Home ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம்

ஆய்வாளர், எழுத்தாளர்.கள ஆய்வுகள், தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர். அயோத்திதாசர் வாழும் பௌத்தம், ஆணவக் கொலைகளின் காலம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Posts By ஸ்டாலின் ராஜாங்கம்

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும்.   ‘பூலோக வியாஸன்’ தலித் இதழ்த் தொகுப்பு  தமிழ் வரலாற்றில் தலித் இதழியலுக்கு …

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

குறைந்த பட்சம் குறிப்பிட்ட செய்தியை எழுதியிருக்கும் செய்தியாளர் குள.சண்முகசுந்தரம் அவ்வேட்டில் இதுவரை சொந்த பெயரில் எழுதி வந்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி பார்த்தால் கூட இதை புரிந்து கொண்டு விடலாம். இப்போது நான் பார்ப்பன நிறுவனத்தை விடுத்து பார்ப்பன அல்லாத செய்தியாளர் மீது விஷயத்தை திசை திருப்புவதாக வியாக்கியானம் பிறக்கலாம். இதில் இரண்டு தரப்புக்குமே பங்கிருக்கிறது; அதில் ஒரு தரப்பை விடுத்து மற்றொரு தரப்பை மட்டுமே பேச வேண்டியதில்லை.வாஞ்சிக்கு தேவர் உதவியதைப் பற்றிய தி இந்து (தமிழ்) நாளேட்டில் வெளியான பொய் வரலாறு பற்றி நிறைய …

அம்பேத்கரின் முதல் நூல்

தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சாதி அம்பேத்கர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. அவர் காலத்து தலைவர்களில் அதிகம் எழுதியவர். அன்றைய இந்திய அரசியலில் இருந்த தலைவர்களில் அதிகம் படித்தவர். அம்பேத்கருக்கு நவீன ஆய்வு முறையில் புலமை அதிகம். எதை எழுதினாலும் தேர்ந்த ஆய்வுப் பண்போடு இருக்கும். சாதி பற்றி மட்டுமல்ல, பல்வேறு துறைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முதல் ஆய்வு நூலின் நூற்றாண்டும் இதுவே. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும் சமூகவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல், அரசியல் …

முத்துக்கிருஷ்ணன்கள் தற்கொலைசெய்துகொள்வதின் பின்னணி என்ன?

உயர்கல்வி வளாகங்களில் தற்கொலைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட வெம்மை அடங்குவதற்குள்,இப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறந்திருக்கிறார். முன்பு, இளநிலை ஆய்வுப்படிப்பை ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரோஹித் வெமுலாவின் பக்கத்து அறை மாணவராக இருந்த முத்துக்கிருஷ்ணன், இப்போது வெமுலாவின் முடிவையே எட்டியிருப்பது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முத்துக்கிருஷ்ணன் தமிழக மாணவர் என்பது நம்மை இதைச் சார்ந்த விவாதத்தோடு மேலும் நெருக்கமாக்குகிறது. பிறந்த ஊரிலிருந்து வெளியேறி, வெளியில் வந்து படிப்பதையே பெரும் வரமாக …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

“தேசங்களற்ற ஓர் உலகத் தாய்…!” – ரோஹித்தின் நினைவுகள் குறித்து முத்துக்கிருஷ்ணன்!

நேற்று மர்மமான முறையில் இறந்த முத்துக்கிருஷ்ணன், ரோஹித் வெமுலாவைப் பற்றி சென்ற ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். அது மதியம் 2 …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected