Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

ஊர் ரட்சைக் கல்லருகிலே பூங்குளமே குழுமியிருந்தது. கோல்காரன் எல்லோரையும் அடக்கிக்கொண்டிருந்தான். ஊரிலிருக்கிற எல்லாத் தலைக்கட்டுகளும் வந்தானதா எனப் பார்த்துவிட்டுப் பேசினார் நாட்டாண்மை முனியப்பன். “இது ஒரு அவசரக் கூட்டம். ஆனா முக்கியமான கூட்டம். நாமும் குடியானவங்க கணக்கா மாறணும். மானம்-மரியாதையோட வாழணும். இங்கக்கீற பெருசுங்க தலமொறயப் போல, வளந்து வர்றதுங்களும் கையில தண்ணியையும் கூழையும் களியையும் வாங்கித் தின்னுனு, சேவகம் புரியணும்னு அவசியமில்ல. பெரியவங்க சொல்ற சீர்த்திருத்தக் கருத்துகள எடுத்துனு நம்ம பூங்குளம் இனிமே சீர்த்திருத்த பஞ்சாயத்தா இருக்கணுமின்னு சொல்லிக்கிறேன்.” நாட்டாண்மையின் பீடிகைக்கு சலசலப்பு எழும்பியது. கோல்காரன் மறுபடியும் கத்தினான். திருவேங்கடம் பேசவும் கூட்டம் அமைதியானது. “யாரோ ஒருசிலரின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஜாதிமுறை காலாகாலமாக வழங்கி வர்றதினாலேயே சரியாயிடுமா? அதை அப்படியே ஏத்துக்கணுமா? உனக்கும் எனக்கும் இந்த ஜாதிமுறை அவமானத்தையும் இழிவையும் தந்ததில்லாம வேற எதை தந்தது? இந்த முறையை கடவுள் ஏற்படுத்தினார் என்றால் அப்படிப்பட்ட ஓரவஞ்சனை கொண்ட கடவுளே…

Read More

வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்.வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation), பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனிவரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் திட்டங்கள், பிற அரசியல் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்த அடிப்படைகள் ஆகியவற்றை விளக்க முற்பட்டிருக்கிறோம். கட்சியின் கோட்பாடுகள் சென்ற பகுதியின் தொடர்ச்சி…… II – புதிய பிரச்சினைகள் 20. இதுவரை, ஆங்கிலேயர் இந்தியாவில் விட்டுச்சென்ற பழைய பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்பது குறித்துப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கண்டோம். சுதந்திரத்திற்குப் பிறகு புதிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன.…

Read More

பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் ஷெட்யூல்டு வகுப்பினரின் குறைகளை எடுத்துக்கூறி, அவற்றிற்கு தீர்வுகாண அவசியப்படும் நடவடிக்கைகள் பற்றி யோசனைகளை வழங்குகிறது இந்த கோரிக்கை மனு. குறைகளைப் பட்டியலிட்டுக் கூறும்போது, மத்திய சர்க்காரால் மட்டுமே தீர்வு காணக்கூடிய குறைகளை மட்டுமே நான் கவனத்தில் கொண்டேன். இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள குறைகள் மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியாக விவாதிக்கப்பட்டுள்ளன: (1)அரசியல் ரீதியான குறைகள் (2) கல்வி சார்ந்த குறைகள் (3)மற்ற குறைகள் அரசியல் குறைகளை பகுதி I பரிசீலிக்கிறது; பகுதி II கல்வி சார்ந்த குறைகளையும்: பகுதி III பிற குறைகளையும் எடுத்துரைக்கின்றன. இத்துடன் பகுதி IV ஐயும் சேர்ந்துள்ளேன்; அதில் இடைவிடாத துன்பகரமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்பால் ஒவ்வொரு சர்க்காரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய கடமை பற்றி துணிவுடன் பேச முற்பட்டுள்ளேன். இதை இந்திய சர்க்கார் அங்கீகரிப்பர், ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கு அவர்கள் ஆற்ற வேண்டியதை ஆற்றுவர் என்ற நம்பிக்கையில் இதைச் செய்திருக்கிறேன். சில பகுதிகளைக்…

Read More

ஆசிய ஜோதி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை  Asiya Jothi Kavimani Desiga Vinayagam Pillai  Translations from “Light of Asia” by Sir Edwin Arnold  1879 முன்னுரை 2015 Preface 1. புத்தர் அவதாரம் 2. அருள் உரிமை 3. காதல் பிறந்த கதை 4. சித்தார்த்தன் கேட்ட தேவகீதம் 5. சித்தார்த்தன் துறவு 6. புத்தரும் ஏழைச் சிறுவனும் 7. கருணைக் கடல் 8. புத்தரும் சுஜாதையும்  9. புத்தரும் மகனிழந்த தாயும்

Read More

வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்.வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation), பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனிவரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் திட்டங்கள், பிற அரசியல் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்த அடிப்படைகள் ஆகியவற்றை விளக்க முற்பட்டிருக்கிறோம். கட்சியின் கோட்பாடுகள் 1. பொது செயல் முறைகளில் கட்சியின் செயல்பாடுகள், கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் அமையும் : (i) சட்டத்தின் முன் இந்தியர்கள் அனைவரையும் சமமெனக் கருதுவதோடு, அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதும், அப்படி சம உரிமை இல்லாத இடங்களில் அதனை…

Read More

125 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவரை, பொதுவாக எப்படி மதிப்பிடுவார்கள்? நம் காலத்தோடு ஒப்பிட்டு, அவரின் பங்களிப்பு எத்தகையது என அளவிடுவோம். ஆனால், `அம்பேத்கரை மதிப்பிடும்போது மட்டும் இந்த விதியைத் தலைகீழாக மாற்றவேண்டும்’ என்கிறார் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா. `நம் காலத்தைக்கொண்டு அம்பேத்கரை மதிப்பிடவேண்டியது இல்லை. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு நாம் வாழும் சமூகத்தை நாம் மதிப்பிடவேண்டும்’ என்கிறார் அவர். அவ்வாறு செய்யும்போது அம்பேத்கரின் உருவம் மிகப் பிரமாண்டமாக நம் முன்னர் எழுந்து நிற்கிறது. `தலித் தலைவர்’ என்று மட்டும் அல்ல, `இந்தியத் தலைவர்’ என்றும்கூட இனி அவரை நாம் குறுக்கிவிட முடியாது. முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபை, அம்பேத்கரை ஓர் உலகளாவிய ஆளுமையாக அங்கீகரித்து, அவருடைய 125-வது பிறந்த தினத்தை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடியிருக்கிறது. `அவர் காலத்தைவிட இன்றுதான் அம்பேத்கர் நமக்குத் தேவைப் படுகிறார்’ என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க். `ஆப்பிரிக்க அமெரிக்கர்களின்…

Read More

சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா அம்பேத்கர் சந்தித்த விபரம் கேளுங்கடா…. இந்துத்துவ கொள்கை பிறந்தது நாகபுரி மதமாற்ற போர் தொடங்கியதும் நாகபுரி இருண்ட சிறைதானே….. இந்துமதம் அதில் இருக்கும் காலம் வரை… ஏது சுதந்திரம் சிறையை தகர்த்தி விட இலக்கை கண்டறிந்தார் மதமாற்றம் என்ற ஆயுதத்தை எடுத்தார். இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகேன் சபத்த்தை நிறைவேற்ற சமயங்களை ஆய்ந்தார் கிருத்துவம் தவறென்றார் இசுலாம் குறை என்றார் பவுத்த மார்க்கம் ஒன்றே விடுதலை தருமென்றார் அம்பேத்கர் தலைமையிலே ஐந்து லட்சம்பேர் தீக்சா பூமியிலே தழுவினர் பவுத்த நெறி அம்பேத்கர் தொடங்கி வைத்த யுத்தம் தொடர்கிறது மதமாற்றப் போரில் சேரிகள் திரள்கிறது மதமாறுவதாலே நன்மை ஏதுமுண்டோ என கேள்விகள் கேட்டவர்களுக்கு எதிர் கேள்வியை கேட்டார் இந்திய சுதந்திரத்தால் எமக்கென நன்னை என்றார் சுயமரியாதை பெற மதமாற்றமே தீர்வு என்றார் மதமாற்றம் நடந்தால் பெயர்கள் மாறிவிடும் பெயர்கள் மாறுவதால் உறவுகள் வேறுபடும் உறவுகள் வலுவடைந்தால்…

Read More

இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் அதை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது. இந்துக்கள் கூறும் எதிர்க் குற்றச்சாட்டுக்கு முதல் பதில், அடிமை முரையை இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையற்றது என்பதே. அடிமை முறை இந்துக்களின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்துக்களின் சட்டத்தை உருவாக்கிய மனு இதை அங்கீகரித்திருக்கிறார். அவருக்குப் பின் வந்த ஸ்மிருதி ஆசிரியர்கள் இதைப் பற்றி…

Read More

வெல்லமுடியாதவர் அம்பேத்கார் – பாடிக்கொண்டிருப்பவர் எழுச்சிப்பாவலர் தலித் சுப்பையா அவர்கள்

Read More

3.14 உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993. விதிகள். 1997. 3.14.1. உலர கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993. 46வது சட்டம் 1993 ஜுன் 5 1993 இச்சட்டம் உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளுவதையும் மற்றும் உலர் கழிப்பக கட்டு மானத்தையும் அல்லது இவற்றை தொடர்வதையும் தடை செய்கிறது. மேலும் உலர் கழிப்பக கட்டுமானம் மற்றும் நீருள்ள கழிப்பக பராமரிப்பு மற்றும் இத்துடன் தொடர்புடைய செயல் பாடுகள் அல்லது நிகழ்வுகளை கீழ்கண்டவாறு ஒழுங்கு படுத்துகிறது. முகப்புரை அரசியல் சட்டத்தின் முகப்புரை உத்திரவாதம் அளிக்கப் பட்டுள்ள தனிமனித மாண்பையும் சகாதரத்துவத்தையும், புனிதத்தையும் தருகிறது. அரசியலமைப்பு சட்டம் விதி. 47ன்படி பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை, மக்களின் வாழ்க்கை…

Read More