Home கலை இலக்கியம் (page 5)

கலை இலக்கியம்

நூற்றாண்டை நினைவு கூருதலின் அரசியல் : கால்டுவெல்லும் அயோத்திதாசரும்

தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி “கால்டுவெல்லின் இருநூறாவது பிறந்த தினமான மே 7-ம் நாள் அவரைப் போற்ற வேண்டும்” என்று மே 4-ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ், திராவிடன் போன்ற அடையாளங்கள் உருவாக கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூல்தான் வித்திட்டது என்கிற வகையில் அதன் ஆசிரியரான கால்டுவெல்லை கருணாநிதியின் இந்த அறிக்கை நினைவு கூறுகிறது. குறிப்பான பிரச்சினைகள் அடிப்படையில் அல்லாமல் தங்களை எல்லோருக்குமான அமைப்பாகவும் தலைவராகவும் காட்டிக்கொள்ள விரும்பும் யாரும் பயன்படுத்துவதாக தமிழ் அடையாளம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் …

கழகங்களில் காணாமல்போகும் தலித் அரசியல்

நூற்றாண்டு பெருமை கொள்ளும் திராவிட அரசியலின் தோற்றுவாய்க்கும், காங்கிரஸ் – பொதுவுடைமை மற்றும் இன்ன பிற கட்சிகளின் சமூக – அரசியல் வளர்த்தெடுப்புக்கும் கடந்தகால தலித் தலைவர்கள் புடமிட்ட தலித் அரசியல் ஒரு காரணம் என்பதை பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டில் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது. இன்றைய தமிழ்த் தேசிய  – திராவிட அரசியலின் கருத்தியல் வளர்ச்சிக்கு பண்டிதர் அயோத்திதாசர், எம்.சி. ராஜா, சத்தியவாணிமுத்து போன்றோர் செய்த பங்களிப்பை திராவிட அரசியல் வரலாறு இருட்டடிப்பு செய்த போதிலும் தலித் எழுச்சியானது அதனை சுட்டிக்காட்டத் தவறியதில்லை. …

சிவகாமியின்: அரிதிலும் அரிதான புலிவாதம்!

டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ் பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன். —————————————- நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட …

ராமதாஸ் வகையறா வந்துகொண்டிருக்கிறது, மனிதர்கள் வேறுபக்கம் செல்லவும்

தருமபுரி மாவட்டத்தில் மூன்று தலித் ஊர்கள் கொள்ளையழிப்புக்கு ஆளாகி ஒன்றரை மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதுபற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. அழிக்கப்பட்ட விதமும் அழிமானத்தின் அளவும் பலரையும் அங்கு கண்குவிக்கச் செய்திருக்கிறது. வன்கொடுமைகள் பரவலாக வெளித்தெரிகிற போதெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்கும் பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல கொந்தளிக்கிறவர்கள் பின்பு தணிந்தடங்கி காணாமல் போய்விடுகிற வழக்கம் இவ்விசயத்தில் உதவாது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து களத்தில் இருந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதை சாதி மறுப்பாளர்களும் சமத்துவ விரும்பிகளும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் மெதுவாகவேனும் உணரத்தலைப்பட்டிருக்கிறார்கள். …

நோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’

ஒரு படைப்பாளியின் மெல்லிய உணர்வுகள் சுற்றிலும் நடைபெறும் அநீதிகளின் வன்முறையால் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றன. நியாயமற்ற சமூகத்தினால் குத்திக் கிழிக்கப்பட்ட அந்த “ஆன்மா’ தன் வலியை இந்த உலகத்திற்கு உணர்த்த படைப்பை நாடுகிறது. தான் அடைந்த வன்மத்தின் வேதனையை அடுத்தவருக்குக் கடத்திச் செல்லும் படைப்பை எல்லோராலும் உருவாக்கிவிட முடியாது. “தகுதி’யும், “திறமை’யும் மட்டுமே கொண்டு – வலியை உணர்ந்தே இராத பல படைப்பாளிகளால் – தலை சிலுப்பி ஆட்டமிடும் சமூகத்தின் ஒரு மயிர்க் காலைக்கூட அசைத்துப் பார்க்க இயலாது. பசியை உணர்ந்தறியாத எந்தக் கரங்களாலும் …

உயிர்க்கொடி

இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால், கயிறு அசைந்து ராட்டினத்தில் இருந்து ஒலி எழும்பிக்கொண்டு இருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்துக்கு. லேசான வெளிச்சக் கோடுகள் வந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது. மடியில் தூங்கிக்கொண்டு இருந்த தன் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள். அமிர்தத்துக்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாகப் பாடித் திரிந்தவள் அமிர்தம். …

கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்

எதுவுமே தேவையில்லை அது அத்தனை சுலபமானது கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம் சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில் வெற்றுக்கால்கள் கொப்பளிக்க நடக்கவொன்றும் தேவையில்லை தலைமீது கல்சுமந்து கழுத்து நரம்புகள் புடைக்க வேண்டாம் சுடும் வெயிலில் நடைபாதைகளில் தலைகாயக் குந்தி காலணிகளைப் பளபளப்பாக்கி காசுக்கு கையேந்த வேண்டியதில்லை மேனிகருக்க நிறுத்தங்களில் கூடைபழங்களை கூவிவிற்க குரல் வற்ற அவசியமில்லை வியர்வை உடல்நனைக்க கட்டாந்தரையை பண்படுத்த வாழ்வை பலி கொடுக்க வேண்டியிராது மகள் படிக்க காசில்லாமல் மாற்றுத் துணியில்லாமல் ஆண்டையிடம் அவமானப்படத் தேவையில்லை …

பெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு

ஒவ்வொரு களப்பணியாளரும், சமூகத் தொண்டரும் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கின்றனர். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப் பணியாளரை, சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். ஆனால், பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்துதான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர், சாதி ஒழிப்புப் போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்புப் போராளியாக அறியப்படுகிறார். …

விடுதலை சூரியனை திசை மாற்றியவர்

சாதியின் இருள் கொட்டடிகளில் அடைபட்டிருந்த தலித் மக்களை துணிச்சலுடன் மீட்பதற்கு, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் களமிறங்கினார்கள். அவர்கள் விடுதலையின் சூரியனை திசை மாற்றி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் மீது விழ வைத்தனர். ரெட்டமலை சீனிவாசன் அவர்களில் ஒருவர். அவர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தலித் மக்களுக்காகப் போராடியவர். இதழ் நடத்தியவர். உலகம் சுற்றியவர். அரசியலில் பங்கேற்றவர். அண்மையில் அவர் பிறந்த சூலை மாதத்தில் தமிழக அரசு, சென்னை காந்தி மண்டபத்தின் ஒரு மூலையில் ரெட்டமலை சீனிவாசனுக்கு சிலை எழுப்பியுள்ளது. ரெட்டமலை சீனிவாசன் நிச்சயமாக இப்படி …

அன்பர்களே! அம்பேத்கர் இந்து அல்லர்

அண்ணல் அம்பேத்கரின் வாழ்வில் மிகவும் முதன்மையாகக் கருதக்கூடிய மூன்று நாட்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது நாள், 1927 டிசம்பர் 21. அன்று, அம்பேத்கர் மநுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினார். இரண்டாம் நாள், 1935 அக்டோபர் 13. அன்று, “நான் ஓர் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால் ஒருபோதும் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்று அம்பேத்கர் அறிவித்தார். மூன்றாம் நாள், 1956 அக்டோபர் 14. அன்று, அம்பேத்கர் பவுத்தம் தழுவினார். அம்பேத்கரின் பிறந்த நாள், மறைந்த நாள் ஆகியவற்றைக் காட்டிலும் இந்த நாட்கள் முதன்மையானவை. ஏனெனில், அவரின் …

1...345Page 5 of 5

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected