Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.
Vows of Dr. Ambedkar Dr. B.R. Ambedkar prescribhed 22 vows to his followers during the historic religious re-embracing to Buddhism on 14th October 1956 at Deeksha Bhoomi, Nagpur in India. The re-embracing to Buddhism by 10,00,000 people was histroic because it ewas the largest religious conversion, the world has ever witnessed. He prescribed these oaths so that there may be complete severance of bond with hinduism. Yes from this time onwards we are not hindus, and we will never be hindus!. These 22 vows struck a blow at the roots of hindu beliefs and practices. These vows could serve as…
விக்கிரவாண்டி அருகே புதைக்க இடம் இல்லாத நிலையில், பட்டியல் சமூகத்தை சார்ந்தவரின் உடலைத் தங்கள் கோயில் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இறந்த மூன்றாம் நாளே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது இடத்தைக் கொடுத்துள்ளார். என்ன நடந்தது? தங்களுக்கென சுடுகாடு கூட இல்லாத பட்டியலின மக்கள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களும், 500க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு நிலையான சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களின் உடலை ஏரி, ஓடை, குளம் போன்ற பகுதிகளில் எரிப்பதும், புதைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தங்களுக்கு நிலையான சுடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தி…
I அயோத்திதாச பண்டிதர் (20/05/1845-05/05/1914) அவர்கள் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் தமிழ்ப்பேரறிஞரும் அரசியல் சீர்திருத்தவாதியும் ஆவார். அவர் தனது பன்முகப்பட்ட திறமைகளாலும் பன்முகப்பட்ட செயல் முறைகளாலும் காலம் கடந்தும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மீதும் தனது தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளார். அவர் நடத்தி இருக்கின்ற பண்பாட்டுப் புரட்சிகளைப் பின்வரும் உள் தலைப்புகளில் காண்பது நலம். 1. பண்பாட்டு புரட்சி 2. இந்திய வரலாறு குறித்த அணுகுமுறை 3. இந்தியாவில் தொடர்ந்து வரும் கருத்தியல் முரண்பாடுகள். 4. பண்டிதரின் பார்வையில் தேசமும் அரசும். 5. சுரண்டலின் வடிவங்கள் (சமய, சமூக ஒடுக்குமுறைகள் பொருளாதார ஒடுக்குமுறைகளாக மாறுகின்ற தன்மை). 6. தமிழ் இலக்கிய, இலக்கணங்களை அவர் கண்ட பௌத்த அணுகுமுறை. 7. நவீன கால ஒளியைத் தந்த மேற்கத்திய அணுகு முறைகளில் இருந்து வேறுபட்ட நிலை. 8. பண்டித அயோத்திதாசரின் தீர்க்கமான முடிவுகள். 9. இட ஒதுக்கீடு…
AMARAVATI: The state government has decided to rename Konaseema district as Dr BR Ambedkar Konaseema district. The government has issued a preliminary notification on Wednesday seeking public objections/suggestions. The final notification will be issued after 30 days. Dalit organisations had demanded naming of the district after Ambedkar prior to the reorganization of the districts. They held rallies during the bifurcation of the district. The government initially ignored the demands and went ahead to name it as Konaseema district. The government realized the significance of naming the district after Ambedkar almost 45 days after the new district came into existence. Konaseema…
தமிழ் நாட்டில் முதன் முதலில் பார்ப்பனக் கருத்தாக்க சாதியச் சமூகத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சமநீதி இயக்கம், அறிவாசான் அயோத்திதாசரிடம் இருந்தான் தொடக்கம் பெற்றது அவர்தான் சாதிய மனிதர்களாக ஆக்கப்பட்டிருந்தஒட்டுமொத்த பார்ப்பனரல்லாதாருக்கும் “தமிழன்’ “திராவிடன்’ என அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்தவர். தமிழ்த் தேசியத்தின் முன்னோடியான அயோத்திதாசரின் சமகாலத்திலேயே – அடங்காத கனலுடன் பார்ப்பனியத்தால் இழிவுக்கும் இயலாமைக்கும் ஆளாக்கப்பட்ட தொல்தமிழர்களின் அடியாழக் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒன்றுதிரட்டி வழிகாட்டுகிற சமூகக்காவலராய் முற்றும் பொருந்தியவரே டி. ஜான்ரத்தினம் ஆவார். 1846இல் பிறந்த – ஜான் ரத்தினம் அவர்கள், அயோத்திதாசருக்கு ஒரு சில மாதங்களே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜான் ரத்தினம், கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினூடே, கிறித்துவ மத நிறுவனப் பின்புலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினைப்பெற்றார். 1862இல் உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லமை பெற்ற அவர், சென்னை மாநகரில் புகழ்பெற்ற “ஸ்பென்சர் கம்பெனி’யில் 1863ஆம் ஆண்டு பணியில் அமர்ந்தார். சமூக…
