Home கலை இலக்கியம் சிறுகதைகள்

சிறுகதைகள்

காமிய தேசத்தில் ஒரு நாள் – ஆதவன் தீட்சண்யா

அதிகாலை 2.31 மணி. அதிகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான். நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது …

நாட்டிலொரு நாடகம் நடக்குது! – சிறுகதை – ஆதவன் தீட்சண்யா

இந்த நாடகத்தின் முதல் காட்சி, காவல் நிலையத்துக்குள் தொடங்குகிறது. நிஜத்தில் என்றால், உள்பாகங்கள் முழுவதும் திருடப்பட்டு, துருவேறிய வெறுங்கூடுகளாக நிறைய வண்டி வாகனங்கள் நிற்கும் இடம் எதுவோ, அதைக் காவல் நிலையம் என்று எளிதாக அடையாளம் காட்டிவிடலாம்.  ஆனால், நாடக மேடையில் அப்படிக் காட்ட முடியாது. இருந்தாலும் நாடகத்துக்காக மேடையில் காவல் நிலையம் ஒன்றை உருவாக்கத்தான் வேண்டும். காய்ந்த ரத்தத்தின் நிறத்தில் செஞ்சாந்து பூசி, அதில் இடைக்கிடை வெள்ளைக்கோடுகள் வரையப்பட்ட ஒரு கித்தானை அல்லது தட்டியை வைத்தால், காவல் நிலையம் போன்ற தோற்றம் மேடைக்குக் …

ஒரு நாள்

ஐப்பசி மாதம் தொடங்கியதும் அடை மழையும் தொடங்கிவிட்டது.வானில், நீல நிறம் மறைந்து, நிழல் குவிந்து கிடப்பதைப்போல் மேகங்கள் குவிந்துகிடந்தன. இடைவிடாமல், ‘பிசு பிசு’வென்று தூறிக்கொண்டேயிருந்தது. மரங்கள் எல்லாம் நனைந்து குளிரால் மரத்துப் போய் நின்றிருந்தன. பறவைகள் தம் சிறகுகளை இறுக்கி அணைத்து, இமைகளை மூடிக்கொண்டு கூடுகளில் ஒடுங்கிக்கிடந்தன. அன்று மாலை மழையின் வேகம் சற்றுத்தணிந்தது. ஆனால் அடிக்கொரு தடவை வீசிய ‘சில்’லென்ற குளிர்காற்று, உடலைப் பிடித்து உலுக்கிவிட்டுச் சென்றது. எங்கு பார்த்தாலும் தரை சில்லிட்டுக்கிடந்தது தெருவில் நடந்துபோக முடியாமல் ஜனங்கள் திணறினார்கள். ஓரணாக் கொடுத்து …

உயிர்க்கொடி

இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால், கயிறு அசைந்து ராட்டினத்தில் இருந்து ஒலி எழும்பிக்கொண்டு இருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்துக்கு. லேசான வெளிச்சக் கோடுகள் வந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது. மடியில் தூங்கிக்கொண்டு இருந்த தன் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள். அமிர்தத்துக்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாகப் பாடித் திரிந்தவள் அமிர்தம். …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு – புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,168 other subscribers

Stay Connected