Home News Atrocities பாரத் பந்திற்கு தலைமை வகித்தவர் கொலை: தலித்துகளை கொன்று ஒடுக்கும் யோகி அரசு…!

பாரத் பந்திற்கு தலைமை வகித்தவர் கொலை: தலித்துகளை கொன்று ஒடுக்கும் யோகி அரசு…!

0
0

தலித் அமைப்புகள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்துக்கு தலைமை வகித்த இளைஞரை வன்முறையாளர் என முத்திரை குத்தி கொலைப்பட்டியல் வெளி யிட்ட சங்பரிவார் அமைப்பினர், அதன்படியே கொலை செய்து விட்டனர்.

உத்தரப்பிரதேசம் மீரட்டுக்கு அருகில் உள்ள சோபாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் தலித் தலைவர் கோபி பரூயான் (28). அண்மையில் தலித் அமைப்புகள் நடத்திய பாரத் பந்தில் முன்னணியில் நின்று செயல்பட்டுள்ளார். சங்பரிவார் அமைப்பினர் அவரை வன்முறையாளர் என குறிப்பிட்டு முதல் நபராக கொலைப்பட்டியல் (ஹிட் லிஸ்ட்) வெளியிட்டிருந்தனர். அதன்படி அவரை சுட்டுக் கொன்றனர்.

ஏப்ரல் 14 அன்று தலித் அமைப்புகள் நடத்த திட்ட மிட்டுள்ள அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த கொலைபாதகம் நிகழ்த்தப்பட்டி ருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. என்ன நடந்தாலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெறும் எனவும், அச்சுறுத்தல்களுக்கு தலித்துகள் அடிபணிய மாட்டார்கள் எனவும் மீரட்டில் நடந்த தலித் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே கோபி பரூயாவை வன்முறையாளர் என குற்றம்சாட்டி சங்பரிவார் வெளியிட்ட கொலைப் பட்டியல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த பட்டியலை இணைத்து காவல்துறையில் கிராம மக்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கோபி பரூயான் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு மேலும் தங்களது கிராமத்தின் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துவார்கள் என தலித் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Courtesy : Theekkathir

Load More Related Articles
  • அன்னை ஓரு ஆலமரம்

    எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவல…
  • புத்தர் சொல்கிறார்

    ‘கொல்லாதீர், திருடாதீர், பொய் கூறாதீர், மதுக்குடியினின்றும் விலகியிருப்பீர். சிற்றின்ப, ஒழ…
  • உயர்வுறு புத்தர் இவ்வாறு கூறுகிறார்

    ‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினி…
Load More By Sasikumar
Load More In Atrocities

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Govt’s plan for PSUs to procure from Dalit SMEs fails to take off

In 2017-18, Central PSUs bought Rs 543.86 crore worth goods and services from SC/ST enterp…