கிங்ஸ்டன்: ஜமைக்காவில் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்குடன் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அந்நாட்டில் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ள சாலையை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “பாபாசாகேப் அம்பேத்கரின் பெயர் கடல் கடந்து பரவி இருப்பதை பார்த்து பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், மார்கஸ் கார்வே போன்றவர்களை ஒரு தேசத்துக்குரியவர்களாகவோ அல்லது சமூகத்துக்க உரியவர்களாகவோ வரையறுக்க முடியாது. அனைவருக்கும் சம உரிமை என்று அவர்கள் கொடுத்த குரலும், அனைத்து பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர அவர்கள் எடுத்த முயற்சியும் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது,’ என்று கூறினார். ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற…
The section of Tower Street between Church Street and Lower South Camp Road is to be renamed Dr B R Ambedkar Avenue in honour of the Indian jurist and economist who played a key role in the writing of the Indian Constitution granting equal rights to all citizens. That decision was taken in a resolution passed by the Kingston and St Andrew Municipal Corporation (KSAMC) two Fridays ago, and was described as “historic” by Kingston’s Deputy Mayor Winston Ennis at Tuesday’s KSAMC council meeting. “Colleagues, we are all aware of the immense value that the Republic of India brings to Jamaica…
உன்னத மகிழ்வான வாழ்க்கை (மகா மங்கள சுத்தம்) பகவன் புத்தர். பகவன் புத்தர் உன்னதமான மங்களங்கள் என்று வகுத்துரைத்த மங்கல உரையின் செய்திகள்: 1. தீயோரின் உறவை விடுத்தல் (Not associating with fools) 2.நல்லோரின் நட்பை வளர்த்தல். (Associating with wise) 3..தகுதிவாய்ந்த பெரியவர்களைப் போற்றல். (Reverencing those worth of respect) 4. தக்கப் பிரதேசத்தில் வாழ்தல். (Residence in a suitable locality) 5. நற்பலன் தருகின்ற செயல்களை புரிந்து இருத்தல். (Having made merit in the past) 6.நேர்மையான வழியில் தன்னை நடத்தி வருதல். (Once mind properly directed) 7. ஆழமான ஞானம், (Profound learning) 8.நேர்மையான தொழில்திறன், ( proficiency in once work) 9.கற்றறிந்த விநயம், (The learned moral discipline) 10.இனிய வாக்குடைமை (Gracious kindly speech) 11. தாய் தந்தையரைக் காப்பாற்றுதல் . (Giving support to…
தண்ணீர் எல்லோருக்குமானது: அம்பேத்கரின் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஒருபார்வை நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்றே ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் புகழப்பட்டு வருகின்றன. அத்தகைய ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்களுக்கு முன்னோடி திட்டமாக , முதல் பல்நோக்குத் திட்டமாக இருப்பது தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம்! அப்போதைய பிகார் மாநிலத்தில் (தற்போதைய ஜார்கண்டில்) உற்பத்தியாகி வங்க தேசத்தில் இருக்கும் ஹூக்ளி ஆற்றில் கலக்கும் தாமோதர் நதி, மழைக்காலங்களில் கடுமையான சேதங்களை விளைவித்தது. ஆற்றை சுற்றி இருக்கும் விவசாய நிலங்கள் , கிராமங்கள் அதனை சார்ந்த தொழில்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மக்கள் மீண்டும் வர மிகவும் சிரமப்பட்டன்ர். ஒவ்வொரு மழை காலத்திலும் அங்குள்ள மக்கள் கடுமையான சேதங்களை சந்தித்து வந்ததால் தாமோதர் ஆறு, ‘வங்காளத்தின் துக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர ஆங்கிலேயர்களின் பல் முயற்சிகள் , அனைத்துமே தோல்வியிலேயே முடிந்தன. வெள்ளப்பெருக்கை தடுக்கும் திட்டமாக, பள்ளத்தாக்கு திட்டத்தின்…
நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் சாராயம் , வெள்ளி , மண் தைலம் , புகையிலை என் நான்கின் பெயரிலும் வரிகளை இன்னும் அதிகப்படுத்துவதாகக் கேள்விப்படுகிறோம். அவற்றுள் மநுகுலத்தாருக்கு சீர்கேட்டை உண்டுசெய்யும் சாராயம், புகையிலை இவ்விரண்டிற்கும் வரிகளை அதிகப்படுத்துவது சுகமேயாம். மநுக்களுக்கு உபகாரமாக விளங்கும் வெள்ளியின் பேரிலும், மண்தைலத்தின் பேரிலும் வரிகளை அதிகப்படுத்தாமலிப்பது சுகமாம். எவ்வகையிலென்னில், தற்காலம் வெள்ளி சகாயமாகக் கிடைக்கின்ற படியால் ஒருரூபா, அரைரூபா. கால்ரூபா வென்னும் வெள்ளி நாணயங்கள் சேதமில்லாமல் வழங்கிவருகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியால் கார்க்கப்பட்டக் குடிகளும் வெள்ளிப் பாத்திரங்களையும் நகைகளையும் விசேஷமாகக் கையாடிவருகின்றார்கள். வெள்ளிப்பாத்திரங்களும், வெள்ளி நகைகளும் சகலவகுப்பார் வீடுகளிலும் விசேஷமாகப் பரவிவருவதினால் பிரிட்டிஷ் ராஜநீதியின் சிறப்பும், அவர்களது கருணையும் தெள்ளற விளங்குகின்றது. மநுக்களின் சிறந்த வாழ்க்கையே இராஜாங்க சிறப்பாதலின் வெள்ளி நாணயத்தின்மீது வரி விதிக்காமலிருக்க வேண்டுகிறோம். மண்தைலத்தின் சுகமோ தினேதினே ஓரணா சம்பாதிக்கும் கூலியாளும் ஒருகாசு தைலமேனும் வாங்கிக் குடுக்கையில் வைத்துத் தீபமேற்றி வெளிச்சத்தில் புசித்து சுகித்து…