சாதி அமைப்புமுறை தொடரும் வரை தான் பிராமண வகுப்பு உயர் வகுப்பாக இருக்கும். எவ்வொருவரும் தம் கைகளில் உள்ள அதிகாரத்தைத் தாமே விரும்பி ஒருபோதும் கைவிட மாட்டார்கள். பிராமணர்கள் பலநூற்றாண்டுகளாக மற்ற சாதிகளின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள். அவர்கள் தாமே விரும்பி அதே அதிகாரத்தை கைவிட்டு பிறரைத் தமக்கு சமமாக நடத்துவார்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
ஜப்பானிய சமுராய்களுக்கு இருந்த தேசப்பற்று பிராமணர்களுக்கு கிடையாது. புதிய சமத்துவத்தின் மீதான தேச ஒற்றுமைக்காக சமுராய்கள் தங்கள் தனிச் சலுகைகளை தியாகம் செய்ததுபோல பிராமணர்கள் தியாகம் செய்வார்கள் என்று எதிர் பார்ப்பது பயனற்ற செயலாகும்.
பிற சாதி இந்துக்கள் இதுபோன்ற காரியத்தைச் செய்வார்கள் என்றும் நாம் ஒருபோதும் எதிர்பார்க்க இயலாது. மராத்தியர்கள் போன்ற மற்ற சாதியினர்களாகிய சாதி இந்துக்கள் சலுகை பெற்ற வகுப்பினருக்கும் உரிமை மறுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இடைநிலையில் உள்ளவர்கள் ஆவார்கள்.
– புரட்சியாளர் அம்பேத்கர்