அலசல்

சாதியின் பேரால் இன்னொரு கொலை கூடாது இங்கே!

இந்தியாவையே பதைபதைக்கச் செய்தது அந்தக் கொலை. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள உடுமலைப்பேட்டை சாலையில் வைத்து ஒரு ஜோடியின் மீது, கொடூர தாக்குதலை நடத்திச் சென்றது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல். இதில் கழுத்து, கைகள் என பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இளைஞர் மயங்கி விழுகிறார். இன்னொரு புறம் தனது கணவரை காப்பாற்றச் சொல்லி தலையில் வெட்டுக் காயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்தார் அந்தப் பெண். 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி காலை நடந்தேறிய இந்த சம்பவத்தில் தனது காதல் …

குழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்

பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2-ஐ, (‘15 மதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துகொண்ட கணவன்மார்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது’) தலைமை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்திய நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றிய ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (POCSO) பிரிவு 5 “ 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் …

அம்பேத்கரியப் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

அம்பேத்கரியப் பொருளாதாரம் இருபதாம் நூற்றாண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்கு மட்டுமல்ல ஆசியநாடுகள் அனைத்திற்கும் மறுமலர்ச்சி நூற்றாண்டாகும். இந்தியாவை மறுமலர்ச்சி மிக்க நாடாக்குவதில் இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற பல அறிஞர்கள் தம் பங்களிப்பைச் செலுத்தினர். அந்த இணையற்ற அறிஞர்களில், தலைவர்களில் முதன்மையானவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்றால் மிகையில்லை. அவரின் வாழ்வும் போராட்டமும் சிந்தனையும் இந்தியச் சமூகத்தைப் பலதளங்களில் அசைத்துள்ளன. அதற்கான முக்கியக் காரணம் அவரின் சிந்தனையும் செயலும் ஒன்றிணைந்து செயல்பட்ட தன்மையே எனலாம். இங்கு அவரின் பொருளாதாரச் சிந்தனைகள் பற்றிச் சிறிது காண்போம். டாக்டர் …

புதிய கல்விக் கொள்கை – 2016

ஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத்திட்டங்களான புதிய கல்விக் கொள்கையையும் பொது சிவில் சட்டத்தையும், உடனே நடைமுறைக்குக்கொண்டுவரத்துடித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொடுத்துள்ள வழிகாட்டலின் அடிப்படையில் மோடியின் அமைச்சரவை சகாக்கள் புதிய கல்விக்கொள்கை குறித்த அவசரச்சட்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம்! பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் அவர் அறிவித்த திட்டங்களையும் ஆணைகளையும் ஆய்வு செய்து பார்த்தால், அவரது ஒவ்வொரு …

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

குறைந்த பட்சம் குறிப்பிட்ட செய்தியை எழுதியிருக்கும் செய்தியாளர் குள.சண்முகசுந்தரம் அவ்வேட்டில் இதுவரை சொந்த பெயரில் எழுதி வந்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி பார்த்தால் கூட இதை புரிந்து கொண்டு விடலாம். இப்போது நான் பார்ப்பன நிறுவனத்தை விடுத்து பார்ப்பன அல்லாத செய்தியாளர் மீது விஷயத்தை திசை திருப்புவதாக வியாக்கியானம் பிறக்கலாம். இதில் இரண்டு தரப்புக்குமே பங்கிருக்கிறது; அதில் ஒரு தரப்பை விடுத்து மற்றொரு தரப்பை மட்டுமே பேச வேண்டியதில்லை.வாஞ்சிக்கு தேவர் உதவியதைப் பற்றிய தி இந்து (தமிழ்) நாளேட்டில் வெளியான பொய் வரலாறு பற்றி நிறைய …

Dr.B.R.அம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2

பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் இரண்டாவது பகுதி இது: முதல் பகுதியை இங்கே படியுங்கள் அம்பேத்கர் பல்வேறு தளங்களில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறார். அதிர வைக்கிறார். அவர் தலைமுறையின் எல்லாத் தலைவர்களில் …

Dr.B.R.அம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1

பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும் கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது: #டாக்டர் அம்பேத்கர் அதிகாரம்-ஜனநாயகம், பொருளாதார வளம்-வன்முறை, இந்து மதம்-பாரம்பரியம், தேசியம்-நீதி, எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியல் என்கிற பெயரில் …

அமைச்சர் பதவியை அம்பேத்கர் உதறிய காரணம் தெரியுமா!

அம்பேத்கர் என்றதும், இந்தியச் சட்டங்களை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பைச் செலுத்தியவர் என்ற இரண்டு விஷயங்கள் எல்லோரின் நினைவுக்கும் வரும். இந்த இரண்டு அடையாளங்களைத் தவிர, அம்பேத்கர் தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெண்களின் வாழ்வு பற்றியும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெண்கள் மதிக்கப்பட்டு, அரசர்கள் முடிசூடும் விழாக்களில் முக்கிய இடம்பிடிப்பதைக் குறிப்பிடுகிறார். பதவியேற்ற அரசர், தனது மனைவிக்கும் பொது அமைப்புகளில் …

அம்பேத்கரின் முதல் நூல்

தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சாதி அம்பேத்கர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. அவர் காலத்து தலைவர்களில் அதிகம் எழுதியவர். அன்றைய இந்திய அரசியலில் இருந்த தலைவர்களில் அதிகம் படித்தவர். அம்பேத்கருக்கு நவீன ஆய்வு முறையில் புலமை அதிகம். எதை எழுதினாலும் தேர்ந்த ஆய்வுப் பண்போடு இருக்கும். சாதி பற்றி மட்டுமல்ல, பல்வேறு துறைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முதல் ஆய்வு நூலின் நூற்றாண்டும் இதுவே. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும் சமூகவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல், அரசியல் …

முத்துக்கிருஷ்ணன்கள் தற்கொலைசெய்துகொள்வதின் பின்னணி என்ன?

உயர்கல்வி வளாகங்களில் தற்கொலைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட வெம்மை அடங்குவதற்குள்,இப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறந்திருக்கிறார். முன்பு, இளநிலை ஆய்வுப்படிப்பை ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரோஹித் வெமுலாவின் பக்கத்து அறை மாணவராக இருந்த முத்துக்கிருஷ்ணன், இப்போது வெமுலாவின் முடிவையே எட்டியிருப்பது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முத்துக்கிருஷ்ணன் தமிழக மாணவர் என்பது நம்மை இதைச் சார்ந்த விவாதத்தோடு மேலும் நெருக்கமாக்குகிறது. பிறந்த ஊரிலிருந்து வெளியேறி, வெளியில் வந்து படிப்பதையே பெரும் வரமாக …

123Page 1 of 3

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

ஜெ.ஜெ. தாஸ்

தொழிலாளர் நல அதிகாரிகளிடம், முதலாளிகள் சங்கத்திடம், முதலாளிகளிடம் பேச்சுவார்த்தைக்கென்று சலிக்காமல் நடந்திருக்கின்றார், ஜெ.ஜெ. தாஸ். கூலி உயர்வு கேட்டும், …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,168 other subscribers

Stay Connected