Home sridhar (page 22)

sridhar

Posts By sridhar

பௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா

www.ambedkar.in நடத்திய  பௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற வரலாற்று சிறப்பு மிக்க  அக்டோபர் 14 ஆம் தேதியில் www.ambedkar.in ஏற்பாடு செய்திருந்த விழாவில் சுமார் 100 க்கும்மேற்பட்டோர் தம்மை பௌத்ததில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில்  எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன்,  அவர்கள் கலந்து கொண்டு பெளத்த  நூல்களை வெளியிட்டு தம்ம உரை  ஆற்றினார் . பௌத்தம் தழுவியவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.. அவர் தனது தம்ம உரையில் “புரட்சியாளர் அம்பேத்கர் ,அசோகருக்கு பின்னர் பௌத்தத்தில் மிக பெரும் புரட்சியை ஏற்படுத்தினர்.., இந்து மதத்தை பின்பற்றாத எவரும் பௌத்தர்களே… இயேசு  கடவுளால் உருவாக்கப்பட்ட குழந்தை என்று தன்னை சொல்லிக்கொண்டார், முகமது நபிகள் தன்னை கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் என்று சொன்னார்,கிருஷ்ணன் தான் தான் …

பாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளில், அக்டோபர் 14,2010 சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் www.ambedkar.in நடத்திய பௌத்தநெறியேற்பு விழா – பௌத்த நூல்கள் வழங்கும் விழாவில் எழுத்தாளர், ஆய்வாளர் திரு.கவுதம சன்னா அவர்களின் உரை

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 1

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 1 சாதி ஒழிப்பு   ஓர் இந்து யாரைத் தலைவனாக ஏற்றுக் கொள்வான்? நான் இந்துக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்! சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா? தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்? தீண்டத்தகாத பெண்கள் மீது தாக்குதல் நெய் – இந்துக்களின் கவுரவப் பிரச்சினை! இந்துக்களுக்கு அருகதை உண்டா? எது சீர்திருத்தம்? அரசியல் சீர்திருத்தம் முன்னோடி அல்ல அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது? ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம் சமூகப் பிரச்சனையை அலட்சியப்படுத்த முடியாது அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது? …

மேலவளவு

இனப் படுகொலைக்கு இணையான மதுரை – மேலவளவுப் படுகொலை நாட்டையே உலுக்கிய நிகழ் வாகும். சமூக நடைமுறைகளைச் சாதாரணமாகக் கவனித்து வரும் எவரும், மேலவளவுப் படுகொலை யின் பின்னணியைப் புரிந்து கொண்டிருப்பர். நீண்ட காலமாகத் தாங்கள் அனுபவித்து வந்த மேலவளவுப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சாதி வெறியுணர்வடைந்த மேலவளவு கள்ளர்கள்,  30.6.1997 அன்று பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகளை சென்னகரம்பட்டிப் படுகொலை ‘பாணி’யிலேயே பயணம் செய்த பேருந்தை வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்தனர். முருகேசனை பேருந்திற் குள்ளேயே …

மாற்றுப்பாதை – டி.எல்.சிவகுமார்

மென்மையான உள்ளம். உலர்ந்துவிடாத புன்னகை. எப்போதும் அன்பு கசியும் கண்கள். இவை டி.எல். சிவகுமாரின் அடையாளங்கள். 1989 ஆம் ஆண்டு கையெழுத்து இதழாகத் தொடங்கப்பட்ட “பூங்குயில்’ இலக்கிய இதழை, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் நடத்தி வரும் அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியது. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு, “முகத்துக்கு தெரியாத முதுகெலும்புகள்.’ இரண்டாவது தொகுப்பு “குட்டி ஆலீசும் கோடி நட்சத்திரங்களும்.’ இது மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய ஆளுமைகளை உருவாக்கிய பல தளங்களும் மேடைகளும் அவருடைய அரிய உழைப்பால் விளைந்தவை. “பூங்குயில்’ சிவகுமார் என்று இலக்கிய ஆர்வலர்களால் …

மாற்றுப்பாதை – பூவிழியன்

தலித் வரலாற்றை எழுதுவது, ஒரு வகைமை. புனைவுகளைக் கடந்து இயக்க ரீதியான அணிதிரள்வுகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் – தலித் வரலாற்றாளர்கள் தருகின்ற ஆதாரங்களும், தரவுகளும் – தலித்துகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்குமான நியாயங்களை உணர வைக்கின்றன. பொதுப்பண்பாட்டிற்கு எதிராக ஓர் எதிர்ப்பண்பாட்டை உருவாக்கவும் தலித் வரலாறு தேவைப்படுகிறது. வரலாற்றாய்வாளர் ஈ.எச்.கார் என்பவர், வரலாற்றில் தவிர்க்க முடியாதது, தப்ப முடியாதது என எதுவும் இல்லை என்கிறார். ஆனால் இந்திய வரலாற்றைப் பொருத்த வரையில், தலித் வரலாறு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரலாறு மறைக்கப்பட்ட தொல்குடி …

கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்

எதுவுமே தேவையில்லை அது அத்தனை சுலபமானது கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம் சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில் வெற்றுக்கால்கள் கொப்பளிக்க நடக்கவொன்றும் தேவையில்லை தலைமீது கல்சுமந்து கழுத்து நரம்புகள் புடைக்க வேண்டாம் சுடும் வெயிலில் நடைபாதைகளில் தலைகாயக் குந்தி காலணிகளைப் பளபளப்பாக்கி காசுக்கு கையேந்த வேண்டியதில்லை மேனிகருக்க நிறுத்தங்களில் கூடைபழங்களை கூவிவிற்க குரல் வற்ற அவசியமில்லை வியர்வை உடல்நனைக்க கட்டாந்தரையை பண்படுத்த வாழ்வை பலி கொடுக்க வேண்டியிராது மகள் படிக்க காசில்லாமல் மாற்றுத் துணியில்லாமல் ஆண்டையிடம் அவமானப்படத் தேவையில்லை …

பெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு

ஒவ்வொரு களப்பணியாளரும், சமூகத் தொண்டரும் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கின்றனர். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப் பணியாளரை, சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். ஆனால், பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்துதான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர், சாதி ஒழிப்புப் போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்புப் போராளியாக அறியப்படுகிறார். …

விடுதலை சூரியனை திசை மாற்றியவர்

சாதியின் இருள் கொட்டடிகளில் அடைபட்டிருந்த தலித் மக்களை துணிச்சலுடன் மீட்பதற்கு, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் களமிறங்கினார்கள். அவர்கள் விடுதலையின் சூரியனை திசை மாற்றி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் மீது விழ வைத்தனர். ரெட்டமலை சீனிவாசன் அவர்களில் ஒருவர். அவர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தலித் மக்களுக்காகப் போராடியவர். இதழ் நடத்தியவர். உலகம் சுற்றியவர். அரசியலில் பங்கேற்றவர். அண்மையில் அவர் பிறந்த சூலை மாதத்தில் தமிழக அரசு, சென்னை காந்தி மண்டபத்தின் ஒரு மூலையில் ரெட்டமலை சீனிவாசனுக்கு சிலை எழுப்பியுள்ளது. ரெட்டமலை சீனிவாசன் நிச்சயமாக இப்படி …

மாற்றுப்பாதை – ரகசியன்

மவுனத்தின் மீது சொல்லெறியுங்கள்; அது உண்மை களைப் பேசும் என்பது ரகசியனின் கனவு. தலித் மக்களின் விடுதலை என்பதை எப்போதும் கனவாக்கித் திரியும் அவருடைய மனநிலை ஒரு எழுத்தாளருக்கு உரியது மட்டுமல்ல; களப்பணியாளன் ஒருவனின் சிந்தனையும்கூட. சாதி இந்துக்களுடன் நாள்தோறும் போரிடும் அவரின் நனவிலி மனநிலை, தன்னை தலித் எழுத்தாளராக உந்துகிறது என்பது அவரின் வெளிப்படையான கூற்று. ரகசியன் என்ற அழகியல் பெயரை அவர் புனைந்து கொண்டாலும் அவருடைய கவிதைகள் வெளிப்படையானவை. வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்திலிருக்கும் கெம்மன்குப்பத்தில் பிறந்த இவர், தற்பொழுது சேத்துவாண்டையில் …

1...212223Page 22 of 23

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

அம்பேத்கரியப் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

அம்பேத்கரியப் பொருளாதாரம் இருபதாம் நூற்றாண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்கு மட்டுமல்ல ஆசியநாடுகள் அனைத்திற்கும் மறுமலர்ச்சி நூற்றாண்டாகும். இந்தியாவை மறுமலர்ச்சி …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,226 other subscribers

Stay Connected