தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். புத்தரின் இந்தக் கருத்துகள் நுகர்வுச் சமூகமாக மாறிவிட்ட மனித சமூகத்திற்கு உலகளாவிய ஒன்றிப்பைத் தரக்கூடியன. நாற்பத்தைந்து ஆண்டுகாலம் தன் பணியைச் செய்தபின்னர், நீங்கள் செய்பவனவற்றை முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள் என்றுக் கூறினார். அப்படிப்பட்ட ஈடுபாட்டோடு செய்த செயல்தான் இந்நூல்.

 

Load More Related Articles
Load More By sridhar
Load More In பௌத்த நூல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

புத்த பகவான் அருளிய போதனை

புத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught வல்பொல சிறி இராகுலர்   Venerable Walpola …