தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்புகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவரது பணிகளும், வாழ்வும் மேலும் பல பரிமாணங்களை கொண்டவை. அமைச்சராக இருந்து பிரம்மாண்ட நீராதாரத் திட்டங்களை வகுத்தது, நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக இன்றும் பொருந்தும் கருத்துகளை வலியுறுத்தியது முதல் எட்டு மணி நேர வேலை உரிமை இந்தியாவில் அமலாகக் காரணமாக இருந்தது வரை பரந்த சமூகம் பலன்பெற அவர் …