நான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்? புலியத்தான் கூண்டுல அடைப்பானுங்க. பசுவ மரத்துல கட்டுவானுங்க. ஏந்தெரியுமா?புலி என்øனக்காவது ஒரு நாளைக்கு பாஞ்சிடும்” என்று உணர்ச்சிப் பொங்க பேச, எதிர்முனையில் என்னால் அமைதியாக கேட்டுக் கொள்ளத்தான் முடிந்தது. அத்தனை உணர்வுப் பெருக்கும் நேர்மையும் பற்றியெரிய பேசியவர் கரன்கார்க்கி. சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். “கறுப்பர் நகரம்’ என்று ஆங்கிலேயர்களால் அடையாளப்படுத்தப்பட்ட வடசென்னை அவர் வாழிடம்.கிராமத்தில் வாழ்ந்து, தங்களுடைய முன்னோர்களின் வாழ்வியலைக் கதையாடல்களாக்கிய தலித் எழுத்தாளர்களில், சென்னையில் பிறந்து கூவத்தின் கரைகளில் …