Home கலை இலக்கியம் (page 2)

கலை இலக்கியம்

காமிய தேசத்தில் ஒரு நாள் – ஆதவன் தீட்சண்யா

அதிகாலை 2.31 மணி. அதிகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான். நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது …

வே.அலெக்ஸ்: பெரிதினும் பெரிது விரும்பிய பதிப்பாளர்

எழுத்துப் பதிப்பகம் அலெக்ஸ் என்றறியப்பட்ட வே.அலெக்ஸ் நோயுற்றிருந்த நிலையில் கடந்த வாரம் மதுரையில் மரணமடைந்தார். தலித் கலை, இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்து முக்கியமான பங்களிப்புகளை வழங்கியிருப்பவர் அவர். அந்த வகையில் அவரைப் பற்றி பலவற்றைக் கூற முடியும். எனினும் பதிப்பாளர் என்ற அவரின் அடையாளம் முதன்மையானது. பதிப்பாளராக அவர் வெளியிட்ட நூல்கள் குறைவானவை என்றாலும் வெளியிட்ட நூல்களின் உள்ளடக்கம் என்ற வகையில் அந்நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. தலித் வரலாற்று வரிசை என்கிற பொதுத் தலைப்பின் கீழ் 2009-ம் ஆண்டு அவர் வெளியிட்ட …

அனிதா பறைச்சியாய் இருந்தாள்

அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள் தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற அவள் வீடு பறத்தெருவிலிருந்தது. ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள் அவளது தெருவிலிருந்து அவளது படிப்பை கெடுக்கவில்லை பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு என்று பறையன் அப்பா சொல்லவில்லை படிச்சு கிழிச்சது போதும் என்று பறையன் அண்ணன்கள் சொல்லவில்லை அடக்கமா ஒடுக்கமா இருன்னு பறைச்சி பாட்டி சொல்லவில்லை படிப்புதான் நமக்கு எல்லாமே என்று எல்லா பறையர்களும் தமது பிள்ளைகளுக்கு சொல்வதைத்தான் அனிதாவின் வீட்டிலும் அவளிடம் சொன்னார்கள் பறையிசை கேட்டபடிதான் அவள் …

தீமைகள் அழிந்த நள்.

பெரும்போரின் நடுவேயும் அமைதி குறித்த ஓர் உணர்வு தோட்டாக்கள் அதன் இலக்குகளைக் கண்டு கொண்டபோது காலம் அதைத் தானாக நிறுத்தியது. பீரங்கிகளிலிருந்து வெடித்தெழும்பிய முழக்குகள் காற்றை நிறைத்து மௌனத்திற்கு அப்பால் அவற்றை எதிரொலித்தன. பெருங்கதறல்கள் நம்பிக்கையழிந்து வெளிப்பட்ட போது உண்மையையும் வழிகாட்டலையும் நாங்கள் தேடினோம் இவையனைத்தும் நடந்த போது அந்த நாள் கடந்து போனது அதுவே தீமைகள் அழிந்த நாள். பேரச்சத்தினூடான பெருந்துணிவில் எப்படியோ நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தோம். மீண்டுமொருமுறை பாதுகாப்பை யாசித்த தருணத்தில் எமது நன்னம்பிக்கைகள் மறைந்து போயின. உயிரழிந்து ஆன்மா …

“வெறும் சட்டத்தால் ஆணவக்கொலைகளைத் தடுக்க முடியுமா?” எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆவேசம்

சாதி களங்கப்பட்டுவிடக் கூடாது என்ற நினைப்பில், இன்னொரு சாதியில் திருமணம் முடித்த தன் சொந்த மகளை அல்லது அவரின் கணவனைத் தேடிப்பிடித்துக் கொலை செய்யும் ஆணவக்காரர்களிடமிருந்து அந்த மணமக்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டநாள்களாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கும், கலப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாப்பதற்கும் உயர் நீதிமன்றக் மதுரைக் கிளை தனிச்சட்டம் இயற்றியிருக்கிறது. மேலும், ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்புத் தனிப்பிரிவும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆணவக்கொலைகள் நடப்பதற்கான அரசியல் மற்றும் சமூக உளவியல் காரணங்களை ஆராய்ந்துவருபவரும் எழுத்தாளருமான பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசினோம்… “சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் …

 விதவிதமாய் வடிவமெடுப்பேன்

செத்தமாட்டின் தோலை உரித்ததற்காய் உயிரோடு எங்களை அடித்து கல்லெறிந்து கொன்றீர்கள் சாகாமல் செத்த நானிந்த நாடு முழுவதும் ஒரு கலவரத்துடன் உருவெடுத்தது அலறி மிதப்பேன் நாடுமுழுவதும் தேசம்முழுவதுமொரு கொலையுண்ட தெய்வங்களாய் எழுந்து நிற்பேன் ஆவேசத்தோடந்த கதைப்பாடல்களை முடுக்கிவிடவிட கொண்டாட்டத்துடன் எழுந்தாடித்துள்ளி பசுக்களையும் ஆடுமாடுகளையும் தாராளமாகக் காவுகொள்வேன் எனதுகம்பந்தடிஉறுமிச்சுழன்றுச் சல்லடம்தெறிக்க மகுடத்தால் பறையால் செண்டை கம்பெடுத்தடிப்பேன் குத்துச்சிலுவைக்குள்ளிருந்தும் மீசான் பலகைகளுக்குள்ளிருந்தும் திமிர்பிடித்தஆவிகளாய் கோபம் கொண்டெழுந்து கலைந்து கட்டறுந்தோடும் மிருகங்களாய் மாறி அவர்களைக் குத்திக்கொல்லும்வரை விதவிதமாய் வடிவமெடுப்பேன்.   (என்.டி.ராஜ்குமார், காட்டாளன், ப.38)

மானுடம் பாடும் செம்மூதாய் – சுகிர்தராணி

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், நான் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு வாசிப்பு மட்டுமே கைக்கூடியிருந்தது. ஒருநாள் வார இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெண்ணின் நிழற்படம் என் கண்களைக் கடந்துசென்றது. மீண்டும் புரட்டி அப்பக்கத்தை நோக்கினேன். நெருக்கமாய் எடுக்கப்பட்ட அதில் இருளும் ஒளியுமாய் அப்பெண்ணின் முகம். என்னைச் சட்டென்று வசீகரித்தவை அவரின் கண்கள். கம்பீரமும் கோபமும் கனிவும் கூடவே கொஞ்சம் திமிரும் ஆற்றாமையும். நான் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே ஒரு கணம் அந்தக் கண்கள் இலேசாகப் புன்னகையைத் ததும்பி …

தமிழின் இனிய விதிவிலக்கு

தலித் இலக்கியம் என்ற வகைப்பாட்டின் அடிப்படையில், தமிழ்க் கதைப் புலத்தில் 1990-க்கு முன் தலித் கதாபாத்திரங்கள் எங்கே எனக் கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் மிகத் துயரமானது. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் முழுத் தொகுதிகளைப் புரட்டினால் தலித் பாத்திரத்தை அரிதாகவே காண முடிகிறது. தலித் குரல்கள் தமிழில் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய 1990-களில் அழகிய பெரியவன் எழுத வருகிறார். இந்தத் தொகுப்பில் அழகிய பெரியவன் 2012 வரை எழுதிய 56 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1998-ல் வெளிவந்த முதல் கதையான ‘கூடடையும் பறவைகள்’ முதல் 2012-ல் …

இந்தியா, மக்களுக்கா… மதத்துக்கா?

2016-ம் ஆண்டைவிடவும் 2017-ம் ஆண்டின் நிலைமை மிக மோசமாக இருக்கப்போகிறது. குறிப்பாக, ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக முடிந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சி என்ற ஒன்றைத் துடைத்தழிக்கப்பட்டிருக்கும் சூழலில், நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான். கடந்த வாரம்கூட குஜராத்தின் வட்வாளி கிராமத்தில் இந்து-முஸ்லிம் மாணவர் களுக்கிடையில் நடந்த சண்டை, மதக்கலவரமாக முடிந்தது. முஸ்லிம்களின் வீடுகளை இந்துக்கள் சூறையாடி, தீ வைத்துத் தாக்குதல் நடத்தியதில், 25 வயது இளைஞர் ஒருவர் உயிர் இழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வட மாநிலங்களில் இந்து …

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அப்பாவிகள், அல்லது சூழ்ச்சியாளர்கள்!

இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறியவர்களுக்கே நியாயமாக படும் ஒரு சூழ்ச்சி பரப்புரை. இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசி வருபவர்கள் இரண்டு வகைப் படுவர், ஒன்று தெரிந்தே இட ஒதுக்கீட்டு முறை கூடாது என சொல்பவர்கள். மற்றவர் இந்த பரப்புரைகளை நம்பி “நியாயம் தானோ?” என வரலாறு, சிஸ்டம் தெரியாத அப்பாவிகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் …

123...5Page 2 of 5

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்!” – கிருஷ்ணசாமி

இதுவரை தான் பயணித்த பாதையில் இருந்து அப்படியே யு-டர்ன் போட்டு, ‘பட்டியல் சாதியிலிருந்து வெளியேறுவோம்’ என்ற முழக்கம், ‘இட …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected