Home கலை இலக்கியம் நூல்கள் – வெளியீடுகள்

நூல்கள் – வெளியீடுகள்

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும்.   ‘பூலோக வியாஸன்’ தலித் இதழ்த் தொகுப்பு  தமிழ் வரலாற்றில் தலித் இதழியலுக்கு …

“இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை!” – எழுத்தாளர் பாமா

“நான் முதன்முதலா புக் எழுதினப்ப, என்னோட மக்களே என்னைப் புரிஞ்சுக்காம, சண்டைக்கு வந்தாங்க. ஆனா, இன்னைக்கு அவங்களே எனக்கு பாராட்டு விழா நடத்தி ஆடி, பாடிக் கொண்டாடுறாங்க” என, கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பேசினார் எழுத்தாளர் பாமா. இவரது முதல் நாவலான `கருக்கு’ வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழா, மிக உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. இந்த விழா, மாற்று ஊடக மற்றும் பத்திரிகையாளர் மையம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் மற்றும் நாடகவியலாளர் அ.மங்கை, இயக்குநர் பா.இரஞ்சித், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மாலினி சேஷாத்திரி, பதிப்பாளர் …

“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா

“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா  சந்திப்பு: வெய்யில் – படங்கள்: எல்.ராஜேந்திரன் – வீ.சதீஷ்குமார் ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர், த.மு.எ.க.ச- வின் மாநில துணைப் பொதுச் செயலாளர், ‘புதுவிசை’ இதழின் கௌரவ ஆசிரியர். ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட திருநெல்வேலி வந்திருந்தார். சந்தித்தோம். தாமிரபரணிப் படுகொலை நடந்த இடம், ஆற்றில் தூண்டில்களை வீசிவிட்டு மீன்களுக்காகக் காத்திருப்பவர்கள் எங்களையும் விநோதமாகப் பார்க்கிறார்கள். அந்த இடம் எல்லாவகையிலும் உரையாடுவதற்கு …

தமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் – சுகுணா திவாகர்

அம்பேத்கர் உருவும் மறு உருவாக்கங்களும் நூலை முன்வைத்து…. அனிதாவின் தற்கொலையையொட்டி, தமிழ்த் திரைப்படத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ஆவேச எதிர்வினை, தமிழ்ச் சூழலில் கடும் விவாதப்பொருளானது. “எத்தனை நாளைக்குத் தமிழன், தமிழன்னு பூச்சாண்டி காட்டப்போறீங்க? அனிதா ஒரு தலித் பெண். இங்கே சமூகநீதி என்பது தலித்துகளின் பிரச்னைகளை அங்கீகரிப்பதாக இல்லை” என்பது இரஞ்சித் பேச்சின் சாராம்சம். ‘இந்த மேடையில் ஏன் இரஞ்சித் இதைப் பேச வேண்டும்? அனிதா ஒரு தலித் பெண் என்பதனால் அவர் தற்கொலைக்குத் தள்ளப்படவில்லை. பறிக்கப்படும் …

தமிழின் இனிய விதிவிலக்கு

தலித் இலக்கியம் என்ற வகைப்பாட்டின் அடிப்படையில், தமிழ்க் கதைப் புலத்தில் 1990-க்கு முன் தலித் கதாபாத்திரங்கள் எங்கே எனக் கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் மிகத் துயரமானது. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் முழுத் தொகுதிகளைப் புரட்டினால் தலித் பாத்திரத்தை அரிதாகவே காண முடிகிறது. தலித் குரல்கள் தமிழில் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய 1990-களில் அழகிய பெரியவன் எழுத வருகிறார். இந்தத் தொகுப்பில் அழகிய பெரியவன் 2012 வரை எழுதிய 56 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1998-ல் வெளிவந்த முதல் கதையான ‘கூடடையும் பறவைகள்’ முதல் 2012-ல் …

புதிய வெளிச்சம்: உலக அரங்கை நோக்கி தலித் இலக்கியம்

சின்னி என்ற அந்தச் சிறுமி சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது. நெடுஞ்சாலையோரக் கிராமமொன்றில் வசிக்கிறாள் அவள். வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணியாய் சாப்பிடாமல் படுத்திருக்கும் அம்மா. அவளுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். வேலை தேடிச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் கைப்பிடியளவு எஞ்சியிருந்த அரிசியை அம்மா தன் மூத்த மகளுக்குக் கொடுக்க, அவள் சாப்பிடாமல் சின்னிக்குக் கொடுக்க, சின்னி அதை அப்படியே தம்பிக்குக் கொடுத்துவிடுகிறாள். இந்த நிலையிலும் தன் பிள்ளைகளை நினைத்து அந்த அம்மாவுக்குப் பெருமிதம். பசியே அன்றாடமாக இருக்கும் சின்னியின் …

திணிக்கப்பட்ட வேலைகள் இனி வேண்டாம்…

ஊர் ரட்சைக் கல்லருகிலே பூங்குளமே குழுமியிருந்தது. கோல்காரன் எல்லோரையும் அடக்கிக்கொண்டிருந்தான். ஊரிலிருக்கிற எல்லாத் தலைக்கட்டுகளும் வந்தானதா எனப் பார்த்துவிட்டுப் பேசினார் நாட்டாண்மை முனியப்பன். “இது ஒரு அவசரக் கூட்டம். ஆனா முக்கியமான கூட்டம். நாமும் குடியானவங்க கணக்கா மாறணும். மானம்-மரியாதையோட வாழணும். இங்கக்கீற பெருசுங்க தலமொறயப் போல, வளந்து வர்றதுங்களும் கையில தண்ணியையும் கூழையும் களியையும் வாங்கித் தின்னுனு, சேவகம் புரியணும்னு அவசியமில்ல. பெரியவங்க சொல்ற சீர்த்திருத்தக் கருத்துகள எடுத்துனு நம்ம பூங்குளம் இனிமே சீர்த்திருத்த பஞ்சாயத்தா இருக்கணுமின்னு சொல்லிக்கிறேன்.” நாட்டாண்மையின் பீடிகைக்கு சலசலப்பு …

பெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு

ஒவ்வொரு களப்பணியாளரும், சமூகத் தொண்டரும் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கின்றனர். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப் பணியாளரை, சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். ஆனால், பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்துதான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர், சாதி ஒழிப்புப் போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்புப் போராளியாக அறியப்படுகிறார். …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected