Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை. 40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக 3 கிலோமீட்டர் நடந்து, கடலாழி ஆற்றங்கரைக்கு செல்லவேண்டும். இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை, தலித்துகள் பயன்படுத்தி வந்த பாதையை நாசப்படுத்திவிட்டது. இதனால், கடந்த நவம்பர் மாதம் மரணம் எய்திய குஞ்சம்மாள் என்பவரை, பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம். ஆனால், ஊர்தெரு சாதி இந்துக்கள் பொதுப்பாதையில் பிணம் வந்தால், நீங்களும் பிணமாவீர்கள் என எச்சரித்ததால், பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பிணத்தை புதைக்க…

Read More

காலை வணக்கம். இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள். என்னைப் பரிபூரணமாக நேசித்தீர்கள். என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். கார்ல் சாகன் போல் ஓர் அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலைக் கடிதத்தை மட்டுமே. அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப் பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம்…

Read More

செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் சொல்ல முடியாமல் வாத்தியாரிடம் அடி வாங்குவேன் தோழிகளற்ற பின் வரிசையிலமர்ந்து தெரியாமல் அழுவேன் இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று சுகிர்தராணி

Read More

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 1 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 2 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 3 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 4 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 5 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 6 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 7 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 8 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 9 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 10 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 11 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 12 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 13 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 14 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 15 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 16 பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு…

Read More

கடலூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர், தன் பேத்தி ரமணிதேவியை, கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார். காரணம்? வேறு ஒரு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக. தன் சந்ததி தழைத்து, செழித்து வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதே மூத்த தலைமுறையின் குணம். பேரன், பேத்திகள் விரும்பும் ஒன்றை, அவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பெற்றுத்தருவதுதான் தாத்தா, பாட்டியின் பண்பு. ஆனால், நெகிழ்ச்சி மிகுந்த அந்த உறவும் பாசமும் சாதிவெறியின் முன் செல்லாக்காசாகிவிட்டது. ‘நான் ஊர் நாட்டாமை. ஊருக்கே முன்மாதிரியாக இருக்கவேண்டிய என் குடும்பத்தில் இப்படி நடந்தால், என் கௌரவம் என்னாவது?’ என்கிறார் வீராச்சாமி. குடும்ப கௌரவம் என்பது இங்கு சாதி கௌரவம்தான். சாதியைக் கௌரவமாகக் கருதும் இழிவான மனப்போக்குத்தான் இத்தகைய இரக்கமற்ற கொலைகளைச் செய்யவைக்கிறது. கோகுல்ராஜ் தொடங்கி எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும். இந்தப் படுபாதகக் கொலைகள் எதற்கும் அழுத்தமான எதிர்க்குரல்கள் எழவில்லை. இந்த மௌனம்தான் பேரச்சம் தருவதாக…

Read More

ஒரு குறிப்பு : நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரம் அழிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2001ல், பழங்கால கலைச் செல்வம் எனஅழைக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலை, அழிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இசுலாமிய மதக்கொள்கைக்கு எதிரான இந்து மதக்கொள்கை என்பதால் புத்தர் சிலை அழிக்கப்பட்டதென ஆப்கனின் தாலிபான்களால் விளக்கம் சொல்லப்பட்டது. ஒரு பழங்கதை : உண்மையில் இதுவொரு பழங்கதை தான் என்பதில் ஐயம் இல்லை. ஆப்கானிஸ்தானின் புதிய நில உரிமையாளர்களான தாலிபான்கள் கலாச்சார நினைவுச் சின்னங்களை, குறிப்பாக மத சம்பந்தப்பட்ட அனைத்துச் சின்னங்களையும் அழித் தொழிப்பதில் தீவிர ஈடுபாடு காட்டி வரு கின்றனர். அது மட்டுமின்றி, பழைய கலாச்சாரச் சின்னங்களை அழித்துவிட்டு, அதன் சுவடே தெரியாமல், அதன் மீது புதியவைகளை கட்டமைக்க முனைந்துள்ளனர். பழைய செயல்பாடுகள் குறைந்து வருகின்றன அல்லது தீண்டத்தகாத செயல்பாடுகள் எனக் கூறிவருகின்றனர். குறிப்பாக விவாக சடங்குகள், உணவுப் பழக்கங்கள் முதலிய செயல்பாடுகளில் தாலிபான்களின் கவனம் அதிகரித்து வந்துள்ளது.…

Read More

ஐப்பசி மாதம் தொடங்கியதும் அடை மழையும் தொடங்கிவிட்டது.வானில், நீல நிறம் மறைந்து, நிழல் குவிந்து கிடப்பதைப்போல் மேகங்கள் குவிந்துகிடந்தன. இடைவிடாமல், ‘பிசு பிசு’வென்று தூறிக்கொண்டேயிருந்தது. மரங்கள் எல்லாம் நனைந்து குளிரால் மரத்துப் போய் நின்றிருந்தன. பறவைகள் தம் சிறகுகளை இறுக்கி அணைத்து, இமைகளை மூடிக்கொண்டு கூடுகளில் ஒடுங்கிக்கிடந்தன. அன்று மாலை மழையின் வேகம் சற்றுத்தணிந்தது. ஆனால் அடிக்கொரு தடவை வீசிய ‘சில்’லென்ற குளிர்காற்று, உடலைப் பிடித்து உலுக்கிவிட்டுச் சென்றது. எங்கு பார்த்தாலும் தரை சில்லிட்டுக்கிடந்தது தெருவில் நடந்துபோக முடியாமல் ஜனங்கள் திணறினார்கள். ஓரணாக் கொடுத்து வண்டியேற அஞ்சி, ஒன்றரை மைல் நடப்பவர்கள் கூட, அன்று பல்லைக் கடித்துக்கொண்டு வண்டியேறினர். ‘சுளீர், சுளீர்’ என்று தாக்கும் குளிர் காற்று அவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டுபோய், வண்டியினுள் நுழைத்து முடிச்சை அவிழ்க்க வைத்தது. தெருவின் ஓரத்திலே ஒதுங்கி நின்ற பிச்சைக்காரர்கள் தங்க இடமின்றித்தவித்தனர். அவர்களின் கந்தல் உடையால் குளிரைத் தடுக்க முடியவில்லை. வேழத்தின் வாய்ப்பட்ட…

Read More

சாதிமல்லி அக்ரகாரச் சாக்கடையில் – நீ ஆகாயத் தாமரைப்பூ வக்ரகாரக் காடுகளில் வளர்ந்ததொரு குறிஞ்சிப்பூ ஆரியச் சந்தையினில் அவளோர் அரளிப்பூ ஆதித்தமிழன் நான் அவள்தான்என் முல்லைப்பூ மனமெல்லாம் மரிக்கொழுந்து மயிலே! நீ மல்லிகைப்பூ மல்லுகட்டும் சிறுக்கி நீ மறுநொடியில் மருதப்பூ சிலநேரம் வேண்டுமென்றே செய்திடுவாய் தப்பு சென்றுநான் வரும்வரை நீ சிலையான நெய்தல்பூ ஆரியத்தின் உதடுகளில் சேரியின் உதடுகள் செய்கின்ற காரியத்தில் சிலிர்த்திடும்உன் பூரிப்பு துக்கத்திலும் தூக்கத்திலும் துளிர்ந்துஎழும் உன்நௌப்பு கக்கத்தில் என் காதல்ஏறி முத்தம்தரும் தித்திப்பு உள்ளத்தில் எனைக்கிடத்தி ஒளித்துவைத்த மாராப்பு சொல்லவாய் திறக்க அய்யோ சிவந்தமுகம் மத்தாப்பூ எள்ளளவும் குறையாது எனைப்பற்றி யோசிப்பு எப்படிநாம் சேர்வது; உன் எண்ணமெங்கும் படபடப்பு அத்திப்பூ ஆசைப்பூ அழகுவனச் சோலைப்பூ எப்பொழுதும் நம்வாழ்வில் இல்லையடி பாலைப்பூ – கவிஞர் வெண்ணிலவன்

Read More

புத்தரையும், காரல் மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இது குறித்து வியப்படைய ஏதுமில்லை. புத்தருக்கும் மார்க்சுக்கும் 2381 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563 இல் பிறந்தவர். காரல் மார்க்ஸ் கி.பி. 1818 இல் பிறந்தவர். மார்க்ஸ் புதிய தத்துவமான அரசியல், அரசியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறையை அமைத்துத் தந்தவர். மாறாக, புத்தர் ஒரு மதத்தைத் தோற்றுவித்ததைவிட அதிகம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் துளியும் தொடர்பில்லாதவராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.இந்தக் கட்டுரையின் தலைப்பு, “புத்தரா காரல் மார்க்சா’. இது, இவ்விருவரிடையே உள்ள ஒற்றுமையையும் முரண்பாடுகளையும் வெளிக்கொணர்கிறது. இவ்விருவரும் பல நூற்றாண்டு கால இடைவெளியால் பிரிக்கப்பட்டவர்கள்; மாறுபட்ட துறையைச் சார்ந்தவர்கள்; வெவ்வேறு சிந்தனையைக் கொண்டவர்கள். எனவே, இவ்விருவரையும் ஒப்பிடுவது விந்தையாகக் கூட தோன்றலாம். புத்தரையும் மார்க்சையும் ஒப்பிடுவது கண்டு மார்க்சியவாதிகள், எள்ளி நகையாடலாம். மார்க்ஸ் நவீன சிந்தனையாளர் எனவும், புத்தர் தொன்மையானவர் என்றும் கூட…

Read More

“தீண்டாமைப் பிரச்னை பற்றி அறிவுஜீவுகள் பேசுவது இல்லை!” விருது விழாவில் விளாசிய அருந்ததி ராய் “ஜனநாயகமும் நவீன பொருளாதாரச் சந்தையும் சாதியை நவீனமாக்கி அதன் பிடியை மேலும் இறுக்கி இருக்கின்றன. இந்தியாவின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், எழுத்தாளர்கள் தொடர்ந்து சாதியப் பிரச்னைகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறைந்த அளவில் பதிவு செய்கிறார்கள். இதைத்தாண்டி அவர்கள் சாதியப் பிரச்னைகளைப் பேசுவது தேர்தல் காலங்களில் மட்டும்தான். பொருளாதார ஊழல்கள் குறித்துப் பேசுவதும் அதைப் பிரச்னையாக்குவதும் இப்போது மிக நாகரிகமான விஷயமாக உள்ளது. ஆனால், தீண்டாமை என்கிற ஊழல் பற்றி மிகச் சிறந்த அறிவுஜீவிகளும் வரலாற்று ஆசிரியர்களும் கேள்வி எழுப்புவதில்லை” என்று குற்றம்சாட்டினார் எழுத்தாளர் அருந்ததி ராய். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் சிறப்பாகப் பணியாற்றும் ஆறு பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 3-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற…

Read More