Home கலை இலக்கியம் (page 3)

கலை இலக்கியம்

“தேசங்களற்ற ஓர் உலகத் தாய்…!” – ரோஹித்தின் நினைவுகள் குறித்து முத்துக்கிருஷ்ணன்!

நேற்று மர்மமான முறையில் இறந்த முத்துக்கிருஷ்ணன், ரோஹித் வெமுலாவைப் பற்றி சென்ற ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். அது மதியம் 2 மணி. நான் எப்போதும் போல நூலகத்தில் இருந்தேன். அன்று நான் என் சகோதரர்கள் மிர் மற்றும் ஜானுடன் விரதத்தில் இருந்தேன். என் பேராசிரியர்கள் ரத்தினம் மற்றும் தத்தாகடா ஆகியோர் வெளிவாடாவில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தார்கள். நான் அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தொடர் உண்ணாவிரதத்தில் ராதிகா அம்மா (ரோஹித் வெமுலாவின் தாய்) கலந்துகொள்ளப் போவதாக அர்பிட்டா என்னிடம் கூறினார். ஏன் என்று காரணம் …

நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி

தலைசாய்த்து நீரருந்தும் சிறு பட்சியைப் போல வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அப்பாவிடம் கேட்கிறேன் நீர்நாயின் நனையாத தோலென மினுமினுக்கின்றன அவர்  கண்கள் உள்ளுக்குள் உடைப்பெடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல் நிற்கின்றேன் உடலின் குப்பியில் விஷத்தை இட்டாற்போல் வலி பெருகுகிறது உள்ளங்கையை முறமாக்கி சலித்தெடுத்த மண்ணை ருசிபார்த்த காலந்தொட்டே கேட்டுக் கொண்டிருக்கிறேன் பதில் சொல்வாரில்லை.     ஒட்டுப்போட்ட சக்கரமென தும்பியைப் பிடித்துக் களித்த பருவத்திற்கு உருண்டோடுகிறது அவர் மனம் வலி பிசகாமல் அவரும் அவரப்பாவிடம் கேட்டது நினைவிலாடும் போலிருக்கிறது அப்பாவும் அழுகிறார் நானும் அழுகிறேன்     …

பச்சை தையல்கள்

  சரிந்துருளாத ஒரு பெரும்பாறையின் ஆசுவாசத்தைப்போல நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் இரைதேடி நீரருந்தி எச்சமிட்டு வேண்டும்பொழுதினில் பறக்கும் ஒரு பறவையாய் நீள்கிறது என் காலம் சூரியனின் பிளவுபடாத கதிர் என் குருதியில் பாய எலும்புகளும் ஒளிர்கின்ற உன்னதம் என்னுடையது கையால் நிலவை இழுத்து முத்தமிடும் தருணம் யாருக்காவது கிட்டுமா முறிந்து வீழும் அலைகளின் கடலை வீட்டின் முற்றம் வரை நீட்டிக்க இயலுமா ஒருபோதும் இல்லையென்றாலும் நான் அவற்றை வரைந்திருக்கிறேன் கவிதையாய் எழுதியிருக்கிறேன் இப்போதும் நள்ளிரவில் வீதிகளில் திரிகிறேன் பூக்களை மலரும்போதே பார்க்கிறேன் அன்பும் ஒளியும் …

சேரி

வள்ளுவன் புரண்ட வயிற்று மேடு அவதானிகளின் ஆட்சி பீடம் ஆறறிவுகளின் அரியாசனம் அடடே… அதிசய போதிவனம் தமிழைத் தரித்த தொப்பூழ்க்கொடி முதலாம் இரண்டாம் மூன்றாம் சங்கம் உலகை சோடித்த ஒற்றை விளக்கு ஒளிரும் சிந்தனை தாங்கிய மாடம் மமதை இல்லா மாளிகை புரம் மனித உரிமைக் காவல் நிலையம் சத்திய தர்மப் பாடசாலை மானுடநேய சிகிச்சைப் பிரிவு விசுவாசங்களின் சுவாச மண்டலம் பிரளய உடலின் மூளைப்பகுதி ஐந்திணைக் கைகளின் ஆயுள் ரேகை ஆதிக்கம் அடித்து தூற்றும் களம் அழுக்கு மூட்டைகள் வெளுக்கும் படித்துறை ஆதித் …

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை, அவர்களது கருத்தின் மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை, அவர்கள் தமது சொந்த முடிவிற்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் நான் கூற விரும்புவது எல்லாம் இதுதான், எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருப்பது தான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம் ஆகும். பி.ஆர். அம்பேத்கர் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி …

வானம் எல்லாருக்குமானது

அமைதியின் பேருருவத்தை உருவாக்கி முடிக்கும் அத்தருணம் உன்னதமானது சுரண்டல்களற்ற பொழுதொன்று வரும் வானம் எல்லாருக்குமானது போரின்றி கைகள் தழுவும் அந்த நொடி மனிதம் முளைக்கவுமானது அடிமைகள் என்று யாருமில்லா சமூகம் அப்பட்டமானது யாரும் கேட்க முடியாத அதிகாரத்தின் குரல் வீணானது புறக்கணிப்பின் வலியறியா மக்கள் சூழ்ந்த வாழ்வு சகோதரத்துவமானது மேடுகள் சமனுறும் செதுக்கல்கள் சமத்துவமானது பிணைகளற்று வீசி நடக்கும் கைகளும் கால்களும் சுதந்திரமானது ஆயினும் இவற்றை அடைய எளியோர் வெல்லும் போரே தேவையானது.

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு – புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய …

நாட்டிலொரு நாடகம் நடக்குது! – சிறுகதை – ஆதவன் தீட்சண்யா

இந்த நாடகத்தின் முதல் காட்சி, காவல் நிலையத்துக்குள் தொடங்குகிறது. நிஜத்தில் என்றால், உள்பாகங்கள் முழுவதும் திருடப்பட்டு, துருவேறிய வெறுங்கூடுகளாக நிறைய வண்டி வாகனங்கள் நிற்கும் இடம் எதுவோ, அதைக் காவல் நிலையம் என்று எளிதாக அடையாளம் காட்டிவிடலாம்.  ஆனால், நாடக மேடையில் அப்படிக் காட்ட முடியாது. இருந்தாலும் நாடகத்துக்காக மேடையில் காவல் நிலையம் ஒன்றை உருவாக்கத்தான் வேண்டும். காய்ந்த ரத்தத்தின் நிறத்தில் செஞ்சாந்து பூசி, அதில் இடைக்கிடை வெள்ளைக்கோடுகள் வரையப்பட்ட ஒரு கித்தானை அல்லது தட்டியை வைத்தால், காவல் நிலையம் போன்ற தோற்றம் மேடைக்குக் …

காதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் – கவிதை – மாரி செல்வராஜ்

எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு ஒருவருமில்லை ஆகவே நான் அவளைக் காதலித்தேன்  பாதி தோல் சீவப்பட்ட ஆப்பிளை அவர்களால் பத்திரப்படுத்த முடியாது அவளுக்குப் பதிலாக மரிப்பதற்கு அவளிடத்தில் வேறொருவருமில்லை அதற்காகவே நான் மரித்துப்போகிறேன் நான் வாளொன்றையும் எடுத்துச் செல்லவில்லை குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன் புழு துளையிட்ட பழத்தின் விதையாக நான் நிச்சயம் திரும்பி வருவேன் காதலித்ததற்காகவும் முத்தமிட்டதற்காகவும் கொலை செய்யப்பட்ட நான் நிறையக் கிளைகளையுடைய கனிகளையுடைய அத்திமரமாய் முளைத்தெழுவதற்கும் அனேக வாய்ப்பிருக்கிறது என் கிளைகளை வந்தடையும் பறவைகள் என் கனிகளைக் கொத்தித் தின்பதைப்போல …

12345Page 3 of 5

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

ஆசிய ஜோதி

ஆசிய ஜோதி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை  Asiya Jothi Kavimani Desiga Vinayagam Pillai  Translations from …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected