Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

“உலகம் முழுக்க எத்தனையோ உரிமைப் போராட்டங்கள் நடக்கின்றன. அவை அனைத்தும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து பிரிந்துபோவதற்கான போராட்டங்களே. பாலஸ்தீனம் தொடங்கி ஈழம் வரைக்கும் எல்லாமே அப்படித்தான். ஆனால், இந்த நாட்டின் 20 சதவிகித தலித் மக்கள், பெரும்பான்மை மக்களோடு சேர்ந்து வாழ்வதற்காக மூவாயிரம் ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த வித்தியாசத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். யாரும் ‘தலித் நாடு’ அமைக்கப் போராட வில்லை. ‘எங்களைச் சேரிக்குள் ஒதுக்கித் தனிமைப்படுத்த வேண்டாம். சேர்ந்து வாழ்வோம், அன்பாக இருப்போம்’ என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்!” உணவு, உடை, பேச்சு, இலக்கியம், அரசியல், சினிமா, திருமணம், சாவு, கலாசாரம் எனச் சகல இடங்களிலும் நிறைந்திருக்கும் அசூசையான சாதிக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கிறது எழுத் தாளர் அழகிய பெரியவனின் குரல். ‘குறடு’ என்ற இவரது சிறுகதை பொன்.சுதாவின் இயக்கத்தில் ‘நடந்த கதை’ என்ற பெயரில் குறும்படமாக வெளியானது. அது இப்போது உலகக் குறும்பட விழாவில் சிறந்த இந்தியக் குறும்படமாகத்…

Read More

எதுவுமே தேவையில்லை அது அத்தனை சுலபமானது கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம் சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில் வெற்றுக்கால்கள் கொப்பளிக்க நடக்கவொன்றும் தேவையில்லை தலைமீது கல்சுமந்து கழுத்து நரம்புகள் புடைக்க வேண்டாம் சுடும் வெயிலில் நடைபாதைகளில் தலைகாயக் குந்தி காலணிகளைப் பளபளப்பாக்கி காசுக்கு கையேந்த வேண்டியதில்லை மேனிகருக்க நிறுத்தங்களில் கூடைபழங்களை கூவிவிற்க குரல் வற்ற அவசியமில்லை வியர்வை உடல்நனைக்க கட்டாந்தரையை பண்படுத்த வாழ்வை பலி கொடுக்க வேண்டியிராது மகள் படிக்க காசில்லாமல் மாற்றுத் துணியில்லாமல் ஆண்டையிடம் அவமானப்படத் தேவையில்லை ஆம் அது அத்தனை சுலபமானது காவிகட்டிக் கொண்டு கண்ணைமூடி சாமியாராகிவிடுவது கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும் அறிவாய் நீ மனமே.

Read More

ஒவ்வொரு களப்பணியாளரும், சமூகத் தொண்டரும் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கின்றனர். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப் பணியாளரை, சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். ஆனால், பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்துதான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர், சாதி ஒழிப்புப் போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்புப் போராளியாக அறியப்படுகிறார். பெரியார் சாதி ஒழிப்போடு சேர்த்து, பெண்ணுரிமைக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்தார். அதனால் அவர் பெண்ணியவாதியாகவும் அறியப்படுகிறார். அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட எழுத்துகளினூடாகத் தேடி, அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை கண்டெடுக்க வேண்டும். ஏனெனில், அவர் பெண்ணியத்தை ஒரு தனி செயல்திட்டமாக வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாகவே அவருக்கு எல்லாவற்றையும் விட சாதி ஒழிப்பும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும்தான் முக்கியமானதாக இருந்திருக்க…

Read More

அந்தச்சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்றும் அதன் மூலச்சொல் தல் என்றும் அறியப்படுகிறது. தல் என்றால் உடைந்தவை, பிரிக்கப்பட்டவை, நொறுங்கியவை, கிழிந்தவை, மிதிபட்டவை, சிதறடிக்கட்டவை, அமிழ்த்தப்பட்டவை, அழிக்கப்பட்டவை என்று பல அர்த்தங்களில் புரியப்படும். வரலாறு நெடுகிலும் மதத்தாலும் சமூகக் கட்டுமானங்களினாலும் கொடுமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கென அடயளமில்லாது காலம் வெறும் வெற்றுத் தாளாய் கழிந்து போயிருந்தது. என்னைக் கருவுற்றிருக்கும்போது என்தாய் தெள்ளித் தின்ற மண்ணைத்தவிர எனது மண் எது எனும் யுகக்கேள்வியோடு புதைந்து கிடந்தார்கள். சென்ற முப்பது நாற்பது வருடங்களில்தான் பெயரே இல்லாமல் இருந்த அவர்களுக்கு, ஒரு புதிய பெயர் மேலெழுந்து வந்ததிருக்கிறது. வடமாநிலங்களில் மட்டுமே புழக்கத்திலிருந்த இந்தச் சொல் “பாசா சபத் கோஸ்” என்கிற வடமொழி அகராதியில், முன்னேற்றமில்லாத பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பகுதி என்று பொருள்படுத்தப் பட்டிருக்கிறது. தீண்டப்படாத இந்துக்களாகிய ‘அச்சுத்’, தொண்ட்டூழியம் செய்கிற ‘சூத்ரா’ ஆகியோரை உள்ளடக்கிய சொல் இது. உச்சி ஜதான் எனும் உயர் ஜாதியினரால் மிதித்து நசுக்கப்பட்ட (ஹினி ஜாதி)…

Read More

சாதியின் இருள் கொட்டடிகளில் அடைபட்டிருந்த தலித் மக்களை துணிச்சலுடன் மீட்பதற்கு, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் களமிறங்கினார்கள். அவர்கள் விடுதலையின் சூரியனை திசை மாற்றி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் மீது விழ வைத்தனர். ரெட்டமலை சீனிவாசன் அவர்களில் ஒருவர். அவர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தலித் மக்களுக்காகப் போராடியவர். இதழ் நடத்தியவர். உலகம் சுற்றியவர். அரசியலில் பங்கேற்றவர். அண்மையில் அவர் பிறந்த சூலை மாதத்தில் தமிழக அரசு, சென்னை காந்தி மண்டபத்தின் ஒரு மூலையில் ரெட்டமலை சீனிவாசனுக்கு சிலை எழுப்பியுள்ளது. ரெட்டமலை சீனிவாசன் நிச்சயமாக இப்படி நினைவு கூரப்படவேண்டிய ஒரு தலைவர் அல்லர். தமிழக அரசும் தலித் மக்களும் அவரை மிகச் சிறப்பாக நினைவு கூர்ந்து கொண்டாடி இருக்க வேண்டும். இந்தியாவில் தலித் மக்களின் காலம்-அவரிடமிருந்தும், அவரைப் போன்ற ஒரு சிலரிடமிருந்தும்தான் தொடங்குகிறது. தலித் மக்களின் நவீன வரலாற்றின் முதல் வரியை எழுதியவர் ரெட்டமலை சீனிவாசன். ரெட்டமலை சீனிவாசனின் வாழ்க்கை-தேடல், ஆர்வம், தன்…

Read More

மவுனத்தின் மீது சொல்லெறியுங்கள்; அது உண்மை களைப் பேசும் என்பது ரகசியனின் கனவு. தலித் மக்களின் விடுதலை என்பதை எப்போதும் கனவாக்கித் திரியும் அவருடைய மனநிலை ஒரு எழுத்தாளருக்கு உரியது மட்டுமல்ல; களப்பணியாளன் ஒருவனின் சிந்தனையும்கூட. சாதி இந்துக்களுடன் நாள்தோறும் போரிடும் அவரின் நனவிலி மனநிலை, தன்னை தலித் எழுத்தாளராக உந்துகிறது என்பது அவரின் வெளிப்படையான கூற்று. ரகசியன் என்ற அழகியல் பெயரை அவர் புனைந்து கொண்டாலும் அவருடைய கவிதைகள் வெளிப்படையானவை. வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்திலிருக்கும் கெம்மன்குப்பத்தில் பிறந்த இவர், தற்பொழுது சேத்துவாண்டையில் வசிக்கிறார். தன்னுடைய அண்ணன் சுரேஷ்குமாரிடமிருந்துதான் கவிதை எழுதும் உணர்வைப் பெற்றிருக்கிறார். குழந்தையாக இருக்கும்போது அம்மா அவரை”எங் கவிஞரே’ என்றுதான் கொஞ்சுவார்களாம். அந்த தற்செயல் இப்போது தன்னை எழுத வைக்கிறது என்று தன் தாயின் நினைவினை வாஞ்சையோடு சொல்கிறார் ரகசியன். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஏதோ ஒரு வகையில் அவருடைய குடும்பம் ஆக்கங்களுக்கான ஒரு காரணமாகத்தான் இருந்திருக்கிறது. ரகசியனின்…

Read More

அண்ணல் அம்பேத்கரின் வாழ்வில் மிகவும் முதன்மையாகக் கருதக்கூடிய மூன்று நாட்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது நாள், 1927 டிசம்பர் 21. அன்று, அம்பேத்கர் மநுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினார். இரண்டாம் நாள், 1935 அக்டோபர் 13. அன்று, “நான் ஓர் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால் ஒருபோதும் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்று அம்பேத்கர் அறிவித்தார். மூன்றாம் நாள், 1956 அக்டோபர் 14. அன்று, அம்பேத்கர் பவுத்தம் தழுவினார். அம்பேத்கரின் பிறந்த நாள், மறைந்த நாள் ஆகியவற்றைக் காட்டிலும் இந்த நாட்கள் முதன்மையானவை. ஏனெனில், அவரின் வாழ்க்கைக்கு புதியதும், புரட்சிகரமானதுமான பொருளை இந்த நாட்களில் அவர் செய்த செயல்களே அளித்தன. இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிற தலித் மக்களுக்கு மத மாற்றமும், பவுத்தமும் சாதியின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக இருக்கின்றன. மதமாற்றம் ஒரு விடுதலைத் தத்துவம். சாதியத்தின் அடிப்படையாக இருக்கும் இந்து மதத்தினை விட்டு ஒவ்வொரு தலித்தும் வெளியேற வேண்டும் என்று…

Read More

மாற்றுப் பாதை’யைத் தொடங்கும்போது, சில வரையறைகளை நாம் வைத்திருந்தோம். அதில் ஒன்று, இப்பகுதி யில் இடம்பெறும் தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய ஆக்கங்களை நூலாக வெளியிட்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் சுதாகர் கத்தக் அவர்களுக்கு இது பொருந்தாது. எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர், இன்று வரை தன் எழுத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இதுவரை பதினாறு சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அந்த எழுத்துகளின் தீவிரமும் உண்மை யும் அவருக்கு இந்த விதிவிலக்கை வழங்கி இருக்கின்றன. ஓர் எழுத்தாளர் தான் வாழ்கின்ற காலத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையாக இருப்பதும், அவர் அதற்கான புகழ் வெளிச்சங்களைத் தேடி அலையாமல் இருப்பதும் இன்று அரிதான செய்திதான். ஆனால் தன்னுடைய ஆழ்ந்த வாசிப்பின் ஊடே தன்னை சூழ்ந்திருக்கின்ற சமூகத்தின் மீதான தேடலிலும், அதிதீவிரமான எழுத்தின் மீதான நம்பிக்கை வெளியிலும் தகவமைத்துக் கொள்கின்ற போது, புகழ் மயக்கத்திற்கு ஆட்படாமல் அப்பட்டமாக இருப்பது என்பதுதான் சுதாகர் கத்தக்கின் இருப்பு! வணிக இதழ்களில் உறுதியற்ற எழுத்துகளை…

Read More

தமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார். லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது. தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார். பார்ப்பனர்,…

Read More

அரிதினும் அரிதாகக் கருதப்பட்ட கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கில், பந்தாரா மாவட்ட நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையதுதானா? நாடு முழுவதிலும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் பிற தலித் வன்கொடுமை வழக்குகளில் அளித்துவரும் தீர்ப்புகளிலிருந்து கயர்லாஞ்சிப் படுகொலை வழக்குத் தீர்ப்பு மாறு பட்டதுதானா? இந்தியா முழுவதிலும் நீக்கமற நிறைந்த கிடக்கும் சாதிவெறியர்களுக்கு அதிர்ச்சி யளிக்கக் கூடியதுதானா? நீண்ட நெடுங்காலமாக தாங்கள் சந்தித்து வரும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான நீதியைப் பெற்றுத்தரும் வலிமை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உண்டு என்ற நம்பிக் கையை தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாக்கும் திறன் கொண்டதுதானா அந்தத் தீர்ப்பு? கயர்லாஞ்சி யில் நடந்த படுகொலை சாதியக் கண்ணோட்டத்து டன் நடத்தப்பட்ட பெருங்குற்றம் என்பதால்தான் பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மரண தண்டனை அளித்தாரா? இனிமேல் சாதிப் பின்புலத்துடன் நடைபெறும் படுகொலைகளுக்கு இத்தகையத் தீர்ப்பை நாம் பிற நீதிபதிகளிடமும் எதிர்பார்க்கும் வாதத்துடன்தான் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதா? போன்ற கேள்விகள்…

Read More