Home கலை இலக்கியம்

கலை இலக்கியம்

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பையை விரித்துத்தான் உட்கார வேண்டும். யாரும் அந்தச் சிறுவனைத் தொட்டுத் தண்ணீர் தர மாட்டார்கள். ஒரு உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படியே அண்ணாந்து அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பதின்ம வயதிலேயே திருமணம் முடித்த பின் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றார் அவர். எந்த இடத்தில் அவருடைய சமூகப் பின்னணியைக் காட்டி, அவரைத் தொட்டால் தீட்டு என்று ஒதுக்கினார்களோ, அதே இடத்தில், அவருடைய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்படுகின்றது. ஏன் அம்பேத்கர் வரலாற்றின் தேவையாக …

கருப்பி எனும் பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல். 

பறவைகள் கீச்சிடும் சத்தம், வண்டுகள் ரீங்காரம், எங்கோ வெட்டவெளியில் இருந்து இரைச்சலுடன் ஓடும் நாயின் குரைப்பு என துவங்குகிறது “பரியேறும் பெருமாள் பி.ஏ.,பி.எல்.” எனும் உயிரை உருக்கி வடித்த ஒரு புதிய தமிழ் சினிமா. கருப்பி எனும் நாயின் நான்கு கால்களை தூண்களாக்கி நகரும் கதை என நினைக்கும் முன்னமே சுக்கு நூறாய் உடைந்து நொறுங்குகிறது நம் மனம் ரயிலின் விசையில் சிதறுண்டுபோன கருப்பியின் உடலைப்போல். தம்முடன் நம்பி வந்த வாயில்லா ஜீவனின் கழுத்தில் துண்டைக் கட்டி ரயில் தண்டவாளத்தில் கட்டிவிட்டவர்களின் கொடூர ஜாதிவெறி …

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும்.   ‘பூலோக வியாஸன்’ தலித் இதழ்த் தொகுப்பு  தமிழ் வரலாற்றில் தலித் இதழியலுக்கு …

டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்

  ஏழைத் தந்தை, வறுமைக் குடும்பம், எல்லாம் கடந்து, வீட்டை மறந்து, வெளி நாட்டில் பயின்று, மேதையானவர். மனித பாகுபாடுகளை களைந்து எரியுங்கள் சமத்துவத்தை நிலை நாட்டுங்கள் – என தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கெல்லாம் உரக்கச் சொன்னவர். கற்பி! ஒன்று சேர்! போராடு! அஞ்சாதே! நிமிர்ந்து நில்! என்ற பகுத்தறிவு தந்திரங்களை மக்கள் நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர். மேலை நாடுகளில் பல சட்டங்களை கற்று முடித்து மத்திய அரசின் பரிந்துரையால் தன் நாட்டிற்கான புதிய சட்டங்களை இயற்றி அதைத் திட்டங்களாய்ச் செயல்படுத்தியவர். நம் இந்திய அரசியல் சாசனத்தின் தலையாய தந்தையானவர். சட்டம் பயில்வோர்கள், சமத்துவம் போற்றுவோர்கள்- என ஏனைய மக்களின் குருவானவர். இந்த இருபதாம் நூற்றாண்டு இன்று போற்றி மகிழும் நம் இந்தியாவின் இரண்டாம் தந்தையானவர். இவர் சாதி, மத, பேதம் போற்றும் அரசியல் கட்சிகளின் தலைவரில்லை சமத்துவத்தின் சமூக நல்லிணக்கத்திற்கான அறிஞர். அவர் இங்கு பிறந்த எல்லா மக்களும் சமமென்றார் ஆகவே – ஏழை மக்களின் விடுதலைக்காக அரும்பாடுபட்டார். யார்? அவர், அவர் தான். சட்ட மேதை, அறிவுச் சுடரொளி, ஆற்றலின் அடைமொழி, அகிம்சையின் தத்துவம், உண்மையின் உருவம், அடக்கத்தின் அடையாளம், எழுச்சியின் அறிமுகம், புரட்சியின் பூர்வீகம், இந்தியாவின் கலங்கரை விளக்கம், மாமேதை, புரட்சியாளர், பீமாராவ்  டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்.      பெரு.பழனிச்சாமி

மணிமேகலையில் தொல்குடி அடையாளமும் உளவழிமருத்துவ தோற்றுமைகளும்

“பஞ்சமா பாதகம்” எனும் எதிர்வினை கட்டமைப்புக்குள் சுருங்கியிருந்த இந்திய பண்பாட்டுலகம், “பஞ்ச சீலம்” எனும் நல்வினை வழியொழுகும் தனிமனித மற்றும் சமூக ஒழுக்கநெறியை மானுடத்திற்கு வழங்கியது இந்திய தொல்குடி அடையாளமாகிய புத்த தம்ம அடையாளம். புத்தம் எனும் அறிவையும், தம்மம் எனும் அறத்தையும் சேர்த்து இழைத்த சங்கம் எனும் அமைப்பின் வழி பகிரும் எல்லா உயிர்களுக்குமான அன்பை வலியுறுத்திய உயர்ஞான் எய்திய புத்த பெருமானின் போதனைகளை ஒருங்கிணைத்த திபீடகங்கள் அல்லது திரிபீடகங்கள் என்றழைக்கப்படும் வினைய, சுத்த மற்றும் அபிதம்ம பீடகங்கள், பஞ்சமாப்பாதக வர்ண-ஜாதி-வர்க்க பேத …

“இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை!” – எழுத்தாளர் பாமா

“நான் முதன்முதலா புக் எழுதினப்ப, என்னோட மக்களே என்னைப் புரிஞ்சுக்காம, சண்டைக்கு வந்தாங்க. ஆனா, இன்னைக்கு அவங்களே எனக்கு பாராட்டு விழா நடத்தி ஆடி, பாடிக் கொண்டாடுறாங்க” என, கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பேசினார் எழுத்தாளர் பாமா. இவரது முதல் நாவலான `கருக்கு’ வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழா, மிக உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. இந்த விழா, மாற்று ஊடக மற்றும் பத்திரிகையாளர் மையம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் மற்றும் நாடகவியலாளர் அ.மங்கை, இயக்குநர் பா.இரஞ்சித், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மாலினி சேஷாத்திரி, பதிப்பாளர் …

வெண்மணி என்னும் அரசியல் தொன்மம்! – ஸ்டாலின் ராஜாங்கம்

கீழ்வெண்மணி அளவிற்கு அரசியல் சொல்லாடல்களில் ‘வன்முறை தொன்மமாக’ வேறெந்தச் சமூக வன்முறையும் இடம் பெற்றதில்லை. அந்த வகையில் இச்சொல்லாடல்களில் அது என்னவாக வெல்லாம் பிரதிபலித்திருக்கின்றது என்று பார்ப்பது தமிழ்ச் சமூகத்தின் வெண்மணி பற்றிய இன்றைய நினைவுகளைப் புரிந்துகொள்ள உதவலாம். அரசியல் ரீதியாகப் பல இயக்கங்களிடையே உரிமை கோரல்களையும் விவாதங்களையும் அப்பிரச்னை உண்டுபண்ணியபடியே இருந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பெறுவது பற்றியும் அதன் தலைமையிலான தஞ்சை வட்டார விவசாய உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் ராஜாஜிக்கு முற்றிலும் எதிர்மறையான பார்வை இருந்தது. …

கௌசல்யா சொன்னது போல நீங்களெல்லாம் மனநோயாளிகள்தான்!

மூன்று நாள்களுக்கு முன் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதற்குமுன்… இதே போன்ற ஆணவக்கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்குத்தண்டனை வழங்கியிருக்கிறது நெல்லை மாவட்ட நீதிமன்றம். வழக்கின் சாராம்சம் இதுதான்… 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார் காவிரி. அவர் திருமணத்துக்கு உதவி செய்ததால் கொல்லப்பட்டார் தோழி கல்பனா. கொலை செய்ததாகக் கருதப்பட்ட காவிரியின் பெற்றோருக்கு இந்த வருடத் தொடக்கத்தில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. உடுமலைப் பேட்டையில் பட்டப்பகலில் சங்கர்-கௌசல்யா வெட்டப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்தவர்களால் அத்தனை …

“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா

“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா  சந்திப்பு: வெய்யில் – படங்கள்: எல்.ராஜேந்திரன் – வீ.சதீஷ்குமார் ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர், த.மு.எ.க.ச- வின் மாநில துணைப் பொதுச் செயலாளர், ‘புதுவிசை’ இதழின் கௌரவ ஆசிரியர். ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட திருநெல்வேலி வந்திருந்தார். சந்தித்தோம். தாமிரபரணிப் படுகொலை நடந்த இடம், ஆற்றில் தூண்டில்களை வீசிவிட்டு மீன்களுக்காகக் காத்திருப்பவர்கள் எங்களையும் விநோதமாகப் பார்க்கிறார்கள். அந்த இடம் எல்லாவகையிலும் உரையாடுவதற்கு …

தமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் – சுகுணா திவாகர்

அம்பேத்கர் உருவும் மறு உருவாக்கங்களும் நூலை முன்வைத்து…. அனிதாவின் தற்கொலையையொட்டி, தமிழ்த் திரைப்படத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ஆவேச எதிர்வினை, தமிழ்ச் சூழலில் கடும் விவாதப்பொருளானது. “எத்தனை நாளைக்குத் தமிழன், தமிழன்னு பூச்சாண்டி காட்டப்போறீங்க? அனிதா ஒரு தலித் பெண். இங்கே சமூகநீதி என்பது தலித்துகளின் பிரச்னைகளை அங்கீகரிப்பதாக இல்லை” என்பது இரஞ்சித் பேச்சின் சாராம்சம். ‘இந்த மேடையில் ஏன் இரஞ்சித் இதைப் பேச வேண்டும்? அனிதா ஒரு தலித் பெண் என்பதனால் அவர் தற்கொலைக்குத் தள்ளப்படவில்லை. பறிக்கப்படும் …

123...5Page 1 of 5

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected