Home கலை இலக்கியம் கட்டுரைகள்

கட்டுரைகள்

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பையை விரித்துத்தான் உட்கார வேண்டும். யாரும் அந்தச் சிறுவனைத் தொட்டுத் தண்ணீர் தர மாட்டார்கள். ஒரு உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படியே அண்ணாந்து அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பதின்ம வயதிலேயே திருமணம் முடித்த பின் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றார் அவர். எந்த இடத்தில் அவருடைய சமூகப் பின்னணியைக் காட்டி, அவரைத் தொட்டால் தீட்டு என்று ஒதுக்கினார்களோ, அதே இடத்தில், அவருடைய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்படுகின்றது. ஏன் அம்பேத்கர் வரலாற்றின் தேவையாக …

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும்.   ‘பூலோக வியாஸன்’ தலித் இதழ்த் தொகுப்பு  தமிழ் வரலாற்றில் தலித் இதழியலுக்கு …

மணிமேகலையில் தொல்குடி அடையாளமும் உளவழிமருத்துவ தோற்றுமைகளும்

“பஞ்சமா பாதகம்” எனும் எதிர்வினை கட்டமைப்புக்குள் சுருங்கியிருந்த இந்திய பண்பாட்டுலகம், “பஞ்ச சீலம்” எனும் நல்வினை வழியொழுகும் தனிமனித மற்றும் சமூக ஒழுக்கநெறியை மானுடத்திற்கு வழங்கியது இந்திய தொல்குடி அடையாளமாகிய புத்த தம்ம அடையாளம். புத்தம் எனும் அறிவையும், தம்மம் எனும் அறத்தையும் சேர்த்து இழைத்த சங்கம் எனும் அமைப்பின் வழி பகிரும் எல்லா உயிர்களுக்குமான அன்பை வலியுறுத்திய உயர்ஞான் எய்திய புத்த பெருமானின் போதனைகளை ஒருங்கிணைத்த திபீடகங்கள் அல்லது திரிபீடகங்கள் என்றழைக்கப்படும் வினைய, சுத்த மற்றும் அபிதம்ம பீடகங்கள், பஞ்சமாப்பாதக வர்ண-ஜாதி-வர்க்க பேத …

வெண்மணி என்னும் அரசியல் தொன்மம்! – ஸ்டாலின் ராஜாங்கம்

கீழ்வெண்மணி அளவிற்கு அரசியல் சொல்லாடல்களில் ‘வன்முறை தொன்மமாக’ வேறெந்தச் சமூக வன்முறையும் இடம் பெற்றதில்லை. அந்த வகையில் இச்சொல்லாடல்களில் அது என்னவாக வெல்லாம் பிரதிபலித்திருக்கின்றது என்று பார்ப்பது தமிழ்ச் சமூகத்தின் வெண்மணி பற்றிய இன்றைய நினைவுகளைப் புரிந்துகொள்ள உதவலாம். அரசியல் ரீதியாகப் பல இயக்கங்களிடையே உரிமை கோரல்களையும் விவாதங்களையும் அப்பிரச்னை உண்டுபண்ணியபடியே இருந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பெறுவது பற்றியும் அதன் தலைமையிலான தஞ்சை வட்டார விவசாய உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் ராஜாஜிக்கு முற்றிலும் எதிர்மறையான பார்வை இருந்தது. …

கௌசல்யா சொன்னது போல நீங்களெல்லாம் மனநோயாளிகள்தான்!

மூன்று நாள்களுக்கு முன் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதற்குமுன்… இதே போன்ற ஆணவக்கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்குத்தண்டனை வழங்கியிருக்கிறது நெல்லை மாவட்ட நீதிமன்றம். வழக்கின் சாராம்சம் இதுதான்… 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார் காவிரி. அவர் திருமணத்துக்கு உதவி செய்ததால் கொல்லப்பட்டார் தோழி கல்பனா. கொலை செய்ததாகக் கருதப்பட்ட காவிரியின் பெற்றோருக்கு இந்த வருடத் தொடக்கத்தில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. உடுமலைப் பேட்டையில் பட்டப்பகலில் சங்கர்-கௌசல்யா வெட்டப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்தவர்களால் அத்தனை …

வே.அலெக்ஸ்: பெரிதினும் பெரிது விரும்பிய பதிப்பாளர்

எழுத்துப் பதிப்பகம் அலெக்ஸ் என்றறியப்பட்ட வே.அலெக்ஸ் நோயுற்றிருந்த நிலையில் கடந்த வாரம் மதுரையில் மரணமடைந்தார். தலித் கலை, இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்து முக்கியமான பங்களிப்புகளை வழங்கியிருப்பவர் அவர். அந்த வகையில் அவரைப் பற்றி பலவற்றைக் கூற முடியும். எனினும் பதிப்பாளர் என்ற அவரின் அடையாளம் முதன்மையானது. பதிப்பாளராக அவர் வெளியிட்ட நூல்கள் குறைவானவை என்றாலும் வெளியிட்ட நூல்களின் உள்ளடக்கம் என்ற வகையில் அந்நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. தலித் வரலாற்று வரிசை என்கிற பொதுத் தலைப்பின் கீழ் 2009-ம் ஆண்டு அவர் வெளியிட்ட …

“வெறும் சட்டத்தால் ஆணவக்கொலைகளைத் தடுக்க முடியுமா?” எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆவேசம்

சாதி களங்கப்பட்டுவிடக் கூடாது என்ற நினைப்பில், இன்னொரு சாதியில் திருமணம் முடித்த தன் சொந்த மகளை அல்லது அவரின் கணவனைத் தேடிப்பிடித்துக் கொலை செய்யும் ஆணவக்காரர்களிடமிருந்து அந்த மணமக்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டநாள்களாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கும், கலப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாப்பதற்கும் உயர் நீதிமன்றக் மதுரைக் கிளை தனிச்சட்டம் இயற்றியிருக்கிறது. மேலும், ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்புத் தனிப்பிரிவும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆணவக்கொலைகள் நடப்பதற்கான அரசியல் மற்றும் சமூக உளவியல் காரணங்களை ஆராய்ந்துவருபவரும் எழுத்தாளருமான பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசினோம்… “சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் …

மானுடம் பாடும் செம்மூதாய் – சுகிர்தராணி

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், நான் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு வாசிப்பு மட்டுமே கைக்கூடியிருந்தது. ஒருநாள் வார இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெண்ணின் நிழற்படம் என் கண்களைக் கடந்துசென்றது. மீண்டும் புரட்டி அப்பக்கத்தை நோக்கினேன். நெருக்கமாய் எடுக்கப்பட்ட அதில் இருளும் ஒளியுமாய் அப்பெண்ணின் முகம். என்னைச் சட்டென்று வசீகரித்தவை அவரின் கண்கள். கம்பீரமும் கோபமும் கனிவும் கூடவே கொஞ்சம் திமிரும் ஆற்றாமையும். நான் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே ஒரு கணம் அந்தக் கண்கள் இலேசாகப் புன்னகையைத் ததும்பி …

இந்தியா, மக்களுக்கா… மதத்துக்கா?

2016-ம் ஆண்டைவிடவும் 2017-ம் ஆண்டின் நிலைமை மிக மோசமாக இருக்கப்போகிறது. குறிப்பாக, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக முடிந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சி என்ற ஒன்றைத் துடைத்தழிக்கப்பட்டிருக்கும் சூழலில், நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான். கடந்த வாரம்கூட குஜராத்தின் வட்வாளி கிராமத்தில் இந்து-முஸ்லிம் மாணவர் களுக்கிடையில் நடந்த சண்டை, மதக்கலவரமாக முடிந்தது. முஸ்லிம்களின் வீடுகளை இந்துக்கள் சூறையாடி, தீ வைத்துத் தாக்குதல் நடத்தியதில், 25 வயது இளைஞர் ஒருவர் உயிர் இழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வட மாநிலங்களில் இந்து …

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அப்பாவிகள், அல்லது சூழ்ச்சியாளர்கள்!

இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறியவர்களுக்கே நியாயமாக படும் ஒரு சூழ்ச்சி பரப்புரை. இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசி வருபவர்கள் இரண்டு வகைப் படுவர், ஒன்று தெரிந்தே இட ஒதுக்கீட்டு முறை கூடாது என சொல்பவர்கள். மற்றவர் இந்த பரப்புரைகளை நம்பி “நியாயம் தானோ?” என வரலாறு, சிஸ்டம் தெரியாத அப்பாவிகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் …

123Page 1 of 3

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு – புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected