Author: sridhar

இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால், கயிறு அசைந்து ராட்டினத்தில் இருந்து ஒலி எழும்பிக்கொண்டு இருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்துக்கு. லேசான வெளிச்சக் கோடுகள் வந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது. மடியில் தூங்கிக்கொண்டு இருந்த தன் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள். அமிர்தத்துக்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாகப் பாடித் திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு இப்படித் துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியா ருடன் போட்ட சண்டையில் வீட்டுக்கு வெளியே துரத்தப்பட்டவள், இரவெல்லாம் இப்படிக் கிணற்றின் அருகிலேயே உட்கார்ந்து இருக்கிறாள். தன்னுடைய முந்தானையை எடுத்துத் தலையில் இருந்து கால் வரை இழுத்துப் போர்த்தி, ஒரு கூடாரத்தைப் போலாக்கி, கால்களை மடக்கித் தொட்டிலாக்கி, அதில் குழந்தையைப்…

Read More

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (பள்ளி மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது)   அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு  தொகுப்பாசிரியர்கள் : பூங்கா மனோகரன், சாந்தமூர்த்தி முதல் பதிப்பு : 14 அக்டோபர், 2009 | பக்கம் : 64 வெளியீடு டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் மிஷன், 19/44, திருநகர், வில்லிவாக்கம்,  சென்னை – 600049   தொகுப்பாசிரியர்கள் குறிப்புகள் பூங்கா மனோகரன்  பூங்கா மனோகரன், காஞ்சிபுரத்தில் அர. பூங்காவனம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) – காசியம்மாள் அவர்களின் மூத்த மகனாக 16.06.1954 அன்று பிறந்தார். சென்னை இலயோலா கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், இளம்கலை வணிகவியல் பயின்றபோதே,   செட்யூல்டு மாணவர் போராட்டக் குழுவை அமைத்தார். 1984ல் வேலூர் – திருப்பத்தூரைச் சார்ந்த சிறந்த சமூக சேவகரான, வெல்ல வியாபாரி எத்துராஜ் – திருமதி. கமலம்மாள்  அவர்களின் மகள் திருமதி எ. இராஜகுமாரி அவர்களை மணம் முடித்தார்.  மகன் கௌதம், மகள் சங்கமித்ரா…

Read More

அக்காலத்தில் பார்ப்பனர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களை கவுரவிப்பதற்கு பசுவைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி “கோக்னா’ என்று அழைக்கப்பட்டு வெறுக்கப்பட்டார். இதுபோன்றே பசு வதையைச் செய்பவர்கள் என்று பார்ப்பனர்கள் அனைவரும் வெறுக்கப்பட்டு வந்தனர். இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக யக்ஞத்தை நிறுத்துவதையும், பசு வதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பவுத்தர்களுக்கு எதிராக தங்கள் நிலைமையை மேம்படுத்திக்கொள்ள  பார்ப்பனர்களுக்கு வேறு வழியில்லை. மாட்டிறைச்சி உண்பதை பார்ப்பனர்கள் நிறுத்தியதன் நோக்கம் பவுத்த பிக்குகளிடமிருந்து மேலாதிக்கத்தைக் கைப்பற்றுவதே என்பது, பார்ப்பனர்கள் மரக்கறி உணவுக்கு மாறியதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பார்ப்பனர்கள் சைவ உணவாளர்களாக மாறியது ஏன்? அவர்கள் மரக்கறி உணவாளர்களாக மாறவில்லை என்றால் தங்களுடைய எதிராளிகளிடமிருந்து அதாவது புத்த மதத்திடமிருந்து தாங்கள் இழந்த செல்வாக்கை மீட்க முடியாது என்பதே இக்கேள்விக்கு அளிக்கக்கூடிய சரியான பதிலாக இருக்க முடியும். புத்த மதத்துடன் ஒப்பிடும்போது, பார்ப்பனியம் பொது மக்களின் நன்மதிப்பை…

Read More

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவினை விரும்புகின்றனரா, இல்லையா என்பதுதான் முக்கியக் கேள்வி. இக்கேள்வி தாழ்த்தப்பட்ட மக்களால் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று, வாழ்வியல் சார்ந்த பார்வை. அதிலிருந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உயர்விற்கான உறுதியான வழி கல்வி, உயர் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பட்ட வருமானத்திற்கான வழிகளில் இருப்பதாகவே நினைக்கின்றனர். சமூக வாழ்வில் நல்ல இடத்தில் தாங்கள் அமர்ந்து விட்டால், பழமைவாதிகள் இவர்கள் மீது கொண்டிருக்கும் மதம் சார்ந்த பார்வை மதிப்பானதாக மாறும் என்று நம்புகின்றனர். ஒருவேளை அப்படி மாறாவிடினும், அது எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வியல் நலன்களைப் பாதிக்கப் போவதில்லை என நம்புகின்றனர். இந்த அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் திறனையும் பலத்தையும் கோயில் நுழைவு போன்ற ஒன்றுமில்லாத விஷயங்களில் செலுத்தப் போவதில்லை என்று கூறுகின்றனர். அதற்காக அவர்கள் போராடாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அந்த வாதமானது, சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்ட வாதம். இந்தியாவில் உள்ள அய்ரோப்பியர்கள் தங்கும் விடுதிகள் முன்பும், மற்ற சமூக விடுதிகளிலும், “நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை” என்ற அறிவிப்புப்…

Read More

இனப்படுகொலை எத்தனை பயங்கரமானதென நாம் அறிந்தே இருந்தோம். அது, மனிதநேயமும் நெறிகளும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் மீறலென நமக்கு தெரியும். வெறுப்புணர்வு எவ்வளவு வீரியமிக்கதென, மனித உயிர்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வரலாறு நமக்குச் சொல்லியது. எனினும் மிக அண்மையிலும், மிக அருகிலும் இனப்படுகொலையின் நிகழ்காலப் பேரவலம் நடந்தேறியிருக்கிறது. இனவெறித் தாக்குதல்களின் வரலாறாகப் படித்தறிந்தவை எல்லாம் – இத்தனை நெருக்கத்தில் பார்வைக்கு கிடைக்குமென நாம் நம்பியிருக்கவில்லை. ஈழத்தின் கொலைக் களத்திலிருந்து தெறித்து விழுந்த ரத்தத்தின் கறை, நம் முகங்களில் காய்ந்து அப்பியிருக்கிறது. நாமெல்லோரும் அதை நினைத்து துடித்துப் போகிறோம். சக மனிதனை வாழ அனுமதிக்காமல், தலைமேல் குண்டு போட்டு கொலை செய்யும் வெறுப்புணர்வின் ஆழம் நம்மை அச்சுறுத்துகிறது. புத்தரை வழிபட்டு பவுத்த நெறிகளை வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றவர்களால் – இப்படியொரு மாபாதகத்தைச் செய்ய முடிகிறதெனில், ஆதிக்கவாதிகளுக்கு மொழியோ, மதமோ, இனமோ பொருட்டில்லை. எங்கிருந்தாலும் அவர்கள் அழிவை மட்டுமே நம்புகின்றனர். சிங்கள இனவெறி இதயத்தை…

Read More

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 3 பொருளடக்கம் பக்கம் பகுதி -1 அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தம் பற்றியவை 1.    வரவு செலவுத் திட்டம் பற்றி: 1                     …          24.2.1927 1 2.    வரவு செலவுத் திட்டம் பற்றி: 2                     …          21.2.1927 9 3.    வரவு செலவுத் திட்டம் பற்றி: 3                     …          2.3.1938 15 4.    வரவு செலவுத் திட்டம் பற்றி: 4                     …          21.2.1939 33 5.    நிதிச் சட்டத்திருத்த மசோதா                          …         28.8.1939 55 6.    கல்வி மானியம் பற்றி                                     …         12.3.1927 61 7.    பம்பாய்ப் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதா பற்றி : 1                               …         27.7.1927 71 8.    பம்பாய்ப் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதா பற்றி : 2                              …          1.10.1927 85 9.    பம்பாய்ப் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதா…

Read More

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தத்தில் இணைந்த 44 ஆண்டுகளுக்குப் பின், அவர் பௌத்தத்தில் இணைந்த அதே நாளில் சென்னையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஒடுக்கபட்ட மக்களின் சமூக அரசியல், பண்பாட்டு அடையாளங்களை உலகறியச்செய்யும் நோக்குடன் தொடங்கபட்டு இயங்கிக்கொண்டிருக்கிற www.ambedkar.in   தமிழ் இணையதளத்தின் மூலம் பௌத்த நெறியேற்பு விழா மற்றும் பௌத்த நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது, விழாவில் வணக்கதிற்க்குரிய பிக்கு அசின் வக்கவா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பௌத்தம் தழுவினர். பௌத்தம் தழுவியவர்களுக்கு www.ambedkar.in  சார்பில் (ஒரு டன் அளவுள்ள) பௌத்த நூல்கள் வழங்கபட்டன. விழாவில் எழுத்தாளர்.யாக்கன் பொதுச்செயலாளர் – மாற்றுப் பத்திரிக்கையாளர் எழுத்தாளர் பேரவை, அம்பேத்கர் இண்டர்நேஷ்னல் மிசன் தலைவர் திரு.சாந்தமூர்த்தி, பேராசிரியர் க.ஜெயபாலன், கௌதம சன்னா (கருத்தியல் பரப்பு செயலாளர் – வி.சி.க), www.ambedkar.in  நிர்வாகிகள் ஸ்ரீதர், இரமணன், சசிகுமார், ராஜெஷ்வேல், லெமுரியன் ராஜசேகர் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக எழுச்சி தமிழர் வழங்கினார். நம்மை எல்லாம் மனிதர்களாய் தலைநிமிர…

Read More

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளில், அக்டோபர் 14,2010 சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் http://www.ambedkar.in நடத்திய பௌத்தநெறியேற்பு விழா – பௌத்த நூல்கள் வழங்கும் விழாவில் எழுத்தாளர் திரு.யாக்கன் அவர்களின் உரை.

Read More

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 2 பொருளடக்கம் பக்கம் பம்பாய்ச் சட்டமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் 1.    சவுத்போரா குழுவின் முன் அளித்த சாட்சியம் 1 2.    கூட்டாட்சியா ? சுதந்திரமா? 53 3.    சமூகத் தடையும் அதைத் தீர்க்கும் வழியும் 161 4.    மாநிலங்களும் சிறுபான்மையினரும் 199 பகுதி – 2 பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து 5.    இந்தியாவில் சிறு நிலயுடைமைகளும் அவற்றிக்கான தீர்வுகளும் 285 6.    திரு ரஸ்ஸலும் சமுதாய சீரமைப்பும் 325

Read More