கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் ஜிஷா(வயது 30). தலித் இனத்தை சேர்ந்த சட்ட மாணவி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28–ந்தேதி இவர் வீட்டில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க கூடுதல் டி.ஜி.பி.சந்தியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அம்ரூல் இஸ்லாமை(23) போலீசார் கைது செய்தனர்.
ஓராண்டாக இந்த வழக்கு எர்ணாகுளம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது விசாரணையில் நேற்று முந்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை செய்ததாக கூறப்படும் அமீருல் இஸ்லாம், கொலை செய்ததற்கான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதன் படி எர்னாகுளம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது . தீர்ப்பில் ஜிஷா கொலை வழக்கில் கைதான அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.