Author: கௌதம சன்னா

விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர். ஆய்வாளர், எழுத்தாளர். கள ஆய்வுகள், தலித் வரலாறு, பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர்.

எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது. எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர் என்று ஏற்றுக்கொள்வதற்கு பழையத் தலைமுறைக்கும், அதனை பின்தொடர மறுக்கும் இன்றைய தலைமுறைக்கும்கூடத் தயக்கம் இருக்கலாம். ஏனெனில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முன்னர் அரசியல் பணிகளைத் தொடங்கி, பின்னர் அவரோடு சமகாலத் தலைவராய் அறியப்பட்டதால் இந்த குழப்பமான வரலாற்று மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தீர்க்கும் விதமாக கிடைத்துள்ளச் சான்றுகளில் ஒன்றை இங்கே தருகிறேன்.. தலைவர் எம்.சி.ராஜா அவர்களைப்…

Read More

இன்றைக்கு இதுதான் மிகப்பெரிய ஊடக கேள்வியாகவும், காவல்துறையின் கடினமான புலனாய்வுக்கு உரிய கேள்வியாகவும் மாறியிருக்கிறது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ரோகித் அங்கு நடந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததினால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தை மட்டுமின்றி படிப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓர் ஆய்வு மாணவர் மீது மாநிலங்களவை உறுப்பினர் ராமசந்திர ராவ், மத்திய இணை அமைச்சர் தத்தாத்ரேயா, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பல்கலை நிர்வாகம் என அதிகாரத்தின் பல பரிவாரங்கள் போர்த் தொடுத்துள்ளன. அதன் நெருக்கடியினை தாங்காமல் ரோகித் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்கிற செய்தி இன்றைக்கு நாடறிந்த செய்தியாகவும், மாணவர்களின் போராட்டத்திற்கான மையக்கருவாகவும் மாறியுள்ளது. ரோகித் மேற்கண்ட நெருக்கடிக்கு பயந்து அல்லது அதை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் அது அத்தனை தீவிரமாக எதிர் கொள்ளப்பட்டிருக்குமா என்பது ஐயமே. ஆனால் அவரின் மரணம் இவ்வளவு தீவிரத்தை உருவாக்கியுள்ளதே ஏன்..? அதன் காரணம் ஒரு எளிமையான…

Read More

அசோகர் விஜயதசமி என்ற ஆயுதபூசை வாழ்த்துக்கள் சாம்ராட் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்றார். லட்சக் கணக்கான வீரர்களை தமது சார்பாகவும், எதிரி மன்னரின் சார்பாகவும் கொல்லப்பட்டதைக் கண்டு அப்போது அவர் மனம் பதைக்கவில்லை, ஆனால் ஒரு வெற்றிக்குப் பின்னால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளதை ஒரு பௌத்த பிக்கு அவருக்கு உணர்த்தினார். இந்திய வரலாற்றில் சாம்ராட் எனறு அழைக்கப்படும் ஒரே மன்னர் அசோகர் மட்டும்தான், அவ்வளவு புகழ் வாய்ந்த மாமன்னர் தமது வெற்றியை கொண்டாடுவதற்கு பதில் பௌத்த பிக்குவின் போதனையில் மனம் மாறினார், வெற்றியை வன்முறையினால் தக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்தார். உலகில் அவரது பணி நிலைக்க வேண்டுமானால் ஆயிர நாமத்தாழியன் புத்தரின் அறநெறிதான் சிறந்தது என்பதை உணர்ந்தவராய் தமது போர் வெற்றிக்குக் காரணமான ஆயுதங்களைத் துறந்து அன்பின் கீழ் மக்களை அரவணைக்கத் தொடங்கினார். இனி தமது நாட்டில் போர்களே நடைபெறாது என்று அறிவித்தார். கலிங்கத்தின் மீது அவர்…

Read More