Home வன்கொடுமைப் பதிவுகள் சமூக வன்கொடுமைகள் கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்ட கொடூரம்

கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்ட கொடூரம்

0
0
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.

சாதி வேறுபாடுகள் இந்தியாவில் இல்லை என்று கூறிக்கொண்டாலும், சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இங்கு இன்று வரை குறையவில்லை, என்பதே ஒரு சோகமான உண்மை. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்கன் மாவட்டத்தில், இது போன்ற சாதி பாகுபாடு இன்றும் காணப்படுகிறது.

இதனை சமீபத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு கொடூர சம்பவம் நிரூபித்திருக்கிறது. ஜால்கன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சிறுவர்கள், மேல் தட்டு மக்கள் உபயோகிக்கும் கிணற்றில் குதித்த காரணத்திற்காக, தாக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த சிறுவர்களை பிடித்தவர்கள் அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்திருக்கின்றனர். வலி தாங்க முடியாமல் அழும் அவர்களை, வீடியோ எடுத்து இருக்கின்றனர். இலைகளால் தங்கள் உடலை மறைத்தபடி அழும் அந்த சிறுவர்கள் ,தங்களை விட்டு விடு மாறு கெஞ்சும் போது கூட, தொடர்ந்து அவர்களை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Load More Related Articles
Load More By sridhar
Load More In சமூக வன்கொடுமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

ஆத்தூர் சிறுமி கழுத்தறுத்து படுகொலை – எவிடன்ஸ் அறிக்கை.

தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது… வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்…