Home கலை இலக்கியம் மாற்றுப்பாதை (page 2)

மாற்றுப்பாதை

மாற்றுப்பாதை – மா.அமரேசன்

ஒவ்வொரு தருணத்திலும் மானுடத்திற்குத் தேவையான பணிகள் எங்கேனும் ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பணிகள்தான் உண்மையான மக்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக் கூடியனவாக இருக்கும். அத்தகையதொரு பணியை தொடர்ந்து  ஆற்றிவருகிறார் மா. அமரேசன். அமரேசன்  அடிப்படையில் ஒரு தொழில் நுட்பவியலாளர். “நடுங்கும் நிலம் நடுங்கா மனம்’ என்னும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அவை மக்கள்  பிரச்சினையை விரிவாகப் பேசுகின்றன. தொழிற்கல்வி முடித்த அமரேசன் இளம் வயதிலேயே மார்க்சியம், தமிழ்த்தேசியம் குறித்து ஆழமாகக் …

மாற்றுப்பாதை – மணிகோ.பன்னீர்செல்வம்

பழங்குடிச் சமூகங்கள் குறித்த ஆய்வும், அவை குறித்த இனவரைவியலும் இல்லாத சூழலில் குறவர்கள் திணைவழிச் சமூகமாக இன்றுவரை அறியப்படுகின்றனர்.இம்மக்களின் இன வரைவியலை, தன் பட்டத்திற்கான ஆய்வாக எடுத்துக் கொண்டு – விளிம்பு நிலை சமூகங்களின் அறியப்படாத வரலாறுகளைத் தொகுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியப் பங்கினை ஆற்றியவர் மணி கோ. பன்னீர் செல்வம். காலனிய ஆதிக்கம் அழிந்து போன இக்காலங்களிலும் குற்றப்பரம்பரையாகப் பார்க்கப்படும் குறவர் சமூகத்தின் வரைவியலை வரைந்ததன் மூலம், தன் அறிவால் மானுட சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய அரும்பணியை மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் …

மாற்றுப்பாதை – அன்பாதவன்

“உங்க புத்தகம் படிச்சேன். கதைகள்ல சத்தம் அதிகமாக இருக்கிறதே!’‘ – இது அவருடைய “பம்பாய் கதை’களைப் படித்த ஒருவரின் விமர்சனம். “ஆமா எங்க வாழ்க்கை சத்தமாக இருக்கு. அதனால்தான் என் கதைகளும் அப்படியிருக்கு. உங்கள ஒரு ஊசியால குத்துனா, நீங்க ஆலாபனை பண்ணுவீங்களா, இல்ல கத்துவீங்களா? எங்கள் வாழ்க்கை குத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனால் எங்கள் எழுத்துகள் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கின்றன” – இது, அந்த விமர்சனத்திற்கு அவர் அளித்த பதில். இந்த பதில்தான் ஒட்டுமொத்த தலித் இலக்கியத்தின் குரலாகவும் இருக்க முடியும். …

மாற்றுப்பாதை – ‘தடா’ நல்லரசன்

“போதி மரத்தடியில் பிள்ளையார் சிலை பார்ப்பனிய வெற்றி” “தடா’ நல்லரசன் கவிதை இது. ஓர் அதிர்ச்சி அலை உங்களுக்குள் ஓடியிருக்கலாம். இப்படி பெயருக்கு முன்னால் “தடா’ என்றும் “மிசா’ என்றும் வைத்துக் கொள்வது தமிழ்நாட்டில் புதிதல்ல. “மிசா’வில் கைதானவர்கள் “மிசா’ என்றும் “தடா’வில் கைதானவர்கள் “தடா’ என்றும் முன்னொட்டுகளை வைத்துக் கொள்வது அரசியல் செயல்பாடு. அது, இலக்கியச் செயல்பாடாகாது. ஆனால், கைதும் சிறையும் அவரை வருத்தியபோதெல்லாம்கூட, கவிதையை விடாமல் அவர் தொடர்கிறார் என்னும்போது அங்கே இலக்கியம் வாழ்கிறது. பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். தமிழ்நாட்டின் அனைத்து …

மாற்றுப்பாதை – தய்.கந்தசாமி

தனி இருட்டு – தய். கந்தசாமியின் ஒரே தொகுப்பு. ஆனால், தலித் இலக்கியம் குறித்த எந்த ஆய்வானாலும் இவருடைய “தனி இருட்டு’ தொகுப்பிலிருந்து தரவுகளை எடுத்தாளாமல் அந்த ஆய்வு நிறைவடையாது! அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது அவருடைய எழுத்து. தான் எந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கான கோரிக்கையை, உரிமையை அடையாமல் அவர் சமரசமானதில்லை. அப்படியானதொரு கலகக்காரர் அவர்! சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது அவர் இங்கு நிகழ்த்திய இலக்கியக் களங்கள், சாதி ஒழிப்பு இலக்கியமான தலித் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன. எந்தவொரு தொகுப்பிலும் உள்ள முதல் …

மாற்றுப்பாதை – க.ஜெயபாலன்

கருங்கல்லின் மீது வரையப்பட்ட பழங்குடி மக்களின் ஓவியங்களைப் போல, காலத்தால் அழிக்க முடியாத வகையில் தலித் எழுத்துகளை மாற்றுவது – அவ்விலக்கியங்களின் மீது நடத்தப்படும் ஆய்வுக் கூறுகளே. ஆய்வுகள், இலக்கியத்தை அழியாமல் காக்கின்றன என்ற நிலையிலிருந்து உயர்ந்து, அவற்றைச் செழுமைப்படுத்தவும் பயன்படுகின்றன. அது மட்டுமல்ல, இலக்கியங்களைப் பாடத்திட்டமாக மாற்றும் வல்லமை ஆய்வுகளுக்கே உண்டு. அத்தகைய ஆய்வுகளை ஊக்கப்படுத்தி, தலித் எழுத்துகளின் மீது நடத்தப்படுவதற்கும், தானே ஆய்வாளராக இருந்து வரலாறுகளை எடுத்துத் தருவதற்கும் – தன் நேரம் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் பேராசிரியர் க. ஜெயபாலன். …

மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார்

“ஆகப்போவது ஒன்றுமில்லை எல்லா எத்தனமும் வீணேயெனினும் முளையொன்றோடு பிணைத்துன் கழுத்தைச் சுற்றிக்கிடக்கும் வலிய சங்கிலியின் இரும்புக் கண்ணிகளைக் கடித்துக் கொண்டாவது இரு.'' மதிவண்ணனின் கவிதை இது. அநீதிக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே தன் பயணத்தின் லட்சியமாகக் கொண்டிருப்பவர் களப்பணியாளர் இன்பகுமார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இவர், தன்னுடைய தொடக்கக் கல்வியை பாணாவரத்திலும், மேனிலைக் கல்வியை அரக்கோணத்திலும் முடித்தõர். வேலூர் ஊரிசு கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்ற இவர், சுமார் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிறகு ஆசிரியர் …

மாற்றுப்பாதை – டி.எல்.சிவகுமார்

மென்மையான உள்ளம். உலர்ந்துவிடாத புன்னகை. எப்போதும் அன்பு கசியும் கண்கள். இவை டி.எல். சிவகுமாரின் அடையாளங்கள். 1989 ஆம் ஆண்டு கையெழுத்து இதழாகத் தொடங்கப்பட்ட “பூங்குயில்’ இலக்கிய இதழை, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் நடத்தி வரும் அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியது. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு, “முகத்துக்கு தெரியாத முதுகெலும்புகள்.’ இரண்டாவது தொகுப்பு “குட்டி ஆலீசும் கோடி நட்சத்திரங்களும்.’ இது மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய ஆளுமைகளை உருவாக்கிய பல தளங்களும் மேடைகளும் அவருடைய அரிய உழைப்பால் விளைந்தவை. “பூங்குயில்’ சிவகுமார் என்று இலக்கிய ஆர்வலர்களால் …

மாற்றுப்பாதை – பூவிழியன்

தலித் வரலாற்றை எழுதுவது, ஒரு வகைமை. புனைவுகளைக் கடந்து இயக்க ரீதியான அணிதிரள்வுகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் – தலித் வரலாற்றாளர்கள் தருகின்ற ஆதாரங்களும், தரவுகளும் – தலித்துகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்குமான நியாயங்களை உணர வைக்கின்றன. பொதுப்பண்பாட்டிற்கு எதிராக ஓர் எதிர்ப்பண்பாட்டை உருவாக்கவும் தலித் வரலாறு தேவைப்படுகிறது. வரலாற்றாய்வாளர் ஈ.எச்.கார் என்பவர், வரலாற்றில் தவிர்க்க முடியாதது, தப்ப முடியாதது என எதுவும் இல்லை என்கிறார். ஆனால் இந்திய வரலாற்றைப் பொருத்த வரையில், தலித் வரலாறு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரலாறு மறைக்கப்பட்ட தொல்குடி …

மாற்றுப்பாதை – பாரதி நிவேதன்

பாரதி நிவேதன் எழுத்து குறித்து நவீன எழுத்தின் ஓர்மையை தன் எழுத்தில் வருவித்து, அதன் மூலம் புதிய ஆக்கவெளியினை உருவாக்கும் தன்மை பாரதி நிவேதனுடையது. பாரதி நிவேதன் தன்னுடைய கவிதைகளில் வைத்திருக்கும் பூடகமும் உட்பொருளும் – சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட “இறைச்சி’, “உள்ளுறை’, “உவமம்’ ஆகியவற்றிற்கு ஒத்த பண்புடையவை. பாரதி நிவேதனுடைய கவிதைகளும் அவருடைய ஆக்கத் திறனும் பலராலும் பாராட்டப்படுகிற ஒன்று. அவருடைய இரண்டு தொகுப்புகள் “ஏவாளின் அறிக்கை’, “வேறுகாலம் மறுத்து தாயம் போடுபவர்கள்’ ஆகியன நவீன இலக்கிய வட்டத்தில் அறியப்பட்டவை. பாரதி நிவேதன் …

123Page 2 of 3

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

சாவு ருசிகண்ட சாதி வெறி!

சாதிவெறி என்பது இந்தியாவின் தேசிய நோய் என்பதை நிரூபித்திருக்கிறது கேரளமும். காதலித்தவரையே கரம் பிடித்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த நீனுவின் …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,673 other subscribers

Stay Connected