Home சிறப்புப் பக்கம் (page 2)

சிறப்புப் பக்கம்

’வி மிஸ் யூ அம்பேத்கர்!’ – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!

பேரன்பின் பாபாசாகேப் அவர்களுக்கு, வணக்கம். ஊர் தனியாகவும், சேரி தனியாகவும் இன்றுவரை பிரிக்கப்பட்டு கிடக்கும் ‘அகண்ட பாரதத்தில்’ இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் இறந்த ஆண்டில் இருந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்துவிட்டோம். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒழிக்க நினைத்த ‘சாதி’, காலம் கடந்து இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. ’இப்ப எல்லாம் யாரு சாதி பார்க்குறாங்க?’ என்ற கேள்வியை எப்போதும் முன்வைக்கும் தலைமுறையில் பிறந்தவர்கள் நாங்கள். ‘இட ஒதுக்கீடு தான் சாதியை நீடிக்கச் செய்கிறது’ என வாதம் செய்யவும் எங்கள் தலைமுறையில் …

சூத்திரர்கள் என்றால் தேவடியா மக்களா…?

சில காரணங்களை மனதில் வைத்தே அம்பேத்கர் அவர்கள் fools rushing in where the angels fear to tread என்ற முதுமொழியை ஏன் பயன்படுத்தினார் என்று முகநூல் தோழர்களிடத்தில் கேள்வி எழுப்பினேன். வழக்கமாக அறிவுத் தளத்தில் விவாதிக்கத் தெம்பற்று வெறும் படங்களைப் போட்டு தன்னை முன்னிருத்திக் கொள்ளத் துடிக்கும் போக்கிலிருந்து நமது தோழர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான்.. சரி மூதுரையினை அம்பேத்கர் ஏன் பயன்படுத்தினார் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு அதன் மூலத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் அம்பேத்கரின் மேதமையைப் புரிந்துக்கொள்ளத் தொடங்குவோம். …

டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ?

டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? – உருகேன் சங்கரக்ஷிதா . -இந்த கேள்விக்கான பதிலை சிறிது கூடுதலாக ஆராயவேண்டியுள்ளது. டாக்டர் அம்பேட்கர் அவர்களின் கூற்றுப்படி, நான்கு முக்கிய மதங்கள் தற்பொழுது இவ்வுலகின் பெருவாரியான மக்களால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.   இம்மதங்கள் கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் இன்றும் பெருவாரியான மக்களிடத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு முக்கிய மதங்கள் பவுத்தம், கிருஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்துத்துவம் ஆகும். இதன் நிறுவனர்கள் முறையே புத்தர், …

இந்திய கிரிக்கெட்டில் இட ஒதுக்கீடு முறை தேவை?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நிறவெறி ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சார்ந்த லுங்கி இங்கிடியின் எழுச்சி மற்றும் வருகை இன மற்றும் சாதி அடக்குமுறையிலான பிற விளையாட்டுத் தேசங்களுக்கு ஒரு சிறந்த பாடம். தென் ஆப்பிரிக்க விளையாட்டுத் துறையில் நலிவடைந்தப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை கடுமையான சமூக சமத்துவமின்மைகளையும் பாகுபாடுகளையும் இடைவெளிகளையும் கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டான கிரிக்கெட்டுக்கு கண்ணாடி காட்டியுள்ளது. இந்திய விளையாடும் 11 வீரர்களில் தலித்துகள், ஆதிவாசிகள் சுத்தமாக இல்லாதது அனைவரும் அறிந்ததே. இத்தனைக்கும் இந்திய மக்கள் தொகையில் …

பெண்கள் விடுதலையில் டாக்டர் அம்பேத்கர்

1921 – சாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அத்தகைய பெயர்களைத் தவிர்க்கின்றனர். அதே நேரம் திருமணம் போன்ற நிகழ்வுகளால் சாதி உணர்வை வலியுறுத்த வேண்டிய சூழலில் பெண்கள் உள்ளனர். இதைக் களைந்தெறிய, பெண்கள் போதுமான அளவு பொதுத் தளத்திற்கு வர வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். 1927 – சைமன் குழுவிடம் தந்த பரிந்துரை மற்றும் சாட்சியங்களில் பெண் கல்வி, பெண் விடுதலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்துள்ளார். …

விரட்டும் சாதி வெறி…

“தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தால், அதையும் எதிர்த்து வழக்காடுவேன். அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா மூவரது விடுதலையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்’’ –  உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அப்பா, அம்மா, மாமன் என்ற எந்த உறவுப் பெயரையும் குறிப்பிடாமல், தீர்க்கமான குரலில் கெளசல்யா பேசிய வார்த்தைகள் இவை.   ஆறு பேருக்குத் தூக்குத்தண்டனை, ஒருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை, மற்றொருவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை என்ற நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, `சாதிவெறி ஆணவக்கொலைகள் நிகழாமல் தடுத்து நிறுத்துமா? ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்றப்படுமா? …

வரலாற்றை நினைவு கூர்வோம்!

30000 பேர் கொண்ட ஜாதி வெறி் “பேஷ்வா” படையை வெறும் 500 பேர் கொண்ட மகர் போர்ப்படை வீரர்கள் 12 மணி நேரத்திற்குள் வீழ்த்தி வெற்றிகொண்ட நாள் இன்று. பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 200ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1. மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே …

Five must visit places to rediscover the life of Dr Babasaheb Ambedkar

There are a number of places revered by the followers of Dr Babasaheb Ambedkar. While Chaitya Bhoomi, Dr Ambedkar’s memorial in Mumbai and Deekshabhoomi- Nagpur are the most important places, following are the other sites followers of the legendary leader consider sacred. Deekshabhoomi, Nagpur, Maharashtra: One of the most sacred monuments of Buddhism, it is here that Dr Babasaheb Ambedkar …

“நிம்மதியும் சந்தோஷமும் இல்லை!” – திவ்யா

ஒரு காதல் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பேசுபொருளானது இளவரசன் – திவ்யா திருமணத்தின்போதுதான். தலித் இளைஞனான இளவரசனை திவ்யா திருமணம் செய்துகொள்ள, திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள, இளவரசனின் கிராமமே கொளுத்தப்பட, காதல் திருமண வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர, நீதிமன்றத்தில் “என் அம்மாவுடனே போகிறேன்’’ என திவ்யா சொல்ல, இளவரசன் மர்மமான முறையில் இறக்க… என அதிர்ச்சி தரும் திருப்பங்களுடன் எல்லாமே நடந்துமுடிந்து நான்கு வருடங்களாகிவிட்டன. இந்தச் சம்பவங்களின்போது திவ்யாவுக்கு வயது 19. திவ்யாவுக்கு இந்தச் சமூகத்தின் மீது எவ்வளவு வெறுப்பு இருந்ததோ அதே …

சாதியின் பேரால் இன்னொரு கொலை கூடாது இங்கே!

இந்தியாவையே பதைபதைக்கச் செய்தது அந்தக் கொலை. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள உடுமலைப்பேட்டை சாலையில் வைத்து ஒரு ஜோடியின் மீது, கொடூர தாக்குதலை நடத்திச் சென்றது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல். இதில் கழுத்து, கைகள் என பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இளைஞர் மயங்கி விழுகிறார். இன்னொரு புறம் தனது கணவரை காப்பாற்றச் சொல்லி தலையில் வெட்டுக் காயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்தார் அந்தப் பெண். 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி காலை நடந்தேறிய இந்த சம்பவத்தில் தனது காதல் …

123...5Page 2 of 5

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected