Home மாற்றுப்பாதை (page 2)

மாற்றுப்பாதை

மாற்றுப்பாதை – க.ஜெயபாலன்

கருங்கல்லின் மீது வரையப்பட்ட பழங்குடி மக்களின் ஓவியங்களைப் போல, காலத்தால் அழிக்க முடியாத வகையில் தலித் எழுத்துகளை மாற்றுவது – அவ்விலக்கியங்களின் மீது நடத்தப்படும் ஆய்வுக் கூறுகளே. ஆய்வுகள், இலக்கியத்தை அழியாமல் காக்கின்றன என்ற நிலையிலிருந்து உயர்ந்து, அவற்றைச் செழுமைப்படுத்தவும் பயன்படுகின்றன. அது மட்டுமல்ல, இலக்கியங்களைப் பாடத்திட்டமாக மாற்றும் வல்லமை ஆய்வுகளுக்கே உண்டு. அத்தகைய ஆய்வுகளை ஊக்கப்படுத்தி, தலித் எழுத்துகளின் மீது நடத்தப்படுவதற்கும், தானே ஆய்வாளராக இருந்து வரலாறுகளை எடுத்துத் தருவதற்கும் – தன் நேரம் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் பேராசிரியர் க. ஜெயபாலன். …

மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார்

“ஆகப்போவது ஒன்றுமில்லை எல்லா எத்தனமும் வீணேயெனினும் முளையொன்றோடு பிணைத்துன் கழுத்தைச் சுற்றிக்கிடக்கும் வலிய சங்கிலியின் இரும்புக் கண்ணிகளைக் கடித்துக் கொண்டாவது இரு.'' மதிவண்ணனின் கவிதை இது. அநீதிக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே தன் பயணத்தின் லட்சியமாகக் கொண்டிருப்பவர் களப்பணியாளர் இன்பகுமார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இவர், தன்னுடைய தொடக்கக் கல்வியை பாணாவரத்திலும், மேனிலைக் கல்வியை அரக்கோணத்திலும் முடித்தõர். வேலூர் ஊரிசு கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்ற இவர், சுமார் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிறகு ஆசிரியர் …

மாற்றுப்பாதை – டி.எல்.சிவகுமார்

மென்மையான உள்ளம். உலர்ந்துவிடாத புன்னகை. எப்போதும் அன்பு கசியும் கண்கள். இவை டி.எல். சிவகுமாரின் அடையாளங்கள். 1989 ஆம் ஆண்டு கையெழுத்து இதழாகத் தொடங்கப்பட்ட “பூங்குயில்’ இலக்கிய இதழை, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் நடத்தி வரும் அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியது. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு, “முகத்துக்கு தெரியாத முதுகெலும்புகள்.’ இரண்டாவது தொகுப்பு “குட்டி ஆலீசும் கோடி நட்சத்திரங்களும்.’ இது மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய ஆளுமைகளை உருவாக்கிய பல தளங்களும் மேடைகளும் அவருடைய அரிய உழைப்பால் விளைந்தவை. “பூங்குயில்’ சிவகுமார் என்று இலக்கிய ஆர்வலர்களால் …

மாற்றுப்பாதை – பூவிழியன்

தலித் வரலாற்றை எழுதுவது, ஒரு வகைமை. புனைவுகளைக் கடந்து இயக்க ரீதியான அணிதிரள்வுகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் – தலித் வரலாற்றாளர்கள் தருகின்ற ஆதாரங்களும், தரவுகளும் – தலித்துகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்குமான நியாயங்களை உணர வைக்கின்றன. பொதுப்பண்பாட்டிற்கு எதிராக ஓர் எதிர்ப்பண்பாட்டை உருவாக்கவும் தலித் வரலாறு தேவைப்படுகிறது. வரலாற்றாய்வாளர் ஈ.எச்.கார் என்பவர், வரலாற்றில் தவிர்க்க முடியாதது, தப்ப முடியாதது என எதுவும் இல்லை என்கிறார். ஆனால் இந்திய வரலாற்றைப் பொருத்த வரையில், தலித் வரலாறு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த வரலாறு மறைக்கப்பட்ட தொல்குடி …

மாற்றுப்பாதை – பாரதி நிவேதன்

பாரதி நிவேதன் எழுத்து குறித்து நவீன எழுத்தின் ஓர்மையை தன் எழுத்தில் வருவித்து, அதன் மூலம் புதிய ஆக்கவெளியினை உருவாக்கும் தன்மை பாரதி நிவேதனுடையது. பாரதி நிவேதன் தன்னுடைய கவிதைகளில் வைத்திருக்கும் பூடகமும் உட்பொருளும் – சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட “இறைச்சி’, “உள்ளுறை’, “உவமம்’ ஆகியவற்றிற்கு ஒத்த பண்புடையவை. பாரதி நிவேதனுடைய கவிதைகளும் அவருடைய ஆக்கத் திறனும் பலராலும் பாராட்டப்படுகிற ஒன்று. அவருடைய இரண்டு தொகுப்புகள் “ஏவாளின் அறிக்கை’, “வேறுகாலம் மறுத்து தாயம் போடுபவர்கள்’ ஆகியன நவீன இலக்கிய வட்டத்தில் அறியப்பட்டவை. பாரதி நிவேதன் …

மாற்றுப்பாதை – யாழினி முனுசாமி

பூந்தோட்டம் வளர்த்த என்னை பெருங்காட்டில் தள்ளிப் போகிறீர்கள் ஞானம் பெற்றுத் திரும்புவேன் அப்பெருங்காட்டிலிருந்து பவுத்தக் கூறின் தொன்மையுடன் மிளிரும் இந்தக்கவிதை, வாசகனுக்குப் பல சாளரங்களைத் திறக்கிறது. எளிமையான சொற்களாலான, பல்வேறு பரிமாணங்களைத் தரக் கூடிய இக்கவிதையை எழுதியவர் யாழினி முனுசாமி. வாழ்வின் அடர்ந்த இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சங்களை விழிகள் சுவைக்கும் ஒரு தலித் வாழ்வின் மனவெளியை அப்படியே பதிவு செய்வது, யாழினி முனுசாமியின் கைவண்ணம். அவருடைய முதல் தொகுப்பு “உதிரும் இலை.’ கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கிய விமர்சகர், பதிப்பாளர் என்ற அடையாளங்களுடன் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணிபுரியும் இவர், “முரண்களரி’ என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். …

மாற்றுப்பாதை – முத்துவேல்

வாழ்வின் சுமைகளை அவற்றின் புரியாத பாரங்களோடு சுமப்பதும், அதிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதும் அல்லது அதை ஒரு கனவாக மாற்றிக் கொண்டு உழைப்பதுமே தலித் வாழ்வியலாக இருக்கிறது. எந்த மூலையிலும் தன்னுடைய இருப்பை உழைப்பின் மூலமாகவே வெளிக்காட்டும் சாகசங்கள் நிறைந்தது அது. உண்மைதான். அய்நூறு குடும்பங்கள் வாழும் கிராமத்தின் உயிர்நாடியாக இருந்த நூற்றைம்பது ஏக்கர் நிலத்தைப் புதுச்சேரியிலிருந்து வந்த பெரும் பணக்காரனிடம் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, வாழ்வதற்கு சாராயம் காய்ச்சும் தொழிலை செய்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிருக்கும், வெள்ளம் கொண்ட அகரம் மக்களுக்கு. …

மாற்றுப்பாதை – ரகசியன்

மவுனத்தின் மீது சொல்லெறியுங்கள்; அது உண்மை களைப் பேசும் என்பது ரகசியனின் கனவு. தலித் மக்களின் விடுதலை என்பதை எப்போதும் கனவாக்கித் திரியும் அவருடைய மனநிலை ஒரு எழுத்தாளருக்கு உரியது மட்டுமல்ல; களப்பணியாளன் ஒருவனின் சிந்தனையும்கூட. சாதி இந்துக்களுடன் நாள்தோறும் போரிடும் அவரின் நனவிலி மனநிலை, தன்னை தலித் எழுத்தாளராக உந்துகிறது என்பது அவரின் வெளிப்படையான கூற்று. ரகசியன் என்ற அழகியல் பெயரை அவர் புனைந்து கொண்டாலும் அவருடைய கவிதைகள் வெளிப்படையானவை. வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்திலிருக்கும் கெம்மன்குப்பத்தில் பிறந்த இவர், தற்பொழுது சேத்துவாண்டையில் …

மாற்றுப்பாதை – சுதாகர் கத்தக்

மாற்றுப் பாதை’யைத் தொடங்கும்போது, சில வரையறைகளை நாம் வைத்திருந்தோம். அதில் ஒன்று, இப்பகுதி யில் இடம்பெறும் தலித் எழுத்தாளர்கள் தங்களுடைய ஆக்கங்களை நூலாக வெளியிட்டிருக்க வேண்டும் என்பது. ஆனால் சுதாகர் கத்தக் அவர்களுக்கு இது பொருந்தாது. எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர், இன்று வரை தன் எழுத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இதுவரை பதினாறு சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். அந்த எழுத்துகளின் தீவிரமும் உண்மை யும் அவருக்கு இந்த விதிவிலக்கை வழங்கி இருக்கின்றன. ஓர் எழுத்தாளர் தான் வாழ்கின்ற காலத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையாக இருப்பதும், அவர் …

12Page 2 of 2

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

ஷெட்யூல்டு வகுப்பினரின் துயரங்கள்

பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் ஷெட்யூல்டு வகுப்பினரின் குறைகளை எடுத்துக்கூறி, அவற்றிற்கு தீர்வுகாண அவசியப்படும் நடவடிக்கைகள் பற்றி யோசனைகளை வழங்குகிறது …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,223 other subscribers

Stay Connected