Home கலை இலக்கியம் கவிதைகள் (page 2)

கவிதைகள்

பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று

செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் சொல்ல முடியாமல் வாத்தியாரிடம் அடி வாங்குவேன் தோழிகளற்ற பின் வரிசையிலமர்ந்து தெரியாமல் அழுவேன் இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று   சுகிர்தராணி

சாதிமல்லி

சாதிமல்லி அக்ரகாரச் சாக்கடையில் – நீ ஆகாயத் தாமரைப்பூ வக்ரகாரக் காடுகளில் வளர்ந்ததொரு குறிஞ்சிப்பூ ஆரியச் சந்தையினில் அவளோர் அரளிப்பூ ஆதித்தமிழன் நான் அவள்தான்என் முல்லைப்பூ மனமெல்லாம் மரிக்கொழுந்து மயிலே! நீ மல்லிகைப்பூ மல்லுகட்டும் சிறுக்கி நீ மறுநொடியில் மருதப்பூ சிலநேரம் வேண்டுமென்றே செய்திடுவாய் தப்பு சென்றுநான் வரும்வரை நீ சிலையான நெய்தல்பூ ஆரியத்தின் உதடுகளில் சேரியின் உதடுகள் செய்கின்ற காரியத்தில் சிலிர்த்திடும்உன் பூரிப்பு துக்கத்திலும் தூக்கத்திலும் துளிர்ந்துஎழும் உன்நௌப்பு கக்கத்தில் என் காதல்ஏறி முத்தம்தரும் தித்திப்பு உள்ளத்தில் எனைக்கிடத்தி ஒளித்துவைத்த மாராப்பு சொல்லவாய் …

கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்

எதுவுமே தேவையில்லை அது அத்தனை சுலபமானது கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம் சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில் வெற்றுக்கால்கள் கொப்பளிக்க நடக்கவொன்றும் தேவையில்லை தலைமீது கல்சுமந்து கழுத்து நரம்புகள் புடைக்க வேண்டாம் சுடும் வெயிலில் நடைபாதைகளில் தலைகாயக் குந்தி காலணிகளைப் பளபளப்பாக்கி காசுக்கு கையேந்த வேண்டியதில்லை மேனிகருக்க நிறுத்தங்களில் கூடைபழங்களை கூவிவிற்க குரல் வற்ற அவசியமில்லை வியர்வை உடல்நனைக்க கட்டாந்தரையை பண்படுத்த வாழ்வை பலி கொடுக்க வேண்டியிராது மகள் படிக்க காசில்லாமல் மாற்றுத் துணியில்லாமல் ஆண்டையிடம் அவமானப்படத் தேவையில்லை …

12Page 2 of 2

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பையை விரித்துத்தான் உட்கார வேண்டும். யாரும் அந்தச் …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,226 other subscribers

Stay Connected