Home மாற்றுப்பாதை

மாற்றுப்பாதை

மாற்றுப்பாதை – கு.உமாதேவி

“பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப் போல் வீங்கித் தவிக்கிறது மனசு” விதை வாசிக்கப்படும் இடங்களிலோ, சமூகம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலோ “புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி’ என்னும் பெண் குரல் கேட்குமெனில், சந்தேகமேயின்றி சொல்லிவிடலாம் அங்கே கு. உமாதேவி இருக்கிறார் என்று. இளம் வயதில் தலித் செயல்பாட்டுக்கான அனைத்து முன்னெடுப்புகளுடன் எழுத்திலும் களத்திலும் இயங்கும் ஆற்றலுடையவர் உமாதேவி. தன்னுடைய முதல் தொகுப்பினை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சமர்ப்பிக்கும் பொது சிந்தனை மரபினை கடந்து, “தலித் சமூக விடுதலையை முழு மூச்சாக முன்னெடுத்து இயங்கும் களப்போராளிகளுக்கு…” …

மாற்றுப்பாதை – கம்பீரன்

இயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதைகளில் முன்னோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் அசைவையும் விழிபிதுங்கும் உடல்மொழிகளையும் கையாண்டு, தன்னை ஒரு முக்கியமான “கதைசொல்லி’யாக மாற்றிக் கொண்ட கவிதைக்காரர் கம்பீரன். நாட்டார் வழக்காற்றியலில் புழங்கும் சொலவடைகளையும், அவற்றுள் இருக்கும் இலக்கியத்தையும் – எழுத்து வடிவமைக்கும் ஒரு சிலரில் கம்பீரன் ஒருவர். “சொலவடைகளும் சொல்கதைகளும் இல்லை என்றால், தமிழ்மொழி ஓர் எலும்புக்கூடாகத்தான் இருக்கும்’ என்று கூறும் அவருடைய இலக்கியப் பங்களிப்பு, தற்பொழுது குழந்தைகளை நோக்கி மய்யம் …

மாற்றுப்பாதை – இசையரசு

தலித்துக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதி இழிவைப் போக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது ஒரு பெரிய பட்டியலுக்குரியது. ஆனால் அத்தகைய செயல்பாடுகள் எல்லாம் ஜாதியின் வேரை இன்னும் அசைக்கக் கூட இல்லை! இந்தியாவின் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் கல்வி சாதியைக் காப்பாற்றும் கல்வியாகவே இருக்கிறது. இங்கிருக்கும் பண்பாடுகளும் தேசிய சிந்தனைகளும் சாதியை நிலைப்பெறச் செய்வதாகவே இருக்கின்றன. இந்நிலையில் சாதி ஒழிப்புக்காக இசையைக் கருவியாக்கி வருகிறார் இசையரசு. இசையரசின் இயற்பெயர் பார்த்தசாரதி. பேறுகாலவலியெடுத்து இசையரசின் அம்மாவை திருவல்லிக்கேணி குழந்தைப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் …

மாற்றுப்பாதை – திருமகன்

திருமகன். தமிழ்ச்சூழலில் பரபரப்பாக அறியப்பட்டிருக்க வேண்டிய பெயர். மூன்று கவிதைத்தொகுப்புகளை இவர் வெளியிட்டிருக்கிறார். ஆனால், இன்றையதமிழ்க் கவியுலகம் இவரை இதுவரை அடையாளப்படுத்தியிருக்கிறதா? ‘எனக்காக / நானொரு பாடலைப் பாட முடியாது / ஏனென்றால் / எனக்கும் சேர்த்து அவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்’ திருமகனின் இந்த வரிகள்தான் தமிழ் இலக்கியம் இன்னும் யாரிடம் இருக்கிறது என்று உணர்த்தும் வரிகள். இது இலக்கியத்தைக் கடந்தும் பொருந்துகிறது. கவிதையில் ‘பாடலை’ என்ற இடத்தில் ‘வாழ்க்கை’ என்று போட்டால் தலித் வாழ்க்கை. ‘அரசியல்’ என்று எழுதிக் கொண்டால் தலித் அரசியல். …

மாற்றுப்பாதை – சி. முத்துக்கந்தன்

வாழ்க்கையை அதன் போக்கில் பார்ப்பதைக் காட்டிலும் தன் வாழ்வை எதார்த்தமாய் மாற்றி, அதிலிருந்து தன் இலக்கியத்தைக் கட்டமைக்கிறார் சி. முத்துக்கந்தன். “செந்தலைக் குருவி’ என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை தமிழ் மக்களுக்கென இவர் வெளியிட்டு தமிழ்த் தொண்டாற்றுகிறார். தலித் இலக்கியத்தின் அரசியல் என்பது அதிகாரத்தின் வழிநடைக் குறிப்புகளாய்ப்போகிற சூழ்நிலையில் சி. முத்துக்கந்தனின் கவிதைகள் வந்துத் தெறிக்கிற இடங்கள் எல்லாம் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிடுகின்றன. அவர் உருவாக்கும் படிமங்களும் சொற்கட்டுகளும் பாசாங்கில்லாத பாமர மொழியிலானவை. இனியும் இப்படி இருக்க முடியாது கவனி கூர்முனைக் காட்டி …

மாற்றுப்பாதை – மா.அமரேசன்

ஒவ்வொரு தருணத்திலும் மானுடத்திற்குத் தேவையான பணிகள் எங்கேனும் ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பணிகள்தான் உண்மையான மக்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக் கூடியனவாக இருக்கும். அத்தகையதொரு பணியை தொடர்ந்து  ஆற்றிவருகிறார் மா. அமரேசன். அமரேசன்  அடிப்படையில் ஒரு தொழில் நுட்பவியலாளர். “நடுங்கும் நிலம் நடுங்கா மனம்’ என்னும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அவை மக்கள்  பிரச்சினையை விரிவாகப் பேசுகின்றன. தொழிற்கல்வி முடித்த அமரேசன் இளம் வயதிலேயே மார்க்சியம், தமிழ்த்தேசியம் குறித்து ஆழமாகக் …

மாற்றுப்பாதை – மணிகோ.பன்னீர்செல்வம்

பழங்குடிச் சமூகங்கள் குறித்த ஆய்வும், அவை குறித்த இனவரைவியலும் இல்லாத சூழலில் குறவர்கள் திணைவழிச் சமூகமாக இன்றுவரை அறியப்படுகின்றனர்.இம்மக்களின் இன வரைவியலை, தன் பட்டத்திற்கான ஆய்வாக எடுத்துக் கொண்டு – விளிம்பு நிலை சமூகங்களின் அறியப்படாத வரலாறுகளைத் தொகுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியப் பங்கினை ஆற்றியவர் மணி கோ. பன்னீர் செல்வம். காலனிய ஆதிக்கம் அழிந்து போன இக்காலங்களிலும் குற்றப்பரம்பரையாகப் பார்க்கப்படும் குறவர் சமூகத்தின் வரைவியலை வரைந்ததன் மூலம், தன் அறிவால் மானுட சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய அரும்பணியை மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் …

மாற்றுப்பாதை – அன்பாதவன்

“உங்க புத்தகம் படிச்சேன். கதைகள்ல சத்தம் அதிகமாக இருக்கிறதே!’‘ – இது அவருடைய “பம்பாய் கதை’களைப் படித்த ஒருவரின் விமர்சனம். “ஆமா எங்க வாழ்க்கை சத்தமாக இருக்கு. அதனால்தான் என் கதைகளும் அப்படியிருக்கு. உங்கள ஒரு ஊசியால குத்துனா, நீங்க ஆலாபனை பண்ணுவீங்களா, இல்ல கத்துவீங்களா? எங்கள் வாழ்க்கை குத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனால் எங்கள் எழுத்துகள் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கின்றன” – இது, அந்த விமர்சனத்திற்கு அவர் அளித்த பதில். இந்த பதில்தான் ஒட்டுமொத்த தலித் இலக்கியத்தின் குரலாகவும் இருக்க முடியும். …

மாற்றுப்பாதை – ‘தடா’ நல்லரசன்

“போதி மரத்தடியில் பிள்ளையார் சிலை பார்ப்பனிய வெற்றி” “தடா’ நல்லரசன் கவிதை இது. ஓர் அதிர்ச்சி அலை உங்களுக்குள் ஓடியிருக்கலாம். இப்படி பெயருக்கு முன்னால் “தடா’ என்றும் “மிசா’ என்றும் வைத்துக் கொள்வது தமிழ்நாட்டில் புதிதல்ல. “மிசா’வில் கைதானவர்கள் “மிசா’ என்றும் “தடா’வில் கைதானவர்கள் “தடா’ என்றும் முன்னொட்டுகளை வைத்துக் கொள்வது அரசியல் செயல்பாடு. அது, இலக்கியச் செயல்பாடாகாது. ஆனால், கைதும் சிறையும் அவரை வருத்தியபோதெல்லாம்கூட, கவிதையை விடாமல் அவர் தொடர்கிறார் என்னும்போது அங்கே இலக்கியம் வாழ்கிறது. பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். தமிழ்நாட்டின் அனைத்து …

மாற்றுப்பாதை – தய்.கந்தசாமி

தனி இருட்டு – தய். கந்தசாமியின் ஒரே தொகுப்பு. ஆனால், தலித் இலக்கியம் குறித்த எந்த ஆய்வானாலும் இவருடைய “தனி இருட்டு’ தொகுப்பிலிருந்து தரவுகளை எடுத்தாளாமல் அந்த ஆய்வு நிறைவடையாது! அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது அவருடைய எழுத்து. தான் எந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கான கோரிக்கையை, உரிமையை அடையாமல் அவர் சமரசமானதில்லை. அப்படியானதொரு கலகக்காரர் அவர்! சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது அவர் இங்கு நிகழ்த்திய இலக்கியக் களங்கள், சாதி ஒழிப்பு இலக்கியமான தலித் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன. எந்தவொரு தொகுப்பிலும் உள்ள முதல் …

12Page 1 of 2

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

1.1.1818 வரலாறு மறைத்து விட்ட வெற்றி

பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு‘ என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected