார்கள் எல்லா உயிர்களிலும் ஒரே ஆத்மாதான் வாழ்கிறது என்பதை அவர்க நிறுவப் பட்ட நடைமுறைக் கொள்கையாகக் கொண்டு வாழ்கிறார்கள்.

ஆனால் இத்தனை நல்லவர்களாக இருக்கும் சாதி இந்துக்கள் தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த சில மனித உயிர்களையே இந்த சவுதார் குளத்தில் நீரெடுக்க விடாமல் தடுக்கின்றார்கள் என்று எப்படி நாம் கேட்காமல் இருக்க முடியும்?

சாதி இந்துக்கள் கருணையின் ஊற்றுக் கண்களாகவே திகழ்கின்றார்கள். அவர்கள் இம்சையைக் கையாண்டு எவரையும் துன்புறுத்துவதேயில்லை. அவர்கள் உண்கிற உணவுத் தானியங்களைக் கொத்திக் கொண்டு போகும் காக்கைகளைக்கூட விரட்டாத அளவிற்கு அவர்கள்  தன்னலமோ,  கருமித்தனமோ இல்லாத மாமனிதர்களாக விளங்குகின்றார்கள். சந்நியாசிகளையும் பரதேசிகளையும் பாதுகாக்கிறார்கள். என்பதே சாதி இந்துக்களின் தரும் சிந்தனைக்கு உயிர்ப்புள் சான்றாக விளங்குகிறது. பிறர் நலம் காப்பதை மதக் கடமையாகவும், பிறருக்குத் துன்பமிழைப்பதைப் பெரும் பாவமாகவும் அவர்கள் கருதுகின்றார்கள்.

                மேலும் அவர்கள் தமக்குப் பிறர் இழைக்கும் துன்பத்தை அவர்களுக்குச் செய்யாமல் அதனைப் பொறுத்துக் கொள்வதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்கள். எனவேதான் அவர்கள் தீமையற்ற பசுக்களிடம் கருணை காட்டுவதோடு பாம்புகள் போன்ற ஆபத்து மிக்க பிலங்குகளையும் கொல்லாமல் விடுகிறார்கள் எல்லா உயிர்களிலும் ஒரே ஆத்மாதான் வாழ்கிறது என்பதை அவர்க நிறுவப் பட்ட நடைமுறைக் கொள்கையாகக் கொண்டு வாழ்கிறார்கள்.

                ஆனால் இத்தனை நல்லவர்களாக இருக்கும் சாதி இந்துக்கள் தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்த சில மனித உயிர்களையே இந்த சவுதார் குளத்தில் நீரெடுக்க விடாமல் தடுக்கின்றார்கள் என்று எப்படி நாம் கேட்காமல் இருக்க முடியும்?

                இந்த வினாவிற்கான விடையை எல்வோரும் தெளிவாகக் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும் அவ்வாறு நீங்கள் புரிந்து கொள்ளவில்லையானால் இன்றைய இந்த மாநாட்டில் முக்கியத்துவத்தை முழுமையாக நீங்கள் உணரமுடியாது என்று நான் கருதுகிறேன். புனித மரபுப்படி இந்துக்கள் நான்கு சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் நடைமுறையில் அய்ந்தாகப் பிரிக்கப் பட்டிருக்கிறார்கள் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்க்ள. சூத்திரர்கள் இந்து மதத்தை ஆளும் முதன்மையாக கோட்பாடாக உள்ளது, சாதி முறையேயாகும். சாதிகள் யாவும்  ஏற்றத்தாழ்வான நிலையுடையவை என்பது இரண்டாவது கோட்பாடாக உள்ளது. அவைகள் ஒன்று அதற்கு முந்திய மற்றொன்றை விடக் கீழ்மையானது என்னும் கீழ்நிலையாக வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

                அவைகளின்படி நிலைகள் விதிப்படி நிறுந்தப்படுத்தப் பட்டுள்ளன என்பதோடு, ஒவ்வொன்றும் மீறமுடிறாத எல்லைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு சாதியும் எவ்வகை நிலைக்கப்பட்டது என்பது எளிதாக அறியப்படத்தக்கதாயுள்ளது. கலப்புத் திருமணம் சமபந்தி போஜனம் உடனிருந்து நீரருந்துதல் கமூகக் கலப்புறவு ஆகியவைகளுக்கான இந்து மதத் தடைகள் ஒருவர் பிறரோடு உறவாடுவ தில் இருக்கவேண்டிய அளவுகளைக் குறித்த  ஏற்பாடுகள் எனப் பொதுவாக நம்பப்படுகின்றன. ஆனால் இது ஒரு முழுமையாற்ற கருத்தாகும் இந்தத் தடைகள் உண்மையில் உறவுக்கான அளவுகளின் எல்லைகளேயாகும்: அனால் சமத்துவமற்ற படிநிலைகள் உடைய சாதியார் யார் யாரெனக் காட்டும் அடையாளக் குறியீடுகளாகவும் அவை உள்ளன. இவ்வாறாக இந்த எல்லைகள் ஏற்றத்தாழ்வின் அடையாளங்களே யாகும்.

                ஒரு மனிதன் தலைமீதுள்ள மகுடம் அவனை அரசன் எனக் காட்டுவது போலவும் ஒருவனின் கையில் உள்ள லி அனைச் சத்திரியன் எனக் காட்டுவது போலவும் எந்த தடைகளும் பொருந்தாத வகுப்பு மற்ற  அனைத்து சாதிகளைப் விடவும் மேலானது எனக் காட்டப்படுகின்றது எல்லாத் தடைகளும் எந்த வகுப்புக்குப் பொருந்துகிறதோ அதுபடி நிலையில் மிகவும் கீழானது எனக் காட்டப்படுகின்றது இந்தத் தடைகள் காக்கப்படப் பெரு முயற்சி எடுக்கப்படுவது ஏனெனில், இத்தடைகள் தளர்த்தப்படுமானால், மதத்தால் நிறுவப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உடைத்து நொறுக்கப்பட்டு சமத்துவம் தோன்றிவிடும் என்பதாலேயே  மஹத்தின் சாதி இந்துக்கள் சவுதார் குளத்தில் தீண்டப்படாதவர்கள் நீரெடுப்பதைத் தடுப்பதன் காரணம் தீண்டப்படாதவர்கள் தொடுவதால் அந்தக் குளத்துநீர் தீட்டாகிவிடும் என்பதாலோ அல்லது அது ஆவியாக குறைந்துவிடும் என்பதாலோ அல்ல. அதைத்  தீண்டப்படாத வர்கள் குடிப்பதிலிருந்து அவர்கள் தடுப்பதன் நோக்கம் புனித மரபுகளால், தாழ்வானவை எனப் பிரகடனப்படுத்தப்பட்ட சாதிகள் உண்மையில் அவர்களில் சாதிகளுக்குச் சமமானவையே என்பதை அத்தகைய அனுமதி மூலம் அங்கீகரிக்க அவர்கள் விரும்பவில்லை என்பதேயாகும்.

                பெருமக்களே! இதிலிருந்து நீங்கள் நாம் தொடங்கியுள்ள போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள், சத்தியாகிரக குழு உங்களை மஹத்தில் உள்ள சவுதார் குளத்தில் நீரருந்துவதற்காக மட்டுமே மஹயத்துக்கு அழைத்ததாக எண்ணி விடாதீர்கள்.

                பவுதார் குளத்து நீரை நாம் அருந்துவதால் நாமெல்லாம் சாகாப் பெருவாழ்வு பெற்றுவிடுவோம் என்பதில்லை. இத்தனை காலமும் நாம் இந்த நீரை அருந்தாமலேயே  உயிரோடுதான் வாழ்ந்து வருகிறாம் நாம் வெறுமனே நீர் அருந்துவதற்காக மட்டும் சவுதார் குளத்திற்குச் செல்லப்போவதில்லை, சமத்துவம் என்னும் இலட்சியத்தை நிர்ணயிப்பதாற்காகவே இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது என்பதைக் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

                இந்த வகையில் இந்த மாநாட்டை பற்றிச் கருதுகிற யாருக்கும் இப்படிப்பட்ட மாநாடு இதுவரை நடைபெற்றதில்லை என்பதில் அய்யம் இருக்க முடியாது என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். இந்திய வரலாற்றில் இதற்கு இணையான ஒன்றைக் காண முடியாதென  நான் உணர்கிறேன். இதற்கு சமமான ஒரு மாநாட்டு நிகழ்ச்சியைக் கடந்தகால  வரலாற்றில் நாம் தேடுவதானால், அய்ரோப்பியக் கண்டத்தில் பிரான்ஸ் நாட்டு வரலாற்றுக்குத்தான் நாம் போயாக வேண்டும். ஒரு நூற்று முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னே 1789 ஜனவரி 24ம் நாள் 16ம் லூயி மன்னர் அரசாணைப்படி தம் ஆட்சிக்குட்பட்ட மக்களின் பிரதி நிதிகளைக் கொண்ட பேரவையைக் கூட்டினார்.  இந்த பிரெஞ்சு தேதியப் பேரவை வரலாற்று ஆசிரியர்களால் மிகவும் கொச்சைப்படுத்தப் பட்டுள்ளது அந்தப் பேரவை அரசரையும், அரசியையும் கில்லட்டினால் வெட்டிக் கொல்லப்படும் கொலைக் களத்துக்கு அனுப்பியது: பிரபுக் களைத் தண்டித்துக் கொன்று குவித்தது, அவர்களின் வாரிசுகள நாடு கடத்தியது பண முதலைகளின் சொத்துக்களை அது பறிமுதல் செய்து அய்ரோப்பா முழுவதையும் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்குப் போரில் மூழ்கடித்தது. வரலாற்று ஆசிரியர்களால் அந்தப் பேரவைக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுடுள்ளன. என்னுடைய பார்வையில் இந்தக் குற்றச்சாட்டுகள் யாவும் இடம் மாறியுள்ளன. மேலும் இவ்வகையான வரலாற்று ஆசிரியர்கள் பிரெஞ்சு nhடிசயடப பேரவையின் சாதனைகளின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளவேயில்லை அந்தச் சாதனைகள் பிரான்ஸின் நல்வாழ்வுக்கு மடடுமன்றி அய்ரோப்பா கண்டம் முழுமைக்கான நல்வாழ்வுக்குமே வழிகோலின. இன்று ஐய்ரோப்பிய நாடுகள் அமைதியையும் வளத்தையும் அனுபவிக்கின்றன என்றால் அதற்கு ஒரே காரணம்தான்: 1789ல் கூட்டப்பட்ட பிரெஞ்சு தேசீயப் பேரவை சிதறுண்ட, சிதிலமாகிப்போன தன்காலத்திய பிரெஞ்சு நாட்டுச் சமுதாய அமைப்புக்கு மாற்றாக புதிய சமுதாய அமைப்புக் கோட்பாடுகளை நிர்ணயித்து, அதேஷே கோட்பாடுகள் `அய்ரோப்பா’ முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டன.

பிரெஞ்சு தேசிய பேரவையின் முக்கியத்துவத்தையும் அதன் கோட்பாட்டுப் பெருமைகளையும் உணர்ந்து மதிப்பிட வேண்டுமாயின், அந்தக் காலகட்டத்தில் பிரெஞ்சு சமூகத்தின் நிலையை நாம் மனத்தில் இறுத்திக் கொள்ளவேண்டும். நம்முடைய இந்துச் சமூகம் சாதிய முறைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 1789-ம் ஆண்டைய பிரான்ஸிலும் இதேபோன்ற வகுப்பு முறைகள் நடப்பில் இருந்தன. ஒரே ஒரு வேறுபாடு யாதெனில் அந்தச் சமூகத்தில் மூன்று வகுப்புகளே இருந்தன. இந்துச் சமூகத்தைப் போலவே பிரெஞ்சுச் சமூகமும் பிராமணர்கள் மற்றும் சத்திரியர்களைக் கொண்டதாய் இருந்தது. ஆனால் வைசியர், சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய மூன்று வெவ்வேறு சாதிகளுக்குப் பதிலாக இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரே சாதி இருந்தது. இது ஒரு அற்பமான வேறுபாடேயாகும். முக்கியமான செய்தி யாதெனில் சாதி அல்லது வகுப்புமுறை ஒன்றுபோலவே இருந்தது. இந்த ஒரே மாதிரித் தன்மையென்பது வகுப்புக்களுக்கிடையிலான வேறுபாடு மட்டுமின்றி நம் சாதீயமுறையின் ஏற்றத் தாழ்வுகள்கூட பிரெஞ்சுக் சமூக அமைப்பில் இருந்தன என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரெ’சுக் சமூகத்தில் இருந்த ஏற்றத் தாழ்வின் தன்மை விதித்யிhசமானது. அது இயல்பில் பொருளாதார வகையானது. எவ்வாறிருப்பினும் அந்த சமத்துவமின்மை இங்குள்ள அளவிற்கே கூர்மையானதாயிருந்தது. 1789-ம் ஆண்டு மே மாதம் அய்ந்தாம் நாள் வெர்யெஸ்ல்ஸ் நகரில் கூடிய பிரெஞ்சு தேசீயப் பேரவைக்கும் இன்று கூடியுள்ள நம் கூட்டத்திற்கும் மாபெரும் ஒற்றுமையுள்ளது என்பதை மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒற்றுமை என்பது இவ்விரு கூட்டங்களும் நடைபெற்ற சூழ்நிலைகளை மட்டும் பொறுத்தன்று நோக்கங்களைப் பொறுத்ததும் ஆகும்.

பிரெஞ்சு மக்களின் தேசீயப் பேரவை பிரெஞ்சு சமுதாயத்தைப் புனரமைப்பு செய்வதற்காக கூட்டப்பட்டதாகும். இன்றைய நம்மடைய கூட்டமும் இந்து சமுதாயத்தைப் புனரமைப்பு செய்வதற் காகவே கூட்டப்பட்டுள்ளது. எனவே எந்தெந்தக் கோட்பாடுகளின் மீது நம் சமுதாயம் புனரமைப்பு செய்யப்படவேண்டும் என்று விவாதிப்பதற்கு முன், பிரெஞ்சுப் பேரவை எந்தெந்தக் கோட்பாடுகளைச் சார்ந்திருந்தது என்றும், எந்ததெந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது என்றும் நாம் அறிய வேண்டியது அவசியமாகும். நம்முடைய இப்போதைய மாநாட்டைக் காட்டிலும், பிரெஞ்சுப் பேரவையின் இலக்கு வரையறைகள் மிகவும் விரிவானவைகளாக இருந்தன. அந்த பேரவை, பிரெஞ்சு மக்களின் அரசியல், சமூக மற்றும் மத அமைப்புகளைப் புனரமைப்பு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. நாம் சமூக மற்றும் மத அமைப்புகளைப் புனரமைப்பு செய்வதில் மட்டும் நம் கவனத்தைச் செலுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். தற்போதைக்கு நாம் அரசியல் புனரமைப்பைப் பொருட்படுத்த வேண்டியவர்களாக இல்லாமையால் சமூக மற்றும் மத ரீதியான தங்கள் தேசப் புனரமைப்பு விஷயத்தில் பிரெஞ்சுப் பேரவையினர் என்ன செய்தனர் என்று மட்டும் கவனிப்போம்.

இந்த சமூக, மற்றும் மதத் தளங்களில் புனரமைப்பு செய்ய பிரெஞ்சு தேசீயப் பேரவை பின்பற்றிய கொள்கை எதுவென அந்தப் பேரவை வெளிப்படுத்திய மூன்று முக்கியப் பிரகடனங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். முதற் பிரகடனம் 1789 ஜூன் 17-ந்தேதியன்று வெளியிடப்பட்டது.

பிரான்ஸில் நிலவிய வகுப்புப் பிரிவுகளைப் பற்றியது இந்த முதல் பிரகடனம். முன்னமே கூறியபடி, பிரெ’சுச் சமுதாயம் மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுக் கிடந்தது. அந்தப் பிரகடனம் இந்த மூன்று பிரிவுகளையும் ஒழித்துவிட்டு மூன்றையும் ஒன்றாகக் கலந்துவிட்டது. மேலும் அரசாங்கப் பேரவையில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒதுக்கப்பட்டிருந்த பதவி இடப்பிரிவினைகளை அது ஒழித்துவிட்டது.

இரண்டாவது பிரகடனம் மதகுருமார்களைப் பற்றியது. பண்டைய மரபுப்படி, இந்த மதகுருக்களின் நியமனமோ, பதவி பறிப்போ தேசத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டதாக, அந்நிய மத ஆதிக்க சக்தியான போப்புக்கு உட்பட்டதாக இருந்தது. போப்பால் நியமிக்கப்பட்ட எவரும் மதகுருவாகலாம். அவர் எந்த மக்களுக்குப் போதனை செய்யப் போகிறாரோ அந்த மக்களின் பார்வையில் பொருத்தமற்றவராக இருப்பினும்கூட இந்தப் பிரகடனம் மத அமைப்புக்களின் சுயாட்சியை ஒழித்துக்கட்டி, யார் யார் மத கருவாக ஆவது, அதற்கான தகுதியுடையவர் யார், இல்லாதவர் யார் எனத் தீர்மானிப்பதும் போதனைக்காக மதகுருக்களுக்குச் சம்பளம் உண்டா இல்லையா எனத் தீர்மானிப்பதும் ஆன எல்லா அதிகாரங்களையும் பிரெஞ்சு தேசத்திற்கு அளித்துவிட்டது.

மூன்றாவது பிரகடனம், அரசியல், பொருளாதார, மத அமைப்புக்களைப் பற்றியதன்று. அது ஒரு பொதுவகைப்பட்டட தன்மையுடையதாய், எல்லா சமூகச் செயற்பாடுகளும் நடைபெற வேண்டிய முறைமைகள் பற்றிய கோட்பாடாக இருந்தது.

அந்த வகையில் பார்த்தால் மூன்று பிரகடனங்களிலும் மிக முக்கியமானதாக இந்த மூன்றாவது பிரகடனமே அமைந்திருந்தது. இந்தப் பிரகடனத்தை பிரகடனங்களின் அரசன் என்றே அழைக்கலாம். இந்த பிரகடனம் மனிதனின் பிறப்புரிமைகளின் பிரகடன அறிவிப்பாக உலகெங்கும் புகழ் பெற்றுள்ளது. இது பிரான்ஸ் வரலாற்றில் மட்டும் முன்மாதிரியற்ற முதற்பிரகடன மாக இல்லை அ தற்கும் மேலாக நாகரீக நாடுகளின் வரலாறு நெடுகிலும் இதுவே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு அய்ரோப்பிய நாடும், பிரெஞ்சுப் பேரவையைப் பின்பற்றி தமது நாடுகளின் அரசியல் நிர்ணய சட்டத்தில் இந்த மனித பிறப்புரிமை பிரகடனத்திற்கு இடமளித்துள்ளன. எனவே இந்த பிரகடனம் பிரான்ஸில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே ஒரு புரட்சியைக் கொண்டு வந்துவிட்டது என்று கூறலாம். இந்தப் பிரகடனம் பதினேழு பிரிவுகளைக் கொண்டது. அவற்றில் முக்கியமானவற்றைக் காணலாம்.

பிறப்பினால் எல்லா மனிதர்களும் சமமானவர்களே, இறப்புவரை அவர்கள் சமமானவர்களாகவே இருந்தாக வேண்டும். பொது நன்மையைக் கருத்தில் கொண்டே அவர்கள் அந்தஸ்து ரீதியாக வேறுபடுத்தப்படலாம். மற்றபடி அவர்களின் சம அந்தஸ்து தொடர்ந்து நிர்வகிக்கப்பட வேண்டும்.

அரசியலின் உன்னத குறிக்கோள் இந்த மனிதப் பிறப்புரிமைகளைப் பாதுகாப்பதாகவே இருக்கவேண்டும்.

இறையாண்மையின் ஊற்றுக்கண் முற்றிலும் தேசமேயாகும். ஒரு தனி மனிதன், அல்லது குழு, அல்லது தனியொரு சிறப்புள்ள வகுப்பு ஆகிய எவருடைய உரிமைகளும் தேசத்தால் வழங்கப்படா விடில், அது அரசியல் உரிமையாயினும், மத உரிமையாயினும் அது செல்லுபடியாவதாய் அங்கீகரிக்கப்பட முடியாது.

எந்தவொரு மனிதனும் தன் பிறப்புரிமைப்படி இயங்க சுதந்திரம் உண்டு. இந்த உரிமை மீது விதிக்கப்படும் எந்த எல்லை அளவீடும், பிறமனிதர்கள் தமது பிறப்புரிமைகளை அனுபவிக்க அவசியமான அளவுக்கே இருந்தாக வேண்டும். அத்தகைய அளவீடுகள் சட்டத்தினால் விதிக்கப்பட வேண்டும். அவை தேசத்தின் சட்டம் தவிர மதம் போன்ற வேறெதனையும் அடிப்படையாகக் கொண்டிருத்தல் ஆகாது.

சமுதாயத்திற்குத் தொல்லையாய் இருக்கக்கூடிய குறிப்பிட்ட செயல்களை மட்டுமே சட்டம் தடை செய்யும். சட்டத்தினால் தடை செய்யப்படாத எந்தச் செயலைச் செய்யவும் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. கடமையெனச் சட்டத்தால் விதிக்கப்பட்hத எதையும் செய்யுமாறு எவரையும் வற்புறுத்த முடியாது.

சட்டமென்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரால் நிர்ணயிக்கப் பட்ட எல்லைக்கு உள்ளடங்கிய தன்மையதாய் இருக்காது. சட்டமாக இருக்கவேண்டியது எது என்பது மக்களால் அல்லது அவர்களின் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். அத்தகைய சட்டம் பாதுகாப்பதாக இருப்பினும், தண்டிப்பதாய் இருப்பினும் அது அனைவருக்கும் ஒன்றானதாகவே இருக்க வேண்டும். எல்லா சமூகச் செயற்பாடுகளும், எல்லோருக்கும் சமத்துவம் என்னும் அடிப்படையில் இருக்கவேண்டுமென நீதிகோருவதால், எல்லா மனிதர்களும் எவ்வகையான மதிப்பு, அதிகாரம், தொரில் ஆகியவற்றைப் பெற சமவாய்ப்புள்ளவர் களேயாவர். இதில் உள்ள எந்த வேறுபாடும் மனிதர்களின் தனித் திறனைப் பொறுத்ததாக இருக்கலாமே அன்றி அவர் தம் பிறப்பைப் பொறுத்ததாக இருக்கலாகாது.

இந்தப் பிரெஞ்சு தேசீயப் பேரவையின் முன்மாதிரியை இன்றைய நமது மாநாடு நம் மனக்கண் முன் கொண்டு வரவேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரெஞ்சு தேசத்தின் முன்னேற்றத்திற்காக அது காட்டிய பாதையே முன்னேறிய நாடுகள் அனைத்தும் நடந்து சென்ற அந்தப் பாதையையே இந்துச் சமூகத்தின் வளர்ச்சிக்கான பாதையாக இந்த மாநாடு ஏற்றாக வேண்டும். திருமணக் கலப்புக்குத் தடை என்பது முதலாக, சமூக உறவுக்கலப்புக்குத் தடை என்பது வரையிலான சாதீய அமைப்புக்குட்பட்ட இந்துச் சமுதாயத்தின் கட்டமைப்பைக் காத்து வரும் கடையாணிகளைக் கழற்றி எறிவதன் மூலமே நாம் இந்துச் சமுதாயத்தை ஒரே சாதியினதாக ஆக்க முடியும். இல்லாமற்போனால், நம்மால் தீண்டாமையை நீக்கவும் முடியாது. சமத்துவத்தைச் சாதிக்கவும் முடியாது.

நாம் தீண்டப்படாதவர்களாக இருப்பதால், அனைவரையும் போல் நீரருந்துதல், சமூக உறவு முறையில் சமத்துவம் பெறுதல் ஆகியவற்றின் மீதான தடையிலிருந்து நாம் விடுதலை பெற்றாலே போதுமானதென உங்களில் சிலர் கருதலாம். சாதீய அமைப்பைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்ழூ அது இருந்தால் நமக்கென்ன? என நினைக்க லாம். இது மிக மிகத் தவறான எண்ணம் என்பதே என்னுடைய அபிப்பிராயம். சாதீய முறையைத் தனியாக விட்டுவிட்டு, தீண்டாமையை ஒழிப்பதொன்றையே நம் கொள்கையாக நாம் ஏற்றால், மிகக் குறைவான இலக்கைக் கொண்டிருப்பதாக நம்மை மக்கள் குறைகூறுவார்கள். மனிதர்களை உயர்ந்த, புறநிலை முயற்சிகளைப் போலவே அகநிலை ஆர்வங்களும் அவசியப்படுகின்றன.

ஒரு பெரு முயற்சி செய்யப்பட வேண்டுமானால் பெருநோக்கம் பேணப்பட வேண்டும். ஒரு பேரிலக்கை ஒருவன் நிர்ணயித்துக் கொள்ளும் போது அதை அடையும் சக்தி தனக்கிருக்கின்றதா என்ற அய்யப்பாட்டால் அவன் குழம்பிவிடவோ, குலைந்துபோகவோ கூடாது.

உண்மையில் உயர்நோக்கங்கள் இல்லாமல் முயற்சிகளே சாத்தியப்படுமா என்று அய்யப்பட வேண்டியிருக்கின்றது. எனவே, ஒரு பெரு முயற்சி செய்யப்பட வேண்டுமானால் பெருநோக்கம் பேணப்பட வேண்டும். ஒரு பேரிலக்கை ஒருவன் நிர்ணயித்துக் கொள்ளும் போது அதை அடையும் சக்தி தனக்கிருக்கின்றதா என்ற அய்யப்பாட்டால் அவன் குழம்பிவிடவோ, குலைந்துபோகவோ கூடாது. ஒருவன் அற்பமான இலக்குகளைக் கொண்டிருப்பதற்காகத்தான் வெட்கப்பட வேண்டுமேயொழிய, இலக்கு மிக உயர்வானதாக இருப்பதானால் விளையும் தோல்விக்காக அன்று தீண்டாமை மட்டும் நீக்கப்பட்டு விடுமேயானால் நாம் ஆதிசூத்திரர் என்பதிலிருந்து சூத்திரராக மாறிவிட முடியும். ஆனால் இது தீவிரமாகத் தீண்டாமையை ஒழித்துவிடும் என்று நம்மால் கூற முடியுமா? சமூக உறவுக்கலப்புக்கள் முதலானவற்றின் மீதான தடைகளை நீக்குவதே தீண்டாமையை ஒழிப்பதற்குப் போதுமானதாக இருக்குமாயின், சாதி அமைப்புமுறையே ஒழிய வேண்டுமென நான் கருத்துரைத்திருக்கவே மாட்டேன். பெருமக்களே ஒரு பாம்பைக் கொல்ல வேண்டுடமாயின் அதன் வால்மீது தாக்கினால் போதாது. அதன் தலையே நசுக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஒரு தாக்குதல் என்பது எதிரியின் முக்கிய பலவீனத்தைப் பற்றிய அறிதலின் மேல்தான் நடத்தப்பட வேண்டும். பீமன் தன் கதாயுதத்தால் துரோணரின் தொடையில் தாக்கியதால்தான் துரோணர் கொல்லப்பட்hரேயன்றி, அவன் அவரைத் தலையில் தாக்கியிருப்பானேயானால் அவர் நிச்சயம் இறந்தேயிருக்க மாட்டார். ஏனெனில் அவருடைய முக்கிய பலவீன இடம் அவருடைய தொடையே யாகும். ஒரு  நோயைக் குணப்படுத்த அதன் மூலத்தைக் கண்டுபிடிக்காமல் சிகிச்சை மேற்கொண்ட பல மருத்துவர்கள் தோல்வி கண்டமைக்கான எடுத்துக்காட்டுகள் பல உண்டு; ஏனென்றால் அந்த மருத்துவர் அந்த நோயை முற்றிலும் குணமாக்கக்கூடியது எது என்பதை முழுவதுமாக அறிந்தவராக இல்லை. இதுபோலவே ஒரு சமூகப் பிணியை ஒரித்துக்கட்டுவதில் ஏற்பட்டுள்ள தோல்விகள், அதன் மூலகாரணம் அறியப்படவில்லை. என்பதாலோ, அல்லது வரலாற்றில் பதியப்பட வில்லை என்பதாலோதான் ஏற்பட்டுள்ளன. எனவேதான் அவை பற்றிப் பல சமயங்களில் நாம் ஏதும் அறியாதவர்களாக இருக்கிறோம். ஆனால், நான் படித்தறிந்தவற்றில் அத்தகைய ஒரு நிகழ்ச்சியை உங்களோடு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பண்டைய அய்ரோப்பிய நாடான உரோமில், பாட்ரீசியன்கள் உயர்வகுப்பினராகவும், ப்ளெபியன்கள் கீழ்வகுப்பினராகவும் கருதப்பட்டு வந்தார்கள். எல்லா அதிகாரங்களும் பாட்ரீசியன்களின் கைகளிலேயே இருந்ததால் அவர்கள் ப்ளெபியன்களை மிகவும் தாழ்வாக நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தக் கொடுமைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள, ப்ளெபியன்கள், தமது ஒற்றுமையை பலமாகக் கொண்டு, நீதியை நிலைநாட்டவும், அனைத்தையும் பற்றி தகவல் அளிக்கவும் சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்று வற்புறுத்தினர். அவர்களுடைய எதிரிகளான பாட்ரீசியன்கள் இதற்கு ஒப்புக் கொண்டனர். பன்னிரண்டு சட்டங்கள் கொண்ட ஆவணம் ஒன்று இயற்றப்பட்டது. ஆனால் இது ப்ளெபியர்களை அவர்களின் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கவில்லை. ஏனெனில் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகளாக இருந்த அனைவரும் உயர்வகுப்பினராகக் கருதப்பட்ட பாட்ரீசியன்களாகவே இருந்தனர். மேலும் டிர்ப்யூன் என அழைக்கப்பட்ட தலைமை அதிகாரியும் பாட்ரீசியனாகவே இருந்தார். எனவே, சட்டங்கள் சமமாக இருந்த போதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஒரு பக்கச் சார்பு இருந்தது. இதற்குப்பின் ப்ளெபியன்கள் மற்றொரு கோரிக்கையை முன் வைத்தனர். அதன்படி ஒரு தலைமை அதிகாரிக்குப் பதில் இரண்டு தலைமை அதிகாரிகள் இருக்கவேண்டும். அவர்களில் ஒருவர் ப்ளெப்பியன் களாலும், மற்றொருவர் பாட்ரீசியன்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பாட்ரீசியன்கள் இற்கும் ஒப்புக் கொண்டதால், தங்கள் துயரங்களிலிருந்து தாம் இனி விடுவிக்கப்பட்டு விடுவோம் எனக்ருதி, ப்ளெபியன்கள் பெருமகிழ்வு கொண்டனர்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அற்ப ஆயுள் உடையதாகவே இருந்தது. டெல்பியில் உள்ள மதகுருவின் (டீசயஉடந) உடன்பாட்டு ஒப்புதலின்றி எதையும் செய்யக்கூடாதெனும் மரபுப் பழக்கம் உடையவர்களாக இந்தார்கள் உரோமானிய மக்கள். இதன்படி, டிரிப்பூனாக அதாவது முதன்மை அதிகாரியாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அந்த டெல்பி மதகுரு அங்கீகரிக்கவில்லையாயின் அவர் தோல்வியுற்றதாகக் கருதி நீக்கப்பட்டு,  மதகுருவால் அங்கீகரிக்கப்டும் ஒருவர் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவார். மதகுருவாக நியமிக்கப்படுவர் நிச்சயமாக ரோமானியர்களால் கான்பெராஷியோ என்றழைக்கப்பட்ட ரோமானிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட பெற்றோர்களுக்குப் பிறந்தவ ராகவே இருந்தாக வேண்டும் என்பது அவர்களின் புனித மரபாக இருந்தது. இந்த வகைத் திருமணம் பாட்ரீசியன்களிடையே மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் டெல்வி மதகுரு எப்போதும் ஒரு பாட்ரீசியனாகவே இருந்து வந்தார்.

அந்தத் தந்திரக்கார மதகுரு, ப்ளெபியன்கள் தங்களின் கொள்கைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஒருவரைத் தலைமை அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம், அவருக்கு எதிராகவே செயல்படுவார். ப்ளெபியன்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாட்ரீசியன்களுக்கு அடிபணிந்தவராக இருந்தால் மட்டுமே அவரை இந்த மதகுரு அங்கீகரிப்பார் அவரைப் பதவியேற்க வாய்ப்பளிப்பார். ஒரு தலைமை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையால் அந்த ப்ளெபியன்களுக்கு என்ன லாபம்? உண்மையில் ஏதுமில்லை என்பதே இதற்கான பதிலாகும். அவர்களுடைய முயற்சிகள் வீணாகி விட்டன. ஏனெனில் அவர்கள் நோயின் மூலத்தைக் கண்டறியவில்லை. தலைமை அதிகாரியான டிரிபியூனை அவர்கள் தேர்ந்தெடுக்க உரிமை கோரிய போதே டெல்பி மதகுருவாக யார் இருக்கவேண்டும் என்ற பிரச்சனையை யும் அவர்கள் தீர்த்திருக்க வேண்டும். தலைமை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையே நோயை நீக்கிவிடவில்லை. மதகுருவின் அதிகாரத்தையும் கையிலெடுப்பது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. இதை அந்த ப்ளெபியன்கள் காணத் தவறிவிட்டார்கள். நாமும், தீண்டாமையை ஒழிப்பதற்கான வழியொன்றைத் தேடும்போதே, எது நோயை முற்றாக ஒழிக்கும் என்பதை ஆய்ந்தறிய வேண்டும்; இல்லையெனில் நாம் நம் இலக்கைத் தவறவிட்டவர்களாவோம். சமூக உறவு மீதான, அல்லது கலந்து நீரருந்துவதற்கான தடைகளை நீக்குவதன் மூலமே தீண்டாமையை ஒழித்துவிட முடியும். என்று என்னுகிற அளவிற்கு முட்டாள்தனமாய் நாம் இருக்கலாகாது.

சமூக உறவு மீதான மற்றும் கலந்து நீரருந்துவது மீதான தடைகள் நீங்கிவிடுவதாலேயே, தீண்டாமையின் முலக்கூறுகள் நீங்கிவிடாது என்பதை நினைவில் வையுங்கள். இவ்விரு தடைகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அதிகபட்சம் வீட்டிற்கு வெளியே புறநிலையில் தோன்றும் தீண்டாமையை ஒழித்துவிட முடியும். ஆனால் வீட்டிற்குள் உள்ள தீண்டாமையை அது தீண்டாமலே விட்டுவிடும். வீட்டிற்கு வெளியிலும், அதேபோல் வீட்டிற்கு உள்ளேயும் நாம் தீண்டாமையை ஒழிக்க விரும்பினால், கலப்புத் திருமணத்திற்கு எதிராக உள்ள தடையை நாம் உடைத்து நொறுக்கியாக வேண்டும். இதைத் தவிர வேறொன்றும் பயன்படாது இன்னொரு நோக்கில் பார்த்தால், கலப்புத் திருமணத்திற்கு எதிரான தடையை உடைத்தெறிவதொன்றே உண்மையான சமத்துவத்தை நிறுவுவதாகும். ஒருமித்து உணவுண்ணல், ஒருமித்து நீரருந்துதல், சமூக உறவு கொள்ளல் ஆகியவற்றின் மீதான தடைகள் யாவும், கலப்புத் திருமணத்தின் மீதான ஒரு தடையிலிருந்து கிளைத் தவைகளேயாகும். கடைசித் தடையை நீக்குங்கள் மற்ற தடைகளை நீக்குவதற்கு எந்தச் சிறப்பு முயற்சியும் தேவைப்படாது. அவைகள் தாமாகவே மறைந்துவிடும். என்னுடைய பார்வையில் கலப்புமணத்தின் மீதான தடையை உடைப்பதைப் பொறுத்தே தீண்டாமை ஒழிப்பு. அது உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டுவதும் ஆகும். நாம் தீண்டாமையின் மூலத்தை வேரறுக்க விரும்பினால், தீண்டாமையின் மூலவேர் கலப்புத் திருமணத்தின் மீதான தடையே என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். நம்முடைய இன்றைய தாக்குதல் ஒருமித்து நீரருந்துதல் மீதான தடைக்கு எதிராக இருப்பினும், நாம் கலப்புத் திருமணத்தின் மீதான தடையை எதிர்த்தும் குரல் எழுப்பியாக வேண்டும். இல்லையாயின் தீண்டாமையை அதன் மூலவேரோடு வீழ்த்தவியலாது. யார் இந்தப் பணியைச் செய்து முடிப்பது? பிராமண வகுப்பாரால் இதைச் செய்யவே முடியாது என்பதொன்றும் இரகசியமல்ல.

சாதி அமைப்புமுறை தொடரும் வரை தான் பிராமண வகுப்பு உயர் வகுப்பாக இருக்கும். எவ்வொருவரும் தம் கைகளில் உள்ள அதிகாரத்தைத் தாமே விரும்பி ஒருபோதும் கைவிட மாட்டார்கள். பிராமணர்கள் பலநூற்றாண்டுகளாக மற்ற சாதிகளின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள். அவர்கள் தாமே விரும்பி அதே அதிகாரத்தை கைவிட்டு பிறரைத் தமக்கு சமமாக நடத்துவார்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

சாதி அமைப்புமுறை தொடரும் வரை தான் பிராமண வகுப்பு உயர் வகுப்பாக இருக்கும். எவ்வொருவரும் தம் கைகளில் உள்ள அதிகாரத்தைத் தாமே விரும்பி ஒருபோதும் கைவிட மாட்டார்கள். பிராமணர்கள் பலநூற்றாண்டுகளாக மற்ற சாதிகளின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள். அவர்கள் தாமே விரும்பி அதே அதிகாரத்தை கைவிட்டு பிறரைத் தமக்கு சமமாக நடத்துவார்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. ஜப்பானிய சமுராய்களுக்கு இருந்த தேசப்பற்று பிராமணர்களுக்கு கிடையாது. புதிய சமத்துவத்தின் மீதான தேச ஒற்றுமைக்காக சமுராய்கள் தங்கள் தனிச் சலுகைகளை தியாகம் செய்ததுபோல பிரihமணர்கள் தியாகம் செய்வார்கள் என்று எதிர் பார்ப்பது பயனற்ற செயலாகும். பிற சாதி இந்துக்கள் இதுபோன்ற காரியத்தைச் செய்வார்கள் என்றும் நாம் ஒருபோதும் எதிர்பார்க்க இயலாது. மராத்தியர்கள் போன்ற மற்ற சாதியினர்களாகிய சாதி இந்துக்கள் சலுகை பெற்ற வகுப்பினருக்கும் உரிமை மறுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இடைநிலையில் உள்ளவர்கள் ஆவார்கள்.

சலுகை பெற்ற வகுப்பினர்கள், மிகச் சிறிய தியாகத்தோடேயே தங்கள் தாராளத்தைக் காட்டிக் கொள்ள முடியும். உரிமையற்ற வகுப்போ இலட்சியமும் ஆர்வமும் மிக்கதாயிருக்கும்; ஏனெனில் சுயஆர்வத்தின் அடிப்படையிலாவது சமூக சீர்திருத்தத்தைக் கொண்டுவர விரும்பு பவர்களாயிருப்பர். அதன் விளைவாக சுயவிருப்பத்தைவிட கொள்கை களுக்கு முக்கியத்துவம் தரும் வகுப்பாக அது இருக்கிறது. பிராமணர்கள் தவிர்த்த மற்ற சாதி இந்துக்கள் இதற்கு இடைநிலையில் இருப்பவர் களாவர்; அவர்கள் தங்களின் மேல்வகுப்பாரின் பெருந்தன்மையான தாரள நடததையையோ, தங்களின் கீழ்வகுப்பார் வளர்த்துக் கொண்டுள்ள கொள்கைப் பிடிப்பையோ நடைமுறைப்படுத்த முடியாதவர் களாயிருக்கிறார்கள். இதனால்தான் தீண்டப்படாதவர்களை விடத் தங்கள் அந்தஸ்து மேலானதாயிருக்க வேண்டுமென இந்த வகுப்பினர் நினைக்குமளவிற்கு பிராமணர்களுக்குச் சமமான அந்தஸ்த்தைப் பெறுவதில் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்த நோக்கத்திற்கு பிராமணரல்லாத பிறசாதி இந்துக்களின் பணி மிகவும் அற்பமானதாகவே இருக்கும். அவர்களின் உதவிக்கு நாம் காத்திருப்போமேயானால் தாய் வானம்பாடியும் அதன் குஞ்சுகளும்’’ என்று பல பாடநூல்களில் உள்ள கதையில் வரும் ஒரு விவசாயி தன் அறுவடைக்காகத் தன் அயலார்களை நம்பிப்பட்ட அவதியே நமக்கு நேரும்.
தேவைப்படுகிற சமூக சீர்திருத்த நோக்கத்திற்கு பிராமணரல்லாத பிறசாதி இந்துக்களின் பணி மிகவும் அற்பமானதாகவே இருக்கும். அவர்களின் உதவிக்கு நாம் காத்திருப்போமேயானால் தாய் வானம்பாடியும் அதன் குஞ்சுகளும்’’ என்று பல பாடநூல்களில் உள்ள கதையில் வரும் ஒரு விவசாயி தன் அறுவடைக்காகத் தன் அயலார்களை நம்பிப்பட்ட அவதியே நமக்கு நேரும்.

நாம் கையிலெடுத்துக் கொண்டுள்ள தீண்டாமை ஒழிப்புப் பணியையும், சமத்துவத்தை நிலைநாட்டும் பணியையும் நாமே செய்த முடிக்கவேண்டும். பிறர் இதனைச் செய்ய மாட்டார்கள். இந்த நற்பணியைச் செய்து முடிக்கவே நாம் பிறந்துள்ளோம் என்று எண்ணி நாம் உண்மையான ஈடுபாட்டுடன் இப்பணியைச் செய்வோமேயானால், நம் வாழ்க்கை அதன் உண்மையான அர்த்தத்தைப் பெற்றதாகும். நமக்காகக் காத்திருக்கும் இந்தப் பெருமையை நாம் அடைவோமாக.

நம்மை உயர்த்திக் கொள்வதற்கான போராட்டம் இது; எனவே நம்முடைய முன்னேற்றத்திற்குள்ள தடைக்கற்களை நீக்குவதற்காக இதனை நாம் ஏற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முழுவதையும் ஒவ்வொரு கட்டத்திற்கு இந்தத் தீண்டாமை எப்படியெல்லாம் சேற்றை வீசிக் கறைபடுத்தி வருகிறது என்பதை நாமனைவரும் அறிவோம். ஒரு காலத்தில் இராணுவத்தில் நம்மக்கள் பெரும் எண்ணிக்கையில் வேலைக் கமர்த்தப்பட்டார் என்பதை நாமறிவோம்.  நமக்குச் சமூக ரீதியாக விதிக்கப்பட்ட தொழிலாக அது இருந்தமையால் நம்மில் யாரும் உணவுக்காகச்  சம்பா;கக அல்லல்பட வேண்டிய நிலையில் இல்லாமல் இருந்தோம். நம்மைப் போன்ற நிலையில் இரந்த மற்ற வகுப்பினர் தங்கள் உணவைச் சம்பாதிப்பதற்காக இராணுவம் போலீஸ் நீதிமன்றம், மற்றும் அரசு அலுவலகங்களில் புகுந்து விட்டார்கள். இதே துறைகளில் இப்போது தீண்டப்படாதவர்கள் யாரையும் காணமுடிவதில்லை.

இந்தப் பணிகளைப் பெறுவதற்குச் சட்டமொன்றும் நமக்குத் தடைவிதிக்கவில்லை.  சட்டத்தைப் பொறுத்தவரை எதுவும் பெறத்தக்கதாகத்தான் உள்ளது. ஆனால் மற்ற இந்துக்கள் நம்மைத் தீண்டப்படாதவராகச் கருதி தாழ்வாக நோக்குவதால், அரசாங்கம் சக்தியற்றதாகிப் போய், நம்மை அரசுப் பணிகளுக்குள் விடாமல் இருக்றது நம்மால் கவுரவமான எந்த வியாபாரத்தையும் கூட மேற்கொள்ள முடிவதில்லை வியாபாரம் தொடங்க நம்மிடம் பணமில்லை என்பது உண்மையேயாயினும் நம்மை மக்கள் தீண்டப்படாதவர்களாக கருதி, நம் கைகளிலிருந்து எந்தப் பொருளiயும் வாங்கச் சம்மதிப்பதில்லை யென்பதே உண்மையான தொல்லையாகும்.

தீண்டாமை என்பது சாதாரண விஷயமன்று: நம்முடைய வறுமைக்கும் தாழ்வுக்கும் அதுவே தாய்: அதுதான் நம்மை நம்முடைய இன்றைய கீழ்நிலைக்குக் கொண்வந்த சாதனம். இதிலிருந்து நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டுமானால் சமத்துவத்தை நிலைநாட்டுகிற, சாதி அமைப்பு முறையை தகர்த்தெறிகிற பணியை நாம் மேற்கொண்டேயாக வேண்டும் இப்பணி நம் நன்மைக்கு மட்டுமே உரியதன்று; இது நம்நாட்டு நலத்திற்கம் உரிய பணியே

சுருக்கமாகச் சொல்வதானால், தீண்டாமை என்பது சாதாரண விஷயமன்று: நம்முடைய வறுமைக்கும் தாழ்வுக்கும் அதுவே தாய்: அதுதான் நம்மை நம்முடைய இன்றைய கீழ்நிலைக்குக் கொண்வந்த சாதனம். இதிலிருந்து நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டுமானால் சமத்துவத்தை நிலைநாட்டுகிற, சாதி அமைப்பு முறையை தகர்த்தெறிகிற பணியை நாம் மேற்கொண்டேயாக வேண்டும் இப்பணி நம் நன்மைக்கு மட்டுமே உரியதன்று; இது நம்நாட்டு நலத்திற்கம் உரிய பணியேயாகுடத.

நான்கு வர்ணமுறைமையின் ஒரு பகுதியாகிவிட்ட தீண்டாமை ஒழிக்கப்படவில்லையாயின் இந்த சமூகம் அழிந்தே தீரும்.  வாழ்வுக்கான போராட்டத்திலிருக்கும் எந்த சமூகத்திற்கும் தேவைப்படும் சக்திகளில், சமூகத்தின் நீதி முறையான அமைப்புமுறை சக்தியே மிகவும் அவசியமானதாகும்.  எந்தச் சமுதாயத்தின் இருப்பு நிலை முறைமை அந்தச் சமூகத்தைச்சிதறடித்து, அதன் உறுப்பினர்களை ஒன்றுபடுத்துபவர்களைக் கண்டனம் செய்கிறதோ, அந்தச் சமூகம் தன் வாழ்வுக்காகப் பிறசமூகங்களோடு போராடுகையில் தோல்வியையே காணும் என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும் இதற்கு நேர்மாறான நீதி முறையை உடைய சமூகம் அதாவது ஒற்றுமைப் படுத்தும் சக்திகள் ஊக்குவிக்கப்படுத்தும் சமூகம் பிரிவினைச் சக்திகளைச் சாடும் சமூகம் இதுபோன்ற போராட்டங்களில் வெற்றி பெறும் என்பது நிச்சயம்.

இந்தக் கோட்பாடு இந்து சமூகத்துக்கும் பொருத்தப்படவேண்டும்.  நான்கு வர்ணமுறைமை ஒரு மாபெரும் பிளவு சக்தியென்பதும், அனைவருக்கும் ஒரே சாதி என்னம் முறையே சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தபோதும், இந்து சமூகம் தன் உறப்பினர்களைச் சிதறடிக்கும் ஒரு சமுக முறையை உயர்த்திப் பிடிப்பதால், ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியைச் சந்திக்கிறது என்பதில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா? இந்த அழிவான சூழ்நிலையிலிருந்து நாம் தப்பிக்க விரும்புவோமானால் நால்வர்ண சாதிமுறை அமைப்பை ஏற்படுத்தியேயாக  வேண்டும்

இதுகூடப் போதுமானதன்று நால்வருண சாதி அமைப்புமுறையின் உள்ளீடா இருக்கும் சமத்துவமின்மையை ஒழித்தாக வேண்டும் சமத்துவக் கோட்பாட்டைப் பலர் கேலிசெய்கிறார்கள்.  இயற்கையில் ஒரு மனிதன் மற்றொருவனுக்குச் சமமாக இல்லையே – ஒருவன் கவர்ச்சியான உடலமைப்பு உடையவனாய் இருக்கிறான்.  மற்றொருவன் மந்தமாக இருக்கிறான். இவ்வகையான ஏற்றத் தாழ்வுகளோடு மனிதர்கள்பிறக்கிறார்கள் என்பதைச் கருத்தில் கொண்டு அவர்களைச் சமமானவர்களாகக் கருதச் சொல்லும் நம் கூற்று அபத்தமாதென இந்த கேலிக்காரர்கள் எண்ணுகிறார்கள். இந்த கேலிக்காரர்கள் சமத்துவக் கொள்கையை முழுமையாகக் புரிந்து கொள்ளவில்லை என்று நாம் கூறவேண்டியுள்ளது.

சமத்துவ கோட்பாட்டின் பொருள் சிறப்புரிமை பிறப்பையோ, செல்வவளத்தையோ அல்லது மற்ற எத்தனையோ அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதன் தகுதியையே அடிப்படையாகக் கொண்டு வழங்கவேண்டும் என்பதாயின் பிறகு எப்படி தகுதியற்ற ஒரு மனிதனை குறுகிய மனமுடைய அழுக்கடைந்த ஒருவனை, தகுதிமிக்க, தூய்மையான நல்லொழுக்கமுடைய ஒருவனுக்குச் சமமாகப் பாவிக்கும்படி கேட்ப முடியும்? இதுபோன்ற எதிர்க்கேள்விகள் சில சமயம் கேட்கப்படுகின்றன. சம தகுதியுள்ள மனிதருக்கு சம உரிமைகள் வழங்குவதற்கேற்ற சமத்துவத்தை வரையறை செய்துகொள்வது அவசியமாகிறது.

மக்கள் தம் உள்ளார்ந்த தன்மைகளை வளர்த்துக்கொண்டு தகுதிக்கேற்ற உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்னமே அனைவரையும் ஒன்றாகப் பாவிப்பது நியாயமாகுமா? சமூகவியலில் எந்த ஒரு மனிதனும் பிறப்பிலேயே கொண்டிருக்கக்கூடிய தன்மைகளை முழுமையாக வளர்த்துக்கொள்வது என்பதில், சமுதாய அமைப்பு முறை என்பது முக்கிய அம்சமாகும்.

அடிமைகள் தொடர்ந்து சமத்துவமின்றி நடத்தப்படுகையில், அடிமைகளுக்குரிய தன்மைகளைத் தவிர வேறெந்த தன்மைகளையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள மாட்டார்கள். எந்த உயர் அந்தஸ்துக்கும் அவர்கள் தம்மைத் தகுதிப் படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

தூய்மையாய் இருக்கிற ஒரு மனிதன், அழுக்காயுள்ள ஒருவனை எப்போதும் ஒதுக்கியே வைத்து அவனோடு எந்தத் தொடர்பும் கொள்ள மறுப்பவனாக இருப்பானானால் அந்த அழுக்கான மனிதன் தூய்மையடைவதற்கு எந்த ஆர்வமும் கொள்ள மாட்டான்.

குற்றவாளி சாதியினர் அல்லது ஒழுக்கமற்ற சாதியினருக்கு ஒழுக்கநெறி சாதியினர் எந்த அடைக்கலமும் அளிக்கவில்லையாயின் குற்ற சாதியினர் என்றும் ஒழுக்க நெறியைக் கற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

மேலே தரப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் விளக்குவது யாதெனில் எவரிடத்தில் நல்ல குணத்தன்மைகள் இல்லையோ அவரை சமத்துவத்தோடு நடத்துவதாலேயே அவரிடத்தில் அந்த நல்ல குணத்தன்மைகளை உண்டாக்கி விட முடியாது என்றாலும், அந்த நற்குணத் தன்மைகள் உள்ளபோது அவற்றை வளர்ப்பதற்கு, சமத்துவத்தோடு நடத்துதல் அவசியமாகிறது. சமத்துவ நடத்தையில்லாமல் வளர்த்தெடுக்கப்பட்ட நற்குணத் தன்மைகள்கூட வீணாக்கப்பட்டு விரக்தி நிலைக்குப் போய்விடுகிறது.

ஒருவகையில் இந்து சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை தனி நபர்களின் முன்னேற்றத்தோடு மட்டுமல்லாமல், அதன் விளைவாக சமூகத்தின் முன்னேற்றத்தையே நிலைகுலையச் செய்துவிடுகிறது. மற்றொரு வகையில் இதே சமத்துவமின்மை தனி நபர்களுக்குள் தளும்பிக்கிடக்கும் சக்திகளை அவனுக்கு கொண்டு வருவதைத் தடுத்துவிடுகிறது. இருவகையிலும், இந்த சமத்துவமின்மை, நான்கு வர்ணசாதி முறையால் சீரழிந்துள்ள இந்து சமூகத்தை மேலும் பலவீனப்படுத்தி விடுகின்றது.

எனவே, இந்த சமூகம் பலப்படுத்தப்பட வேண்டுமானால், நான்கு வர்ண சாதி அமைபபு முறையையும், தீண்டாமையையும் ஒழித்துக்கட்டி இந்து சமூகத்தை ஒரு சாதி மட்டும் என்னும் மற்றும் சமத்துவம் என்னும் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையில் அமைத்தாக வேண்டும். இந்து சமூகத்தைப் பலப்படுத்துகிற வழியேயன்றி தீண்டாமையை ஒழிப்பதற்கு வேறொரு வழியேயில்லை. எனவே, நம்முடைய இன்றைய பணி நம்முடைய சொந்த ஆர்வத்திற்கானது மட்டுமன்றி, இந்தத் தேசத்திற்கே நன்மை பயக்கக்கூடிய பணியுமாகும் என்பது எந்த அய்யத்திற்கும் அப்பாற்பட்டதாகும் எனக் கூற விரும்புகிறேன்.

உண்மையான சமூகப் புரட்சியைக் கொண்டு வருவதற்கான நம்முடைய பணி துவங்கிவிட்டது. எனவே இது சலனப்பட்டுள்ள மனங்களை வசீகர வார்த்தைகளால் அமைதிப்படுத்துவதற்கான திசை திருப்பல் எனக் கருதி எவரொருவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளலாகாது. இந்த இயக்கத்தை இயக்குகிற மாபெரும் சக்தியாக உள்ள வலுவான உணர்வுகளால் நம்பணி உந்தப்படுவதாயுள்ளது. இனி எவராலும் இதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இங்கு இன்று தொடங்கும் இந்தச் சமுதாயப் புரட்சி அமைதியான வழிமுறைகளால் தன்னை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென நான் இறைவனிடம் இறைஞ்சிக் கொள்கிறேன்.

இந்தப் புரட்சி அமைதியாக நடைபெறுவதென்பது நம்மை விட அதிகமாக நம் எதிரிகளையே பொறுத்திருக்கிறது என்பதில் யாரும் அய்யம் கொள்ள முடியாது. இந்தச் சமூகப் புரட்சி அமைதியாக நடைபெறுமா அல்லது வன்முறை வடிவம் பெறுமா என்பது முழுமையாகச் சாதி இந்துக்களின் நடத்தையையே சார்ந்திருக் கிறது.

1789ம் ஆண்டைப் பிரெஞ்சு தேசீயப் பேரவையை அராஜகங்களுக்காக குற்றம் சாட்டும் மக்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். பிரெஞ்சு ஆட்சியினர் அந்தப் பேரவையினரி டம் கொடுங்கோன்மையாக நடந்துகொள்ளா மலிருந்தால், மேல் வகுப்பினர் அந்தப் பேரவையினரை எதிர்த்துத் தடுக்காமல் இருந்திருந்தால், அந்நிய நாட்டு உதவியுடன் அவர்களை நசுக்குவதற்கு முயற்சிக்கின்றன குற்றத்தைப் புரியாமல் இருந்திருந் தால், முழுமையான சமூக மாற்றம் அமைதி வழியிலேயே அடையப்பட்டிருக்கும்.

நாம் நம்முடைய எதிரிகளுக்கும் இதையே கூறுகிறோம். தயவு செய்து எஙக்ளை எதிர்க்காதீர்கள்; உங்களுடைய வைதீக நூல்களைத் தூக்கி எறியுங்கள். நீதிமுறைமையைப் பின்பற்றுங்கள். நாங்கள் எங்கள் செயற்பாடுகளை அமைதி வழியிலேயே தொடருவோமென உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.

1927ல் மராத்தியில் பேச்சைக் குறிப்பெடுத்து எழுதியவர் : சங்தியோ காயிர்மோட்.. 1994ல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்:.ரமேஷ் சந்திரசர்க்கார்.. 1999ல் தமிழில் மொழியாக்கம் செய்தவர்: பேரா.பெரியார்தாசன்
www.ambedkar.in

Load More Related Articles
Load More By sridhar
Load More In Dr.அம்பேத்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

ஏதேனும் நியாயம் இருக்கிறதா?

அரசியல் நிர்ணய சபை டிசம்பர் 9, 1946 அன்று முதன் முதலாகக் கூடிய நாளிலிருந்து கணக்கிட்டால் அ…