Home News Atrocities ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்தேறிய சாதிய அவலநிலை – களஆய்வு

ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்தேறிய சாதிய அவலநிலை – களஆய்வு

0
498

//களஆய்வு செய்து தான் நம்முடைய கிராம அமைப்பின் பிரச்சினைகளை சொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. எனினும் ஒட்டனந்தல் பிரச்சினை பற்றிய விரிவான புரிதலை கொடுக்கிறது இந்த களஆய்வு. இதன் மூலம் அப்பிரச்சினை பற்றிய சில அடிப்படையான செய்திகளை புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த ஊரில் ஒடுக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். அதேவேளையில் அவர்கள் சாதி இந்துகளை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு நிலம் உள்ளிட்ட தற்சார்புக்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அந்த தற்சார்பு சாதி இந்துக்களால் கடுமையாக வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்காக தங்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சிவில் உரிமைகளை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து தடைகளை எழுப்பி வந்துள்ளனர். ரேஷன் கடை, அங்கன்வாடி, நீர்த்தேக்கத் தொட்டி, பள்ளிக்கூடம் போன்றவை சாதி இந்துக்கள் பகுதியிலேயே இருக்கின்றன. அதற்காக செல்லும்போது இம்மக்கள் பலவகைகளில் அவமானப்படுத்தப்படுள்ளனர். அதோடு தங்களை பண்பாட்டு அதிகாரத்தை காட்டியும் இம்மக்களை இழிவுபடுத்தி வந்துள்ளனர்.

காலில் விழுந்த பிரச்சினையை பற்றி மட்டும் திரும்ப திரும்ப பேசும் நாம் அவற்றிற்கான காரணிகளையும் பேச வேண்டும். நவீன அரசியலில் பாதிப்பை மட்டுமே பேசுபவர்களாக மாறிப்போய்விட்டோம் நாம். பாதிக்கப்பட்டவர்களைக் காட்டுவதைக் காட்டிலும் பாதிப்புக்கு காரணமானவர்களின் அதிகாரத்தையும் உளவியலையும் காட்ட முற்பட வேண்டும்.

என்ன தான் பேசினாலும் நம்முடைய உள்ளுர் எதார்த்தங்கள் இவை தாம். ஆனால் ஏதாவது பிரச்சினை வரும்போது தவிர வேறெப்போதும் இந்த எதார்த்தங்கள் நமக்கு தோன்றுவதில்லை.

இதுபோன்ற எதார்த்தங்கள் கவனத்திற்கு வரும்போதாவது குறைந்த பட்சம் நாம் சில விசயங்களை விவாதித்து பார்க்க முன்வர வேண்டும்.

இம்மக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக வாழும் ஊர்கள் சிறுபான்மையோர் வாழும் பகுதியாக கருதப்பட்டு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஒட்டனந்தல் தலித் பகுதியில் ரேசன் கடை தொடங்கி எதுவுமே இல்லை. குறைந்த பட்சம் இரண்டு விசயங்களையாவது தலித் பகுதியிலும் (பள்ளி, நீர்த்தேக்கத் தொட்டி போன்று), வேறு சில விசயங்களை பிற வகுப்பினர் வாழும் பகுதியிலும் அமைத்தாலாவது ஒருவர் பகுதிக்கு மற்றொருவர் சமமாக வந்து செல்லும் நிலை உருவாகும் என்கிறார் இந்த களஆய்வை எழுதிய அமுதினியன். பொதுவாக கிராமங்களில் அரசின் வாய்ப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்கிற ஆய்வு நம்மிடமில்லை. அதையெல்லாம் பார்க்கும்போது தான் சாதியம் எந்தளவுக்கு நுட்பமாக செயல்படுகிறது என்பதை பலரும் தெரிந்து கொள்வார்கள். இந்த எதார்த்தங்களை கணக்கெடுத்து பேசும் சூழல் எழவேண்டும்//

ஸ்டாலின் ராஜாங்கம்

…………… …………… …… …………

கீழே வருவது அமுதினியன் கள ஆய்வு செய்து முகநூலில் இட்டுள்ள பதிவு

ஒட்டனந்தல் கிராமம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் நடந்தேறிய சாதிய அவலநிலை

நாள்:12/05/2021

இடம்:ஒட்டனந்தல்

ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்த சாதிய ஒடுக்குமுறைக்கு பிறகு அவர்களிடம் நடந்த நிகழ்வை விசாரித்த போது அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு:

நாங்கள் காலனி மக்கள். அவங்களிடம் கவுண்டர் சாதி இந்துக்கள் கோவிலான முருகன் கோவில் இருக்கு. அங்கு நாங்கள் கூழு ஊத்துவோம். திருவிழாவில் கலந்துக்கொல்வோம் காலம் காலமாக, அது அவங்க இடத்தில் இருக்கிற கோவில்.அங்கே எங்களை வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அதனாலா கடந்த மூன்று வருசமா நாங்க எங்க எஸ்பி இடத்தில் இருக்கிற மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது, கூழு ஊத்துவோம், கலைநிகழ்ச்சி நடத்தி வந்தோம் .

இந்த மூன்று வருசமா சாதி இந்துக்கள் கோவிலில் திருவிழா நடத்திய பிறகு நடத்துவோம். ஆனா இந்த வருசம் அவங்க கோவில் திருவிழா நடத்தவில்லை. நாங்க அவங்களுக்கும் முன்னாடியே திருவிழா நடத்திட்டோம்.

எங்க ஊர் சிறுவர்களை வைத்து சிறுவர் கலை நிகழ்ச்சி வைத்தோம், எங்கள் ஊர் சிறுவர்களை மேடையேற்றினோம், அது சுமார் இரண்டு மணி நேரம் நடக்கும் அவ்வளவுதான். அதனாலா எரிச்சலடைந்த வன்னிய இளைஞர் கோகுல்ராஜ் விழுப்புரம் எஸ்பிக்கு (மாவட்ட‌ முதன்மை காவல் அலுவலர்) போன் பண்ணி, “கரோனா காலத்துல இது போல் கூட்டம் கூட்டுறாங்க இதே நாங்க பன்னா விட்டுவிடுவார்களா” என்ற வாக்கில் பேசியுள்ளார்.

அதனையடுத்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து கோவிலில் கலைநிகழ்ச்சிக்காக வைத்திருந்த ரேடியோ மைக் செட் லைட் செட்டிங்கஸ் எல்லாத்தையும் பறிமுதல் பண்ணி டாடா ஏசி வண்டியில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு விட்டனர்.

இதனை தொடர்ந்து ஊர் பெரிய மனுசங்க “நாங்கள் செய்தது தவறு தான். இது சின்ன கிராமம். எதுவும் பிரச்சினை வர்ராது இதற்கெல்லாம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்? என மெத்தன போக்கினால் காவல்துறையிடமும் கிராம அலுவலரிடமும் பதிவு செய்யவில்லை, விளம்பரம் செய்யவில்லை , தப்பு தான் அய்யா சாமி நாங்கள் தெரியாம‌ தவறு செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள் இதற்கு பிறகு இது போல் நடந்து கொள்ளமாட்டோம்” என்றுnசொல்லியும் பேப்பரில் எழுதிகொடுத்தும் அன்றைய இரவு வரை காத்திருந்து அந்த பொருட்களை காவல் நிலையத்தில் இருந்து பெற்று வந்தோம்.

இரவு ஒன்பது மணி அளவில் வண்டியில் வந்து கொண்டு இருந்த போது எங்களை முன்னால் போக விட்டு கோகுல் ராஜ் என்ற கவுண்டர் இளைஞர் “எங்களை பகைச்சிக்கினா இது தாண்ட நிலமை. இப்படி தான் பண்ணுவோம் உங்களால திருவிழா நடத்த முடியல பார்த்திங்களா ஒழுங்கா இருந்துக்குங்க இதுக்கு மேல் ஆடுனிங்க அறுத்து போட்றுவோம்டா”என அந்த பெரிய மனிதர்களை பார்த்து கூறியுள்ளார்.

அதற்கும் அந்த பெரியவர்கள் எதுவும் சொல்லாமல் “பிரச்சினை வேண்டாம் நாம் முப்பது வீடு அவர்கள் முன்னூறு வீடு பிரச்சினை வேண்டாம் என்று அவங்களை எதிர்த்து நம்மால் ஒன்னும் பன்ன முடியாது”என கடந்து சென்றனர்.

இருக்குற பசங்க எதிர்கால வாழ்க்கையை நினைச்சி எங்களுக்கு பயம் வந்திருச்சி , ஏதோ ஒரு அசாம்பாவிதம் நடந்துச்சினா படிக்கிற பசங்க வாழ்க்கை என்னாவது என்று அவங்க பெரிய ஊரு அவங்கள எதித்துக்க முடியாது, பகைச்சிக்க முடியாது என்று நம்மா இங்கிருந்து போறோம். அந்த ஊரு பெரிய மனுசங்க கிட்ட நடந்ததை சொல்லி பேசுவோம்னு போனோம்

“ஐயா நாங்க செஞ்சதே கூட தவறாக இருக்கட்டும். கரோனா நேரத்தில் செய்தது பெரிய தவறு. உங்களை கேட்காமல் செய்தது அதை விட தவறு‌. ஐயா இந்த ஒரு முறை மன்னிச்சுடுங்க. இனிமே இது போல் தவறை செய்ய மாட்டோம்”னு கேட்கலாம் என போயி அப்படியே கேட்டோம்.

அதுக்கு அந்த பெரிய மனுசங்க”நீங்க செய்தது எங்களுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் .இப்படி செஞ்சி இருக்கிருங்க அந்த‌ தப்புக்கு என்ன செய்ய போறிங்கனு'” கேட்டாங்க

நாங்க”என்னங்க அய்யா பண்ணமுடியும் தெரியாம பண்ணிட்டோம்” னு கேட்டோம்‌.வ்அதுக்கு அவங்க “உழுந்து கும்புட்டு போ”னுசொன்னாங்க.வ்அதையும் சரினு‌ போனோம். எங்க ஊரு பசங்க எல்லாரும் படிக்கிற பசங்க. எந்த அசிங்கமா இருந்தாலும் எங்களோடு போகட்டும். இந்த அசிங்கம் எங்க பசங்களுக்கு வேணாம் னு பெரிய மனுசங்க வயசானவங்க உழுந்து கும்பிடாலாம்னு போனோம். உழுந்து கும்பிட்டோம் .

1).சந்தனம்

2).திருமால்

3).ஆறுமுகம்

என்ற எங்க தரப்பு பெரியவங்க காலில் விழுந்தாங்க

அதை பார்த்த கேட்ட எங்க பசங்க  “ஏன் இந்த காலத்துலையும் உழுந்து கும்புடனுமா அப்படி‌ பன்னாக்கூடாதுனு” சொன்னாங்க. இந்த காலத்து பசங்க வெளில எல்லாம் போறாங்க வர்றாங்க அவங்களால் தாங்கிக்க முடியாம அப்படி தடுக்கனும்னு கேட்டாங்க .

உடனே கவுண்டர்கள் தரப்பில் இருந்து “என்னா ஆயிட போகுது காலில் உலுந்த என்ன கெட்றப்போகுது பற‌புண்டைவா தானே நீங்க உங்களுக்கு என்ன வந்துரும் இது என்ன உங்களுக்கு புதுசா உழுங்கடா” சொன்னாங்க

“ஏன்‌ விழனும்னு” கேட்ட‌துக்கு ரெண்டு‌ பேரை அவங்க அடிச்சிட்டாங்க அதுல ஒருத்தர் பெயர் முருகன். இதோ இருக்கிறார்னு காட்டினார்கள்.

நாங்க ஒரு முப்பது பேரு போனோம் அவுங்க ஊருக்குள்ளே நாங்க எதிர்த்து அடித்தாள் கூட திரும்பி வரமுடியாது. அந்த அளவுக்கு அவங்க கூட்டமாக இருக்காங்க. ஏனா‌ அது அவுங்க ஊரு இடம் அப்படினு வந்துட்டோம். ஏதோ நடந்தது நடந்து போச்சினு நினைச்சிக்கலாம்னு வந்துட்டோம். அந்த அசிங்கத்தோடு.

அனால் அவங்க மீண்டும் நாங்க மிரட்டுவதாக காவல்நிலையத்தில் போயி புகார் கொடுக்குறாங்க

1).ரமேஷ்

2).சீத்தாராமன்

3).கோகுல்ராஜ்

4)சூரியா

இந்த கவுண்டர் சாதி இந்து இளைஞர்கள் மீண்டும் புகார் கொடுக்குறாங்க. காவல்துறை‌ வந்து மீண்டும் எங்களை மிரட்டிட்டு போனாங்க.

கேள்வி: நீங்கள் ஏன் அவங்கள் காலில் விழச்சொன்னதையும் விழுந்திங்க. நீங்க அவங்கள சார்ந்து வாழுறிங்களா?

பதில்: இல்லை. அப்படியெதுமே இல்லை நாங்க அவங்க கிட்ட மேளம் அடிக்க போகமாட்டம்னு எப்போவே ஊர் கூடி முடிவெடுத்துட்டோம். அது நடைமுறையில் இருக்கு எங்க எல்லாருக்கும் ஓரளவுக்கு நிலம் இருக்கு நாங்க அவங்கள சார்ந்து வாழவில்லை

என்னவென்றால் நாங்க முப்பது குடும்பம் அவங்க இரண்டு ஊர் புது ஒட்டனந்தல் பழைய ஒட்டனாந்தால் முன்னூறு குடும்பம் அவங்கள எதிர்த்துக்க முடியாது.

வேற வழியில்லை . அதேப்போல் ஊரை விட்டு மெயின் ரோட்டுக்கு போக வேண்டும் என்றாலும் அவங்க இரண்டு ஊரு ஒரு கிலோ மீட்டர் தாண்டி தான் போகனும் திடிரென ஒரு மருத்துவ வேளைக்கு உடம்பு பார்க்க போக வேண்டும் என்றால் கூட இரவு நேரங்களில் அவங்களை தாண்டி தான் வரவேண்டும், போக வேண்டும். எங்கள் வீடு ஊரு கடைசியில் இருக்கு இது ஒரு பிரச்சினை.

கேள்வி:அவங்க உங்களை இப்படி நடத்த என்னதான் அடிப்படை பிரச்சினை ?

பதில் :ஒன்றுமே இல்லை நாங்க அவங்களுக்கு முன்னாடி எங்க கோவிலில் திருவிழா நடத்திட்டோம். இது வரைக்கும் அவங்கள கேட்டு நடத்தினோம். இப்போ அவங்கள கேட்காமா நடத்திட்டோம். அது அவங்க மரியாதையை குறைப்பதாக ஆயிவிட்டதாம். அவங்களுக்கு நாங்கள் மரியாதை‌ தரவில்லை என சொல்லி இவ்வளவும் பன்றாங்க.

கேள்வி: காவல்துறை பாதுகாப்பு எப்படி உணர்றீங்க?

பதில்: இப்போ பரவல்லா. நாங்கள் சொன்னதை கேட்டுகினாங்க. முதல் கட்ட தகவல் அறிக்கை பதிவு பன்னிருக்காங்க. அந்த நான்கு பேரை அழைச்சிட்டு போயிருக்காங்க.

இரவு நேரங்களில் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தாங்க .

காலையில் வந்து பார்வையிட்டு விட்டு சென்றார்கள் .

இப்போது கூட மதியம் வந்துவிட்டு சென்றார்கள். அவர்கள் பார்வை இப்போது மாறி இருக்கு. எங்களை காலில் விழவச்சதெல்லாம் தெரியாம நடந்து கிட்டதான் சொன்னாங்க.

கேள்வி:வழக்கறிஞர் யாரவது வந்து பேசினார்களா

பதில்:சே.பிரேம் திருவெண்ணெய்நல்லூர் (தலித் மக்கள் வசிக்கும்)பகுதி காந்திகுப்பம் அவர் அங்கிருந்து அவர் வந்திருக்கிறார். இங்கே ஒருத்தர் ராமகிருஷ்ணன் என்று ஒரு இளைஞர்‌உள்ளார்.

அவர்களிடம் மொத்தம் நடந்ததை விளக்கமாக சொல்லிருக்கிறோம்.

1)நாங்கள் திருவிழா நடத்தியது

2)காவல்துறை பொருட்களை பறிமுதல் சொத்து கொண்டு போனது

3)அதனை நாங்கள் மீட்டு வந்தது

4)அந்த கோகுல்ராஜ் இப்படியெல்லாம் பன்னிங்கனா இப்படிதாண்ட பன்னுவோம்னு சொன்னது

5)எதிர்த்து கேட்டால் அறுத்து போட்டு விடுவேன் சொன்னது

6)நாங்கள் அது குறித்து பேச‌ போன போது அவர்கள் எங்களை காலில் விழச்சொன்னது

7)விழவைத்தது

8)பறபுண்டைங்களா என்னடா பாக்குறிங்கனு சாதி பேரு சொல்லி திட்டியது

9)எதிர்த்து கேட்ட இரண்டு இளைஞர்களை அவர்கள் அடித்தது

10)மீண்டும் அவர்கள் வழக்கு

தொடுத்தது

எல்லாத்தையும் வழக்கறிஞரிடம் சொன்னோம். அவரும் திருத்தப்பட்ட sc/st வழக்கு தொடுக்க முயற்சி எடுக்கிறேன் என உறுதி அளித்தார்கள்

ஏரி சார்ந்த உரிமை மறுப்பு:

இது மட்டுமில்லை நாங்கள் இங்கே குறைந்த பேரு இருக்கிறோம். முப்பது குடும்பம் தான். ஆனால் எங்களிடம் நிலம் உள்ளது. அதற்கு ஏரி பாசன நீர் பொதுவில் உள்ளது.ஆனால் அவர்கள் அதை எங்களுக்கு விடமாட்டார்கள். முன்னெல்லாம் அவர்கள் தண்ணீர் பயிருக்கு வைத்த பின்பு விட்டார்கள். ஆனால் இப்போது அதுபோல் கூட விட மறுக்கிறார்கள். நாங்கள் கேட்டால் தாக்குதல் நடத்துகிறார்கள்.

ஏரியில் மீன் வளர்ப்புக்கு குத்தகைக்கு‌ விடுவார்கள். அதில் எங்களுக்கு பங்கு தர மாட்டார்கள்.

இந்த வருடம் கூட ஒரு லட்சத்திற்கு விட்டார்கள். ஆனால் எங்களுக்கு அதில் எந்த உரிமையும் பங்கும் தரவில்லை. அவர்களே எடுத்து கொள்வார்கள்.

“எங்க கிட்ட ஏரியில் பங்கு வாங்க உங்களால் முடியாது உங்களுக்கு என்ன வேளை இருக்கு‌ இங்கே கிளம்புங்கடானு” கேட்கிறாங்க சொல்றாங்க

வள்ளி அண்ணாமலை என்கிற கவுண்டர் சாதி பெண்மணி கூட்டம் நடந்த இடத்தில் வந்து”எங்க கிட்டையே வேலை செய்து எங்க கிட்டையே கூலி வாங்கி எங்க கிட்டையே வாங்கி தின்ன பற‌நாயிங்க எங்களையே எதிர்த்து திருவிழா நடத்துவிங்க. நாங்கள் பார்த்துனு விடனுமா. நம்ம பசங்களுக்கு ஓடுவது கவுண்டர் இரத்தமென்றால் இன்னேரம் அவனுங்கள பேச விட்டு வேடிக்கை பார்ப்பிங்கலடா அவனுவ காலில் விழுந்து மன்னிப்பு கேட்டா அப்படியே விட்டுட்டு வரனுமா?” என பேசியுள்ளார்.

நிலமும் அரசியலுக்கும் கூட அவர்களிடம் நிக்கமாட்டோம் “எங்க கிட்ட நிலம் இருக்கு. எங்களில் ஒருவர் தான் வார்டு கவுன்சிலர்‌ அரசியல் ரீதியாவும் அவங்களை நாங்க நம்பி இல்லை”

எங்களுக்கு பள்ளிக்கூடம் அவங்க இடத்தில் இருக்கு, அங்கன்வாடி அங்கே தான் இருக்கு, தண்ணி டேங்க் அங்கே தான் இருக்கு, ரேசன்‌கடை அங்கே தான் இருக்கு, அது வச்சியும் அவங்க எங்களை ஒடுக்கு முறை செய்யுறாங்க.

1)பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா வைத்தார்கள். எனில் நாங்கள் எங்கள் பகுதியில் இருந்து பேனா புத்தகம் நோட்டு என‌ வாங்கி தர‌ முற்பட்டால் அதை தடுப்பார்கள் .நீங்களெல்லாம் வாங்கி தருகிறிர்கள் என சண்டைக்கு வருவார்கள். நாங்களும் எங்கள் குழந்தைகள் படிக்கிறார்கள். எனவே பிரச்சினை வேண்டாம் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும் என்று வந்து விடுவோம். நாங்கள் அம்பேத்கர் பெரியார் படங்களை பள்ளிக்கூடத்திற்கு கோடுத்தோம். அதையெல்லாம் அடித்து உடைத்தார்கள். அந்த வழக்கு கூட கண்டுகொள்ளாமல் போனது.

2)அங்கன்வாடி அங்கேயே உள்ளது. எங்களுக்கு அருகில் இல்லை.

3)குடிதண்ணீர் அங்கே இருந்து தான் வரும் அதில் எங்களுக்கு வரும் பழுப்புகளில் அவர்கள் சட்டித்துணியை அடைத்து வைத்திருந்தார்கள். அதைக்கூட அந்த கோகுல்ராஜ் இப்போது சொன்னார் நான்‌ தாண்டா அப்படி பன்னேன் என்ன பன்னுவிங்க என் ஜட்டியிலிருந்த வந்த தண்ணியை குடிச்சிட்டு வந்தவனுவடா நீங்கள் என்றார்

4). ரேசன் கடை (நியாயவிலை கடை) அங்கே உள்ளது. அங்கு இரு ஊர்க்காரர்களும் அரிசி பருப்பு சர்க்கரை மண்ணெண்ணெய் வாங்கி‌ பிறகே எங்களை அனுமதிப்பார்கள். அதனால் எங்களுக்கு உரிய பொருட்கள் சரிவர கிடைக்காது. மீண்டும் வழங்கப்படும் போது எங்களுக்கு தர வேண்டும் என கடைக்காரர்கள் சொன்னால் கவுண்டர்‌ சாதி இந்துக்கள் அவர்களை எதிர்த்து சண்டை போடுவார்கள்.

இவ்வளவு கொடுமையும் அவர்கள் ஒரே ஜாதியை கவுண்டர் சாதி இந்துக்கள் சேர்ந்த இரண்டு ஊர்க்காரர்கள் பழைய ஒட்டனந்தால் புதிய ஒட்டனந்தல் மக்கள் தொகை கொண்டவர்கள் பட்டியல் சாதி காலனி ஒட்டனந்தல் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் ஒடுக்குகிறார்கள்.

நாங்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கு புறமாக உள்ளோம் . சாதி இந்துக்களை கடந்து தான் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் அப்படியும் ஒடுக்குகிறார்கள்.

நாங்கள் எங்கள் இளைஞர்கள் இப்போது தான் படித்து விட்டு காவ்லதுறை வேலை போன்றவற்றிற்கு தேர்வாகி உள்ளார்கள்.

நாங்கள் எதாவது நிகழ்த்த,எங்கள் இளைஞர்கள் எதிர்காலம் பாதிக்க படுமென பயந்து பயந்து வாழ்க்கை நடத்துகிறோம் .

என அந்த பகுதி மக்கள் தங்கள் மீது நிகழ்ந்த சாதிய‌ரீதியான வன்கொடுமைகளை அடுக்கி கொண்டே சொல்லிக்கொண்டு இருந்தார்கள். குறிப்பாக இது போன்ற ‌நிகழ்கவுளை இனியும் பார்த்தவாறு தமிழகத்தை சமூக நீதி மண் என‌ சொல்லாதீர்கள். சமூகநீதியை பயன்படுத்தும் கவுண்டர் சாதி இந்துக்கள் சூத்திரர்கள் பிற்படுத்தப்பட்டவர்களால் தான் பட்டியல் சாதி மக்களை இந்த அளவிற்கு கொடுமை செய்கிறார்கள். பட்டியல் மக்கள் வாழும் மக்களின் தேவைகளை ரேசன் கடை ஏரி தண்ணீர் பள்ளிக்கூடம் அங்கன்வாடி குடி தண்ணீர் என் அனைத்தையும் சாதி இந்துக்கள் இருக்கும் இடத்தில் உருவாக்கி சாதி இந்துக்களை சார்ந்து இந்த பட்டியல் சாதி மக்கள் வாழ வேண்டும் என கட்டமைப்பே உருவாக்கி அரசாங்கத்தை என்ன செய்வது இனியாவது அந்த மக்களை சுயமரியாதையொடு இயங்க வழிவகை செய்ய வேண்டும் அவர்களின் உரிமை பாதுகாக்க பட வேண்டும்

கள ஆய்வுஅமுதினியன்

ஒட்டனந்தல் வன்கொடுமைப் பற்றிய தொடர்புள்ள செய்திகள்

தமிழ் இந்து

பிபிசி தமிழ்

விகடன்

 

Load More Related Articles
Load More By sridhar
Load More In Atrocities
Comments are closed.