Home சிறப்புப் பக்கம் நேர்காணல்கள்

நேர்காணல்கள்

“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்!” – கிருஷ்ணசாமி

இதுவரை தான் பயணித்த பாதையில் இருந்து அப்படியே யு-டர்ன் போட்டு, ‘பட்டியல் சாதியிலிருந்து வெளியேறுவோம்’ என்ற முழக்கம், ‘இட ஒதுக்கீடு கூடாது’ என்ற நிலைப்பாடு, தமிழகமே எதிர்த்தாலும் ‘தீவிர பா.ஜ.க நிலைப்பாடு’ என்று மாறியிருக்கும் ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைச் சந்தித்தேன். ‘‘ஆண்டாண்டுக் காலமாக இழிவுக்குள்ளாக்கப்பட்டுப் பின்தங்கிப்போன மக்கள் சமூக நீதி பெறுவதற்காக வகைப்படுத்தப்பட்டதுதான் எஸ்.சி பட்டியல். ஆனால், ‘எஸ்.சி பட்டியலில் வைத்ததால்தான் எங்களை இழிவுபடுத்துகிறார்கள்’ என்று நீங்கள் சொல்வதை  என்னவென்று புரிந்துகொள்வது?’’ ‘‘இது ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பிழை! …

“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின!” – அர்ஜுன் டாங்ளே

“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின!” – அர்ஜுன் டாங்ளே சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன் அர்ஜுன் டாங்ளே – தலித் இலக்கியத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர்; சமூகச் செயற்பாட்டாளர். மகாராஷ்டிராவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலித் பேந்தர் (Dalit Panther) இயக்கம், தலித் இளைஞரணி அமைப்பு (Militanat Dalit youth organization) ஆகியவற்றை உருவாக்கியவர்களில் ஒருவர். ‘பாரதிய குடியரசுக் கட்சி’ (Bharatiya Republic Party)யின் தலைவராகவும் இருந்தவர். தற்போது, ‘குடியரசு ஜன சக்தி’யின் தலைவராக இருக்கிறார். …

“மொழியை அறிமுகப்படுத்தியவர்கள் பெண்கள்!”

விஷ்ணுபுரம் சரவணன் – படங்கள்: ச.வெங்கடேசன் என் கருத்த உடல்களிலிருந்து சிந்தப்படுகின்ற ரத்தமெல்லாம் இத்தேசத்தில் தீப்பற்றி எரிகின்றன தீண்டப்படாத முத்தங்களாக!  முத்தம் என்பதன் ரசனை சார்ந்த நம் பார்வையை மாற்றி அமைத்திடும் இந்தக் கவிதை வரிகளை எழுதியவர், சுகிர்தராணி. சமகாலக் கவிஞர்களில் காத்திரமான படைப்புகளைத் தந்துவருபவர். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களிலெல்லாம் இவரை நிச்சயம் பார்க்கலாம். வேலூர், லாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். “நீங்கள் இயங்கும் வெளியாக இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?” “பள்ளிப்படிப்பு வரை பாடப்புத்தகங்கள் …

“நான் சமரசமற்ற படைப்பாளி கிடையாது” – பா.இரஞ்சித் பேட்டி

‘நான் சமரசமற்ற படைப்பாளி கிடையாது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை, தனுஷ் தயாரித்துள்ளார். பா.இரஞ்சித் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது. சமரசமற்ற படைப்பாளியாக கமர்ஷியல் சினிமாவில் இயங்குவது சாத்தியமா? சமரசமற்ற படைப்பாளியாக நான் இல்லை. சமரசமுள்ள படைப்பாளியாகத்தான் இருக்கிறேன். ஆனால், சமரசமற்ற படைப்பாளியாக மாறவேண்டும் என்று விருப்பப்படுகிறேன். ஏனென்றால், நான் நினைப்பதையும் பேசுவதையும் படமாக்க சமரசமற்ற தன்மை இங்கு தேவைப்படுகிறது. சினிமா எனும் மிகப்பெரிய …

“நிம்மதியும் சந்தோஷமும் இல்லை!” – திவ்யா

ஒரு காதல் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பேசுபொருளானது இளவரசன் – திவ்யா திருமணத்தின்போதுதான். தலித் இளைஞனான இளவரசனை திவ்யா திருமணம் செய்துகொள்ள, திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள, இளவரசனின் கிராமமே கொளுத்தப்பட, காதல் திருமண வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர, நீதிமன்றத்தில் “என் அம்மாவுடனே போகிறேன்’’ என திவ்யா சொல்ல, இளவரசன் மர்மமான முறையில் இறக்க… என அதிர்ச்சி தரும் திருப்பங்களுடன் எல்லாமே நடந்துமுடிந்து நான்கு வருடங்களாகிவிட்டன. இந்தச் சம்பவங்களின்போது திவ்யாவுக்கு வயது 19. திவ்யாவுக்கு இந்தச் சமூகத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்ததோ அதே …

“திருமாவளவன் தலித் அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்”

உங்கள் இளமைப் பருவம் பற்றி… நான் பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். 1930அம் அண்டு சனவரி 6அம் நாள் பிறந்தேன். எனது அப்பா அம்பூரைச் சார்ந்தவர், அம்மா வேலூர். ஊங்க தாத்தா குடுமி வைத்து கோவணம்தான் கட்டியிருந்தார். அப்போது அம்பூர் சர்க்கரை அலையில் வேலை நிறுத்தம் நடந்தது. நீண்ட நாள் நடந்தது. அலையை ஆழுத்து மூடிவிட்டார்கள். வேறு வேலை வேண்டுமே என்று எனது தகப்பனார் ஒட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் பெற்றுக் கொண்டு, வேலை தேடி சென்னைக்கு வந்தார். இங்கே ஒரு வெள்ளைக்கார துரையிடம் வீட்டு …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

தலித்துகள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறி தாக்குதல்

கேட்பதற்கே நெஞ்சம் பதறுகிறது.உலகமே புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் வேளையில் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலபட்டு – தெற்கு …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected