Home sridhar

sridhar

Posts By sridhar

ஏதேனும் நியாயம் இருக்கிறதா?

அரசியல் நிர்ணய சபை டிசம்பர் 9, 1946 அன்று முதன் முதலாகக் கூடிய நாளிலிருந்து கணக்கிட்டால் அது தனது செயல்பாடுகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆகிவிட்டன. இக்காலகட்டத்தில் அரசியல் நிர்ணய சபை இதுவரை பதினோரு முறை கூடியுள்ளது. இந்த பதினோரு கூட்டங்களில் ஆறு கூட்டங்கள், நோக்கங்கள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள், கூட்டாட்சி அரசமைப்புச் சட்டங்கள், கூட்டாட்சி அதிகாரங்கள் மற்றும் மாநிலங்களின் அரசமைப்புச் சட்டங்கள், சிறுபான்மையினர், பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் ஆகியவை குறித்த ஆய்வுக் …

சாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி? – நந்தீஷ் – சுவாதி படுகொலை…

இவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் புரிந்தவர்களைக் படுகொலை செய்து தங்களின் ஆதிக்கச் சாதியின் ‘பெருமை’யை நிலைநாட்டுவார்கள் என்பதும் தெரியவில்லை. அள்ளி அணைத்து, ஆசை ஆசையாய் முத்தமிட்டு, தோளிலிலும் மாரிலும் சீராட்டி வளர்த்த பிள்ளையையே கொடூரமாகக் கொலை செய்ய வைக்கிறது சுய சாதிப் பெருமை. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், கெவின் ஜோசப் வரிசையில் சாதியத்துக்கு இரையாகியுள்ளனர் ஓசூரைச் சேர்ந்த இளம் தம்பதியர் நந்தீஷ் – சுவாதி. பெண்ணின் தந்தையும் உறவினர்களுமே இந்த …

பண்டிதமணி க. அப்பாதுரையார்

பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962   இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு.  அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.   இவர் 1890-இல் கொங்கு …

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பையை விரித்துத்தான் உட்கார வேண்டும். யாரும் அந்தச் சிறுவனைத் தொட்டுத் தண்ணீர் தர மாட்டார்கள். ஒரு உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படியே அண்ணாந்து அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பதின்ம வயதிலேயே திருமணம் முடித்த பின் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றார் அவர். எந்த இடத்தில் அவருடைய சமூகப் பின்னணியைக் காட்டி, அவரைத் தொட்டால் தீட்டு என்று ஒதுக்கினார்களோ, அதே இடத்தில், அவருடைய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்படுகின்றது. ஏன் அம்பேத்கர் வரலாற்றின் தேவையாக …

இந்நாட்டு மக்களுக்கு டாக்டர் கே.ஆர். நாராயணன் அளித்த இறுதிச் செய்தி

அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அதிகாரம் அளித்தல் என்பது, அதன் உண்மையான பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. இந்தியாவில் அதிகாரப்படுத்துதல் என்பது, சாதாரண மக்களை மய்யப்படுத்தி நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டக் காலத்தில் தொடங்குகிறது. காந்தியார் அம்மக்களின் ஆற்றலை ஒருகமுப்படுத்தி, ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டினார். சமூக அநீதியும், மத அடிப்படையிலான வேறுபாடுகளும் மலிந்த ஒரு சமூகத்தில், அதிகாரமற்ற மக்களை அதிகாரப்படுத்தியதற்கு அதுவே சிறந்த சான்றாக உள்ளது. தங்களின் அன்றாட இருப்பைத் …

ஆத்தூர் சிறுமி கழுத்தறுத்து படுகொலை – எவிடன்ஸ் அறிக்கை.

தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது… வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறர் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை …

விஜயதசமி – ஆயுத பூஜை உண்மை வரலாறு

சாம்ராட் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்றார். லட்சக் கணக்கான வீரர்களை தமது சார்பாகவும், எதிரி மன்னரின் சார்பாகவும் கொல்லப்பட்டதைக் கண்டு அப்போது அவர் மனம் பதைக்கவில்லை, ஆனால் ஒரு வெற்றிக்குப் பின்னால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளதை ஒரு பௌத்த பிக்கு அவருக்கு உணர்த்தினார். இந்திய வரலாற்றில் சாம்ராட் எனறு அழைக்கப்படும் ஒரே மன்னர் அசோகர் மட்டும்தான், அவ்வளவு புகழ் வாய்ந்த மாமன்னர் தமது வெற்றியை கொண்டாடுவதற்கு பதில் பௌத்த பிக்குவின் போதனையில் மனம் மாறினார், வெற்றியை வன்முறையினால் தக்க வைக்க முடியாது …

“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்!” – கிருஷ்ணசாமி

இதுவரை தான் பயணித்த பாதையில் இருந்து அப்படியே யு-டர்ன் போட்டு, ‘பட்டியல் சாதியிலிருந்து வெளியேறுவோம்’ என்ற முழக்கம், ‘இட ஒதுக்கீடு கூடாது’ என்ற நிலைப்பாடு, தமிழகமே எதிர்த்தாலும் ‘தீவிர பா.ஜ.க நிலைப்பாடு’ என்று மாறியிருக்கும் ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைச் சந்தித்தேன். ‘‘ஆண்டாண்டுக் காலமாக இழிவுக்குள்ளாக்கப்பட்டுப் பின்தங்கிப்போன மக்கள் சமூக நீதி பெறுவதற்காக வகைப்படுத்தப்பட்டதுதான் எஸ்.சி பட்டியல். ஆனால், ‘எஸ்.சி பட்டியலில் வைத்ததால்தான் எங்களை இழிவுபடுத்துகிறார்கள்’ என்று நீங்கள் சொல்வதை  என்னவென்று புரிந்துகொள்வது?’’ ‘‘இது ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பிழை! …

`நாங்கள் எப்போதும் உடனிருப்போம்’ – அம்ருதாவை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்

ஆந்திராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரனய் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா  பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த மாதம் 14-ம் தேதி மதியம் மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் …

காந்தி ஒரு மகாத்மாவா?

காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு கார ணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத் மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன். நான் ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத்தனமான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர். இரண்டாவதாக, மகாத்மா என்கிற சொல்லினால் மக்கள் திட்டவட்டமாக …

123...23Page 1 of 23

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected