Home சிறப்புப் பக்கம்

சிறப்புப் பக்கம்

அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கரின் முதல் உரை

அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் ஆற்றிய கடைசி உரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். “1950 ஜனவரி 26-ல் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம், சமூக பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளைப் பெற்றிருப்போம். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்றிருக்கும். நமது சமூக-பொருளாதார வாழ்விலோ நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து நிராகரிப்பவர்களாக இருப்போம். எவ்வளவு காலத்துக்கு இந்த முரண்பட்ட வாழ்வை வாழப்போகிறோம்?” …

சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!

கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுரையின், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் 30.6.1997 அன்று மாலை 5 மணிக்கு, மேலவளவு கள்ளர்ளுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, மதுரை மேலூரிலிருந்து இரவு 11 மணி பேருந்தில் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 50 பேர் கொண்ட கள்ளர் சாதிக்கொலை வெறிக்கும்பல், நள்ளிரவில் மேலூர் – நத்தம் சாலையில், சென்னகரம்பட்டி வளைவில் மறைந்திருந்து, ஓடும் பேருந்தை வழிமறித்து மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட தலித் …

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் – II

சாதி ஒழிப்பிலிருந்தே அம்பேத்கரியல் என்கிற மானுட சமத்துவத்திற்கான தத்துவம் உருப்பெறுகிறது.இந்தியாவின் மிக நீண்டதும் நெடியதுமான சிக்கல்களில் ஒன்று சாதி. கி.மு. 1700 – 1500 க்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய ஆசியாவில் வாழ்ந்த ‘தொல் நோர்த்’ இனத்தவரான ஆரியர், இந்தியாவின் சிந்து மற்றும் கங்கைச் சமவெளிகளில் குடியேறினர். ஆரியக் குடியேற்றங்கள் தொடர்ந்து குழுக் குழுவாக நீண்ட காலத்திற்கு நடைபெற்றன. இக்குடியேற்றங்களை ஊடுறுவல் என்று அழைப்பதைவிடவும் படையெடுப்பு என்றே சொல்ல வேண்டும். இப்படிச் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. “ஆரியர்களின் வெற்றி, சிந்து சமவெளி நாகரிக மக்களை …

“முதலில் தீர்க்க வேண்டியது சாதிப் பிரச்னையைத்தான்!”

‘பரியேறும் பெருமாள்,’ ‘அசுரன்’ ஸ்டைலில் ஒரு படம் எடுத்து ஒட்டுமொத்தத் தெலுங்குத் திரையுலகின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் கருணா குமார். வழக்கமான தெலுங்கு சினிமாக்களில் இருந்து வேறுபட்டு தனித்த அடையாளத்துடன், லாக்டெளனுக்கு முன் களமிறங்கியது ‘பலாசா 1978.’ இன்று ஆந்திராவின் மெகா ஸ்டார்கள் முதல் கடைக்கோடி மக்கள் வரை அதுதான் ஹாட் டாப்பிக். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் கருணாகுமார், பத்து வருடங்களுக்கும் மேலாக சென்னையில் இருந்ததால், ‘`தமிழ் பேச மட்டுமல்லாமல், எழுதக்கூடத் தெரியும்’’ என்கிறார். அவரிடம் பேசினேன். …

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் – I

இந்திய பொதுக் கருத்தில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும், தலித் மக்கள் மனதில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றனவா? அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர். அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். தலித் மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுத் தந்தவர். இப்படித்தான் இந்திய பொதுச் சமூகம் அவரை அடையாளப்படுத்துகிறது. தலித் மக்களில் பெரும்பான்மையானவர்களும்கூட, இப்படித்தான் அவரை நினைக்கின்றனர். சிலரிடம் இன்னும்கூட பல நிலைகள் கீழிறங்கி இருக்கிறது அவருடைய பிம்பம். தலித் மக்களுக்கு சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர் என்று மட்டுமே அவர்கள் கருதுகிறார்கள். உலகப் …

எம்.சி.ராஜா: மறக்கப்பட்ட இன்னொரு தமிழ் ஆளுமை!

வரலாற்றில் மறக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக மின்னிய தமிழக ஆளுமை. தலித் அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதர் 1914-ல் மறைந்தார். மற்றொரு தலைவர் இரட்டைமலை சீனிவாசன், தென்னாப்பிரிக்கா வில் நிலைகொண்டிருந்தார். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகள் தொடக்க நிலையில் இருந்த காலகட்டத்தில், தலித் அரசியலை, நாடு தழுவிய அளவில் முன்னெடுத்தவர்களில் ஒருவர் எம்.சி. ராஜா.  கல்வியின் மூலம் அதிகாரம் எம்.சி.ராஜா ஆதிதிராவிட மகாஜன …

அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர்

அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர் – கோபால்கிருஷ்ண காந்தி தமிழில்: பி.ஏ. கிருஷ்ணன். அவர் ஒப்பற்றவர், அவர் நினைத்ததைப் பேசுவதற்குத் தயங்கவில்லை. இந்திய தேசீய காங்கிரஸால் அவரைப் புறக்கணிக்கவும் முடியவில்லை, இயக்கத்தில் ஒருவராகக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால், காலம் காங்கிரஸ் கட்சிக்கு இந்தச் சலுகையையாவது அளிக்கும். இந்திய விடுதலைப் போரை பல அங்கங்கள் கொண்ட, வெற்றியடைந்த துன்பியற் பெருநாடகம் என்று அழைக்கலாம். ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் சிக்கலான பாத்திரங்களுக்கு ஒப்பானவர்களைக் கொண்ட அது மூன்று காட்சிகளோடு முடிந்தது -திருப்பங்கள் நிறைந்த காட்சிகள். முதலாவது காங்கிரஸின் …

அம்பேத்கர் பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும்

அம்பேத்கர்  பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும் இந்திய பொருளாதாரத்திலும் சமூக அரசியல் தளத்திலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு பரவலாக அறியப்பட்டதே. சுதந்திரம் அடைந்த போது மிகப் பெரும் சிக்கலாக இருந்த பல விஷயங்களைப் பற்றி அம்பேத்கர் தனது உரைகளிலும், எழுத்துக்களிலும் விளக்கியிருக்கிறார். அதில் சமூக அரசியல் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் விஷயங்களுக்கு கவனம் கிடைத்தது. ஆனால் இதுவரை அம்பேத்கரின் பார்வைகளும் கவனிக்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவரது வேளாண்மையும், வேளாண் தொழிலாளர்களும். Indian Journal of Economic Society என்ற ஆராய்ச்சி இதழில் 1917இல் …

அதிகாரம், வர்க்கம், அம்பேத்கர்

தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு மறு பெயர்தான் சீர் திருத்தம். லட்சக் கணக்கான தொழிலாளர்களை காண்டிராக்ட், காஷுவல் லேபராக வைத்துச் சுரண்டும் முதலாளிகள் இப்போது வேலைநேரத்தை அதிகரிக்க வேண்டும், குறைந்தபட்சக் கூலியைய் மேலும் குறைக்க வேண்டும் என்று கூக்குரலிட வாடிய முதலாளியைக் கண்ட போதெல்லாம் வாடும் அரசுகளும் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றத் துணிந்து விட்டன. வேறு வழியில்லாத தொழிலாளர்களும் வேலை இருந்தால் போதும் என இதை ஏற்றுக் கொண்டு வேலை செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். கட்டாய வேலை என்பது துப்பாக்கி முனையில் நடப்பதல்ல. பொருளாதார, …

அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்

1951, செப்டம்பர் 27, அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள். நேரு அமைச்சரவையின் பிற்போக்கான பல்வேறு நடவடிக்கைகள் முற்போக்குச் சிந்தனையுள்ள அண்ணல் அம்பேத்கருக்கு ஒவ்வாவமையை அளித்தாலும் அவர் தனது மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன. 1.இந்துசட்ட மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும். 2.OBC ஆணையம் அமைத்து பிராமணர்களைக் (ஆண், பெண்) கணக்கெடுத்து அவர்களுக்கு தனியாக OBC இடஒதுக்கீடு அளிக்கவேண்டும். 3.காஷ்மீர் பிரச்சனையில் அரசு காஷ்மீரிகளுக்கு முழுவுரிமையை வழங்க வேண்டும். ஆனால் …

123...7Page 1 of 7

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Load more

Random Post

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,695 other subscribers

Stay Connected