கேட்பதற்கே நெஞ்சம் பதறுகிறது.உலகமே புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் வேளையில் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலபட்டு – தெற்கு குடிக்காடு கிராமத்தில் உள்ள தலித்துகள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
நேற்று இரவு இந்த கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் தங்கள் பகுதியில் பலூன் கட்டி கலர் பேப்பர் தோரணம் அமைத்து புத்தாண்டினை கொண்டாடி இருக்கின்றனர்.
இரவு 1 மணி இருக்கும் சாதி வெறி இளைஞர்கள் கட்டி இருந்த தோரணங்களை சேதப்படுத்தி இருக்கின்றனர்.இதை தட்டி கேட்டதற்காக இன்று 1.1.2018 அதிகாலை 2 மணி அளவில் 80 பேர் கொண்ட கும்பல் கத்தி, அருவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் 15 -25 வயதினை சேர்ந்தவர்கள். கீழ் சாதி நாய்களா? இட ஒதுக்கீட்டில் படித்து அரசு வேலையில் இருந்து கொண்டு எங்களை முந்த பார்க்கிறீர்களா என்று கூறி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்து உள்ளனர்.15 வீடுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.15 இரண்டு சக்கர வாகனங்களும் சேதப்படுத்த பட்டு இருக்கின்றன. குற்றவாளிகளை கைது செய்ய கூறி தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சாதி,மத பேதமற்ற ஆன்மிக அரசியலை உருவாக்குவேன் என்று சபதம் இட்ட ரஜினி சாதியை ஒழிக்க இங்கு வருவார் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். புத்தாண்டாவது புடலங்காயாவது.. இந்த சாதி தமிழர்கள் திருந்த போவது இல்லை. கேவலம் .வெட்கி தலை குனிகிறேன்.
- Evidence Kathir