Home கலை இலக்கியம் கட்டுரைகள் (page 2)

கட்டுரைகள்

“தேசங்களற்ற ஓர் உலகத் தாய்…!” – ரோஹித்தின் நினைவுகள் குறித்து முத்துக்கிருஷ்ணன்!

நேற்று மர்மமான முறையில் இறந்த முத்துக்கிருஷ்ணன், ரோஹித் வெமுலாவைப் பற்றி சென்ற ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். அது மதியம் 2 மணி. நான் எப்போதும் போல நூலகத்தில் இருந்தேன். அன்று நான் என் சகோதரர்கள் மிர் மற்றும் ஜானுடன் விரதத்தில் இருந்தேன். என் பேராசிரியர்கள் ரத்தினம் மற்றும் தத்தாகடா ஆகியோர் வெளிவாடாவில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தார்கள். நான் அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தொடர் உண்ணாவிரதத்தில் ராதிகா அம்மா (ரோஹித் வெமுலாவின் தாய்) கலந்துகொள்ளப் போவதாக அர்பிட்டா என்னிடம் கூறினார். ஏன் என்று காரணம் …

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு – புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய …

ஒரு தேசத்தின் அவமானம் – கலாச்சார தேசியம்

  ஒரு குறிப்பு : நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரம் அழிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2001ல், பழங்கால கலைச் செல்வம் எனஅழைக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலை, அழிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இசுலாமிய மதக்கொள்கைக்கு எதிரான இந்து மதக்கொள்கை என்பதால் புத்தர் சிலை அழிக்கப்பட்டதென ஆப்கனின் தாலிபான்களால் விளக்கம் சொல்லப்பட்டது. ஒரு பழங்கதை : உண்மையில் இதுவொரு பழங்கதை தான் என்பதில் ஐயம் இல்லை. ஆப்கானிஸ்தானின் புதிய நில உரிமையாளர்களான தாலிபான்கள் கலாச்சார நினைவுச் சின்னங்களை, குறிப்பாக மத சம்பந்தப்பட்ட அனைத்துச் சின்னங்களையும் அழித் …

அன்பிற்குரிய பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு, 

அன்பிற்குரிய பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு, வணக்கம், விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சிந்தனைச்செல்வன், தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறவேண்டும் என்று பரப்புரை நிகழ்த்திவருவது குறித்து நீங்கள் உங்கள் முகநூலில் எழுதிய கருத்துகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது. தலித் மக்களின் உயிராதாரச் சிக்கலைக் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, மேலோட்டமான முறையில் நீங்கள் பேசுவது கண்டு வருத்தமடைந்தேன். அதோடு, பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் குறித்து, தெளிவான சிந்தனையை நீங்கள் …

பறையொலியால் பரவும் இழிவு

பாண்டியனின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது நடுப் பகலைக் கடந்துவிட்டது. காட்டுமன்னார்குடிக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரெட்டியூர் என்ற அந்தக் கிராமம் (சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கலாம்) பாண்டியன் அந்த ஊரைச் சேர்ந்தவர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றவர். சமூக அக்கறையும் எல்லோருக்கும் உதவும் பண்பும் கொண்டவர். 1985ஆம் ஆண்டு “சுதந்திர தின”த்தன்று போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டவர். போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர் ஒரு பயங்கரவாதியோ, கொள்ளைக்காரரோ அல்ல. பறையடிக்கும் இழிதொழிலைச் செய்யமாட்டோம் எனத் …

கௌரவக் கொலைகளின் காலத்தில் பூனா ஒப்பந்தம்

வரலாறு யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் என்றார் கார்ல் மார்க்ஸ். அதை நமது நாட்டுக்குப் பொருத்திப்பார்த்தால் ‘இந்திய வரலாறு என்பதே சாதிப் போராட்டங்களின் வரலாறு’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு இந்திய சமூகத்தை நிர்ணயிக்கும் அம்சமாக இன்றும் சாதி என்பது செயல்பட்டுவருகிறது. நாம் கௌரவக் கொலைகளின் காலத்தில் வாழ்கிறோம். சாதிப் போராட்டங்களின் தொகுப்பாக விளங்கும் இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் தவறாமல் இடம்பெற வேண்டிய நிகழ்வு பூனா ஒப்பந்தம். 1932- செப்டம்பர் 24-ம் தேதி பூனாவில் ஏற்படுத்தப்பட்ட …

நூற்றாண்டை நினைவு கூருதலின் அரசியல் : கால்டுவெல்லும் அயோத்திதாசரும்

தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி “கால்டுவெல்லின் இருநூறாவது பிறந்த தினமான மே 7-ம் நாள் அவரைப் போற்ற வேண்டும்” என்று மே 4-ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ், திராவிடன் போன்ற அடையாளங்கள் உருவாக கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூல்தான் வித்திட்டது என்கிற வகையில் அதன் ஆசிரியரான கால்டுவெல்லை கருணாநிதியின் இந்த அறிக்கை நினைவு கூறுகிறது. குறிப்பான பிரச்சினைகள் அடிப்படையில் அல்லாமல் தங்களை எல்லோருக்குமான அமைப்பாகவும் தலைவராகவும் காட்டிக்கொள்ள விரும்பும் யாரும் பயன்படுத்துவதாக தமிழ் அடையாளம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் …

கழகங்களில் காணாமல்போகும் தலித் அரசியல்

நூற்றாண்டு பெருமை கொள்ளும் திராவிட அரசியலின் தோற்றுவாய்க்கும், காங்கிரஸ் – பொதுவுடைமை மற்றும் இன்ன பிற கட்சிகளின் சமூக – அரசியல் வளர்த்தெடுப்புக்கும் கடந்தகால தலித் தலைவர்கள் புடமிட்ட தலித் அரசியல் ஒரு காரணம் என்பதை பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டில் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது. இன்றைய தமிழ்த் தேசிய  – திராவிட அரசியலின் கருத்தியல் வளர்ச்சிக்கு பண்டிதர் அயோத்திதாசர், எம்.சி. ராஜா, சத்தியவாணிமுத்து போன்றோர் செய்த பங்களிப்பை திராவிட அரசியல் வரலாறு இருட்டடிப்பு செய்த போதிலும் தலித் எழுச்சியானது அதனை சுட்டிக்காட்டத் தவறியதில்லை. …

சிவகாமியின்: அரிதிலும் அரிதான புலிவாதம்!

டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ் பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன். —————————————- நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட …

ராமதாஸ் வகையறா வந்துகொண்டிருக்கிறது, மனிதர்கள் வேறுபக்கம் செல்லவும்

தருமபுரி மாவட்டத்தில் மூன்று தலித் ஊர்கள் கொள்ளையழிப்புக்கு ஆளாகி ஒன்றரை மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதுபற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. அழிக்கப்பட்ட விதமும் அழிமானத்தின் அளவும் பலரையும் அங்கு கண்குவிக்கச் செய்திருக்கிறது. வன்கொடுமைகள் பரவலாக வெளித்தெரிகிற போதெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்கும் பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல கொந்தளிக்கிறவர்கள் பின்பு தணிந்தடங்கி காணாமல் போய்விடுகிற வழக்கம் இவ்விசயத்தில் உதவாது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து களத்தில் இருந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதை சாதி மறுப்பாளர்களும் சமத்துவ விரும்பிகளும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் மெதுவாகவேனும் உணரத்தலைப்பட்டிருக்கிறார்கள். …

123Page 2 of 3

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,226 other subscribers

Stay Connected