Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.
தி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் – ரவிக்குமார் தமிழக தலித் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த தி.பெ.கமலநாதன் மறைந்து விட்டார். 1923ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் ஏ.பி.பெரியசாமி புலவருக்கும், கனகபூஷணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கமலநாதன் தனது எண்பத்து நான்காவது பிறந்த நாளில் (04.11.2007) சென்னையில் காலமானார். அவருக்கு டாக்டர் தவமணி (74) என்ற மனைவியும், வித்யா ராஜேந்திரன் (39), டாக்டர். சுமித்ரா முருகன் (33) என்ற இரு மகள்களும் உள்ளனர். ‘வரலாற்று நூல்களைக் கையில் வைத்திருக்கும்போது கடந்த காலத்தையே நாம் கைக்குள் வைத்திருப்பதுபோன்ற மாயையில் நாம் இருக்கிறோம்.ஆனால் வரலாறோ நமது விரல்களுக்கிடையே நழுவிக்கொண்டிருக்கிறது அல்லது நமக்கு எட்டாத இடத்தில் இருக்கிறது’ என்றார் ரோபர்ட் டார்ன்டன் என்ற வரலாற்றறிஞர்.ஆனால் அதை இன்னும் நமது வரலாற்றாளர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.நமது ‘சிந்தனையாளர்களோ‘ தலித் மக்களுக்கென ஒரு வரலாறு இருக்கிறது என்பதையே ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களுக்கு கமலநாதன் என்று ஒருத்தர் இருந்ததோ, இறந்ததோ பொருட்படுத்தத்…
2012 நவம்பர் மாதம் 12 ஆம் நாள் முதல் தருமபுரியை மையமாக வைத்து சாதி வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட வெறியாட்டங்களை எந்தவித மனசாட்சியும் இன்றி தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சினிமாக்களில் காதலர்களைக் கொண்டாடும் இளையோர் கூட்டமும் காதலின் பெயரால் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஈழத்தில் கொல்லப்படும் மக்கள்தான் தமிழர்கள் என்று அவர்கள் கண்டுபிடித்த காரணத்தினால் தமிழகத்தில் தமிழர்கள் இல்லை மாறாக எல்லோரும் சாதியர்களாக இருக்கிறார்கள் என்று அமைதியாக இருந்தார்கள். வடதமிழகம் சாதி வெறிபிடித்தவர்களால் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. மக்களின் மனசாட்சி சாதியத்தினால் மறத்துப்போன நிலையில் இளவரசன் திவ்யா காதல் நிர்க்கதியாக நின்றது. சாதி வெறிபிடித்த வன்னியர்களின் கையில் அவர்களது காதல் கதறியழுதது. யாரும் மனம் இறங்கவில்லை.. ராமதாசின் அடிவருடிகள் குரூரத்தின் உச்சத்தில் கொட்டம்போட்டார்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல திவ்யா நீதிமன்றத்தில் நான் இளவரசனுடன் வாழ விரும்புகிறேன் என்று சொன்னார். ஆனால் திவ்யா வாழ விரும்புவதை…
கிழக்கு கடற்கரை சாலையில் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ளது மரக்காணம். சாலையில் ஒரு பக்கம் உப்பளங்கள். மறு பக்கமோ கண்ணீர் கடலாக காட்சியளிக்கிறது இப்போது. மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர்களின் குடும்பவிழாவுக்கு வந்தவர்களால், மரக்காணம் கட்டையன் தெருவில் உள்ள குடும்பங்கள் இன்று குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றன. பல்வேறு ஊர்களிலிருந்து சித்திரை முழுநிலவு விழாவுக்கு வந்தவர்கள் வழிநெடுக ஆடிய தாண்டவத்தையும் செய்த அட்டகாசங்களையும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் காண முடிந்தது. மகாபலிபுரம் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் வாசலில் திருமாவளவன், ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு கரிபூசப்பட்டிருக்கிறது. இதைத்தான் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ‘தேசிய தலைவர்களின் படங்கள் அவமதிக்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டார். புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன. மகாபலிபுரம் கடற்கரை கோயிலின்மீது ஏறி நின்றுகொண்டு அங்கும் கொடிநாட்டியவர்களின் மேல் தொல்பொருள்துறையின் வழக்கு பாய்ந்திருக்கிறது. பிரதான சாலையில் ஆங்காங்கே மரங்களின் உச்சிகளில் வன்னியர்…
பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 6 இந்து மதத் தத்துவம் உள்ளடக்கம் பக்கம் எண் பகுதி – 1 இயல் 1. இந்துமதத்தத்துவம் பகுதி 2 இந்தியாவும் பொதுவுடமைக்கான முற்படு தேவைகளும் 5 இயல் 2 : இந்து சமூக அமைப்பு – அதன் இன்றியமையாக் கோட்பாடுகள் 129 இயல் 3 : இந்து சமூக அமைப்பு – அதன் தனித்தன்மைகள் 157 இயல் 4: இந்து மதத்தின் அடையாளங்கள் 177
பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5 பொருளடக்கம் பக்கம் வட்டமேசை மாநாடுகளில் டாக்டர் அம்பேத்கர் 1. மாநாட்டின் முதன்மைக் கூட்டத்தில் ஐந்தாம் அமர்வு … 20.11.1930 2 2. வட்டமேசை மாநாடு துணைக்குழு – I -இல் இடைக்கால அறிக்கை மீது கருத்துக்கள் … 13 3. துணைக்குழு – II இல் (மாநில அரசமைப்பு) முதல் அமர்வு … 4.12.1930 மூன்றாவது அமர்வு … 8.12.1930 நான்காவது அமர்வு … 9.12.1930 நான்காவது அமர்வு … 15.12.1930 இரண்டாவது துணைக்குழுவின் (மாநில அரசியலமைப்பு) அறிக்கையின் மீதான கருத்துரைகள் … 9.12.1930 17 23 23 35 39 4. துணைக்குழு III-இல் (சிறுபான்மையோர்) இரண்டாம் அமர்வு … 31.12.1930 ஐந்தாம் அமர்வு … 14.1.1930 ஆறாவது அமர்வு … 16.1.1931 பின்னிணைப்பு 1 … ….. பின்னிணைப்பு 2 … …
புரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம். மணிகூண்டு திடல்,உளுந்தூர்பேட்டை, தேதி: 13.10.2012
ஒரு படைப்பாளியின் மெல்லிய உணர்வுகள் சுற்றிலும் நடைபெறும் அநீதிகளின் வன்முறையால் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றன. நியாயமற்ற சமூகத்தினால் குத்திக் கிழிக்கப்பட்ட அந்த “ஆன்மா’ தன் வலியை இந்த உலகத்திற்கு உணர்த்த படைப்பை நாடுகிறது. தான் அடைந்த வன்மத்தின் வேதனையை அடுத்தவருக்குக் கடத்திச் செல்லும் படைப்பை எல்லோராலும் உருவாக்கிவிட முடியாது. “தகுதி’யும், “திறமை’யும் மட்டுமே கொண்டு – வலியை உணர்ந்தே இராத பல படைப்பாளிகளால் – தலை சிலுப்பி ஆட்டமிடும் சமூகத்தின் ஒரு மயிர்க் காலைக்கூட அசைத்துப் பார்க்க இயலாது. பசியை உணர்ந்தறியாத எந்தக் கரங்களாலும் இங்கே தண்ணீரைத் திராட்சை ரசமாக்கும் அதிசயத்தை நிகழ்த்த முடியாது. இந்த மண்ணிலிருந்து கடத்தப்படவேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. இதுவரை சொல்லப்படாத, சொன்னால் கூட உலகம் நம்ப மறுக்கும் கதைகள் உள்ளன. “பீ’ (shit) என்ற சொல் இன்றளவும் அனைத்து நாடுகளிலும் மக்கள் மன்றங்களில் உச்சரிக்கப்படக் கூடாத (unparliamentary) சொல்லாகத்தான் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜாதியின் பெயரால் மலத்தைக்…
ஆதித்தமிழர் பேரவை திருநெல்வேலியில் நடத்திய மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாள் விழாவில் எங்களின் “சாதி ஒழிப்பு ஒலிநூல்” அறிமுக விழா நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அய்யா அதியமான் ஒலிநூலை வெளியிட சிபி(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ஆதித்தமிழர் பேரவை தோழர் நீலவேந்தன் அம்பேத்கர்.இன் குழுவினரின் இம்முயற்ச்சியை பாராட்டி பேசினார்.
ட்ரீ இந்தியா அறக்கட்டளை சார்பில் எமது அம்பேத்கர்.இன் வெளியீடான ‘புரட்சியாளரின் சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக விழா 05.08.2012 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஜி.என்.ஜெ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரா.முனைவர்.அம்பேத்கர் பிரியன், அய்யா திருவள்ளுவர், தோழர் யாக்கன், ச.சு.ஜைனுதீன், பேரா.சு.சக்திவேல், முனைவர் ஜெ.மகாலட்சுமி, ஆசிரியர் பேபிகலா ஆகியோர் நிகழ்ச்சியில் சாதிஒழிப்பு நூல் குறித்து சிறப்புரையாற்றினர். அம்பேத்கர்.இன் சார்பில் சென்னையிலிருந்து சசிகுமார், லெமுரியன், கமல் மற்றும் நானும் விக்ரவாண்டியிலிருந்து தோழர் கருணாநிதியும் கலந்து கொண்டோம். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26 தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை எள்ளளவும் மாற்றமுடியாது என்று கூறிவிட்டார். இதனாலேயே மாநாடு நடைபெறவில்லை. ஆனாலும்,இவ்வுரையை அம்பேத்கர் ஒரு நூலாக ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூலைத் தமிழில் ஜாதியை ஒழிக்க வழி என்ற பெயரில் வெளியிட்டவர் தந்தை பெரியார். (இந்த வரலாற்றுக் குறிப்பை ஏனோ இந்த ஒலி நூலில் குறிப்பிடவில்லை) ஒன்பது மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல் இன்றளவும் ஒடுக்கப்பட்ட…