Home சிறப்புப் பக்கம் (page 5)

சிறப்புப் பக்கம்

செத்துப் போனது இருக்கட்டும்… ரோகித் என்ன சாதி?

இன்றைக்கு இதுதான் மிகப்பெரிய ஊடக கேள்வியாகவும், காவல்துறையின் கடினமான புலனாய்வுக்கு உரிய கேள்வியாகவும் மாறியிருக்கிறது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ரோகித் அங்கு நடந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததினால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தை மட்டுமின்றி படிப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓர் ஆய்வு மாணவர் மீது மாநிலங்களவை உறுப்பினர் ராமசந்திர ராவ், மத்திய இணை அமைச்சர் தத்தாத்ரேயா, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பல்கலை நிர்வாகம் என அதிகாரத்தின் பல பரிவாரங்கள் போர்த் தொடுத்துள்ளன. அதன் நெருக்கடியினை தாங்காமல் ரோகித் …

இந்த நாட்டில் வாழ்வதற்காக நாம் பெருமை கொள்வோம்!

  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை. 40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக 3 கிலோமீட்டர் நடந்து, கடலாழி …

சாதி என்னும் பெருநோய்!

கடலூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர், தன் பேத்தி ரமணிதேவியை, கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார். காரணம்? வேறு ஒரு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக. தன் சந்ததி தழைத்து, செழித்து வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதே மூத்த தலைமுறையின் குணம். பேரன், பேத்திகள் விரும்பும் ஒன்றை, அவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பெற்றுத்தருவதுதான் தாத்தா, பாட்டியின் பண்பு. ஆனால், நெகிழ்ச்சி மிகுந்த அந்த உறவும் பாசமும் சாதிவெறியின் முன் செல்லாக்காசாகிவிட்டது. ‘நான் ஊர் நாட்டாமை. ஊருக்கே முன்மாதிரியாக இருக்கவேண்டிய என் …

இந்திய தொழிலாளர்களின் ‘மே’ தினத் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்

உலகத் தொழிலாளர்களின் வரலாற்றில் அவர்களின் உரிமைகளுக்காக முதன்முதலில் 1856-ல் ஆஸ்திரேலியாவில் போராட்டம் தொடங்கப்பட்டது. கால ஓட்டத்தில் முப்பது ஆண்டுகள் கடந்த பின்னர் 1886-ல் ‘ஹேமார்கெட் நிகழ்ச்சி (Haymarket affair) ஒன்று, அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் இல்லினாஸ் மாகாணத்தில் நடந்தது.   இந்நிகழ்ச்சியில் எல்லாவிதமானத் தொழில் புரியும் தொழிலாளர்கள் சுமார் 2,00,000 பேர் கலந்துக் கொண்டார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூன்று நாட்கள் பொதுவேலை நிறுத்தப் போராட்டமாகத் தொடர்ந்து நடத்தப் பட்டது.   நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே காவல் துறையினர் தடியடி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் …

1.1.1818 வரலாறு மறைத்து விட்ட வெற்றி

பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு‘ என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1.  மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து …

மரக்காணம் – சாதிய வன்முறை

கிழக்கு கடற்கரை சாலையில் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ளது மரக்காணம். சாலையில் ஒரு பக்கம் உப்பளங்கள். மறு பக்கமோ கண்ணீர் கடலாக காட்சியளிக்கிறது இப்போது. மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர்களின் குடும்பவிழாவுக்கு வந்தவர்களால், மரக்காணம் கட்டையன் தெருவில் உள்ள குடும்பங்கள் இன்று குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றன. பல்வேறு ஊர்களிலிருந்து சித்திரை முழுநிலவு விழாவுக்கு வந்தவர்கள் வழிநெடுக ஆடிய தாண்டவத்தையும் செய்த அட்டகாசங்களையும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் காண முடிந்தது. மகாபலிபுரம் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் வாசலில் திருமாவளவன், ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் ஆகியோரின் …

ராமதாஸ் வகையறா வந்துகொண்டிருக்கிறது, மனிதர்கள் வேறுபக்கம் செல்லவும்

தருமபுரி மாவட்டத்தில் மூன்று தலித் ஊர்கள் கொள்ளையழிப்புக்கு ஆளாகி ஒன்றரை மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதுபற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. அழிக்கப்பட்ட விதமும் அழிமானத்தின் அளவும் பலரையும் அங்கு கண்குவிக்கச் செய்திருக்கிறது. வன்கொடுமைகள் பரவலாக வெளித்தெரிகிற போதெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்கும் பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல கொந்தளிக்கிறவர்கள் பின்பு தணிந்தடங்கி காணாமல் போய்விடுகிற வழக்கம் இவ்விசயத்தில் உதவாது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து களத்தில் இருந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதை சாதி மறுப்பாளர்களும் சமத்துவ விரும்பிகளும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் மெதுவாகவேனும் உணரத்தலைப்பட்டிருக்கிறார்கள். …

விஷத்தை முறிக்கும் வைத்தியத்தை பாம்பிடமே கேட்டறிய முடியாது – ஆதவன் தீட்சண்யா

1. “என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று – பிராமணியம். இரண்டு- முதலாளித்துவம்” என்று 1938 பிப்ரவரி 12,13 தேதிகளில் மன்மத் நகரில் நடைபெற்ற கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வேயில் பணிபுரிந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாட்டின் தலைமையுரையில் அம்பேத்கர் விடுத்த இந்த அறைகூவல் இன்றளவும் மிகுந்த பொருத்தப்பாட்டுடன் நிலைத்திருக்கிறது (அ.தொ.நூ.37 பக்- 227). இதன்பொருள் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதில் அக்கறையுள்ளவர்கள் அம்பேத்கரின் இந்த அறைகூவலுக்கு இன்னும் செவிசாய்க்கவில்லை என்பதே. அம்பேத்கர் முதன்மைப்படுத்திக் காட்டும் இரு பகைமைச் …

ஜனநாயக இருள்

மனித இனத்தின் நீண்ட நெடிய சிந்தனை அனுபவங்களால் செழிப்புற்றிருக்கிறது உலகம். முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதத் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் சமய நெறிமுறைகளும் தத்துவங்களுமே தீர்வைத் தர முயன்றிருக்கின்றன. அறியப்படாமலிருக்கும் எதிர்காலப் பேரழிவுக் கெல்லாம் அவையே பொறுப்பு. மனித நம்பிக்கையின் ஊற்றுக் கண்களாய் இருக்கும் அவை, பெருந்தொலைவு களுக்கிடையில், பலவகை மொழிகள், பண்பாடுகள், வழிபாட்டுக் கூறுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழும் மக்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகின்றன. ஆயினும், மனித இனம் அரசு என்ற முரண் பகை கொண்ட நிறுவனத்திடம் அடிபணிந்து கிடக்கிறது. உடைமை …

1...345Page 5 of 5

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

வே.அலெக்ஸ்: பெரிதினும் பெரிது விரும்பிய பதிப்பாளர்

எழுத்துப் பதிப்பகம் அலெக்ஸ் என்றறியப்பட்ட வே.அலெக்ஸ் நோயுற்றிருந்த நிலையில் கடந்த வாரம் மதுரையில் மரணமடைந்தார். தலித் கலை, இலக்கியம் …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected