ஒருவனால் உலகு பாழ்படும் எனில் அவ்
ஒருவனை ஒழித்ததல் உலகின் கடமை!
ஒரு சமயத்தால் ஓரினத்தவரின்
இருட்டெண்ணத்தால் என்றோ வகுத்த
சாதி மதத்தால் தகாவிதித முறைகளால்
மோதியழியும் இவவுலகெனில் அவற்றை
மோதி மிதித்தல் அழித்தல் முதற்கூடன்!
நிறத்திமிர் கொண்டு நிலத்தில் புகுந்தவர்
நிறவெறி யாலே கொலைத் திருவிழாவினை
நடத்தியோர் நாகரீக மிலாத ஆரியர்,
கடந்த காலக் கதைத் தொடர்;சசியை
வேற்றுமை உணர்ச்சியை, வெற்றித் திமிரினைக்
காட்ட நினைப்பது கயமைத் தனமே!
சூழ்ச்சியால் மூடநம்பிக் கையை
வீழ்ச்சிக் குரியதாய் வேடதாரிகள்
காலம் காலமாய்க் காட்டிக் கொடுத்தே
இருபதாம் நூற்றாண்டிலும் இனப்போருக்குரிய
கருத்து நஞ்சினைக் கலப்பதும் விளைப்பதும்
நாட்டை உலகை நலிவிப்ப தாகும்.
இரண்டா யிரமாண் டில்லா திருத்த
திரண்ட நாகரிக திராவிடர்க் கிடையில்
பொல்லாங்கனைத்தையும் புகுத்தி வெளியுள
எல்லா நாட்டவரையும் இங்கே
பாய்விரித்தழைத்த ஒரே ஒரு பரம்பரை
பார்ப்பனப் பரம்பரை! ஆரியப் பதர்களே
ஆரியர் என்ன தூய்மை யானவரா?
பூரித்துவக்கும் இந்திய ஆரியர்
அனைவரும் மதிராவிட அணைப்பில் பிறந்தவர்
தினையளவும் இதில் ஐயம் இல்லை;
மாந்த நூல் இயலார் இதனையே ஒப்புவர்.
தீண்டாமைக் கொடுமை தீய்த்த பாடெல்லாம்
ஆண்டாண்டு தோறும் அழுதும் தீராகு.
கொடுமையை நினைக்க நெஞ்சம் குமுறும்.
பாரதியார் முதல் பாரத நாட்டின்
காந்தி அண்ணலார், பெரியார் வரையிலும்
தீண்டாமை நோய் தீண்டா வண்ணம்
பணியாய்க் கொண்டனர்- பணியில் எவர்க்கும்
அணியில் முன் நின்ற அம்பேட்கரின்
எரிமலை எண்ணமும் எழும்புயல் செயலும்
விரிவுல கத்தையே விழிப்புறச் செய்தன.
ஆரியக் கொட்டம் அடியோடழிய
வீரியங் கொண்ட வெஞ்சின வேங்கை முன்
மதத்திமிர் அழிந்தது.சமயம் மடிந்தது
அதற்கொரு வழி அவர் கண்டார் இந்திய
நாட்டின் உரிமைப் பேரேட்டின் சட்டம்
அமைத்தவர் ஆதலின். சாதி வேற்றுமை
குமையத் தானே குலம் உயர் வென்ற
ஆரியப் பெண்ணை மணந்தார். அதனால்
ஓர் இனம் தனி இனம் ஒட்டோம் என்னும்
தடையுடை படுவதால் உடைமையுடை படுமே,
உடைமையால் அல்லவோ உயர்வும் தாழ்வும்:
நம்மவர் மணக்க நாடுருப் படுமே!
– பாவேந்தர் பாரதிதாசன்