Home sridhar (page 23)

sridhar

Posts By sridhar

அன்பர்களே! அம்பேத்கர் இந்து அல்லர்

அண்ணல் அம்பேத்கரின் வாழ்வில் மிகவும் முதன்மையாகக் கருதக்கூடிய மூன்று நாட்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது நாள், 1927 டிசம்பர் 21. அன்று, அம்பேத்கர் மநுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினார். இரண்டாம் நாள், 1935 அக்டோபர் 13. அன்று, “நான் ஓர் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால் ஒருபோதும் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்று அம்பேத்கர் அறிவித்தார். மூன்றாம் நாள், 1956 அக்டோபர் 14. அன்று, அம்பேத்கர் பவுத்தம் தழுவினார். அம்பேத்கரின் பிறந்த நாள், மறைந்த நாள் ஆகியவற்றைக் காட்டிலும் இந்த நாட்கள் முதன்மையானவை. ஏனெனில், அவரின் …

மாற்றுப்பாதை – சுதாகர் கத்தக்

மாற்றுப் பாதை’யைத் தொடங்கும்போது, சில வரையறைகளை நாம் வைத்திருந்தோம். அதில் ஒன்று, இப்பகுதி யில் இடம்பெறும் தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய ஆக்கங்களை நூலாக வெளியிட்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் சுதாகர் கத்தக் அவர்களுக்கு இது பொருந்தாது. எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர், இன்று வரை தன் எழுத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இதுவரை பதினாறு சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அந்த எழுத்துகளின் தீவிரமும் உண்மை யும் அவருக்கு இந்த விதிவிலக்கை வழங்கி இருக்கின்றன. ஓர் எழுத்தாளர் தான் வாழ்கின்ற காலத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையாக இருப்பதும், அவர் …

கயர்லாஞ்சி

அரிதினும் அரிதாகக் கருதப்பட்ட கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கில், பந்தாரா மாவட்ட நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையதுதானா? நாடு முழுவதிலும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் பிற தலித் வன்கொடுமை வழக்குகளில் அளித்துவரும் தீர்ப்புகளிலிருந்து கயர்லாஞ்சிப் படுகொலை வழக்குத் தீர்ப்பு மாறு பட்டதுதானா? இந்தியா முழுவதிலும் நீக்கமற நிறைந்த கிடக்கும் சாதிவெறியர்களுக்கு அதிர்ச்சி யளிக்கக் கூடியதுதானா? நீண்ட நெடுங்காலமாக தாங்கள் சந்தித்து வரும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான நீதியைப் பெற்றுத்தரும் வலிமை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உண்டு என்ற நம்பிக் கையை தாழ்த்தப்பட்ட மக்களிடையே …

சென்னகரம்பட்டி

தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய மதுரை சென்னகரம்பட்டியில், சாதிவெறியுணர்வும், தீண்டாமைக் கருத்துணர்வும் கொண்ட கள்ளர் சாதியைச் சார்ந்த பெரும் கும்பல், திரண்டு சென்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் இருவரை நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்தது. குரூரமான சாதிய மண்டபங்களாக இன்று வரை செயல்பட்டுக் கொண் டிருக்கும் இந்திய கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி இந்துக்கள் மிகப் பயங்கர ஆயுதங் களுடன் ஊரோடு திரண்டு சென்றுதான் தாக்கு கிறார்கள். படுகொலையும் செய்கிறார்கள். அப்படிப் பட்ட கொடூரச் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையானது சாதிவெறியுணர்வும், தீண்டா மைக் கொள்கையும்தான். இந்த …

திண்ணியம்

தமிழ்நாட்டையே அவமானப்படச் செய்த திண்ணியம் வன்கொடுமை வழக்கும் மிக மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. திருச்சி அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில், தொகுப்பு வீடு ஒதுக்கித் தர கள்ளர் சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனிடம் ரூபாய் இரண்டாயிரத்தைத் தலித் சமூகத்தைச் சார்ந்த கருப்பையா என்பவர் லஞ்சமாகக் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும், வீடு ஒதுக்கித் தரவில்லை என்பதால், கருப்பையா தான் கொடுத்தத் தொகையை திருப்பித் தருமாறு பலமுறை சுப்ரமணியனிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். தொகை யைத் திருப்பித் தர ராஜலட்சுமியும், …

1...212223Page 23 of 23

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அப்பாவிகள், அல்லது சூழ்ச்சியாளர்கள்!

இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected