Home பௌத்தம்

பௌத்தம்

மணிமேகலையில் தொல்குடி அடையாளமும் உளவழிமருத்துவ தோற்றுமைகளும்

“பஞ்சமா பாதகம்” எனும் எதிர்வினை கட்டமைப்புக்குள் சுருங்கியிருந்த இந்திய பண்பாட்டுலகம், “பஞ்ச சீலம்” எனும் நல்வினை வழியொழுகும் தனிமனித மற்றும் சமூக ஒழுக்கநெறியை மானுடத்திற்கு வழங்கியது இந்திய தொல்குடி அடையாளமாகிய புத்த தம்ம அடையாளம். புத்தம் எனும் அறிவையும், தம்மம் எனும் அறத்தையும் சேர்த்து இழைத்த சங்கம் எனும் அமைப்பின் வழி பகிரும் எல்லா உயிர்களுக்குமான அன்பை வலியுறுத்திய உயர்ஞான் எய்திய புத்த பெருமானின் போதனைகளை ஒருங்கிணைத்த திபீடகங்கள் அல்லது திரிபீடகங்கள் என்றழைக்கப்படும் வினைய, சுத்த மற்றும் அபிதம்ம பீடகங்கள், பஞ்சமாப்பாதக வர்ண-ஜாதி-வர்க்க பேத …

பகவன் புத்தரின் பெயர்கள் சில…

(*சூ – சூடாமணி நிகண்டு *தி – திவாகர நிகண்டு *நா – நாமலிங்காநுஸாசநம் நிகண்டு *பி – பிங்கல நிகண்டு *ம – மணிமேகலை *வே – வேறுநூல்கள் ) 1) அகளங்கமூர்த்தி – சூ. 2) அகளங்கன் – தி. 3) அண்ணல் – சூ. தி. 4) அத்வயவாதி – நா. 5) அநந்தலோசனன் – தி. 6) அர்க்கபந்து – நா. 7) அரசுநிழலிருந்தோன் – சூ. 8) அருங்கலைநாயகன் – தி. 9) அருணெறிகாக்குஞ்செல்வன் – தி. …

தம்மபதம் – ப.ராமஸ்வாமி

தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். புத்தரின் இந்தக் கருத்துகள் நுகர்வுச் சமூகமாக மாறிவிட்ட மனித சமூகத்திற்கு உலகளாவிய …

அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்

“நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்க வேண்டும் என்பது கருத்தும் சத்திய சாதனமுமாகும்” -க. அயோத்திதாசர் இயற்கை சக்திகளான இடி, பெருமழை, வெள்ளம் போன்றவற்றைக் கண்டு பயந்து நடுங்கிய ஆதி மனிதன், இவற்றை எல்லாம் கண்ணுக்குப் புலப்படாத ஏதோவொரு மாயசக்தி அந்தரத்திலிருந்து இயக்குவதாக நம்பினான். அந்த சக்திக்குப் பணிந்து வழிபடுவதால் அதன் கோபத்தைத் தணித்து அவ் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பித்து வழலாம் என்ற நம்பிக்கையிலிருந்து மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை …

வெற்றி மொழி: கௌதம புத்தர்

கி.மு. 563-க்கும் கி.மு 483-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கௌதம புத்தர் என்னும் சித்தார்த்தர் ஒரு மதகுரு ஆவார். புகழ்பெற்ற புத்த மதத்தை உருவாக்கியவர் இவரே. தனது இளமைப்பருவத்தை செல்வச் செழிப்புடன் கழித்த புத்தர், பின்னர் துறவறம் மேற்கொண்டு, போதி மரத்தடியில் ஞானம் பெற்று மகா ஞானியானார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற மாபெரும் தத்துவத்தைப் போதித்தவர். மேலும், மனித வாழ்க்கை மற்றும் சிந்தனை குறித்த கருத்துகளைப் பறைசாற்றியவர். சீனா, திபெத், ஜப்பான், இலங்கை உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புத்தரின் போதனைகள் …

பௌத்த திருப்பதிகள்

நான்காம் அதிகாரம் பௌத்த திருப்பதிகள் தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந்தோம். பொதுவாகத் தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்றிருந்ததென்றாலும், சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களிலும் செல்வாக்குற்றிருந்தது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகளைக் கூறுவோம். காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் காலமுதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்யாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாளிமொழியில் உள்ள …

பௌத்தமதம் மறைந்த வரலாறு

மூன்றாம் அதிகாரம். பௌத்தமதம் மறைந்த வரலாறு. பௌத்தமதம் தமிழ் நாட்டில் வந்த வரலாற்றினையும், அது பரவி வளர்ச்சியடைந்த வரலாற்றினையும், மேலே இரண்டு அதிகாரங்களில் ஆராய்ந்தோம். செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம் பிற்காலத்தில் எவ்வாறு மறைந்துவிட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாடு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிப்பட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப்பற்றி இரண்டாம் தொடர்புரையில் காண்க.) …

பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு

இரண்டாம் அதிகாரம். பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு.      பௌத்தமதம் வடநாட்டினின்று, தென்னாட்டிற்கு எந்தக்காலத்தில் வந்ததென்பதை முன் அதிகாரத்தில் ஆராய்ந்தோம். இந்த மதம் தமிழ் நாட்டில் எவ்வாறு பரவியது என்பதனை ஈண்டு ஆராய்வோம். இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். ‘சங்கம்’ என்றால் பௌத்த பிக்ஷக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் ‘மும்மணி’ என்று சொல்லப்படும் புத்த, தன்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், …

பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு

முதல் அதிகாரம். பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்தமதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்தது? இந்த மதத்தை முதல்முதல் இங்குக் கொண்டுவந்தவர் யாவர்? இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம். கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அதாவது கி. பி. முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டுக்குப் பிறகுதான், பௌத்தமதம் தமிழ்நாட்டில் வந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர். இவ்வாறு இவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில், கடைச்சங்க நூல்களில் பௌத்தமதத்தைப்பற்றிக் கூறப்படாததுதான். ஆனால், …

12Page 1 of 2

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 3,906 other subscribers

Stay Connected