மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற தலித்களின் நிகழ்வில் மோதல் வெடித்ததில் ஒருவர் பலியானார். இதுகுறித்து சி.ஐ.டி விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் போர் நடந்து இந்த ஆண்டுடன் 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆகவே, இதை சிறப்பாக நினைவுகூர தலித் மக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆங்கிலேயர் வெற்றி பெற்ற போரைக் கொண்டாடுவது தேச விரோதம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர் சிலர்.
இந்நிலையில், நேற்று போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் புனே நோக்கி சென்று கொண்டிருந்த தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாக்குதலைக் கண்டித்து மும்பையில் இன்று தலித் இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தால் மும்பை ஸ்தம்பித்தது.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அத்துடன் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி நீதி விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.