அலசல்

முத்துக்கிருஷ்ணன்கள் தற்கொலைசெய்துகொள்வதின் பின்னணி என்ன?

உயர்கல்வி வளாகங்களில் தற்கொலைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட வெம்மை அடங்குவதற்குள்,இப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறந்திருக்கிறார். முன்பு, இளநிலை ஆய்வுப்படிப்பை ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரோஹித் வெமுலாவின் பக்கத்து அறை மாணவராக இருந்த முத்துக்கிருஷ்ணன், இப்போது வெமுலாவின் முடிவையே எட்டியிருப்பது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முத்துக்கிருஷ்ணன் தமிழக மாணவர் என்பது நம்மை இதைச் சார்ந்த விவாதத்தோடு மேலும் நெருக்கமாக்குகிறது. பிறந்த ஊரிலிருந்து வெளியேறி, வெளியில் வந்து படிப்பதையே பெரும் வரமாக …

அம்பேத்கரும் தண்ணீர் தினமும்:முகுல் ஷர்மா

2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாபாசாகேப் அம்பேத்கரை நீர்வளத்துறையின் தந்தை என்று அறிவித்தார் மத்திய நீர்வள மற்றும் நதிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதி. 1942 முதல் நீர்வள மேம்பாட்டிற்கு அம்பேத்கர் அளித்த பங்களிப்பும் இத்துறையில் பல்வேறு கொள்கைகள் வகுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்பதாலும் அவருக்கு இந்தப்பட்டம் வழங்கப்படுவது மிகப்பொருத்தமான ஒன்று என்று அப்போது கூறினார். மத்திய நீர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த “அம்பேத்கரின் வழியில் வளர்ச்சிக்கான நீர் வளமேலாண்மை” என்ற கருத்தரங்கில் பேசும்போது அம்பேத்கரின் பிறந்தநாளை நீர் தினமாக …

அம்பேத்கர் காட்டிய பாதை!

ஒரு போராட்டத்தைத் தொடங்க உறுதியான உள்ளம் போதும். அது நம்மை வழிநடத்தும். அப்படி ஒரு மிக நீண்ட போராட்டத்தை நடத்தியவர் சமூக ஆர்வலர் பெஜவாடா வில்சன். மலம் அள்ளுகிற மனிதர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சமூகப் போராளி. மூன்று லட்சத்துக்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றிய திசைகாட்டி. 32 ஆண்டுகளுக்கு முன்னர் தனிமனிதராக தன் போராட்டத்தைத் தொடங்கினார் வில்சன். இன்று 6,000 தொண்டர்களோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டி ருக்கிறார். வில்சனின் தொடர் போராட்டங்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான `மகசேசே விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. …

அம்பேத்கர் யாருக்குச் சொந்தம்?

125 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவரை, பொதுவாக எப்படி மதிப்பிடுவார்கள்? நம் காலத்தோடு ஒப்பிட்டு, அவரின் பங்களிப்பு எத்தகையது என அளவிடுவோம். ஆனால், `அம்பேத்கரை மதிப்பிடும்போது மட்டும் இந்த விதியைத் தலைகீழாக மாற்றவேண்டும்’ என்கிறார் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா. `நம் காலத்தைக்கொண்டு அம்பேத்கரை மதிப்பிடவேண்டியது இல்லை. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு நாம் வாழும் சமூகத்தை நாம் மதிப்பிடவேண்டும்’ என்கிறார் அவர். அவ்வாறு செய்யும்போது அம்பேத்கரின் உருவம் மிகப் பிரமாண்டமாக நம் முன்னர் எழுந்து நிற்கிறது. `தலித் தலைவர்’ என்று மட்டும் அல்ல, `இந்தியத் தலைவர்’ …

செத்துப் போனது இருக்கட்டும்… ரோகித் என்ன சாதி?

இன்றைக்கு இதுதான் மிகப்பெரிய ஊடக கேள்வியாகவும், காவல்துறையின் கடினமான புலனாய்வுக்கு உரிய கேள்வியாகவும் மாறியிருக்கிறது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ரோகித் அங்கு நடந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததினால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தை மட்டுமின்றி படிப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓர் ஆய்வு மாணவர் மீது மாநிலங்களவை உறுப்பினர் ராமசந்திர ராவ், மத்திய இணை அமைச்சர் தத்தாத்ரேயா, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பல்கலை நிர்வாகம் என அதிகாரத்தின் பல பரிவாரங்கள் போர்த் தொடுத்துள்ளன. அதன் நெருக்கடியினை தாங்காமல் ரோகித் …

இந்த நாட்டில் வாழ்வதற்காக நாம் பெருமை கொள்வோம்!

  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை. 40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக 3 கிலோமீட்டர் நடந்து, கடலாழி …

சாதி என்னும் பெருநோய்!

கடலூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர், தன் பேத்தி ரமணிதேவியை, கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார். காரணம்? வேறு ஒரு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக. தன் சந்ததி தழைத்து, செழித்து வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதே மூத்த தலைமுறையின் குணம். பேரன், பேத்திகள் விரும்பும் ஒன்றை, அவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பெற்றுத்தருவதுதான் தாத்தா, பாட்டியின் பண்பு. ஆனால், நெகிழ்ச்சி மிகுந்த அந்த உறவும் பாசமும் சாதிவெறியின் முன் செல்லாக்காசாகிவிட்டது. ‘நான் ஊர் நாட்டாமை. ஊருக்கே முன்மாதிரியாக இருக்கவேண்டிய என் …

இந்திய தொழிலாளர்களின் ‘மே’ தினத் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்

உலகத் தொழிலாளர்களின் வரலாற்றில் அவர்களின் உரிமைகளுக்காக முதன்முதலில் 1856-ல் ஆஸ்திரேலியாவில் போராட்டம் தொடங்கப்பட்டது. கால ஓட்டத்தில் முப்பது ஆண்டுகள் கடந்த பின்னர் 1886-ல் ‘ஹேமார்கெட் நிகழ்ச்சி (Haymarket affair) ஒன்று, அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் இல்லினாஸ் மாகாணத்தில் நடந்தது.   இந்நிகழ்ச்சியில் எல்லாவிதமானத் தொழில் புரியும் தொழிலாளர்கள் சுமார் 2,00,000 பேர் கலந்துக் கொண்டார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூன்று நாட்கள் பொதுவேலை நிறுத்தப் போராட்டமாகத் தொடர்ந்து நடத்தப் பட்டது.   நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே காவல் துறையினர் தடியடி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் …

1.1.1818 வரலாறு மறைத்து விட்ட வெற்றி

பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு‘ என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1.  மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து …

மரக்காணம் – சாதிய வன்முறை

கிழக்கு கடற்கரை சாலையில் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ளது மரக்காணம். சாலையில் ஒரு பக்கம் உப்பளங்கள். மறு பக்கமோ கண்ணீர் கடலாக காட்சியளிக்கிறது இப்போது. மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர்களின் குடும்பவிழாவுக்கு வந்தவர்களால், மரக்காணம் கட்டையன் தெருவில் உள்ள குடும்பங்கள் இன்று குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றன. பல்வேறு ஊர்களிலிருந்து சித்திரை முழுநிலவு விழாவுக்கு வந்தவர்கள் வழிநெடுக ஆடிய தாண்டவத்தையும் செய்த அட்டகாசங்களையும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் காண முடிந்தது. மகாபலிபுரம் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் வாசலில் திருமாவளவன், ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் ஆகியோரின் …

123Page 2 of 3

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected