Home யாக்கன்

யாக்கன்

தமது முல்லை அச்சகத்தின் வழியாக மாற்று சிந்தனைக்கான களத்தை உருவாக்கி வருபவர். கழகம் வெளியீட்டகம் மூலமாக 80க்கும் மேற்பட்ட சிறந்த தலித் படைப்புகளை வெளியிட்டுவருகிறார். தலித் முரசு இதழின் ஆசிரியர் குழுவிலும் முற்றுகை இதழின் நிறுவன ஆசிரியராகவும், மாற்றுப்பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாவலாசிரியர்,சிறுகதையாளர், கவிஞர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

Posts By யாக்கன்

சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!

கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுரையின், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் 30.6.1997 அன்று மாலை 5 மணிக்கு, மேலவளவு கள்ளர்ளுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, மதுரை மேலூரிலிருந்து இரவு 11 மணி பேருந்தில் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 50 பேர் கொண்ட கள்ளர் சாதிக்கொலை வெறிக்கும்பல், நள்ளிரவில் மேலூர் – நத்தம் சாலையில், சென்னகரம்பட்டி வளைவில் மறைந்திருந்து, ஓடும் பேருந்தை வழிமறித்து மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட தலித் …

குழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்

பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2-ஐ, (‘15 மதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துகொண்ட கணவன்மார்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது’) தலைமை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்திய நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றிய ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (POCSO) பிரிவு 5 “ 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் …

புதிய கல்விக் கொள்கை – 2016

ஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத்திட்டங்களான புதிய கல்விக் கொள்கையையும் பொது சிவில் சட்டத்தையும், உடனே நடைமுறைக்குக்கொண்டுவரத்துடித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொடுத்துள்ள வழிகாட்டலின் அடிப்படையில் மோடியின் அமைச்சரவை சகாக்கள் புதிய கல்விக்கொள்கை குறித்த அவசரச்சட்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம்! பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் அவர் அறிவித்த திட்டங்களையும் ஆணைகளையும் ஆய்வு செய்து பார்த்தால், அவரது ஒவ்வொரு …

“திருமாவளவன் தலித் அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்”

உங்கள் இளமைப் பருவம் பற்றி… நான் பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். 1930அம் அண்டு சனவரி 6அம் நாள் பிறந்தேன். எனது அப்பா அம்பூரைச் சார்ந்தவர், அம்மா வேலூர். ஊங்க தாத்தா குடுமி வைத்து கோவணம்தான் கட்டியிருந்தார். அப்போது அம்பூர் சர்க்கரை அலையில் வேலை நிறுத்தம் நடந்தது. நீண்ட நாள் நடந்தது. அலையை ஆழுத்து மூடிவிட்டார்கள். வேறு வேலை வேண்டுமே என்று எனது தகப்பனார் ஒட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் பெற்றுக் கொண்டு, வேலை தேடி சென்னைக்கு வந்தார். இங்கே ஒரு வெள்ளைக்கார துரையிடம் வீட்டு …

ஜனநாயக இருள்

மனித இனத்தின் நீண்ட நெடிய சிந்தனை அனுபவங்களால் செழிப்புற்றிருக்கிறது உலகம். முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதத் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் சமய நெறிமுறைகளும் தத்துவங்களுமே தீர்வைத் தர முயன்றிருக்கின்றன. அறியப்படாமலிருக்கும் எதிர்காலப் பேரழிவுக் கெல்லாம் அவையே பொறுப்பு. மனித நம்பிக்கையின் ஊற்றுக் கண்களாய் இருக்கும் அவை, பெருந்தொலைவு களுக்கிடையில், பலவகை மொழிகள், பண்பாடுகள், வழிபாட்டுக் கூறுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழும் மக்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகின்றன. ஆயினும், மனித இனம் அரசு என்ற முரண் பகை கொண்ட நிறுவனத்திடம் அடிபணிந்து கிடக்கிறது. உடைமை …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,673 other subscribers

Stay Connected